Posts

சைத்தானின் ஓவியம் (பாகம் 2 )

Image
#சைத்தானின்_ஓவியம் (பாகம் 2.) #ரா_பிரபு அபிஷேக்..  இண்டஸ்ட்ரியலிஸ்ட் அபிஷேக்.. அந்த மகா சொகுசான ஆபீஸின் ஜன்னல் கண்ணாடி வழியே சோகமும் குழப்பமும் நிறைந்த முகத்துடன் வெளியே கூடி இருந்த மக்கள் கூட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்.. 'பிலடி பெக்கர்ஸ்..' என்றான் உதடுக்குள்...  ஒரு பிரான்ஸ் நாட்டு இறக்குமதி சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான். ஏழைகளை கண்டாலே நெஞ்சில் வெறுப்பு நெருப்பு சுரக்கும் அவனுக்கு. காம்பவுண்ட் சுவர் பக்கம் ஒருத்தன் தலையில் சிகப்பு துண்டு கட்டி கட்டம் போட்ட சட்டையில் அருகில் மனைவி மற்றும் கையில் ஒரு பெண் பிள்ளை வைத்து இருந்தான் .வெயில் ஐ சட்டை பண்ணியதாக தெரிய வில்லை. "ஹ்ம்ம் நான்சென்ஸ் எல்லா குடும்பத்தோட வந்து இருக்காங்க என் கம்பெனியை மூட.. ராஸ்கல்ஸ்.. " " கேடு கேடு மக்களுக்கு கேடு.. நாடு நாடு கெட்டுப் போகும் நாடு.. ஓடு ஓடு ஊரை விட்டு ஓடு... மூடு மூடு பாக்டரியை மூடு.. "   எவனோ ஒருத்தன் ரைமிங் இல் கூவி கொண்டிருந்தது காதில் எரிச்சல் அம்புகளாய் பாய்ந்து கொண்டு இருந்தது..வெறுபாய் சிரித்தான்.. வெளிச்சம் குறைவான அந்த ஹாலில் ஏழு பேர் கூடி இருந்தார்கள்

சைத்தானின் ஓவியம்

Image
  #சைத்தானின்_ஓவியம்  #ரா_பிரபு அது ஒரு புகழ் பெற்ற ஓவிய பள்ளியின் கொஞ்சம் பெரிய சைஸ் ஹால். அங்கே குழுமி இருந்த மாணவர்கள் பேசி கொண்டிருந்த 1000 கணக்கான பேச்சுகள் காற்றில் மோதி மோதி ஒரு புரியாத பேர் இரைச்சல் ஐ மழை போல் அந்த ஹாலில் பொழிந்து கொண்டு இருந்தது.  ஆனால் சில நிமிடங்கள் கழித்து  தீடீரென அந்த மழை நின்று பேர் அமைதி தாக்கியது அதற்கு காரணம் அந்த வல்லமை பொருந்திய தலைமை ஆசிரியரின் வருகை..  சண்முக நாதன் நடையில் ஒரு ஆளுமை இருந்தது வெள்ளை வேட்டி சட்டையில் ஒரு நடமாடும் மேகம் போல நடந்து வந்து மைக் முன்னாள் நின்றார். " மாணவர்களே வர போகும் மாநில அளவிலான ஓவிய போட்டிக்கு நம் பள்ளியில் இருந்து இரு ஓவியர்களை நான் தேர்ந்தெடுத்து இருந்தேன். ஒருவன் ரவி இனொருவன் பிஜு. அவர்களுக்கு நான் இறுதி சோதனையாக கடந்த வெள்ளி அன்று ஆளுக்கு ஒரு தலைப்பு கொடுத்திருந்தேன் ரவிக்கு செல்ஃப் போர்ட்ரைட் எனப்படும் தன்னை தானே வரையும் போட்டி மற்றும் பிஜுவிற்கு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று சைத்தானின் உருவத்தை அவன் கற்பனை பண்ணும் விதத்தில் வரைய சொல்லி இருந்தேன் இப்பொழுது அவர்கள் வரைந்த அந்த இரு ஓவியத்தை உங்கள்

முடிவில் ஆரம்பம்

Image
 "முடிவில் ஆரம்பம் " (அறிவியல் சிறுகதை ) #ரா_பிரபு "மார்ஸ்மெல்லோ ELT 11 " என விசித்திர பெயரிட பட்ட அந்த விண்கலம் செவ்வாயின் சிவந்த மண்ணை முத்தமிட்ட போது அதை பூமியின் 2083 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்பம் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டு இருந்தது.  விண்கலத்தில் இருந்த ஐவர் குழுவை 'வெல்கம் டூ மார்ஸ் 'சொல்லி நியான் போர்டுகள் வரவேற்றன. மிஷன் தலைவர் 'கால் எட்வர்ட்' சிரித்த முகத்துடன் மார்ஸின் சிவந்த மண்ணில் காலை வைத்தார்.  செவ்வாய் செல்லும் முதல் மனிதர்கள் இவர்கள் அல்ல .சொல்ல போனால் ஆய்வு ரீதியாக செல்ல போகும் கடைசி மனிதர்கள் இவர்கள். இவர்கள் கொடுக்க போகும் ரிப்போர்ட் இறுதியானது . அந்த ரிப்போர்ட் பூமியின் அந்த பெரும் வரலாற்று நிகழ்வை நடத்த இருக்கிறது. ஒட்டு மொத்த மனிதகுலத்தை மார்ஸ் க்கு குடி மாற்ற போகும் நிகழ்வின் பச்சை கொடி தான் இவர்கள் கொடுக்க போகும் அந்த இறுதி ரிப்போர்ட்.  அடுத்த வந்த சில நாட்களுக்கு  அவர்கள் தொடர்ந்து செவ்வாயை கழுகு பார்வையிட்டார்கள். பூமியின் சில பணக்கார நிறுவனங்கள் செவ்வாயின் பரப்பில் ஆங்காங்கே  நிறுவி இருந்த பிரமாண்ட green house factory க

தேடல் கேள்விகள்

Image
 " தேடல் கேள்விகள் " அறிவியல் காதலன்  ரா.பிரபு.           நண்பர்களுக்கு வணக்கம் ! இந்த தேடல் கேள்விகள் நமது" தேடல் திடல் " என்கிற முக நூல் பக்கத்தில் அவ்வபோது நண்பர்கள் கேட்ட கேள்விகளில் ஒரு 10 கேள்விகளுக்கு நான் கொடுத்த பதில்களின் தொகுப்பு ஆகும். நல்ல கேள்விகளே நல்ல பதிலை கொடுக்க உதவுகின்றன. கேள்வி கேட்ட அனைவருக்கும் நன்றி அதை படித்து பயனடைய போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கேள்விகள் மூலம் தேடலை தொடருவோம். 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 "தேடல் கேள்விகள்  " (கேள்வி : 1 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯 கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ?? -கார்த்திக் கோயமுத்தூர் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰  ✍️பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம். உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல.  அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism . உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள்