Posts

Showing posts from March, 2017

"மனம் எனும் மாய பிசாசு''

Image
''மனம் எனும் மாய பிசாசு" (பாகம் -1) (எழுத்து: ரா.பிரபு) இந்த மனம் எனும் மாய பிசாசு கட்டுரை தொடரை நீங்கள் படிக்க போகும் முன் நான் வெகு நிச்சயமாக சில முன்னுரைகளை தந்தாக வேண்டும் முதலாவதாக நீங்கள் எனது" சார்பியல் எனும் சமுத்திரம் "போன்ற அறிவியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்தவர் எனில் இதில் அதை எதிர்பார்த்து வராதீர்கள்..இது ரத்தமும், குற்றமும், பகீர் உண்மை சம்பவங்களும் நிறைந்த தொடர். உங்களுக்கு நன்கு தெரிந்த நீங்கள் அப்பாவி என நம்பும் ஒரு மனிதர் மிக பெரிய குற்றம் செய்தவராக பிடிப்பட்டால் உங்கள் மனநிலை என்ன? இவர் ஏன் எதற்கு எப்படி இப்படிபட்டவராக மாறினார்? என்ற கேள்விதான் நம்மை குடையும் ..திடீரென பிடிபடும் குற்றவாளிகளின் பக்கத்து அக்கத்து வீட்டார் பல பேர் இப்படி திகைத்து போவதை நாம் பார்க்கிறோம்.. சமூகத்தில் பிள்ளை பூச்சிகளாக திரியும் எத்தனை பேருக்குள் எத்தன விதமான குற்றவாளிகள் ஒளிந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏன் எதற்கு எப்படி உருவாகிறார்கள் ?என்ன விதமான மனநிலை இப்படிபட்டவர்களை ஆட்க்கொண்டிருகிறது? இந்து கேள்விகளால் பிறந்தது தான் இந்த கட்டுரை தொடர்.  எ

"ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்"

Image
"ஆக்சிஜன் இல்லாமல் ஐந்து நொடிகள்" (அறிவியல்.காதலன்) (ரா.பிரபு) உங்களிடம் ஒரு சுவாரஷ்யமான கேள்வி கேட்க போகிறேன். அதாவது  பிராணவாயு ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்? 'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை 'னு கேக்கறீங்களா...  காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்... "இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும் " என்கிறீர்களா...?  சரி...நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்? 'அப்படி என்றால் ரொம்ப பயப்பட தேவை இல்லை என்ன ...எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை ' என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்.. இனி சொல்ல போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். கருப்பு வானம் : வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளி சிதறல் அதாவது ஒளி வளிமண்டல ஆக்சிஜன் மூல கூறு மற்றும் தூசு களில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது.. இப்போது ஆக்சிஜ