ஜெட்_வேக_கதை 2


 #ஜெட்_வேக_கதை 2


#உயிர்_விளையாட்டு 


ரா_பிரபு


அந்த சிம் கடையில் இருந்து புதிய சிம் வாங்கி கொண்டு சண்முகம் வெளியே வந்த போது தான் அந்த பதட்ட குரலை எதிர் கொண்டார்.. 

எதிரே நன்கு உடை அணிந்த ஒரு இளைஞன் நின்று இருந்தான்.


"சார் சார் உங்க பெயர் சண்முகம் தானே "


"ஆமாம் பா.. என்ன விஷயம் " என்றார் முகத்தில் குழப்பம் சூழ


"உங்க பையன் பெயர் ராஜ்குமாரா? "


"ஆமாம் பா என்ன விஷயம் " இம்முறை பதட்டம் இவரிடம் டிரான்ஸ்பர் ஆகி இருந்தது.


" சார் நான் உங்க பய்யனுடைய நண்பன் ..உங்க பைய்யன் ஒரு ஆக்சிடெண்ட் ஆகி 2 தெரு தள்ளி இருக்கிற ஆஸ்பிடல் ல அட்மிட் பண்ணி இருக்கோம் " 


"அய்யோ என்னப்பா சொல்ற "

சண்முகம் சடாரென நெஞ்சை பிடித்து கொள்ள..


"கொஞ்சம் அவசரம் சீக்கிறம் வாங்க ப்ளீஸ் "


சண்முகம் உடல் நடுங்க போனை எடுத்து யாருக்கோ கால் செய்தார் வாய் ஏதோ முனு முனுத்தது.


'அய்யோ வீட்டு போன் நம்பர் கூட சரியா நியாபகம் இல்லையே இப்போ தான் புது சிம் வாங்கினேன் நம்பர் ஏதும் பதிவு வேற பண்ணலையே நான் என்ன பண்ணுவேன் '


தனது நினைவில் இருந்து எண்கள் தட்டி   எதிர் முனை ஹலோ சொல்ல கூட அவகாசம் தராமல் "அய்யோ  நம்ம பையனுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடிச்சாம் டி ....." என தொடங்கி பேசிவிட்டு நிமிர்ந்தார்..


"அய்யோ வாங்க தம்பி போகலாம் எங்க இருக்கு ஹாஸ்பிடல் " என்றார் கைகள் மற்றும்..குரல் நடுங்க..


எதிரே அவன் பதட்டம் தணிந்து இருந்தான் முகத்தில் ஒரு சின்ன புன்னகை..


"சார் அங்க பாருங்க கேமரா இங்க பாருங்க இன்னோரு கேமரா.. இது சும்மா prank show சார் பதட்ட படாதீங்க... சிம் கடை ல நீங்க கொடுக்கிற தகவல் பார்த்து நாங்க பண்ற ஒரு பிராங்..சும்மா மக்கள் ரியாக்சன் செக் பண்ண "


"அடேய் பாவிகளா இதெல்லாம் விளையாட்டா டா உங்களுக்கு. மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு எல்லாம். நான் வீட்டுக்கு போன் பண்ணி வேற சொல்லிட்டேன் டா .." எனறு பதற..


"டோன்ட் வொர்ரி அங்கிள் திரும்ப போன் பண்ணி சொல்லிட்டா போச்சி... கொடுங்க  நானே சொல்றேன் " என்று போனை அவரிடம் வாங்கியவன் கடைசி கால் நம்பரை பார்த்தான்.. 


"32 லாஸ்ட் நம்பர் இதானே சார்..." 


"என்னது 32 ஆ அய்யோ பதட்டுத்துல என்ன நம்பர் போட்டேன் தெரியலையே 82 தானே வரும் என் வீட்டு நம்பர் " என்று பதட்டம் மாறாமல் கூற..


அந்த நம்பரை மீண்டும் கவனித்த அவன் இம்முறை திடுகிடலுடன்..


"என்னங்க இது ...? இது எங்க வீட்டு நம்பர்ங்க " என்றான் அதிர்ச்சியுடன்.


சரியாக அந்த நேரத்தில் அவன் கைபேசி பாடியது...


"ஹெலோ அம்மா பேசறேன் டா எங்கடா இருக்க ...எ..எப்படி டா இருக்க.. அய்யோ உனக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சி னு.. யாரோ ஒருத்தன் கால் பண்ணி இருக்கான்.. உங்க ஹார்ட் பேஷன் அப்பா அதை கேட்டு அதிர்ச்சியில இதயம் நின்னு .........


இறந்துட்டார் டா......"




குறிப்பு : விளையாட்டு எல்லா நேரத்திலும் எல்லாருக்கும் விளையாட்டாய் இருப்பது இல்லை..


#stop_stupid_prank_shows


Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"