Posts

Showing posts from October, 2017

"டாவின்சியின் விசித்திர கண்டுபிடிப்புகள்''

Image
 ''டாவின்சியின் விசித்திர கண்டுபிடிப்புகள்." ⚛ அறிவியல்.காதலன்      ரா.பிரபு ⚛ மோனாலிஸாவின் மோகன புன்னகையை உலகத்திற்கு வழங்கிய லியரண்டோ டாவின்சியை நமக்கு ஒரு ஓவியர் என்கிற வகையில் தான் அதிகம் தெரியும் ஆனால் அவர் ஒரு பன்முக திறமையும் பல துறைகளில் ஆர்வமும் கொண்ட ஒரு மனிதர். அவர் ஒரு கட்டிட கலை நிபுணர் கூடவே பொறியியளில் அதிகம் ஆர்வம் கொண்டவர்,கூடவே சிற்பக்கலை கட்டிட கலை, ஓவியம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர். அறிவியல் ,இசை,கணிதம்,இலக்கியம்,புவியியல்,வானசாஸ்திரம்,தாவரவியல் வரலாறு போன்றவைகளில் ஈர்ப்பு உண்டு. அவர் ஒரு எழுத்தாளர் கூட.. இவைகளை தாண்டி பல கண்டுபிடிப்புகளை கொடுத்த விஞ்ஞானியும் கூட.. எதிரிநாட்டு வீரர்களை வீழ்த்த தனது பொறியியல் அறிவை பயன்படுத்தியவர். அவருடைய குறிப்பேடுகளில் நிறைய அநாடமி பற்றிய ஓவியங்களும் குறிப்புகளும் பல பொறியியல் குறிப்புகளும் காண கிடைக்கின்றன. ஒரு கதை சொல்வார்கள் . அதாவது எதிரிநாட்டு கப்பல் தங்கள் நாட்டை நெருங்கும் போது டாவின்சி தன் நாட்டுக்கு ஒரு கண்டுபிடிப்பை கொடுத்தாராம். அதன்படி எதிரிக்கப்பல் நெருங்கி வர அதை இந்த நாட்டு ரெண்டு சி

"ஹிக்ஸ் பூஸான் ஆச்சர்யமும் ஆபத்தும்"

Image
ஹிக்ஸ் பூஸான் ஆச்சர்யமும் ஆபத்தும் ⚛ அறிவியல் காதலன் ⚛     ரா.பிரபு கடவுள் துகள் என்று அழைக்க படும் ஹிக்ஸ் போஸான்கள்  (higgs boson )பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவைகள் மொத்த பிரபஞ்சத்தையே ஒட்டுமொத்தமாய் அழித்திடும் ஆற்றல் கொண்டவை தெரியுமா ? ஒரு பெரிய விண்கல் வந்து மோதி பூமி அழியும் என்று சொன்னால் நம்பலாம். ஆனால் கண்ணுக்கு தெரியாத அணுவுக்குள் ஒளிந்திருக்கும் தம்மாதுண்டு துகள் அதுவும் உலகத்தை கூட அல்ல மொத்த பிரபஞ்சத்தை அழிக்குமா எப்படி ? அதை பற்றி தெரிந்து கொள்ளும் முன் இந்த ஹிக்ஸ் பூஸான் என்பது என்ன சமாச்சாரம் என்பதை கொஞ்சம் பார்க்கலாம். அணு ஆராய்ச்சியில்.... குவாண்டம் பிஸிக்ஸ் இல் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் அவ்வபோது புது புது துகளை கண்டு பிடிப்பது இயல்பு தான். ஆனால் 2012 ஜூலை 4  அன்று cern விஞ்ஞானிகள் ஹிக்ஸ் பூஸான் இருப்பதை கண்டு பிடித்த போது வழக்கத்தை விட அதிக வரவேற்பும் அதிக ஆரவராமும் இருந்தது .அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. முதல் முதலில் 1960 களிலேயே இப்படி ஒரு துகள் இருக்க வேண்டும் என்று சில ஆய்வாளர்கள் கணித்து இருந்தார்கள். (அப்படி கணித்

"டைமண்ட் பேட்டரி என்றால் என்ன"

Image
" டைமண்ட் பேட்டரி என்றால் என்ன" ⚛ அறிவியல் காதலன்    ரா.பிரபு.⚛ மின்சாரத்தை தேக்கி வைக்கும் பேட்டரிகள் பல இடங்களில் பல வகைகளில் பல பயன்பாடுகளுடன் நாம் பார்த்து இருப்போம் குறிப்பாக நாம் அனைவரும் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பேட்டரி தீரும் பிரச்னையை அனுபவித்து இருப்போம். ஆனால் நான் சொல்ல போகும் ஒரு பேட்டரியை நீங்கள் உங்கள் கடிகாரத்திலோ வாகணத்திலோ... ஸ்மார்ட் போனிலோ மாட்டி விட்டால் அது சார்ஜ் இறங்க நீங்க நினைப்பதை விட நீண்ட நாள் ஆகும் என்று சொன்னால் மகிழ்வீர்கள்.  எவ்ளோ அந்த நீண்ட நாள் என்றால் ஒரு 5000 ..... 10000 ஆண்டுகள் என்றால் திகைப்பீர்கள்.  ஆனால் நான் சொல்ல போகும் பேட்டரியை நீங்கள் சரியாக 7746 ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்திவிட்டு பார்த்தால் பேட்டரி 50 சதம் சார்ஜ் இறங்கி இருக்கும். அப்படி ஒரு அசத்தல் பேட்டரி தான் diamond battery. இது உண்டாக்க பட போவது ஒரு கழிவில் இருந்து. கழிவு என்றால் ஏதோ சாதாரணமான கழிவு அல்ல அணுஉலை கழிவு. அது என்ன தொழில்நுட்பம் ?எப்படி அது சாத்தியம்?? சொல்கிறேன் அதற்க்கு முன்.... நீங்கள் iron man ஹாலிவூட் படம் பார்த்து இருப்பீங்க இல்லையா.

"மனம் எனும் மாய தேவதை "

Image
" மனம் எனும் மாய தேவதை " (ஒரு மனோதத்துவ சுய முன்னேற்ற கட்டுரை தொடர் ) ரா.பிரபு (பாகம் 1 : மனம் எனும் கருவி ) நண்பர்களுக்கு வணக்கம் ! இந்த" மனம் எனும் மாய தேவதை" கட்டுரை தொடர் எனது வழக்கமான 'பக்கா அறிவியல் ' கட்டுரைகளில் இருந்து சற்றே மாறுபட்டு சைகாலஜிக்கலான ஒரு கட்டுரை தொடர். ஆனால் மனோ தத்துவம் என்பதும் அறிவியலின் பிரிவு தான் என்பதால் இதையும் அறிவியல் கட்டுரை என்றே தாராளமாக சொல்லலாம். எனது "மனம் எனும் மாய பிசாசு" தொடரில் மனதை சரியாக பயன் படுத்தாமல் அதை பிசாசாக மாற்றி அதன் பிடியில் சிக்கி சின்னா பின்னம் ஆனவர்கள் பற்றி நிறைய சொல்லி இருந்தேன். உண்மையில் மனம் பிசாசா அல்லது தேவதையா என்பது அதை நாம் பழகும் விதத்தில் தான் இருக்கிறது .அதை தவறாக கையாண்டால் நம்மையே அழிக்கும் பிசாசு அதே சமயம் அதை சரியாக கையாண்டால் அது வரங்களை அள்ளி கொடுக்கும் தேவதை.  வாருங்கள், இந்த முறை அந்த தேவதையை கொஞ்சம் சந்தித்து நலம் விசாரித்து விட்டு வருவோம். ☯ மனம் எனும் மாய தேவதை ☯  மனம் என்பதை பற்றி சொல்லும் போது "அதை தூய்மையாக வைத்த