Posts

Showing posts from March, 2018

" பூமியின் சுழற்சியும் கோரியொலிஸ் விளைவும் "

Image
"பூமியின் சுழற்சியும் கோரியொலிஸ் விளைவும்" அறிவியல் காதலன் ரா.பிரபு Coriolis effect என்கிற ஒன்றை பற்றி... அது பூமியில் சூறாவளி போன்றவற்றில் எப்படி பங்கேற்கிறது என்கிற சுவாரஷ்யமான சில விஷயங்களை பற்றி தான் பார்க்கபோகிறோம் என்றாலும் அதற்கு முன் உங்களுக்கு சில கேள்விகள்... சில தகவல்கள்..... முதலில் ஒரு குழந்தை தனமான கேள்வி.. எப்போதாவது உங்களுக்கு இந்த அபத்தமான யோசனை வந்தது உண்டா ? அதாவது நம்ம பூமி கிட்ட தட்ட ஒரு மணிநேரத்திற்கு 1670 கி. மி தூரம் சுழலுகிறது என்று நமக்கு தெரியும். அப்படியானால் ஒரு ஹெலிகாப்டரில் ஏறி கொண்டு வானத்தில் பறந்து ஒரே இடத்தில் நிலையாக அப்படியே ஒரு மணிநேரம் நின்று விட்டு கீழே இறங்கினால் நாம் 1670 கிலோ மீட்டர் பயணித்து இருக்க வேண்டும் அல்லவா ? ஆனால் அப்படி நடப்பது இல்லையே ஏன்? மேலே ஹெலிகாப்டர் தனியாக அந்தரத்தில் தானே நிற்கிறது அதை விட்டு விட்டு கீழே பூமி 1670 கி. மி சுழன்று இருக்க வேண்டுமே. அவ்வளவு ஏன் ஒரு மாடியில் இருந்து பந்தை கீழே போட்டால் கூட பூமி ஒரு வினாடிக்கு கிட்ட தட்ட 70 கி. மி சுற்றுவதால் அந்த பந்து 70 கி. மி தள்ளி போய் வேறு கட்டிட