சைத்தானின் ஓவியம் (பாகம் 2 )



#சைத்தானின்_ஓவியம் (பாகம் 2.)

#ரா_பிரபு

அபிஷேக்.. 
இண்டஸ்ட்ரியலிஸ்ட் அபிஷேக்..
அந்த மகா சொகுசான ஆபீஸின் ஜன்னல் கண்ணாடி வழியே சோகமும் குழப்பமும் நிறைந்த முகத்துடன் வெளியே கூடி இருந்த மக்கள் கூட்டத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான்..

'பிலடி பெக்கர்ஸ்..' என்றான் உதடுக்குள்... 
ஒரு பிரான்ஸ் நாட்டு இறக்குமதி சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான். ஏழைகளை கண்டாலே நெஞ்சில் வெறுப்பு நெருப்பு சுரக்கும் அவனுக்கு.

காம்பவுண்ட் சுவர் பக்கம் ஒருத்தன் தலையில் சிகப்பு துண்டு கட்டி கட்டம் போட்ட சட்டையில் அருகில் மனைவி மற்றும் கையில் ஒரு பெண் பிள்ளை வைத்து இருந்தான் .வெயில் ஐ சட்டை பண்ணியதாக தெரிய வில்லை.

"ஹ்ம்ம் நான்சென்ஸ் எல்லா குடும்பத்தோட வந்து இருக்காங்க என் கம்பெனியை மூட.. ராஸ்கல்ஸ்.. "

" கேடு கேடு மக்களுக்கு கேடு..
நாடு நாடு கெட்டுப் போகும் நாடு..
ஓடு ஓடு ஊரை விட்டு ஓடு...
மூடு மூடு பாக்டரியை மூடு.. "  

எவனோ ஒருத்தன் ரைமிங் இல் கூவி கொண்டிருந்தது காதில் எரிச்சல் அம்புகளாய் பாய்ந்து கொண்டு இருந்தது..வெறுபாய் சிரித்தான்..

வெளிச்சம் குறைவான அந்த ஹாலில் ஏழு பேர் கூடி இருந்தார்கள் அந்த ஏழு பேர் அந்த கம்பெனியின் மிக முக்கியமான நபர்கள் அபிஷேக்கின் அனைத்து தில்லுமுல்லுகளும் அபிசியல் ஆக தெரிந்தவர்கள் உணர்ந்தவர்கள் கூ(ட)டி இருந்து உதவியவர்கள்.

"அவ்ளோ தான் முடிஞ்சி போச்சு.. இனி கம்பெனியை மூடிட்டு எங்காவது பஞ்சம் பிழைக்க போக வேண்டியது தான்... எல்லோரும் இந்த பைலை படிச்சி கையெழுத்து போட்டுட்டு கிளம்புங்க.."

அபிஷேக் அவர்கள் பக்கம் திரும்பி கோபமும் சலிப்பும் நிறைந்த குரலில் சொன்னான்.அந்த பைலை தூக்கி போட்டான்.

அந்த 7 பேரும் அந்த முடிவுக்கு தான் இப்போ தள்ள பட்டு இருந்தார்கள். அதுவும் குறிப்பாக மீடியாவில் கடந்த சில நாட்களாக ஒரு குழு ஆதாரபூர்வமாக அந்த பகுதி மக்களுக்கு உண்டான திடீர் கேன்சர் கு காரணம் பாக்ட்ரி என்பதை நிரூபித்து இருந்தததை  தொடர்ந்து மக்கள் கிளர்ந்து எழுந்து செய்து கொண்டிருந்த கணக்கற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இன்று முடிவு நாள் என்பது புரிந்தது . இன்றைக்கு இந்த மக்கள் கூட்டம் நமது கம்பெனியை இழுத்து மூடி பூட்டு போட்டு சீல் வைக்காமல் நகரப் போவதில்லை.

முதல் ஆள் பேனாவை எடுத்து மிகுந்த தயகத்தில் இருக்க..

" யோவ் இப்போ நினைச்சா கூட நமக்கு வேற சான்ஸ் இல்ல..  உயிரை காப்பாத்திகனும் மொதல்ல.. போடுயா போட்டு தொலை..  " என்றான் அபிஷேக்

அவன் தனது பேனாவை எடுத்து மிக தயக்கமாக பைலில் வைத்து கையெழுத்து போட போன தருணம்..

"தப்பு... தப்பு பன்றிங்க டியர்ஸ்.... " திடீரென ஒலித்த அந்த ஹஸ்கியான குரல் அனைவரையும் திடுக்கிட வைத்தது.. ஹெக்..ஹெக்..ஹெக்.. கழுதை புலி போல ஒரு சிரிப்பை யாரோ அங்கே மெலிதாக சிரித்து கொண்டு இருந்தார்கள்.
அந்த ஹாலில் கடைசி சோபாவில் ஒல்லியாக சற்று உயரமாக வெளுத்த முகத்துடன் அவன் அமர்ந்து இருந்தான். அரை குறை இருட்டில் வௌவால் ஐ நினைவு படுத்தினான் அந்த சம்பந்தம் இல்லாத 8 ஆவது நபர்.

அட யார் இவன் இங்க எப்படி ஒரு அந்நியன் நுழைந்தான்..பாக்க ஏதோ காலேஜ் பையன் மாதிரி இருக்கான் முகத்தில் மட்டும் முதிர்ச்சி..

"ஹா ஹா காலேஜ் பையன் மாதிரி இருக்கேனா " என்றான் அவன் கோட்டை குலுக்கி...

"மை காட் யார் இவன் என் மைண்ட் ஐ எப்படி ரீட் பண்றான்... "

" இங்க பாரு மிஸ்டர் அபிஷேக்.. நான் யாரு எப்படி இங்க வந்தேன்..எப்படி உன் மைண்ட் ரீட் பண்றேன் இது உனக்கு முக்கியம் இல்லாத கேள்வி.. முக்கியமான கேள்வி என்னன்னா... உன் கம்பெனியை மூடாம தொடர்ந்து ரன் பண்ண வழி இருக்கா இல்லையா... இருக்கு என்பது தான் பதில் ..எப்படி என்பது அடுத்த கேள்வி.. அந்த எப்படிக்கு பதில் என் கிட்ட இருக்கு.. உனக்கு அந்த பதில் வேணுமா வேணாமா என்பது தான் அதற்கும் அடுத்த கேள்வி.... சொல் வேணுமா வேணாமா..... "

 யார் இவன் எப்படி இதை எல்லாம் பேசுகிறான் ..இங்க எப்படி திடீர்னு வந்தான்... 
அந்த  ஏழு பேரும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார்கள்

"டியர் அபிஷேக் திரும்ப திரும்ப என்னை பற்றி யோசிச்சி டைம் வேஸ்ட் பண்ணாத .. வேஸ்ட் பண்றதுக்கு முதல்ல உன் கிட்ட இப்போ டைம் இல்ல... இன்னும் இருபது நிமிஷத்துக்குள்ள அந்த கூட்டம் இந்த கம்பெனிக்குள்ள நுழைய போகுது. யார் கண்டா உண்ண வெறும் கையால அவங்க இங்கேயே அடித்து கொல்லாம். ...சொல்லு உன் கம்பெனி தொடர்ந்து இயங்கணுமா? வேணாமா " "

"வே..வே....வேணும் " 

"ஹா ஹா குட்.....  குட் டிசிஷன் " 
 என்றான் அவன் சிரித்தான்.

"என் பெயர் பிஜு.. இப்போதைக்கு... "

"அப்படினா ?"

"  நான் ஒரு தன்மை... நான் ஊடுருவ நீங்க தயாரா இருக்கணும் பிஜு இருந்தான்... அவனுக்குள்ள வந்தேன் .ரோட் ல கூட படிச்ச பையன் ஆக்சிடென்ட் ஆகி மண்டை நசுங்கிய போது எல்லோரும் பதறினார்கள் ஆனால் பிஜு ரசித்தான் ...புது பைக் வாங்கி என் கிட்ட ஸீன் போட்டியே ஹா ஹா இப்போ தான் பாக்க நல்லா இருக்க மண்டை சிதைஞ்சி... என்று மனசுக்குள் சொன்னான். அந்த வினாடி.. அந்த வினாடி.. தான் நான் அவனுக்குள் ஊடுருவினேன்... என்னால் நீங்க நினைச்சி பார்க்க முடியாததை எல்லாம் செய்ய முடியும்.. உதாரணமா இதோ இந்த மக்கள் கூட்டத்தை ஐந்து நிமிடத்தில் கலைக்க முடியும் ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் " 

" த..தயார் னா.. என்ன எப்படி தயார்..."

" சொல்றேன் இந்த கூட்டம் கூடி இருக்கிறதே அதைச் சுற்றி இரும்பு பின்சிங் போடப்பட்டிருக்கிறது அதில் ஒயர்கள் கனெக்ட் செய்யப்பட்டு உள்ளது.. " சொல்லிவிட்டு பாக்கெட்டுக்குள் கையை விட்டு ஏதோ ஒரு சின்ன கருவியை எடுத்தான். சிகப்பு விளக்கு எரியும் கருப்பு டிவைஸ்..

" இதோ இந்த பட்டனை அழுத்தினால் அந்த இரும்பு வேலிகளுக்குள் மின்சாரம் பாயும்.. "

"இ..இந்த ஏற்பாடு எல்லாம் எப்படி எப்போ பண்ண.. "

" தேவை அற்ற கேள்வி... தேவையான கேள்வி என்னன்னா... இந்த கூட்டம் தற்செயல் மின் விபத்து போல ..தானாக மின்சாரம் தாக்கி கூட்டமாக செத்து போவதில் உங்களுக்கு சம்மதமா... 7 பேரும் மனதார சம்மதித்தால்.. உடனே அது நடக்கும்... "

அவர்கள் ஒருவரோடு ஒருவர் பார்த்து கொண்டார்கள்..

🔵      🔴      🔵     🔴

வெளியே ....
கூட்டத்தில்.. காம்பவுண்ட் சுவர் அருகே தலையில் சிகப்பு துண்டு கட்டிய கட்டம் போட்ட சட்டை போட்டவன் அருகில் இருந்த அவன் மனைவி ...

" ஏங்க போராட்டம் எப்பங்க முடியும் துர்கா காலையிலேயே சாப்பிடல ..பாருங்க எப்படி சுருண்டு சுருண்டு விழுறான்னு " என்று கையில் தூக்கி இருந்த பெண் பிள்ளையை காட்டிள்

"ஏண்டி நம்ம பிள்ளைங்க வாழ்க்கைக்கு தான் டி போராட்டிட்டு இருக்கோம் ஒரு நாள் சாப்பிடாம இருந்தா ஒன்னும் கெட்டு போயிடாது.. இந்த ஃபேக்டரிய மூடலனா எல்லாமே கெட்டுப் போயிடும்.. "

" சரி அந்த கடைக்கு போய் ஒரு சோடா வாவது வாங்கிட்டு வந்து கொடுங்களேன்.. "

அவன் சரி என்று கிளம்பினான்...

🔵      🔴      🔵     🔴

"சொல்லுங்க சம்மதமா   " கேட்டான் பிஜு..

"சம்மதம் " என்றார்கள் 7 பேரும். 
"ச..சம்மதம் என்றான் அபிஷேக்..."

"வெரிகுட் டிசிஷன்... வாழ்க்கை ல சில நேரம் சிலர் எடுக்கும் முடிவுகள் தான் உலகத்தையே மாத்துது... "

ஹாலில் லைட் அரை வினாடி  மின்னி மறைந்து திரும்ப வர.. 

பிஜுவை காணோம்..

🔵      🔴      🔵     🔴

"இறங்குமா " ஒரு நிமிஷம்...

பசுபதி கையில் இருந்த துர்கா வை இறக்கி விட்டு " ஒரு சோடா கொடு பா " என்றான் கடையில்

'ஹெக் ஹெக் ஹெக்...' கழுதை புலி சத்தம் போல ஒரு சத்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பினார் பசுபதி..

"உன் கிட்ட 2 நிமிடம் பேசணும் பசுபதி..." என்றால் பிஜு

அந்த 2 நிமிடத்தில் பசுபதியை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தான் பிஜு..
காரணம் பசுபதிக்கு இருந்த கடன் பிரச்சினை தொடங்கி துர்காவுக்கு இருந்த குடல் புற்றுநோய் பிரச்சினை வரை அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருந்தான் பிஜு..

" யார் ..யார் நீ.. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்.. நீ என்ன ஜோசியக்காரனா. " 

" தேவையற்ற கேள்வி தேவையான கேள்வி என்னவென்றால் உனது அனைத்து பிரச்சினையும் தீர்ந்து நீ பணக்காரனாக வாழ வேண்டுமா வேண்டாமா என்பதுதான் "

"வேணும் ஆனா.."

"ஆனா லாம் வேணா... வேணுமா வேணாமா வேணும் னா என்னால அதை பண்ண முடியும்.. "

"எப்படி..."

" சொல்றேன்.. நீ அதற்கு தயாரா இருக்கணும் அப்போ தானா எல்லாம் நடக்கும்..  என்னால அது முடியும்..ஒரு டெமோ காட்டடா.. உனக்கு ஓரு 10ஆயிரம் ரூபா கொடுகட்டா இப்போ..அட்வான்ஸ் ஆ..."

பிஜு சொல்லி முடிக்கும் முன் பசுபதி போன் மெசேஜ் ஒலிக்க யாரோ 10ஆயிரம் g pay இல் அனுப்பி இருந்தார்கள்..

"யாரோ கை தவறி உன் அக்கவுண்ட் கு 10ஆயிரம் அனுப்பி இருக்காங்க பாரு... "

பசுபதி அதிர்ந்தார்..
"நீ நீ என்ன மந்திர வாதியா..."

"ஹா ஹா என் பெயர் பிஜு.. இப்போதைக்கு.. நீ தயார் னா சொல்லு உண்ண அபிஷேக் மாதிரி ஆக்கிறேன் மக்கள் தயார் ஆக தயார் ஆக தான் எனக்கு சக்தி அதிகரிக்கும். இப்போ தான் ஆபிஸ் ல கொஞ்சம் சக்தி ஏத்திட்டு வந்து இருக்கேன் .."

" என்ன தயார் ..." புரியாமல் கேட்டார் பசுபதி

இடையில் சோடா வாங்கி துர்காவுக்கு கொடுத்து கொஞ்சம் தள்ளி உட்கார வைத்து குடிக்க வைத்து இருந்தான்...

"சிம்புல்..." அதை வெளியே எடுத்தான். சிகப்பு விளக்கு எரியும் ஒரு கருப்பு டிவைஸ்..

"இந்த பட்டனை அழுத்தினால் என்ன ஆகும் தெரியுமா.. இது ஒரு ரிமோட்.. அதோ அந்த ஆபீஸ் இருக்கே..அபிஷேக் ஆபிஸ் . அவன் பார்ட்னர்கள் 7 பேர் கூடி இருக்கும் ஆபிஸ். அங்க ஒரு பாம் வைக்க பட்டு இருக்கு.. இதை அழுத்தினால் அது வெடிக்கும்... "

ஒரு சேம்பில் காட்டடுமா...

"அய்யோ வேணாம்..உன் கிட்ட ஏதோ விசித்திரமா இருக்கு னு புரியுது.... "

"என்னப்பா போலாமா " துர்கா நெருங்கி வந்து கேட்டாள்..
."ஒரு நிமிஷம்..மா போயிடலாம்..."

" இங்க பாரு நான் ஒரு தன்மை.. நீ சந்தோஷமா இந்த பாம் வெடிக்க வைக்க முடிஞ்சா உன்னை பணக்காரன் ஆக்கும் தன்மை... ஒரே ஒருதங்க மட்டும் தான் விபத்தில் தப்புவாங்க அது உன் மனைவி "

" சொல் சம்மதமா " என்று அதை நீட்டினான்..

பசுபதி தயங்கி நிற்க...

" நீ கொல்லப்போறது ஒன்னும் உத்தமர்களை அல்ல உன்னையும் உன் குடும்பத்தையும் உன் ஊரையும் பணத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கும் கொடூர கொலையாலிகளை.. நீ அவர்களை கொல்லவில்லை என்றால் அவர்கள் உன்னை கொல்லுவார்கள். எது வேணும் னு நீயே முடிவு பண்ணு... " பிஜு வின் கண்கள் மெல்லிய நீல நிறத்தில் மின்னியது அது சுடுகாட்டில் எரியும் தீயை நினைவு படுத்தியது.

பசுபதி முகத்தில் இப்போது உறுதி.."இல்ல இது என்னால முடியாது " என்றார் தீர்க்கமாக..நீ சொன்ன பணக்கார வாழ்க்கை எனக்கு வேணாம்.. " சொல்லிவிட்டு திரும்பி நடக்க முற்பட்டார்.

"முட்டாள் முட்டாள்... " என்றான் பிஜு.. அவன் கண்கள் கோபத்தில் நெருப்பு கங்காக மாறி இருந்தது

"நில்..உன் முடிவு உன் இஷ்டம்.. ஆனா உன் முடிவுக்கு ஒரு பரிசு தரலாம் னு இருக்கேன். வாங்கிட்ட்டு போ பசுபதி. 
உன் மகள் துர்காவுக்கு இப்போ என்ன நேர போகுது தெரியுமா..சாக போறா எப்படி னு சொல்றேன் கேளு.. முதலில் வலது கை வலது பக்கமாக திருகி முறுக்கிக் கொள்ளும் பின் இடது கை இடது பக்கமாக அப்படியே முறுக்கிக் கொள்ளும் எலும்புகள் உடைந்து சிதறும் பின் இரு கால்களும் ஒன்றாக வளைந்து பின்னி கொள்ளும்...அப்புறம் வயிற்றில் இருக்கும் பிரச்னை யான குடல்  வாய் வழியாக வெளியே வந்து கொடூரமாக கீழே விழுவாள்.. டெமோ காட்ரேன் பாக்கரியா கண்ணா "  பிஜு வின் அந்த கொடூர சிரிப்பு பசுபதி முதுகு தண்டில் கத்தி போல ஊடுருவியது....

பசுபதி பேய் வரைந்தவனை போல சடாரென நின்றார்.பின் மெல்லிய நடுங்கும் கைகளை அந்த கருவி நோக்கி நீட்டினார்..
"துர்கா ..அப்பாவை மனிச்சிடுமா " என்றார்..."

"ஹா ஹா குட் குட் டிசிஷன் " சிரித்தான் பிஜு.வாழ்க்கை ல சில நேரம் சிலர் எடுக்கும் முடிவுகள் தான் உலகத்தையே மாத்துது... " சொல்லி விட்டு பசுபதி நோக்கி அந்த கருவியை நீட்டினான்.

பசுபதி நடுங்கும் கைகளால் அந்த கருவியை வாங்கினார்....

வாங்கி அந்த கருவியை...
ஓங்கி..தரையில் போட்டு அடிக்க அது சிதறுதேங்காயாய் 100 கோணத்தில் சில்லு சில்லாக சிதறியது...

"அப்பாவை மனிச்சிடுமா உண்ண பணக்காரியா என்னால வளக்க முடியாது நாம வாழ இனொருதனை என்னால கொல்ல முடியாது... "

பிஜு கண்களில் 1000 டிகிரி நெருப்பு..

"முட்டாள் முட்டாள். நான் பார்த்ததிலேயே மகா முட்டாள் நீ தான்.. உன் மகளை இப்படி கொடூரமா சாக வச்சிட்டியே... ஹா ஹா...

என்றான் சொல்லி விட்டு துர்கா பக்கம் திரும்பி கைகளை நீட்டினான்.. 
" முட்டாள் பசுபதியே... இந்த காட்சி எப்படி இருக்கு பாரு.. பாத்து ரசி. " சொல்லி விட்டு விரலில் ஏதோ சைகை செய்தான் ..அடுத்த வினாடி...

"கட்..டக் " அந்த கையெலும்பு முறியும் சத்தம் துல்லியமாக கேட்டது...கை முறிக்கிய முருங்காய் போல ஆனது...

பசுபதி அதிர்ந்து போய் பாக்க... 
அங்கே பிஜு வலியில் துடித்தான்...
ஆம் அந்த கை... பிஜுவின் கை...

பிஜு நடப்பதை நம்ப முடியாமல் தனது முறுக்கப்பட்ட கையை பார்க்க அடுத்த வினாடி அவனது இடது கை இடது பக்கமாக அப்படியே திருகி கட்டக் மட்டக் என்று உடைந்து அவனுக்கு மரண வேதனையை கொடுத்தது.. 

பிஜு புரியாமல் துடித்தான் அப்போது அவனது கால்கள் முறுக்கி பின்ன தொடங்க...

அந்த பெண் துர்கா மெதுவாக அவனை நெருங்கி புன்னகைத்தாள்.. அவள் கண்கள் மெலிதாக ஒரு மஞ்சள் நிற ஒளி மின்னி மறைந்தது ஒரு கோவிலின் விளக்கு ஒளியை அது நினைவுபடுத்தியது..

அவன் பக்கம் குனிந்து.. 

" என்னடா பாக்குற நானும் உன்னை மாதிரி ஒரு சக்தி தான் ஆனால் உனக்கு எதிரான சக்தி நானும் உன்னை போல் தான் மக்களில் ஊடுருவேன்... எப்பொழுது பசுபதி தன் மகள் இறந்தாலும் பரவாயில்லை ஆனால் தன் எதிரியை கொல்ல கூடாது என்று முடிவு செய்தாரோ அந்த வினாடி அவன் மகளுக்குள் ஊடுருவினேன். மேலும் நீ எங்கே எல்லாம் செல்கிறாயோ அங்கே உன்னை சுற்றி நிச்சயம் ஏதோ ஒரு நல்லவன் இருப்பான் அவன் மூலமாக உன்னை தொடர்ந்து துரத்தி துரத்தி வந்து கொண்டே இருப்பேன் " 

துர்கா சொல்லி கொண்டு போக..

பயமும் குழப்பமும் நிறைந்து பிஜு மூச்சு வேகமாக வாங்க...உடல் துடிக்க குடல் சரிந்து ம(மு)டிந்து போனான்...

முற்றும்...

பின் குறிப்பு : 

அடுத்த நாள் செய்தி பேப்பர்...

" பிரபல இண்டஸ்ட்ரியலிஸ்ட் அபிஷேக் மக்கள் கூட்டத்தால் அடித்து உதைக்க பட்டார் அவர் கம்பெனியை மக்களே இழுத்து மூடி சீல் வைத்தனர்.. ".


 

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"