Posts

Showing posts from May, 2018

"ஆர்கிமிடிஸ் அறிந்து கொண்டது என்ன ?"

Image
ஆர்கிமிடிஸ் அறிந்து கொண்டது என்ன ? அறிவியல் காதலன் ⚛ ரா.பிரபு ⚛ ஆர்கிமிடிஸ் தண்ணீர் தொட்டியில் இருந்து 'பப்பி ஷேம் ' கெட்டப் இல் "யூரேக்கா " என கத்தி கொண்டு ஓடியதும் அதை தொடர்ந்து அவர் நமக்கு கொடுத்த சென்ற" ஆர்கிமிடிஸ் கோட்பாடுகளும் " நாம் அறிந்த கதைகள் தான். ஆனால் அன்று அவர் அதை எப்படி கண்டு கொண்டார் ஆர்கிமிடிஸின் மிதக்கும் விதிகள் எப்படி பிறந்தன அவைகள் என்ன சொல்கின்றன என்பதை கொஞ்சம் விளக்கமாக இன்று பார்க்கலாம். முதலில் அந்த "யூரேக்கா " கதை... ஆர்கிமிடிஸ் தனது பல புத்தகங்களில் தனது அறிவை எழுத்துக்களால் நமக்கு விட்டு சென்றுள்ளார் .ஆனால் அதில் எவற்றிலும் அவரது இந்த தண்ணீர் தொட்டி கதை இடம் பெற வில்லை. இன்று வரை மற்றவர்கள் தான் அதை பற்றி எழுதி இருக்கிறார்கள் அவர் ஒரு வார்த்தை கூட எழுத வில்லை. (ஒரு வேலை தான் உடை இல்லாமல் வீதியில் ஓடியதை எழுத அவருக்கு தயக்கமாக இருந்ததோ என்னமோ ) சரி கதைக்கு போவோம். Syracuse என்று ஒரு நகரம் (இன்று  syracuse என்ற பெயரில் ஒரு நகரம் நியூயார்க்கில் இருக்கிறது அதை குழப்பி கொள்ள வேண்டாம் நாம் இப்போது பேசுவது க