Posts

Showing posts from July, 2016

( "9.8" m/s )

Image
                                   ( "9.8" m/s ) (கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு) இன்றைய தலைப்பு என்ன வித்தியாசமா 9.8 னு வச்சிருக்காங்க என ஆச்சர்ய படாமல்.... அங்கே கொஞ்சம் வேடிக்கை பாப்போம் வாங்க.. அந்த பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தில் மேலே ஏறி ஒரு உருவம் கல்லை கீழே நழுவ விட்டு விளையாடி கொண்டிருந்தது முதலில் சின்ன கல் அப்புறம் பெரிய கல் அப்புறம் ரெண்டு கல்லையும் ஒன்றாக என என்ன விளையாட்டோ புரியவில்லை ... அவர் விளையாட்டை புரிந்து கொள்ளும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி.. 100 கிலோ எடை உள்ள ஒரு இரும்பு குண்டு...  வெறும் 50 கிராம் எடை உள்ள ஒரு பஞ்சு துண்டு... இது இரண்டையும் ஒரே நேரத்தில் ஒரு கட்டிட உச்சியில் இருந்து விட்டால் எதை பூமி வேகமாக தன்னை நோக்கி இழுக்கும் ..எது பூமியை முதலில் வந்து அடையும்...? விடையை கட்டுரை கடைசியில் சொல்கிறேன் என்றெல்லாம் சொல்லாமல் இப்போதே சொல்லிவிடுகிறேன் விடை இரும்பு என்றாலும் தவறு பஞ்சு என்றாலும் தவறு ..பூமி எல்லா பொருளையும் ..அது ..சின்னதோ பெரிசோ ஒரே வேகத்தில் தான் இழுக்கிறது. அந்த வேகம் தான் 9.8 மீட்டர் /வினாடி . அதை தான் அந்த உருவம்

"தொடு திரை தொழில்நுட்பம்"

Image
  " தொடு திரை  தொழில்நுட்பம்" (கருத்தும் எழுத்தும்:ரா.பிரபு) இந்த கணத்தில் இந்த கட்டுரையை படித்து கொண்டிருபவர்களில் 99 சதம் பேர் டச் ஸ்க்ரீன் எனபடும் தொடுதிரை தொழில் நுட்பத்தை பயன்படுத்துபவராக தான் இருப்பார்கள். அந்த தொழில் நுட்பம் எப்படி வேலை செய்கிறது என்பதை சுருக்கமாக இன்று பார்க்கலாம். இந்த டச் ஸ்க்ரீன் ஒரு நவீன தொழில் நுட்பம் என நீங்கள் நம்பினாலும் அது 1960 இலேயே E. A ஜான்சன் என்பவரால் கண்டுபிடிக்க பட்டு விட்டது . இன்னொரு ஆச்சர்யம் முதலில் கண்டுபிடிக்க பட்டதே capasitive டைப் டச் ஸ்க்ரீன் தான் .இதை ஏன் ஆச்சர்யம் என்கிறேன் என்றால் இதற்கு பின்னால் கண்டுபிடிக்க பட்ட resistive டைப்பை விட இன்று நாம் அட்வான்ஸ் ஆக நினைப்பது கேபாஸிடன்ஸ் டைப்பை தான்.(தீ பெட்டிக்கு முன்னாடியே லைட்டர் கண்டுபிடிக்க பட்டுவிட்டதை போல) பிற்காலத்தில் 1971 இல் டாக்டர் சாம் என்பவரால் இது வளர்ச்சி அடைந்தது ஒரு மைல் கல்லாக அமைந்தது. அப்போது இது ஒரு டச் சென்சார் என்ற அளவில் தான் இருந்தது அப்போது அதன் பெயர் ஈலோக்ராப்.. பிறகு 1974 ஈலாக்ராபிக் என்ற கம்பெனி உடன் இனைந்து முதல் முதலில் ஒரு ஒழுங

"வார்ம் ஹோல் பிராபஞ்சத்தின் ஷார்ட் கட்"

Image
" வார்ம் ஹோல்  பிராபஞ்சத்தின் ஷார்ட்_கட்" (கருத்தும் எழுத்தும்:ரா.பிரபு) பிளாக் ஹோல் ஒரு அதிசய மாயா ஜாலம் என்றால் இன்று நான் சொல்லவிருக்கும் worm hole மஹா அதிசய மாயாஜாலம்.. இந்த worm hole அதாவது தமிழில் புழு துளை என்று சொன்னால் என்னையா பேரு இது என்று நினைப்பீர்கள் ஆனால் பின்னால் இதன் பெயர் காரணத்தை விவரிக்கும் போது ஏற்று கொள்வீர்கள். இந்த வார்ம் ஹோல் பிரபஞ்சத்தின் ஷார்ட் கட் என்று சொல்லலாம். ஓளி வேகத்தில் பாய்ந்தும் பல ஆயிரம் ஆண்டுகள் கடக்கும் காலத்தையும் வெளியையும் இதை பயன்படுத்தி வினாடிக்கும் குறைவான நேரத்தில் கடக்கலாம். இந்த worm hole ஐ புரிந்து கொள்ள எனது 'சார்பியல் எனும் சமுத்திரத்தில் '3 வது பாகத்தில் நான் சொன்ன அதே எடுத்துகாட்டை மீண்டும் பயன்படுத்து கிறேன். அதாவது நீங்கள் மயிலாப்பூரில் ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது அந்த புள்ளியில் நீங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நாகர்கோவிலில் எட்டி பார்ப்பீர்கள் அந்த புள்ளிக்கு பெயர் தான் worm hole . இயற்கையில் இது மயிலாப்பூரில் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய இடத்தில உள்ளது .இதை வைத்து

" ஒரு தொட முடியாத ரகசியம்"

Image
   "  ஒரு தொட முடியாத ரகசியம்" (கருத்தும்_எழுத்தும்: ரா.பிரபு உங்களால் தொட முடியாத விஷயங்கள் என்று ஒரு நான்கு சொல்லுங்கள் என்றால் மின்காந்த அலைகள்... புவிஈர்ப்பு,  ...இப்படி எதையாவது சொல்லுவீர்கள் . ஆனால் உங்களால் எந்த பொருளையும் தொட முடியாது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா.. உங்கள் கையில் ஒரு பேனாவை பிடித்திருந்தால் பிடிக்க பட்டதாக உணர்வது ஒரு மாயை என்று சொன்னால் எப்படி இருக்கும்?. நீங்கள் பொருளை பிடித்திருக்கும் இடத்தில உற்று பார்க்க வேண்டும்... ஆனால் சாதாரணமாக அல்ல அனு லெவலுக்கு இறங்கி பெரிது பண்ணி... ஒரு அணுவை நீங்கள் பார்த்தால் அதில் மைய்ய பகுதியில் உள்ள உட்கரு வை எலெக்ட்ரான்ஸ் கள் பல அடுக்குகளில் சுற்றி வருவது தெரியும்.. நீங்கள் ஒரு பொருளை தொட நெருங்கும் போது முதலில் தொடர்புக்கு வருவது அந்த வெளிப்புற எலக்ட்ரான் தான்  .ஆனால் நெருங்கும் பொருளில் உள்ள அதே போன்ற எலக்ட்ரான்கள் தொட எத்தனிக்கும் போது இருவருமே எதிர் மின் சுமை தான் என்பதால் ஒன்றோடு ஒன்று பலமாக எதிர்க்கின்றன . பொருளை பிடிக்கும் போது நாம் உணரும் க்ரிப்னஸ்... இந்த எதிர்க்கும் விசை தான்.

"பிளாக் ஹோல் ...ஒரு நிறமற்ற ரகசியம்"

Image
             "பிளாக் ஹோல்.. "-ஒரு நிறமற்ற ரகசியம் (அறிவியல் காதலன்  ரா.பிரபு ) அறிவியலில்....அதாவது வான் அறிவியலில் ஆர்வம் உடையவர்கள்,எப்போதும் பார்த்து வியக்கும் ஒரு பொருள் இந்த பிளாக் ஹோல் . இவைகள் மொத்த பிரபஞ்சத்தில் சக்தி வாய்ந்தவைகளில் ஒன்று... இது என்ன பொருள் ..இது எப்படி இருக்கும் என விளக்க தொடங்கினால் முதலில் வரும் குழப்பமே...இதை என்ன வென்று அடையாள படுத்துவது என்று தான்... இதை பொருள் என்று சொல்லலாம் ஆனால் எக்கச்சக்க சக்தி ரூபம்... இதை சக்தி என்று சொல்லலாம் ஆனால் இதில் எக்க சக்க நிறை உண்டே.. சரி பார்க்க எப்படி இருக்கும் என்று சொல்லலாம் என்றால் இதை நாம் பார்க்க முடியாது. (பிளாக்ஹோல் என்ற பெயரை வைத்து இதன் நிறம் கருப்பு என முடிவிற்கு வர கூடாது) அதிசய விரும்பிகள் , மாயா ஜால விரும்பிகள் அறிவியலை உற்று பார்ப்பது இல்லை என்பது என் கருத்து இந்த பிரபஞ்சத்தை உற்று நோக்கினால் அவர்கள் மாயாஜாலம் எல்லாம் இதற்கு முன் ஒன்றுமே இல்லை அப்படி பல அதிசய பொருளில் ஒன்று பிளாக் ஹோல். .இதை பற்றி சொல்லும் முன் உங்களுக்கு ஒரு கேள்வி..உங்கள் பின் தலையை உங்கள் கண்காளாலேயே பார்க்க ம

"முதலில் வந்தது முட்டை தான்"

Image
        " முதலில் வந்தது முட்டை தான்" (கருத்தும் எழுத்தும் :ரா. பிரபு) இன்று ஒரு உலகமகா கேள்வி(?)கு விடை காண இருக்கிறோம் வாருங்கள்... முட்டாள் தனமான கேள்வி என்பது அறிவியலை பொறுத்த வரை இல்லை. நீங்கள் முட்டாள் தனமான கேள்வி என நினைத்து கொண்டிருக்கும் பல கேள்விக்குள் பல அறிவியல் உண்மை அடங்கி இருக்கலாம். உதாரணமாக 16 ஆம் நூற்றாண்டில் நியூடனுக்கு முன் யாராவது ஒரு குழந்தை தன் அப்பாவிடம் பந்தை மேலே தூக்கி போட்டு ..."அப்பா மேல போட்டா பந்து என்பா கீழ வருது" என கேட்டிருந்தால் இதென்ன முட்டாள் தனமான கேள்வி..மேல போட்டால் கீழ வரத்தானே செய்யும்..என்றிருப்ப்பார். அதான் ஏன் பா வருது என்று மீண்டும் நோண்டி இருந்தால் முட்டாள் தனமா கேக்காத முட்டாள் என்றிருப்ப்பார். ஆனால் இன்று நமக்கு அதில் அறிவியல் இருப்பது தெரியும். நாம் காலம் காலமாக கேட்டு கொண்டு வரும் ஒரு  விளையாட்டு தனமான கேள்வி ஒன்று உண்டு .அது கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா? யாரவது முட்டை என்றால் அந்த முட்டை எங்கிருந்து வந்தது கோழி தானே போட்டிருக்க வேண்டும்! என்பார்கள்.யாராவது கோழி என்றால் அ

" கடல் தகவல் அறிக்கை"

Image
        " கடல் தகவல் அறிக்கை" (கருத்தும் எழுத்தும் .ரா.பிரபு) கடல் ஒரு ஆச்சர்யம்... Curios கண் கொண்டு பார்த்தால் பல ஆச்சர்யங்களை தன்னகத்தே கொண்டது. மிக ஆழமான தகவல்கள் அல்லாமல் சில சாதாரண விஷயங்களை பார்ப்போம். கடல் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அல்லது பல நூற்றாண்டுகளாக கடலுக்குள் நதிகள் தண்ணீரை நிரப்பியபடி இருக்கிறதே ஏன் கடல் நிரம்பி வழிவதில்ல என்று யோசித்த இருக்கிறீர்களா? தொடர்ச்சியாக நிலத்தில் உள்ள உப்புக்கள் நதிகளால் கொண்டுவர பட்டு கடலில் கரைக்க படுகிறது.கடலின் மழை உற்பத்தி procces பற்றி உங்களுக்கு தெரியும் கடல் நீர் சூடாகி ஆவியாகிறது அப்படி ஆவியாகும் போது கரைந்த உப்புக்கள் கடலிலேயே தங்கி விடுகிறது இப்படி காய்ச்சி வடிக்கும் செயல் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடப்பது தான் கடலில் இவ்வளவு உப்புக்கு காரணம்... நீங்கள் வாட்டர் பவுன்டைன் தொட்டிகளை பார்த்திருப்பீர்கள் அதில் தொடர்ச்சியாக தண்ணீர் ஊற்றி கொண்டே இருந்தாலும் அது நிரம்பி வழிய போவதில்லை காரணம் அதில் இருக்கும் மொத்த நீர் தான் தொடர்ந்து மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில

" மாய வண்ணங்கள்"

Image
" மாய வண்ணங்கள்" (கருத்தும் எழுதும் ரா.பிரபு) இது ஒரு மாய உலகம்... இருங்க இது ஒன்னும் ஆன்மீக கட்டுரை அல்ல வழக்கம் போல அறிவியல் கட்டுரை தான்.. நீங்கள் பார்க்கும் பல விஷயங்கள் உண்மையில் நீங்கள் பார்ப்பதை போல அல்லாதவை .. இன்றைக்கு உதாரணத்திற்கு ஒன்று... நிறங்கள்... ஒரு குறிப்பிட்ட நிறம் எனபது நீங்கள் எந்த நிறத்தை பார்கிறீரோ அந்த நிறம் தவிர உண்மையில் மற்ற எல்லாம் நிறமும் கொண்டது அது. கொஞ்சம் குழப்புகிறதா?.. அதை விளக்கும் முன் வாங்க வானத்திற்கு சென்று வருவோம். வானத்தின் நிறம் என்ன என்றால் நீலம் என்போம்.உண்மையில் வானத்திற்கு நிறம் கிடையாது...அல்லது கருப்பு நிறம் .. நமது வலிமண்டலதில் ஏற்படும் ஒளி சிதறல் காரணமாக  உண்டாகும் ஒரு மாயை. நமது வலிமண்டலத்தை தாண்டி சென்று விட்டால் பட்ட பகலில் (அங்கே ஏது பகலும் இரவும்) வானம் வெளிச்சமாக இருக்கும் ஆனால் அண்ணாந்து பார்த்தால் அட்டை கருப்பு. ஏதாவது ஹாலிவுட் படத்தில் நீல கலர் காட்டி இருந்தால் அது மொக்க மூவி என்று நினைத்து கொள்ளுங்கள்... ஹாலிவுட் காரனுக்கு அது கூடவா தெரியாது என்று நீங்கள் கேட்டால் ....உங்களுக்கு ஒரு கேள்

'சார்பியல் எனும் சமுத்திரம்" ( பாகம் 5)

Image
"சார்பியல் எனும் சமுத்திரம் "(பாகம் 5)                      E=MC 2 உலகின் மிக ஆச்சர்யமான நம்ப முடியாத சமன்பாடுகளில் ஒன்று E = mc2 இதை பற்றி விளக்கமாக பார்க்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வி...நன்றாக சிந்தித்து பாருங்கள் நெருப்பு எங்கே இருந்தாலும் அங்கே புகை இருக்கும் என்று நமக்கு தெரியும் ..மேலே தகித்து கொண்டிருக்கும் சூரியன் ஒரு பெரும்நெருப்பு அல்லவா அப்போ அது வெளியிடும் புகை எங்கே? சிந்தித்து கொண்டே வாருங்கள கட்டுரைக்கு போவோம்... உங்களிடம் ஒரு கிலோ நிலகரியை கொடுத்து இதன் ஆற்றலை பயன்படுத்தி வீட்டுக்கு வெளிச்சத்தை கொடுத்து கொள்ளுங்கள் என்று சொன்னால் எவ்வளவு நேரத்திற்கு அதை உங்களால் பயன் படுத்த முடியும் அதிக பட்சம் 1 மணி அல்லது 2 மணி நேரம்? ஆனால் உங்கள் கையில் உள்ள வெறும் ஒரு கிலோ நில கரியை கொண்டு உங்கள் மொத்த ஊருக்கே சப்ளை கொடுக்கலாம்....அதுவும் பல காலங்களுக்கு தொடர்ச்சியாக என்று சொன்னால் எப்படி இருக்கும் ? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டால் போதும் வாழ்நாள் முழுக்க வண்டி ஓட்டலாம் என்றால்? இது சாத்தியமா என்றால் கண்டிப்பாக சாத்தியம் தான் .என்ன ......நீங்கள

#டீ_கடை_பெஞ்ச்(24.7.16) "மெய்ஞான விஞானம்"

Image
#டீ_கடை_பெஞ்ச்(24.7.16)         "மெய்ஞான விஞானம்" (கருத்தும் ,கவிதையும் ரா.பிரபு) இம்முறை ஒரு மாறுதலுக்கு கவிதை எழுதலாம் என இருக்கிறேன். உலகை உற்று பார்க்கும் போது விஞானமும்  மெய்ஞானமும் ஒரே புள்ளியில் சந்திப்பதாக நம்புகிறேன் அதை தான் கவிதை ஆக்கி இருக்கிறேன் .படித்து பார்த்து கருத்தை சொல்லவும். ஆனால் கவிதை ஆனாலும் காதல் ஆனாலும் எங்கள் பேஜ்கு வந்து விட்டால் அதை விஞ்சான முலாம் பூசி அனுப்புவது தான் எங்கள் வழக்கம் இனி கவிதை....      "மெய்ஞான விஞானம்" தேடி அலைகிறேன் அந்த புள்ளிகளை.. எங்கோ ஒன்றாய் சஞ்சரிகிறது, சந்திக்காத இரு சந்தி முனைகள். கண்ணில் காண கிடைக்காத அணுவை போல் தான், "ஈர்த்து விலகி" இயங்குகிறது கண்ணில் காண அடங்காத அண்டசராசரமும். "இருக்கும் இருக்காது"...."உணர முடியும் பார்க்கமுடியாது" கடவுள் கொள்கை போல தான் உள்ளது குவாண்டம் கொள்கையும். ஆதி மூலத்தில் அடங்கிய சக்தி பரிமணித்து அவதரிப்பதை விளக்குகிறது ஆன்மீக கோட்பாடு. வெறும் ஆற்றலை முழு பருபொருளாக பகுப்பதை விளக்குகிறது ஐன்ஸ்டைன் சமன்பாடு.

" Parallel univerce: இணை பிரபஞ்சம்"

Image
" Parallel univerce: இணை பிரபஞ்சம்" (கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு) நீங்கள் கண்ணால் காண கூடிய ..உணரக்கூடிய ,இந்த உலகம் அது நீங்கள் உணர்ந்த அளவு நீங்கள் புரிந்து கொண்ட படிதான் உண்மையில் இருக்கிறதா..எனது ஐன்ஸ்டைன் கட்டுரையின் முதல் பாகத்தில் சொன்னதை போல நம்மால் உணர கூடிய அளவில் மட்டும் தான் இந்த உலகை நாம் புரிந்து கொள்கிறோம் ஆனால் உண்மை என்பது எப்படி இருக்கும் என யாராலும் சரியாக சொல்ல முடியாது... உதாரணமாக ஒரு வெற்று அறையில் நீங்கள் எதையும் காண முடியாது ஆனால் உங்களை சுற்றி இந்த கணத்தில் உள்ளது அது நீங்கள் பார்க்கும் வண்ணம் தான் உண்மையில் உள்ளதா...ஒரு பேச்சுக்கு உங்களுக்கு ரேடியோ ..டிவி மற்றும் செல்போன்களுக்கு உள்ளதை போன்ற எலெக்ட்ரோ மேக்னடிகை உள்வாங்கும் சென்சார் இருந்தால்.....மேலும் அவற்றை மீண்டும் ஒளி ஒலி யாக மாற்றும் தொழிநுட்பம் உங்கள் உடலிலேயே இருந்தால் நீங்கள் காலி அறையாக பார்ப்பது இப்போது பல வித ஒளி பரப்புகள் தொலைபேசி பேச்சுக்கள் லட்சக்கணக்கான விஷயங்கள் நிறைந்த ஒரு டிராபிக் ஆக  பார்ப்பீர்கள். அப்படி நம்மால் காண முடியாத உணர முடியாத பல பரிமாணங்கள் ..(உதாரணமாக ம

" பென்ஹர் ஒரு அதிசய திரைப்படம்"

    பென்ஹர் - ஒரு அதிசய திரைப்படம் (கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு) இந்த பிரமிட்...தாஜ்மஹால் ....தஞ்சை பெரிய கோவில் இதை எல்லாம் அந்த காலத்தில் எப்படி கட்டினார்கள் என நாம் அச்சர்யப்படுவதை போல ... திரை துறையில் " எப்படி எடுக்கப்பட்டது"என இன்றளவும் வியப்படைய செய்யும் ஒரு வரலாற்று படம் தான் பென்ஹர்.... 1959 இல் வெளியான அந்த படம் மொத்தம் குவித்த ஆஸ்கார் அவார்ட் களின் எண்ணிக்கை 11 .படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகி விட்டது இன்று வரை அந்த சாதனையை எந்த படமும் மிஞ்ச முடியவில்லை...(titainc படம் கூட 11 ஆஸ்கர் வாங்கி அந்த சாதனையை சமன் தான் செய்து உள்ளது...) அப்படி என்ன தான் இருக்கு பென்ஹர்ல... பென்ஹர் இல் பிரமாண்ட அரங்கம் ..துரத்தும் ரத காட்சி...மெய்சிலிற்கவைக்கும் சண்டை காட்சிகளெலாம் ஹெலிகாப்டர் ஷாட் . .... அகேளா கிரேன் ஷாட் எல்லாம் இருக்கிறது...ஆனால் அந்த காலத்தில் ஹெலிகாப்டரை பயன்படுத்தி படம் எடுக்கும் தொழில் நுட்பமே இல்லை...அகேளா கிரென் கண்டுபிடிக்கப்படவே இல்லை இது எப்படி இருக்கு? பென்ஹருக்காக ராட்சத சாரங்கள் ஊர் முழுக்க போட பட்டு அதில் தொங்கி கொண்டு படம் எடுத்தார்கள்...

"#நியூட்ரினோ ஒரு அடங்காத துகள்"

Image
"# நியூட்ரினோ_ஒரு_அடங்காத_துகள்" (கருத்தும் எழுத்தும்: ரா.பிரபு) "அடக்கினா அடங்கற ஆளா நீ" ...கபாலி பாட்டு யாருக்கு பெருந்துகிறதோ இல்லையோ நியூட்ரினோவுக்கு கண்டிப்பாக பொருந்தும்... இது ஒரு மாய துகள் என்று அறிவியல் அறிஞர்களாலேயே அழைக்க படுகிற அளவிற்கு தனித்தன்மை வாய்ந்தது இந்த நியூட்ரினோ . ஐன்ஸ்டைன் எனும் அப்பாடக்கரையும் அவரது அசகாய சூர கோட்பாடுகளை சவால் விட்டு தோற்கடிக்க கூடிய சாத்திய கூறு கொண்ட ஒரே சக்தி இந்த நியூட்ரினோ மட்டும் தான் அது எப்படி என்பதை கால போக்கில் (கட்டுரை போக்கில்) விவரிக்கின்றேன் முதலில் இந்த ஐட்டம் என்ன ஏது என்பதை தெரிந்து கொள்வோம். இந்த நியூட்ரினோ என்ற பெயரை அடிக்கடி நீங்கள் தமிழ்நாட்டில் கேள்விப்பட்டிருபீர்கள். நியூட்ரினோ ஆய்வு தேனீ மலை பகுதியில் செய்ய பட இருப்பதாகவும் அது நம் இயற்கை வளத்தை அழிக்கும் என்று ஒரு குழு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இருப்பதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் (என்ன தான் அறிவியல் காதலனாய் இருந்தாலும் இந்த விஷயத்தில் அந்த ஆய்வை கடுமையாக எதிர்பவர்களில் நானும் ஒருவன் அதற்கான நியாயமான காரணத்தை வேறு சந்தர்ப்பத

"கார்பன் புதையல்..."

Image
               " கார்பன் புதையல்..." (கருத்தும் எழுத்தும் :ரா பிரபு) நீங்கள் எந்த மூலகூறால் உண்டாக்க பட்டிருக்கிறீர்களோ...அதே மூலக்கூறுகளால் தான் வைரங்கள் செய்யப்பற்றிருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா... தயிருக்கும் மோருக்கும் ஒரே மூலம் பால் தான் என்பதை போல தான் உங்களுக்கும் வைரத்திற்கும் ஒரே மூலம் கார்பன்.... ரத்தின கற்களிலேயே வைரம் மட்டும் இவ்ளோ கெத்து பார்டியாக இருப்பதற்கு காரணம் இருக்கிறது..... நீங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு கடின உழைப்பால் முன்னேறிய சில பேரை பார்த்திருக்கலாம் அவர்கள் வாழ்வில் எந்த சோதனையையும் மிக அலச்சியமாக எதிர் கொள்ளுவாரகள்...எந்த பிரச்னையும் அவர் மேல் ஒரு சின்ன கீரலை கூட ஏற்படுத்த முடியாது....அதற்கு காரணம் அவர் கடந்து வந்து கடின பாதை... அதை போல தான் வைரதின் மேல் அவ்ளோ சீக்கிரம் கீறல் ஏற்படுத்த முடியாததற்கு காரணம் அது உருவான விதம்... ஆச்சார்ய படும் அளவு வாழ்க்கை வரலாரை கொண்டது ஒவ்வொரு வைரமும்.. மனிதனால் இந்த பூமியில் குடையப்பட்ட மிக பெரியஆழம் எவ்வளவு தெரியுமா வெறும் 12 கிலோ மீட்டர் (பூமியை தோண்டி மறுபுறம் வெளியேற வேண்டும் என்

"விமானமும் வேக்வம் கிளீனரும்"

Image
 " விமானமும் வேக்வம் கிளீனரும்' (அறிவியல் காதலன் ரா.பிரபு) Aerodynamics  principle... அதாவது விமானம் பறக்கும் தத்துவத்தை இன்று பார்க்கலாம்.  "அன்று நான் விமானத்தை பார்த்த அதே ஆச்சரியத்தோடு தான் இன்று என் மகன் மாட்டு வண்டியை பார்க்கிறான்" என்று எங்கோ படித்த நியாபகம்....கால மாற்றத்தால் மாறுதல் அடைந்த வாழ்க்கை முறையை விளக்குவதற்காக அதை யாரோ சொல்லி இருக்க கூடும்... ஆனால் உண்மையிலேயே இப்போது விமானம் பறப்பதை கண்டு நீங்கள் ஆச்சார்ய படவில்லையா? அப்படி என்றால் ஒன்று உங்களுக்கு அதன் தத்துவம் தெரிந்து விட்டிருக்க வேண்டும் அல்லது உங்கள் அறிந்து கொள்ளும் ஆர்வம் curiosity குறைந்து போயி விட்டிருக்க வேண்டும் விமானம் எப்படி பறக்கிறது என்பதை தான் நான் இப்போது விளக்க போகிறேன். அதுக்கு முன் ஒரு சின்ன காட்சியை கொஞ்சம் கவனியுங்கள்... நீங்கள் விமானம் ஏறி ஊருக்கு போக இருக்கிறீர்கள் அதற்க்கு முன் கொஞ்சம் வளர்ந்து விட்ட தாடியை shave செய்ய விரும்புகிறீர்கள் பார்பர் ஷாப் போய்...ஷேவ் செய்து கொள்கிறீர்கள்.(விமான பணிப்பெண்ணை நினைத்து கொண்டீர்களா தெரியாது

''வாய்ப்பு எனும் எரிக்கல்..''

          'வாய்ப்பு எனும் எரிக்கல்..'' (கருத்தும் எழுத்தும்:ரா.பிரபு) வானிலிருந்து விழும் "எரிக்கல்" பார்த்து இருக்கிறீர்களா.. ஒருவேளை இன்று நான் எரிக்கல் எப்படி உண்டாகிறது என்ன ஏது என்று விளக்க போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு... ஏனென்றால் வானில் நாடோடி போல சுற்றி திரியும் அஸ்டராய்டு என்னும் வின் கற்கள் பூமியின் வளி மண்டலத்திற்குள் வந்தால் ஈர்ப்பு விசையால் மிக வேகமாக அதே சமயம் காற்றுடன் கொண்ட உராய்வால் மிகுந்த வெப்பட்டதுடன் எரிந்து கொண்டு பூமியில் விழும் கல் என்பது ....சிறு குழந்தைக்கு கூட தெரியும்...சரி இப்போது இரண்டு குட்டிக்கதைகளை சொல்ல போகிறேன்... ஒன்று:   ) =   அது ஒரு shoue தயாரிக்கும் கம்பெனி ..அவர்களுடைய ஷு கம்பனிக்கு ஆப்ரிக்காவில் ஒரு தீவில் குட்டி ஊரு ஒன்றை தேர்வு செய்து அங்கு இவர்களுடைய தலைமை மார்க்கெட்டிங் மேனேஜர் ஐ அனுப்பி அங்க நிலவரம் எப்படி நம்ம ஷு அங்க விற்குமா விற்காதா என பார்த்து வர சொன்னார்....அங்கு சென்ற மேனேஜர் கொஞ்ச நாள் கழித்து தலை தொங்க போட்டு கொண்டு வந்தார்..வந்து சொன்னார் "அங்க ஒரு ஷு கூட விற்க முடியாது...ஏன்னா

"ஆர்வத்தின் பிள்ளை"

Image
                       " ஆர்வத்தின் பிள்ளை" (கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு) ஒரு சின்ன செயல்..ஒரு நடத்தை..ஒருவரை இன்னார் என அடையாள படுத்தி விடும்...அவனுக்குள் இருப்பது என்ன என்பதை காட்டி விடும்... கட கட ஓசை உடன் அந்த பைக் வண்டி அந்த ஊருக்கு வந்தது....                                             இது கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டுக்கும் முன் நடந்த ஒரு சம்பவம்.அந்த ஊருக்கு வந்த முதல் பைக் என்பதால் ஊர் மக்கள் அதை ஆச்சர்யமாக பார்த்தது ஆச்சர்யமான விஷயம் இல்லை தான்... ஆனால் அந்த சிறுவனிடம் இருந்தது வெறும் ஆச்சர்யம் இல்லை..இந்த பொருள் எப்படி ஓடுகிறது ..என்று மலைத்த அவனிடம் இருந்தது நம் page இன் tittle ஆகிய curiosity அதாவது எதையும்அறிந்து கொள்ள துடிக்கும் ஆர்வம்.... அந்த வெள்ளைக்கார துரை யிடம் போய் கேட்டான் "ஐயா இந்த பொருள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இது என்ன விலை ஆகும் ஐய்யா ..இதை எனக்கு தர முடியுமா"(பாவம் அவனுக்கு விலை தெரிந்திருக்க நியாயம் இல்லை..உண்டியல் காசை வைத்து வாங்கி விடலாம் என்று நினைத்திருப்பான்) துரை சிரித்து விட்டு சொன்னார் "தம்பி இத நான் விக

#டீ_கடை_பெஞ்ச் (16.7.16) மணல் துகள் பிரபஞ்சம்:

Image
#டீ_கடை_பெஞ்ச் (16.7.16)         மணல் துகள் பிரபஞ்சம்: "வியந்து பார்க்கும் ஒரு அதிசய அறிவியல் உண்மை" என்று யாராவது சொன்னால்..உடனே நம் கற்பனைக்கு சூரியன் வானம் பறந்து விரிந்த பிரபஞ்சம்...அல்லது ஐன்ஸ்டைன் போன்றோர் சொன்ன கோட்பாடுகள் இப்படி பட்ட விஷயங்கள் தான் வரும்..ஆனால் வியந்து நோக்கும் அறிவியலுக்கு நாம் வானத்திற்கு போக தேவை இல்லை. நாம் நடந்து செல்லும் போது வழியில் கிடக்கும் ஓரு மணல் துகளை எடுத்து கொள்வோம்... இதை அதாவது ஒரு குண்டூசி யில் ஒட்டி எடுத்தால் முனையில் நான்கு ஐந்து ஒட்டிக்கொள்ளும் சின்ன சிறிய துகளை மனித குலத்தின் மொத்த விஞ்சானிகள் சேர்ந்து கூட முழுசாய் புரிந்து கொள்ள முடியாது தெரியுமா... நான் இந்த பகுதிக்கு டீ கடை பென்ச் என்ற பெயர் வைத்ததற்கு..ஒரு காரணம் உண்டு...டீ கடையில் நாம் பேசும் பேச்சுகல் முன் தயரிப்போடு பேச படும் பேச்சு அல்ல அந்த நேரத்துக்கு தோன்றும் உலக நடப்பை நாம் பகிர்ந்து கொள்வதை போல தான் இந்த பகுதியில் நான் பகிர்ந்து கொள்ள போகும் விஷயங்கள். இதுநான் எழுதும் கட்டுரை போல முன் தயாரிபோடு எழுத படுவது அல்ல...அது அவ்வபோது உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்று