"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 2 )




"ஜல்லிக்கட்டும் பீட்டாவும்" (பகுதி 2 )

நம்மை சுற்றி ஒரு மாய வலை

(கருத்தும் எழுத்தும் : #ரா_பிரபு)

"தீ ... ...
இப்போது தான் பிடித்திருக்கிறது...
அது எங்கே பரவும் எப்படி எரிக்கும் ....
தன்னை ...தன் கலாச்சாரத்தை தொட்டவனை என்னவெல்லாம் செய்யும் என்பதை ...
பொறுத்திருந்து பார்ப்போம்..."

என்று கடந்த கட்டுரையின் இறுதியில் முடித்திருந்தேன்.

இப்போது தமிழ் உணர்வு என்ற காட்டு தீ தமிழகம் மொத்தமும் பரவி அனைவர் உள்ளங்களையும் கபளீகரம் பண்ணி கொண்டு இருக்கிறது.
16.1.17 அன்று விடிய விடிய வெறும் 300 பேரால் தொடங்க பட்ட போராட்டம் அடுத்த நாள் காலையில் அனைவரும் கைது செய்து அப்புற படுத்த பட்ட பின் தனது நிஜ வடிவத்தை வெளிப்படுத்தியது.

அதே அலங்காநல்லூரில் 4 மணி நேரம் கழித்து ஆயிரகணக்கானவர்கள் கூட தொடங்க .. அவர்களை ஆதரித்து மெரினாவில் மாணவர்கள் கூட தொடங்க.. பிறகு கோவை ஈரோடு திருச்சி சேலம் என வரலாறு கண்டிருக்காத தமிழரின் போராட்ட புயல் வீச தொடங்கி இருக்கிறது.

ஒரு நிமிடம்.....

மிகுந்த உணர்வு எழுச்சியில் போராடி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் நமக்கு தேவை ஒரு நிமிடம்.....
கொஞ்சம் நிதானமாக யோசிக்க....
அதாவது,
உணர்ச்சிவசபட்டு போராட்டம் செய்து கொண்டிருக்கும் நாம் அறிவு பூர்வமாக அடுத்த கட்ட நகர்வை கோட்டை விட்டு விட கூடும் என்பதை ஒரு நிமிடம் ஒதுக்கி நாம் நினைவு படுத்தி கொள்ள வேண்டும் . அதை பற்றி பகிர தான் இந்த கட்டுரை.

பீட்டா இந்தியா வின் CEO பூர்வா ஜோசிபுரா "இன்னும் காட்டாங்க மாதிரி போராடி கொண்டிருக்கங்களே தவிர இன்னும் கூட யாரும் உச்ச நீதி மன்றம் வந்து எங்களை எதிர்த்து சந்திக்க முடிலேயே.."
என்கிற ரீதியில் கருத்து சொல்லி இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

அதீத போராட்ட குணத்தில் இருக்கும் நாம் இப்போது அடுத்ததாக செய்ய கூடியது... செய்ய கூடாதது இரண்டிலும் கவனமாக இருக்க வேண்டிய மிக முக்கிய தருணம் இது.

எதிரியை எதிர்கொள்வதில் இரண்டு கட்டங்கள் உள்ளது ஒன்று
"எதிர்ப்பை தெரிவிப்பது"
அடுத்தது "எதிர்த்து தாக்குவது" .
இதில் முதல் கட்டத்தை நாம் மிக சிறப்பாக வெற்றிகரமாக செய்து உள்ளோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இவ்வளவு பெரிய போராட்டத்தை அரசியல்வாதி செய்திருப்பானேயானால் எத்தனை பேருந்து ஏரிந்திருக்கும் எத்தனை கடைகளை சூறையாட பட்டிருக்கும் சொல்ல முடியாது ஆனால் இன்று வரை ஒரு இருசக்கர வாகனத்தை கூட எரிக்காமல் மிகுந்த அற வழியில் போராடி நாட்டையே ஆச்சர்ய படுத்தி விட்டான் தமிழன்.
எந்த தலைமையும் இல்லாமல் யார் வழிகாட்டுதலும் இல்லாமல் அவன் எதிர்பை காட்டிய விதம் அனைவரும் அவனை அன்னாந்து பார்க்க வைத்து விட்டது.

ஆனால்...

இந்த முதல் கட்டத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற இவன் இரண்டாவது கட்டத்தை பற்றி யோசிக்க கூட இல்லையோ என்ற வருத்தத்தை சந்தேகத்தை நான் பகிர வேண்டி உள்ளது.

இரண்டாவது கட்டமான எதிர் தாக்குதல் தான் மிக முக்கியமானது.
ஒரு குளத்தில் தவளையை விழுங்க வரும் கொக்கை பார்த்து தவளைகள் கூச்சல் இட்டால் அதனால் கொக்கு கலவரம் அடைய போவதில்லை தவளை கூச்சலால் கொஞ்சம் தலைவலி வரலாம் அவ்வளவு தான் .
ஆனால் ஒரு தவளை எதிர்த்து குரல்வளையை பிடித்தால் தான் கொக்கு கொஞ்சம் நிலைதடுமாறும்.
அப்படி நாம் பிடிக்க வேண்டிய சில குரல்வளைகள் இருக்கிறது.

உதாரணமாக...
நம்மை மிருக வதை என்ற பெயரில் வழக்கு போட்ட அந்த பீட்டா அமைப்பு மேலேயே நாம் அந்த அமைப்பை இந்தியாவில் தடை செய்ய சொல்லி வழக்கு போடலாம் அந்த அளவு பீட்டாவுக்கு எதிரான ஆதாரங்கள் உலகத்தில் உண்டு.

அது மிருகங்களை கொல்வதை ...
நாட்டில் மத பிரிவினையை தூண்டுவதை.....
ஆதார பூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியும்
அவ்வளவு ஏன் அது தீவிர வாத இயக்கத்துக்கு பண பரிவர்த்தனை செய்வதாக வெளிநாட்டு காரனே சொல்கிறானே.
போதாதா வழக்கு போட

அடுத்ததாக ,
கோக் பெப்சி போன்ற குளிர்பானங்கள் பூச்சி கொல்லி இருப்பதாக நிரூபிக்க பட்டுவிட்ட நிலையில் .....
கோக் தனது பாட்டிலில் "குழந்தைகளுக்கு உகந்தது அல்ல" என்று எழுத தொடங்கி விட்ட நிலையில் இவைகளை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற பொதுநல வழக்கை தொடர வேண்டும்.

பெப்சிகும் பீட்டாக்கும் என்ன சம்பந்தம் ...
கோக்குக்கும் காளை மாட்டிற்கும் என்ன சம்பந்தம்... என்று கேட்கலாம்.
பீட்டாவும் கூலி கொடுத்து இயக்கி கொண்டிருக்கும் பின்னணி இயக்குனர்கள் இவர்கள் தான் அங்கே அடித்தால் தான் இங்கே வலிக்கும்.

பீட்டாவும் அதன் செயல்பாடுகளும் அதன் வலை பின்னல்களும் மிக பெரியது உதாரணமாக பால் சந்தையை பிடிக்க ஜெர்சி கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் பீடாவுக்கு பண உதவி செய்வதை பற்றி கடந்த கட்டுரையில் சொன்னேன்.
அது ஒரு புறம் இருக்க அப்படி அந்த A1 வகை பால் வர்த்தகம் நடை பெற்றால் அந்த பால் பரப்ப போகும் சர்க்கரை நோய்க்கு மருந்து விநியோகம் செய்ய போகும் நிறுவனமும் பீட்டா நிழல் முதலாளிகளில் ஒருவன் தான்.(இந்தியாவில் சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் ஆண்டுக்கு 375 லட்சம் கோடி)

உங்களுக்கு தெரிந்திருக்கும் நோயை குண படுத்த மருந்துகள் தயாரிக்க நடத்த படும் ஆய்வுக்கு விலங்குகள் மிக முக்கியமானவை .
அப்படி மருந்தை தயாரிக்க விலங்கை பயன்படுத்த படும் அணைத்து இடங்களிலும் பீட்டா விலங்கு காப்பாளன் போர்வையில் தடை வாங்கி உள்ளது . காரணம் அவனை வழி நடத்தும் முதலாளியின் நோக்கம் குண படுத்த படும் மருந்து தயாரிக்க பட்டு விட கூடாது என்பதே.

இப்படி அவன் நிழல் முதலாளிகள் குரல்வளையை முதலில் நாம் நெறிக்க வேண்டும் அதை முதலில் குளிர்பானத்தில் இருந்து தொடங்க வேண்டும்.

அடுத்ததாக நான் சொல்ல போகும் புத்திசாலித்தனமான  நகர்வு ...
நல் அக்கறை கொண்ட ஒரு வழக்கறிஞர் நல்வினை விஸ்வநாத் என்பவரால் சொல்ல பட்டது....
(அடுத்த பாரா அவர் வார்த்தைகளில் காப்பி பேஸ்ட் செய்துள்ளேன்.)

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டுமா??

உரிமையை மீட்க அருமையான வாய்ப்பு

சனவரி 26 குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் உள்ளூர் அரசு அதிகாரிகள் தலைமையில் உங்கள் கிராமத்தில்   நடைபெற உள்ளது.

கிராம சபை கூட்டத்தில் பொது மக்கள் யார் வேண்டுமானலும் தீர்மானம் கொண்டு வரலாம்.

சிந்து சமவெளி நாகரீக காலம் முதல் நடந்து வரும்  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டினை நடத்த சட்ட பூர்வ அங்கிகாரம் உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் என்ற பொருள் படும் தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில்  நிறைவேற்றுங்கள்  

இந்த தீர்மாணத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைவேற்றி அதன் சான்றிட்ட நகலை பெற்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பி வையுங்கள்

 முதல் முறையாக உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் இப்படி ஒரு வேண்டுகோளை  மக்கள் மன்ற தீர்மானங்கள் மூலமாக சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும்  

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தில்  தீர்மானம் நிறைவேற்றி அதை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தால் அதுவும் வழக்கில் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக   ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்

வழக்கு எண்ணை கட்டாயம் குறிப்பிடவும்
(உச்ச நீதிமன்ற வழக்கு எண்  CIVIL APPEAL NO.5387 OF 2014)

தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு  கிராமத்தில் உள்ள இளைஞர்கள் (வாக்காளர்கள்)  கையெழுத்திட்டு உங்கள் கிராம ஊராட்சிக்கு தொடபுடைய ஊராட்சி  ஒன்றியத்தின் வட்டார வளர்சி அலுவலர்க்கும் உங்கள் மாவட்ட ஆட்சியருக்கும்  கடிதம் அனுப்பி வையுங்கள்

அன்புடன்
நல்வினை விஸ்வராஜு. எம்.ஏ.,பி.எல்.,
வழக்கறிஞர்
செல் 9445675801
https://www.facebook.com/nalvinai/photos/a.613104222035909.1073741826.136509026362100/1399692700043720/?type=3&theater

இன்னொன்று கூட உள்ளது ...

அதாவது "ராயல் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ் " என்ற ஒன்று
அதை பற்றி.....

Royal_Court_of_Justice இலண்டனில் இருக்கும்  காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் .
இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்.....  சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்ப்போது நடக்கும் போரட்டாத்தையும் ...... இந்த இந்திய குடியரசின் அலட்சி போக்கையும் கண்டித்து ஒரு மனு போடும் பட்சத்தில்...
இந்திய அரசை உடனடியாக அலற செய்ய முடியும் என்கிறார்கள்.
(உதாரணம் மலேசிய போராட்ட வெற்றி)

மேலும் ..

நமது போராட்டம் அதன் கோரிக்கை முக்கியமாக காளைகளை காட்சி படுத்த பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விட கூடாது அப்போது தான் ஜல்லிகட்டு தடையை நம்மால் உடைக்க முடியும்.

அடுத்ததாக நாம் செய்ய வேண்டியது ஒவொருத்தரும் இந்த போராட்டத்தில் தங்கள் பங்களிப்பு செய்ய வேண்டும்.
அதாவது களத்தில் இறங்கி செய்ய படுவது மட்டுமே போராட்டம் அல்ல தாங்கள் எந்த தளத்தில் இருந்தாலும் உரிமை காக்க தங்கள் வழிமுறையில் பங்களிப்பு செய்வதும் போராட்டம் தான்.

நீங்கள் திரை துறையில் போராடும் இளைஞரா இதை மைய்ய படுத்தி ஒரு குறும்படமாவது எடுங்கள்...

நீங்கள் ஆசிரியரா உங்கள் மாணவர்களுக்கு இதை பற்றி சொல்லி தாருங்கள்.....

நீங்கள் வழகறிஞரா போராட்டத்தில் கைதானவர்களுக்காக வாதாடுங்கள்..

நீங்கள் எழுத்தாளரா இதை குறித்த கட்டுரையை எழுதுங்கள்...

நீங்கள் சும்மா face book மட்டும் பார்பவரா... பரவா இல்லை அதில் பீட்டா இந்தியா என்ற பேஜ் சென்று அதை spam என்று புகார் அளியுங்கள்..
பல பேர் இதை செய்தால்
முக நூல் சட்டத்தின் படி அந்த பக்கம் முடக்க படும்.

அடுத்ததாக....

செய்ய கூடியவைபோல செய்ய கூடாதவைகளும் மிக முக்கியம்..
இதுவரை நம்மை கண்டுகொள்ளாத அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களும் நமது போராட்ட வீரியத்தை பார்த்து இப்போது நம்முடன் இனைந்து நமது போராட்ட ஒளியை அவர்கள் பெற்று கொள்ள முயற்சிப்பார்கள் அவர்களை (ஒரு சில நல்லவர்களை தவிர்த்து)அண்ட விட கூடாது .

அலங்காநல்லூரிலும் சென்னை மெரினாவிலும் அரசியல் வாதிகளை விரட்டி விட்டது பாராட்ட கூடியது .

அவர்களில் யாரவது தாங்களும் போராடுகிறோம் என்றால் ..... தயவு செய்து இந்த இளைஞர்கள் கூட்டத்தில் இல்லாமல் நீங்கள் தனியாக போராடி உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் இவர்களுக்கு அரசியல் மற்றும் சினிமா சாயம் பூசாதீர்கள்.

இதை இவ்வளவு காட்டமாக சொல்ல காரணம் உங்கள் குவாட்டர் கோழி பிரியாணி போராட்ட கூட்டம் போல் இல்லாமல் இது மிக புனித போர் போல நடந்து கொண்டுள்ள போராட்டம்.

இதில் சிறுமிகள் சிறுவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் ....
பெண்கள் கலந்து கொண்டுள்ளார்கள்... திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளார்.....
நிறை மாத கர்ப்பிணி கலந்து கொண்டுள்ளார்.....
கோவையில் இன்று திருமணம் ஆன புது மணமக்கள் கல்யான கையோடு கலந்து கொண்டுள்ளார்கள்......
அவ்வளவு ஏன்..
கழுத்துக்கு கீழே முற்றிலும் செயலிழந்த மாற்று திறனாளி கலந்து கொண்டுள்ளதையும் தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது.
இப்படி ஒரு அற போராட்டத்தை நடத்த தமிழ் அரசியல் வாதிக்கு சாத்தியம் இல்லை அது தமிழ் உணர்வுக்கு மட்டும் தான் சாத்தியம்.

எனவே உங்களுக்கு உண்மையில் உதவும் எண்ணம் இருந்தால் நல்ல தீர்ப்பை பெற்று தருவதில் அதை காட்டுங்கள்...

அடுத்ததாக கூடாத ஒன்று ...இந்த தீ யை ஜல்லிகட்டோடு அணைய விட கூடாது இனி இதை ஊழலுக்கு எதிராக லஞ்சத்திற்கு எதிராக .. தமிழ்நாட்டில் நடக்கும் ஒவொரு தவறான விஷயத்திற்கு எதிராக எரிய விட வேண்டும்.

அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராகவோ இந்திய தேசிய கொடியை இழிவு படுத்தும் செலயலோ செய்ய கூடாது அப்படி செய்தால் பீட்டவை நீங்கள் பல படுத்து கிறீர்கள் என்று பொருள் அவனுக்கு இப்போதைக்கு தேவை அதுதான்..(இந்திய அரசியல்வாதிகளை கேவல படுத்துங்கள் ...இந்தியாவை அல்ல)

'பீடாவுக்கு நன்றி 'என்ற போஸ்டரை அவசர பட்டு அடித்துவிட கூடாது அதை அவர்கள் வேறு விதமாக பயன் படுத்தி கொள்ள கூடும்.

சரி இது வரை நாம் நடத்திய போராட்டத்தின் வாயிலாக ஏதாவது சாதித்து இருக்கிறோமா....?

வெகு நிச்சயமாக பல விஷயம்  சாதித்திருக்கிறோம்...

தமிழர்களுக்கு இல்லாத ஒன்று ஒற்றுமை அதை இன்று சாதித்து விட்டோம்.

நம்மை வடக்கவே கண்டுக்க மாட்டான் என்ற நிலை மாறி இன்று CNN ,Times now போன்ற வற்றின் கேமரா நம் பக்கம் திரும்பி உள்ளது...
உலகமே நம்மை உற்று பார்க்கிறது...

ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை தமிழ் நாட்டில் மட்டுமே தெரிந்திருந்தது இன்று அந்த வார்த்தையை உலகமே தெரிந்து கொண்டது....

தமிழர் என்ற ஒரு இனம் உண்டு ...அதனிடம் தனது கலாச்சாரத்திற்காக உயிரை கொடுக்கும் குணம் உண்டு என்பதை உலகிற்கு தெரிய படுத்தி உள்ளோம்.

பீட்டா தனது வாலை ஆப்ரிக்காவில் கூட வெற்றிகரமாக ஆட்ட முடிந்த நிலையில் அது தமிழகத்தில் மிக தவறான இடத்தில மோதி விட்டதை பீட்டாவுக்கு காட்டி கொண்டிருக்கிறோம்...

இதே போராட்டத்திற்கு சில வருடம் முன் கூடிய கூட்டம் வேறும் 7... 8 பேர் .
ஆனால் இந்த கட்டுரை எழுதி கொண்டிருக்கும் இந்த கணத்தில் தகவல் படி மாலை பீச் ரோட்டில் கூடிய மக்கள் ஒரு லட்சம் பேர்...

கண்டிப்பாக எதிர்காலத்தில் பீட்டாவின் வரலாற்றில் தமிழகம் ஒரு கருப்பு புள்ளியாக இருக்க போகிறது.
தமிழ்நாடு என்ற பெயரை கேட்டாலே அவன் முதளாலிகளுக்கு மண்டையில் ஓங்கி அடித்த உணர்வை தர போகிறது..

இதுவரை நாம் நகர்த்தி உள்ள நகர்வு நிச்சயம் சாதனைதான்.

இப்போது கையில் எடுத்துள்ள போராட்டம் இதன் நோக்கம் ' இந்த போராட்டத்திற்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு தடையை நீக்கி விடுவார்கள் ' என்ற நம்பிக்கையில்
எடுக்க பட்டுள்ளது ..
அப்படி நடக்காத பட்சத்தில் ஆக்கபூர்வமான அடுத்த படி... அடுத்த அடி ..என்ன என்பதை பார்த்து எடுத்து வைக்க நாம் தயங்க கூடாது..

"தீ ....
தன் எதிரிகளை எரித்து சாம்பல் ஆக்கி விட்டது" என்ற தகவளோடு அடுத்த கட்டுரையை நான் தொடங்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.

நன்றி.

அன்பு நண்பன் ரா.பிரபு

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"