ஜெட் வேக கதை 3


 ஜெட் வேக கதை 3 


#கருணை


#ரா_பிரபு


வர்ஷா பாய் கடையை அடைந்த போது கொஞ்சமாய் கூட்டம் இருந்தது.இவளை கவனித்த பாய்


"வா மா வர்ஷா.. அங்க உட்கார் இதோ ஒரு 2 கஸ்டமர் தான் அனுப்பிட்டு வரேன் " என்றார்...


வர்ஷா அமர்ந்து கொண்டு அசுவாரஸ்யமாய் கடையை பராக்கு பார்த்து கொண்டு இருந்த போது அதை கவனித்தாள்.. மேலே ஒரு பறவை கூண்டு அதில் லவ் பேர்ட்ஸ் கீச்சி கொண்டு இருந்தன ..


"என்ன பாய் லவ் பேர்ட்ஸ் வாங்கி இருக்கீங்க "


"ஆமாம் மா நேத்து தான் வாங்கினேன் சும்மா.. கடைக்கு நல்லா இருக்கும் இல்ல.....ஒரு டிபரண்டா இருக்குமே னு....."


வர்ஷா கொஞ்சமாய் கோபம் கலந்த குரலில்

"என்ன பாய் நீங்க அதுங்க லவ் பேர்ட்ஸ் சுதந்திரமாய் வானில் சுத்தி திரிய வேண்டியவைகள்...மொதல்ல அதை திறந்து விடுங்க சொல்றேன் " என்றாள்

"அய்யோ என்னமா சொல்ற நேத்து தான் வாங்கினேன் 1800 ரூ மா.."பாய் தயங்க...


"அட அந்த காசை நான் கொடுக்கிறேன் திறங்க னு சொல்றேன் இல்ல " என்றாள்


பாய் கொஞ்சம் வேண்டா வெறுப்பாக அதை திறந்து பறக்க விட்டார்...


10 நிமிட கழிந்த பின்..


"வா மா வர்ஷா என்ன வேணும் சொல்லு.. ஆமாம் ...எப்பவும் அப்பா தானே வருவார் என்ன இன்னைக்கு நீ வந்து இருக்க...? " என்றார் பாய்


" அதுவா... அப்பாவுக்கு உயிர் கோழி ஒழுங்கா வாங்க தெரியல போன வாட்டி வாங்கி வந்தது சீக்கு வந்த மாதிரி இருந்தது அதான் இந்த முறை நானே வாங்கலாம் வந்தேன் பாய் "


"ஓ.. சரி சரி அதோ அந்த கூண்டுல இருக்கு பாரு எது வேணும் னு நீயே பாத்து எடு " என்று பாய் காட்டிய  கூண்டில் கோழிகள் மூச்சு விட முடியாமல் திணறி கொண்டு இருந்தன.


"அதோ 3 ஆவதா இருக்கு பாருங்க கழுத்துல கோல்டன் கலர் ல ..அந்த கோழி கொடுங்க பாய் " என்றாள் வர்ஷா.



-- வர்ஷா லவ் பேர்ட்ஸ் மேல் மிகுந்த கருணை கொண்டு இருந்தாள் ...காரணம் லவ் பேர்ட்ஸ்கள் மனிதர்களால் உண்ண படுவது இல்லை --

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"