Posts

Showing posts from October, 2020

"க்ராபைன் உலகை மாற்றும் கார்பன்"

Image
  "க்ராபைன் உலகை மாற்றும் கார்பன்" "அறிவியல் காதலன் " -ரா.பிரபு- இன்று காலை உங்களுக்கு பிடித்த ஒரு சாக்லேட் ஐ வாங்கி சாப்பிட்டு விட்டு விளையாட்டாய் அதன் மேல் சுற்ற பட்ட ஒரு மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரை கிழிக்க முயல்கிறீர்கள்.  என்ன ஆச்சர்யம் உங்களால் அதை பிரம்மபிரயத்தன பட்டும் கிழிக்க முடியவில்லை. உங்கள் நண்பருக்கு அதை கொடுத்து முயல சொல்கிறீர்கள் ,அவரும் கிழித்து பார்த்து விழி பிதுங்குகிறார். ஒரு குண்டூசி எடுத்து அதில் ஓட்டையாவது போடலாம் என்று முயற்சி பண்ணி பார்கிறீர்கள் ஊசி ஊடுருவ மாட்டேன் என்கிறது.  அருகில் உள்ள ஓரு தொழிற்சாலை சென்று அந்த பேப்பர் மேல் கூரான ஊசி முனையை வைத்து அதில் ஒரு 2000 கிலோ அழுத்தம் கொடுத்த பின் தான் ஓட்டை போட முடிந்தது என்றால் உங்கள் ஆச்சர்யம்  எப்படி இருக்கும் ? அந்த பிளாஸ்டிக் பேப்பர் Graphene ஆல் செய்ய பட்டு இருந்தால் இதில் ஆச்சர்ய பட ஒன்னும் இல்லை. "Graphene " கிழியாத சாக்லேட் பேப்பர் தயாரிக்க அல்ல மாறாக உலகை மாற்றும் பல புதிய கண்டு பிடிப்புகளை செய்ய உதவ கூடியது. உதாரணமாக உங்கள் மொபைலை யாராவது 5 வினாடியில் 100 சதம் சார்ஜ் பண்ண முட

இனி இதான் வழி

Image
 #இனி_இதான்_வழி (சிறுகதை) #ரா_பிரபு ஆதி தன் பண்ணை வீட்டின் மாடியில் இருந்து தூர அந்த பெண் செல்வதைப் பார்த்தான் . போதையில் இருந்ததால் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது. 'பெண் தானே.. அட பெண் தான்.. அதுவும் சின்ன பெண்..' அவன் முகம் ஓநாய் போல மாறியது 'இன்னைக்கு நம்ம போதைக்கு ஊறுகாய் கிடைத்தது விட்டது.' ஆதி ஒரு பணக்கார வீட்டு பையன் பண்ணை வீடு குடி.. போதை..அவன் பொழுது போக்கு. ஆதி வீட்டை விட்டு இறங்கி அந்த சிறுமி இருந்த இடத்தை அடைந்த போது வெய்யில் மண்டையை சுட்டது. யாருக்கோ சாப்பாடு கொண்டு போறாள் போல.. இப்போ எனக்கு இவ தான் சாப்பாடு.. "ஏ பாப்பா உன் பெயர் என்ன " ?  "பா...பாரதி " என்றாள் தயங்கி.. "பாரதி பாப்பா..எந்த வீடு மா...நீ ?" போதை வாசத்துடன் வார்த்தை துப்பினான். அவளை கண்களால் அளவு எடுத்தான். அவள் விபரம் சொன்னதும் .. "ஓ அந்த ஜாதி பொண்ணா நீ...." என்றான் இளகாரமாய்.. "சரி சரி இங்க வா...ம்.. அதோ அந்த பண்ணை வீட்டுக்கு வந்துட்டு போ..." " அய்யோ நான் சாப்பாடு கொண்டு  போகணும் அண்ணா என்ன விட்டுடுங்க " என்று பயந்த குரலில் சொன்னவள்

ஜெட் வேக கதை 3

Image
  ஜெட் வேக கதை 3  #கருணை #ரா_பிரபு வர்ஷா பாய் கடையை அடைந்த போது கொஞ்சமாய் கூட்டம் இருந்தது.இவளை கவனித்த பாய் "வா மா வர்ஷா.. அங்க உட்கார் இதோ ஒரு 2 கஸ்டமர் தான் அனுப்பிட்டு வரேன் " என்றார்... வர்ஷா அமர்ந்து கொண்டு அசுவாரஸ்யமாய் கடையை பராக்கு பார்த்து கொண்டு இருந்த போது அதை கவனித்தாள்.. மேலே ஒரு பறவை கூண்டு அதில் லவ் பேர்ட்ஸ் கீச்சி கொண்டு இருந்தன .. "என்ன பாய் லவ் பேர்ட்ஸ் வாங்கி இருக்கீங்க " "ஆமாம் மா நேத்து தான் வாங்கினேன் சும்மா.. கடைக்கு நல்லா இருக்கும் இல்ல.....ஒரு டிபரண்டா இருக்குமே னு....." வர்ஷா கொஞ்சமாய் கோபம் கலந்த குரலில் "என்ன பாய் நீங்க அதுங்க லவ் பேர்ட்ஸ் சுதந்திரமாய் வானில் சுத்தி திரிய வேண்டியவைகள்...மொதல்ல அதை திறந்து விடுங்க சொல்றேன் " என்றாள் "அய்யோ என்னமா சொல்ற நேத்து தான் வாங்கினேன் 1800 ரூ மா.."பாய் தயங்க... "அட அந்த காசை நான் கொடுக்கிறேன் திறங்க னு சொல்றேன் இல்ல " என்றாள் பாய் கொஞ்சம் வேண்டா வெறுப்பாக அதை திறந்து பறக்க விட்டார்... 10 நிமிட கழிந்த பின்.. "வா மா வர்ஷா என்ன வேணும் சொல்லு.. ஆமாம் ...எப்ப

ஜெட்_வேக_கதை 2

Image
 #ஜெட்_வேக_கதை 2 #உயிர்_விளையாட்டு  ரா_பிரபு அந்த சிம் கடையில் இருந்து புதிய சிம் வாங்கி கொண்டு சண்முகம் வெளியே வந்த போது தான் அந்த பதட்ட குரலை எதிர் கொண்டார்..  எதிரே நன்கு உடை அணிந்த ஒரு இளைஞன் நின்று இருந்தான். "சார் சார் உங்க பெயர் சண்முகம் தானே " "ஆமாம் பா.. என்ன விஷயம் " என்றார் முகத்தில் குழப்பம் சூழ "உங்க பையன் பெயர் ராஜ்குமாரா? " "ஆமாம் பா என்ன விஷயம் " இம்முறை பதட்டம் இவரிடம் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது. " சார் நான் உங்க பய்யனுடைய நண்பன் ..உங்க பைய்யன் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி 2 தெரு தள்ளி இருக்கிற ஆஸ்பிடல் ல அட்மிட் பண்ணி இருக்கோம் "  "அய்யோ என்னப்பா சொல்ற " சண்முகம் சடாரென நெஞ்சை பிடித்து கொள்ள.. "கொஞ்சம் அவசரம் சீக்கிறம் வாங்க ப்ளீஸ் " சண்முகம் உடல் நடுங்க போனை எடுத்து யாருக்கோ கால் செய்தார் வாய் ஏதோ முனு முனுத்தது. 'அய்யோ வீட்டு போன் நம்பர் கூட சரியா நியாபகம் இல்லையே இப்போ தான் புது சிம் வாங்கினேன் நம்பர் ஏதும் பதிவு வேற பண்ணலையே நான் என்ன பண்ணுவேன் ' தனது நினைவில் இருந்து எண்கள் தட்டி   எதிர் முனை ஹலோ

ஜெட் வேக கதை 1 :

Image
.  ஜெட் வேக கதை 1 :  #ஓவர்_டேக் #ரா_பிரபு பாலா தன் புல்லட் மிர்ரரில் மீண்டும் பார்த்தான்..  'அந்த பிளாட்டினா வண்டி காரன் என்னை முந்தாமல் விட மாட்டான் போலவே.. ஓட்டை வண்டியை வச்சிக்கிட்டு எவ்ளோ வேகமா பின்னாடியே வரான்... காடறேன் ..டா.. புல்லட் 350 cc பவர் என்னனு காடறேன் .என்னையே முந்த பாக்கரியா நீயெல்லாம் என்ன ஓவர் டேக் பண்ணா அது என் ஒன்றரை  லட்ச ரூபாய் வண்டிக்கே கேவலம் பாலா மேல் ஈகோ சவாரி செய்ய.. புல்லட் மேல் பாலா பேய் சவாரி செய்தான். ஆக்சிலேட்டர் காதை பிடித்து அதன் எல்லை வரை திருகி 350 cc யை கதற வைத்தான்... டுபு .டுபு..டுபு.... புல்லட் ஹை பிட்சில் ட்ரம் வாசிக்க.. மீண்டும் கண்ணாடியில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அந்த பிளாட்டினா மர்ம மனிதன் கடும் பிரயத்தன பட்டு இவனை இன்னும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தான்... இந்த கண்ணாமூச்சி அடுத்த 20 நிமிடம் தொடர பாலா சோர்ந்து போய்' முந்தி போய் தொலையட்டும் போ.நாய் கு என்ன அவசரமோ... ' என வேகம் குறைந்தான்.. பிளாட்டினா ஓவர் டேக் பண்ண வழி விட்டான்... கொஞ்சம் கொஞ்சமாய் பக்கம் நெருங்கிய பிளாட்டினா ஆசாமி.. "சார் சார்... எவ்ளோ நேரமா சார் துரத்தி வ