Posts

Showing posts from August, 2019

"துப்பறியும் கருப்பு "

Image
"துப்பறியும் கருப்பு " ("ஒரு கொலை, ஒரு தற்கொலை ஒரு காதல்") (க்ரைம் குறுந்தொடர் ) ரா.பிரபு 'இன்ஸ்பெக்டர் கருப்பு 'தனது தடதடக்கும் புல்லட்டை அந்த காலேஜ் காம்பவுண்ட் ஒட்டி நிறுத்தி ஸ்டான்ட் போட்ட போது மணி இரவு 10.30 இருக்கும். சில்வண்டுகள் சப்தமிட ஆரம்பித்து இருந்த நேரம். இன்ஸ்பெக்டர் கருப்பு பார்க்க ஆணழகன் போட்டிக்கு போகும் வழியில் யூனிபாரம் மாட்டி வந்தவர் போல இருந்தார். நெஞ்சில் புட்பால் மேட்ச் நடத்தலாம் போல ஏக அகலம் . அதில் "கருப்பசாமி " என்ற பேட்ச் . உடல் கட்டில் சல்மான் கான்க்கு டஃப்  கொடுப்பவர் போல இருந்தார். அடர்த்தியான மீசை கையில் காப்பு.  கத்தி போன்ற கண்கள் . பார்வையில் வசீகரம் கம்பீரம்.. என பார்க்க முறுக்கு கம்பியை நினைவு படுத்துபவர். கண்ணில் மட்டும் கூர்மை தாண்டி ஒரு சிநேகம் தெரியும். அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அவர் உள்ளே ஒரு குழந்தை இருப்பது தெரியும். ஆனால் லோக்கல் ரவுடிகளுக்கு தான்.. கருப்புகுள் இருக்கும் அந்த கருணை அற்ற கொடிய அரக்கனை பற்றி தெரியும். உளூர் ரவுடிகள் நடந்து போகும் போது நீங்கள் கருப்பு என்று சத்தமாக கூ