Posts

Showing posts from January, 2017

"டைம் கிரிஸ்டல் என்பது என்ன"

Image
"டைம் கிரிஸ்டல் என்பது என்ன" (கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு) டைம் கிரிஸ்டல் ஒரு அற்புத பொருள். விஞ்ஞான வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி புதிய புதிய வளர்ச்சிகளை கண்டுபிடிப்புகளை கொண்டது தான் என்றாலும் நம்ம விஞ்ஞானிகள் திடீர் என எப்பவாவது புத்தம் புதிய கண்டு பிடிப்பை கண்டுபிடிப்பார்கள். அது இது வரை இல்லாத "பிராண்ட் நியூ" கண்டுபிடிப்பாக இருக்கும். சம்பிரதாயமான கதைகளை தாங்கி வரும் வழக்கமான திரைப்படங்களுக்கு இடையே திடீரென வித்யாசமான கதை அம்சம் கொண்ட படம் வருவது போல. அப்படி விஞ்ஞாணிகள் கண்டு பிடித்த ஒரு 'பிராண்ட் நியூ 'கண்டுபிடிப்பு தான் டைம் கிரிஸ்டல். இது ஒரு வகையில் நம்ம சாதா கிரிஸ்டல் போல தான் என்றாலும் பல வகையில் இது வித்தியாசமானது... மகா வித்தியாசமானது. குறிப்பாக இது ஒரு நான்காம் பரிமாண பொருள் அதாவது காலத்தில் மாறும் தன்மை கொண்டது என்றால் இதன் விசேஷம் நீங்கள் புரிந்து கொள்ளலாம். நாம் இதுவரை பார்த்துவந்த உலோக அலோக மின் கடத்தும்...மின் கடத்தா ..எல்லா பொருளும்  "equilibrium" என்று சொல்ல கூடிய

"மீண்டும் ஒரு துரோக வரலாறு"

Image
" மீண்டும் ஒரு துரோக வரலாறு" (கருத்தும் எழுத்தும்: ரா.பிரபு) "தீ .... தன் எதிரிகளை எரித்து சாம்பல் ஆக்கி விட்டது" என்ற தகவளோடு அடுத்த கட்டுரையை நான் தொடங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்." என்று நான் கடைசியாக ஜல்லிக்கட்டு பற்றி எழுதிய கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் "தீ தன்னை சார்ந்தவர்களையே எரித்து சாம்பலாக்கி உள்ளது " என்று  அல்லவா நான் எழுத தொடங்க வேண்டி இருக்கிறது. அதை எரித்தது வேறு யாரும் இல்லை நம்ம காவல் துறை என்பதை அல்லவா நான் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. எட்டு நாள் ...... கொட்டி செல்லும் பணி, சுட்டு செல்லும் சூரியன் இரண்டையும் எதிர் கொண்டு அலையின் சத்தத்தை கோஷத்தாலும் அலையின் விடாமுயற்சியை போராட்டதாலும் முறியடித்து .. மக்களை மலைக்க வைத்து அரசை அசரவைத்து உலகை உற்று பார்க்க வைத்து போராடிய இளைஞர்களின் இலக்காண அந்த நிரந்தர ஜல்லிக்கட்டு மசோதா, 23 மாலை சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய போது... அதை கொண்டாட யாரும் இல்லாமல் போன பரிதாபத்தை என்னவென்பது.? காரணம் அன்று அதிகாலையே...வெண்ணை திரண்டு வரும் போது பானை உ

"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 2 )

Image
"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 2 ) நம்மை சுற்றி ஒரு மாய வலை (கருத்தும் எழுத்தும் : #ரா_பிரபு) "தீ ... ... இப்போது தான் பிடித்திருக்கிறது... அது எங்கே பரவும் எப்படி எரிக்கும் .... தன்னை ...தன் கலாச்சாரத்தை தொட்டவனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ... பொறுத்திருந்து பார்ப்போம்..." என்று கடந்த கட்டுரையின் இறுதியில் முடித்திருந்தேன். இப்போது தமிழ் உணர்வு என்ற காட்டு தீ தமிழகம் மொத்தமும் பரவி அனைவர் உள்ளங்களையும் கபளீகரம் பண்ணி கொண்டு இருக்கிறது. 16.1.17 அன்று விடிய விடிய வெறும் 300 பேரால் தொடங்க பட்ட போராட்டம் அடுத்த நாள் காலையில் அனைவரும் கைது செய்து அப்புற படுத்த பட்ட பின் தனது நிஜ வடிவத்தை வெளிப்படுத்தியது. அதே அலங்காநல்லூரில் 4 மணி நேரம் கழித்து ஆயிரகணக்கானவர்கள் கூட தொடங்க .. அவர்களை ஆதரித்து மெரினாவில் மாணவர்கள் கூட தொடங்க.. பிறகு கோவை ஈரோடு திருச்சி சேலம் என வரலாறு கண்டிருக்காத தமிழரின் போராட்ட புயல் வீச தொடங்கி இருக்கிறது. ஒரு நிமிடம்..... மிகுந்த உணர்வு எழுச்சியில் போராடி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒரு நிமிடம்..... க

"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" நம்மை சுற்றி ஒரு மாய வலை( பகுதி 1)

Image
" ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 1) நம்மை சுற்றி ஒரு மாய வலை (கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு) ஜல்லிக்கட்டு தடையும் ... அதன் பின்னால் இருக்கும் அரசியலும் நம்மை சுற்றி பின்னப்பட்டு வரும் நம் கண்ணுக்கு தெரியாத மாய சதி வலையும் அதன் பின்னணியும் நாம் கண்டிபாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. நம் நாட்டின் பாரம்பரியத்தின் மிக பெரிய அடையாளமான ஜல்லிக்கட்டை தடை செய்வதில் அதை முற்றிலும் அழித்து ஒழிப்பதில் சில பேரால் காட்ட படும் தீவிரம் ....மும்பரம்.... அந்த ஆர்வம்...உங்களை ஆச்சர்ய படுத்தி இருக்கலாம்... ஆனால்... ஜல்லி கட்டை அழிக்க நினைக்கும் நம் கண்ணுக்கு தெரியாத  எதிரிகளும்.... அவர்களது விபரீத நோக்கமும்... அதனால் அவர்கள் அடையபோகும் லாபமும் நாம் நினைப்பதற்கு அப்பாற் பட்டு மிக பெரியது நமது எதிரிகளின் எண்ணிக்கையும் அவர்களது வலிமையையும் கூட நாம் நினைப்பதை விடவும் மிக பெரியது. வெறும் விலங்குகளின் நலனுக்காக பாடுபடும் ஒரு அற செயல் இது அல்ல என்பதை புரிந்து கொள்ள அதிக அறிவு தேவை இல்லை .. உதாரணமாக ராணுவம் முதல் குதிரை பந்தயம் வரை குதிரைகளை வதைப்பது (குள்ளமாக வளர்ந்த

"முழுமை எனும் உண்மை" (full part)

Image
முழுமை எனும் உண்மை (பாகம் 1) அறிவியல் காதலன்... கருத்தும்,எழுத்தும் (ரா.பிரபு) இம்முறை நான் எழுதி இருப்பது எனது வழக்கமான கட்டுரைகளில் இருந்து  சற்று மாறு பட்ட கட்டுரை. இதை நான் எழுத காரணம் இருக்கிறது ..அதை கட்டுரை முடிவில் சொல்கிறேன். இன்றைக்கு அறிவியலை பற்றி பார்க்கப்போவது இல்லை மாறாக அறிவியலை பற்றிய அறிவியலை பார்க்க போகிறோம்.. அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா..? முடியாது என்பதை உடனே சொல்லி விடலாம். அல்லது பல சோதனைக்கு பின் கடவுள் இல்லை என்ற முடிவை பொறுமையாக சொல்ல வேண்டி வரும். காரணம் ,ஒன்றை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அது ஆதாரப்பூர்வமான... அல்லது ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள கூடிய ..பரிசோதனை முடிவுகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.. கடவுளுக்கு அந்த தகுதி இல்லை... சரி அந்த ஆளு ரொம்ப சர்ச்சை கூறியவர் என்பதால் அவரை விட்டு விடுவோம்... நம்மால் அன்றாடம் பயன்படுத்த கூடிய நாம் சாதாரணமாக காண கூடிய எல்லா வற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா...பல விஷயங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் சில விளைவுகளை கொண்டு புரிந்து கொள்கிறோம் உதாரணமாக

"தஞ்சை பெரிய கோவில்.. ஒரு அசாத்திய கட்டிடம்."

Image
தஞ்சை பெரிய கோவில் ஒரு அசாத்திய கட்டிடம். (கருத்தும் எழுத்தும்:  ரா. பிரபு ) தஞ்சை பெரிய கோவில் பற்றி... அதன் அதிசயங்கள் ஆச்சரியங்கள் பற்றி நாம் அனைவரும் பெரும்பாலும் அறிந்தது தான் என்றாலும் சில நுணுக்கமான உண்மைகளை வரலாற்றை எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல் பிரமிக்க தோன்றுகிறது.. 'பொன்னியின் செல்வன் 'நாவலின் கதாநாயகன் அருள்மொழி சோழன்.... அதாவது நம்ம ராஜராஜ சோழன்....கிபி 1010 இல் காவேரி சமவெளி பகுதிகளில் அந்த அதிசயத்தை கட்டிய போது அந்த காலகட்டத்தில் மக்கள் இது போன்ற ஒன்றை கண்டிருக்கவில்லை... அக்காலத்தில் கோவில்கள் 2 அல்லது மூன்று தளத்தை மட்டுமே கொண்டிருந்த போது ராஜ ராஜ சோழன் யாரும் பார்த்திராத வகையில் 15 தளங்களை கொண்டு இதை கட்டி அசத்தினான். முதன்மை கோபுரத்தில் பல உயரமான கோபுரம் பார்த்திருக்கலாம் ஆனால் விமான கோபுரம் இவ்வளவு உயரமாக கட்ட பட்டதை முதன் முதலாக மக்கள் பார்த்து ரசித்து அதிசயித்தார்கள். அந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட மற்ற கோவில்களை காட்டிலும் கிட்ட தட்ட 40 மடங்கு பெரியதாக இருந்தது தஞ்சை பெரிய கோவில். முதல் முதலில் ராஜராஜன் அதற்கு வைத்த பெயர் "ரா

"எல்லோரா கைலாயநாதர் கோவில் ஒரு சாத்தியம் அற்ற படைப்பு"

Image
எல்லோரா கைலாயநாதர் கோவில் ஒரு சாத்தியம் அற்ற படைப்பு ( அறிவியல் காதலன் ) கருத்தும் எழுத்தும் : (ரா.பிரபு) உலகின் பல அதிசயங்களை நாம் வியந்து நோக்கினாலும் நம் அருகே உள்ள அசாத்திய அதிசயங்கள் பலவற்றை இன்னும் நான் உற்று பார்க்க வில்லை என்பதே உண்மை. அப்படி ஒரு அசாத்திய கட்டிடம் தான் எல்லோரா கைலாஷ் நாதர் கோவில்.. மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் இல் உள்ள எல்லோரா வின் உலக புகழ் பெற்ற குகை கோவில்கள் மொத்தம் 34. அதில் 16 ஆவது குகை கோவில் இந்த கைலாச நாதர் கோவில். இது 8 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிருஷ்ணா மன்னனால் கட்டப்பட்டது. ஒரு முழு மலைபாறையை  அப்படியே குடைந்து முழு கோவிலும் செதுக்க பட்ட ஒரு அற்புத கோவில் இது. வழக்கமான சிற்ப வேலைகள் போல முன் புறமாக இல்லாமல் மலை உச்சி தொடங்கி தலையிலிருந்து குடைந்து குடைந்து முழு கோவில் வெட்ட பட்டுள்ளது. ஒரு சிக்கலான அமைப்பை ஒரே கல்லில் செதுக்கி இருந்தால் நாம் எவ்வளவு ஆச்சர்ய படுவோம். இவ்வளவு பெரிய ஒரு கட்டிட அமைப்பு.. சுற்றி பிரகாரம்...  தூண்கள்.... சுவற்றில் சிற்ப வேலைபாடு... ஒரு இணைப்பு பாலம் ... அங்கங்கே பால்கனி அமைப்பு