சார்பியல் எனும் சமுத்திரம்..." (பாகம் 1)




"சார்பியல் எனும் சமுத்திரம்..."

              (பாகம் 1)

(ஐன்ஸ்டைனின் கடினமான சார்பியல் தத்துவம் "theory of relativity" எளிய தமிழில்........)

(கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு )


_ஐன்ஸ்டைன் என்னும் அப்பாடக்கர்:

பூக்களை பற்றி யாரவது பேச விரும்பினால் ரோஜாவை விட்டு விட்டு பேச முடியாது என்பதை போல தான் அறிவியல் காதலர்களால் தவிர்க்க முடியாத அற்புதம் ஐன்ஸ்டைன்...ஜெர்மனி யில் பிறந்தார் லண்டன் இல் வாழ்ந்தார் என்பதை போல இல்லாமல் அவரை பற்றி சில ஆச்சரியம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்...
என்னுடன் சேர்ந்து வாருங்கள்...

ஐன்ஸ்டைன் என்னும் "அப்பாடக்கர்"

ஐன்ஸ்டைன் பற்றி நான் பேசும் முன் உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி..
உங்கள் மூளையை எத்தனை சதவீதம் நீங்கள் பயன் படுத்து கிறீர்கள் என்பதை...மூளையை பயன்படுத்தி சொல்ல முடியுமா?

உலகின் மொத்த வரலாற்றில் அதிகமாக சிந்தித்த மனிதர் அதாவது அதிகம் மூளையை பயன் படுத்திய மனிதர் என்று வர்ணிக்க படும் மனிதர் தான் அல்பர்ட் ஐன்ஸ்டைன்....அதாவது மொத்த மனித குல வரலாற்றில்...என்றால் ஆயிரத்தில் ஒருவர் போல இவர் எத்தனை கோடியில் ஒருவர்?

அவர் இறந்த பின் அவர் மூளையை பதப்படுத்தி கண்ணாடி ஸ்லைடில் சின்னதாக இரண்டு மூன்று பகுதியாக்கி இது மட்டும் இப்படியெல்லாம் எப்படி யோசிச்சது என்று இன்றளவும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் .

mattar musiam penisulveniya வில் இன்னும் அவர் மூளை பத்திரமாக உள்ளது..(ஒரு சராசரி மனிதன் ...அதாவது நீங்களும் நானும் எத்தனை சதவீதம் தன மூளையை பயன் படுத்துகிரோம் என்பதை சொன்னால் நீங்கள் சண்டைக்கு வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகிறேன்)

இப்போது ஐன்ஸ்டைன் பற்றி திடீரென கட்டுரை எழுத காரணமென்ன என்பதை நான் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்...
முதலில் ஐன்ஸ்டைன்...
உங்களிடம் யாரவது எடிசன் என்ன கண்டுபிடித்தார் என்றால் உடனே 'பல்பு 'போட்டார் போல பல்பு என்று பதில் சொல்லி விடுவீர்கள்..

மாற்கொணி என்றால் மறக்காமல் ரேடியோ என்பீர்கள்...கிரஹாம் பெல் என்றால் பெல் அடித்தால் போல் போன் என்பீர்கள்...ராண்ட்ஜ்ன்...எக்ஸ் கதிர்...நியூட்டன்..ஈர்ப்புவிசை...

ஆனால் போகிற போக்கில் ஒரு பத்து பேரிடம் ஐன்ஸ்டைன் எதை கண்டு பிடித்தார் என கேட்டு பாருங்கள்..அதில் 6 பேர் தெரியாது என்பார்கள்....
மீதி நாலு பேர் ..லைட்டாக தியரி ஆப் ரிலேடிவிடி என்பார்கள்....அப்படி என்றால் என்ன என்று அவர்களை திருப்பி கேட்டால்...அவர்கள்
திரு திரு என்பார்கள்.....

வரலாற்று விஞ்ஞாணிகளில் தனி இடம் பிடித்துள்ள ஒருவர் என்ன கண்டு பிடித்தார் அவர் செய்த சாதனை தான் என்ன என்பதை பல பேருக்கு தெரியாததற்கு காரணம் உண்டு...

Theory of bending of light என்ற கண்டுபிடிப்பிற்கு ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசை கொடுத்த போது....
ஐன்ஸ்டைன் தனக்கு தானே கொஞ்சம் நொந்து கொண்டார்...இந்த முட்டாள் மக்களை என்னத்த சொல்ல என்று..

காரணம் தனது மிக அற்புத கண்டுபிடிப்பான தியரி ஆகிய" theory of relativity "கு முன்னால் இது யானை முன் பூனை போல்...அப்படி இருக்கும் பொது பூனைக்கு பரிசு கொடுக்கப்பட்டதற்கு காரனம்.. யானையை பற்றி மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை என்பது தான்...

ஐன்ஸ்டைன் இருந்த கால கட்டத்தில் theory of relativity பற்றி சும்மா பேச வேண்டும் என்றாலும் கூட அதற்கு தகுதியானவர்கள் உலகத்தில் ஒரு 5 பேர் தான் இருப்பார்கள்...
இது ஐன்ஸ்டைனே சொன்னது...

அவர் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்ட பொருள் மற்ற அராய்ச்சியாளர்களை விட பெரியது ...மிக மிக பெரியது...அவ்ர் எடுத்து கொண்ட பொருள் இந்த அண்டம் (யூனிவர்ஸ்) எந்த ஒரு கருவிக்கும்...மெஷினுக்கும் ...ஒரு இயங்கு தத்துவம்..(working principal) இருப்பதை போல இந்த மொத்த ஆண்ட சராசரமும் எப்படி இயங்குகிறது என ஆராய முற்பட்டார் அவர்...

விளைவாக சில கோட்பாடுகளை வெளியிட்டார் ...என்ன ஆதாரம் இந்த கோட்பாடுகளுக்கு இது உண்மை என எப்படி ஆய்வு செய்தீர் எப்படி நிரூபிபீர் என கேட்டவர்களுக்கு  உதட்டை பிதுக்கினார்...
இது உண்மை ..அவ்ளோதான் சந்தேகம் இருந்தால் பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள்..என்றார்..

அவர் சொல்ல வந்த உண்மைகளை கேட்டவர்கள் தலை கிருகிருத்து போனார்கள் ..
தண்ணியில் உளறுறார் என விமர்சனம் செய்தார்கள்...
கோட்பாடுகள் அப்படி இருந்தன..

சரி அவர் சொன்னது ஆராய்ச்சி செய்து பார்ப்போம் என களம் இறங்கியவர்கள் அந்த காலத்தில் அதை ஆராய தொழில் நுட்பம் போதாமல் தவித்தார்கள்....
இந்த மனுஷனை நம்பலாமா வேண்டாமா என உலகம் சந்தேக கண்ணோடே அவரை பார்த்து கொண்டு இருந்தது....

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து தொழில் நுட்பம் முன்னேறிய பின் அவர் சொன்னதை ஆய்ந்து பார்த்தவர்கள் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனார்கள்....அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம் அவர் கண்டு பிடித்த அந்த உண்மைகள் அல்ல...
இப்படி பட்ட மகா உண்மைகளை எந்த ஒரு ஆராய்ச்சி சாதனமும் இல்லாமல் இந்த மனிதரால் எப்படி கண்டு கொள்ள முடிந்தது என்ற ஆச்சர்யத்தில் தான் அவர்கள் மூழ்கி போனார்கள்..

அந்த மறைகழன்ற போன்ற மனிதன்...ஒரு அசாதாரண அப்பாடக்கர் என கண்டு கொண்டார்கள்...
அவர் சொன்ன உன்மை.....அது இது வரை யாரும் சிந்திக்க கூட துணியாதது...கற்பனை கூட பண்ண முடியாதது...
அவருடைய E=MC 2 பார்முலா தான் உலகத்திலேயே மிக சிறிய பார்முலா...ஆனால் உலகத்தின் மிக பெரிய உண்மைகளை எடுத்து சொல்லும் பார்முலா...

 நட்சத்திரங்கள்.. நம் சூரியன்..எப்படி எரிகிறது அதற்கு எனர்ஜி எப்படி உருவாகிறது....விடை E=MC 2..

 Space time என்றால் என்ன அது தன் பாதிப்பை எப்படி ஏற்படுத்து கிறது...விடை E=MC 2..

ஒளி வேகத்தில் பிரயாணம் செய்தால் என்ன நடக்கும் விடை E=MC 2
               
காலதை நிறுத்தி வைக்கும் ஈர்ப்பு விசை எப்படி இருக்கும் விடை ...அதே...
.
நியூட்டன் கண்டு சொன்ன ஈர்ப்பு விசைக்கு எல்லாம் இவர் சொன்ன விளக்கம் மிக புதுமையாக... ஆழமான உண்மையாக இருந்தது .

அப்படி என்னதான் யா இருக்கு theory of relativity ல ....??

என்ன உண்மைய தான் அவர் கண்டு தொலைத்தார்....??

E=MC 2 என்ற சங்கத்தியில் அப்படி என்னதான ஒளிந்து  இருக்கிறது .??

இனி எழுத போவது அதை பற்றி தான்.
அதற்காக தான் ஐன்ஸ்டைன் அறிமுகம்

 தொடர்ந்து  வாருங்கள்...
சார்பியலுக்குள் நுழையலாம்.

தொடரும்.........

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"