Posts

Showing posts from 2023

முடிவில் ஆரம்பம்

Image
 "முடிவில் ஆரம்பம் " (அறிவியல் சிறுகதை ) #ரா_பிரபு "மார்ஸ்மெல்லோ ELT 11 " என விசித்திர பெயரிட பட்ட அந்த விண்கலம் செவ்வாயின் சிவந்த மண்ணை முத்தமிட்ட போது அதை பூமியின் 2083 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்பம் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தது.  விண்கலத்தில் இருந்த ஐவர் குழுவை 'வெல்கம் டூ மார்ஸ் 'சொல்லி நியான் போர்டுகள் வரவேற்றன. மிஷன் தலைவர் 'கால் எட்வர்ட்' சிரித்த முகத்துடன் மார்ஸின் சிவந்த மண்ணில் காலை வைத்தார்.  செவ்வாய் செல்லும் முதல் மனிதர்கள் இவர்கள் அல்ல .சொல்ல போனால் ஆய்வு ரீதியாக செல்ல போகும் கடைசி மனிதர்கள் இவர்கள். இவர்கள் கொடுக்க போகும் ரிப்போர்ட் இறுதியானது . அந்த ரிப்போர்ட் பூமியின் அந்த பெரும் வரலாற்று நிகழ்வை நடத்த இருக்கிறது. ஒட்டு மொத்த மனிதகுலத்தை மார்ஸ் க்கு குடி மாற்ற போகும் நிகழ்வின் பச்சை கொடி தான் இவர்கள் கொடுக்க போகும் அந்த இறுதி ரிப்போர்ட்.  அடுத்த வந்த சில நாட்களுக்கு  அவர்கள் தொடர்ந்து செவ்வாயை கழுகு பார்வையிட்டார்கள். பூமியின் சில பணக்கார நிறுவனங்கள் செவ்வாயின் பரப்பில் ஆங்காங்கே  நிறுவி இருந்த பிரமாண்ட green house factory க

தேடல் கேள்விகள்

Image
 " தேடல் கேள்விகள் " அறிவியல் காதலன்  ரா.பிரபு.           நண்பர்களுக்கு வணக்கம் ! இந்த தேடல் கேள்விகள் நமது" தேடல் திடல் " என்கிற முக நூல் பக்கத்தில் அவ்வபோது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் ஒரு 10 கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களின் தொகுப்பு ஆகும். நல்ல கேள்விகளே நல்ல பதிலை கொடுக்க உதவுகின்றன. கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி அதை படித்து பயனடைய போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்விகள் மூலம் தேடலை தொடருவோம். 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 "தேடல் கேள்விகள்  " (கேள்வி : 1 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯 கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ?? -கார்த்திக் கோயமுத்தூர் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰  ✍️பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம். உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல.  அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism . உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள்