Posts

Showing posts from February, 2017

மீத்தேன் எனும் மரண திட்டம்"

Image
" மீத்தேன் எனும் மரண திட்டம்" (ரா_பிரபு) நம்மை விழுங்க காத்திருக்கும் மீத்தேன் திட்டம் என்ற பெரும் பூதம் பற்றி அதன் பின்னணியில் உள்ள மற்றுமொரு சதி யை பற்றி .. அதனால் விளைய போகும் மஹா ஆபத்தை பற்றி நாம் இந்த நேரத்தில் கண்டிப்பாக தெரிந்து இருக்க வேண்டும். மீத்தேன் திட்டம் வெறும் மீத்தேன் வாயு எடுக்க தான்  என்று நீங்கள் எண்ணி இருந்தால் மன்னிக்கவும் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான் பின்னணி நோக்கம் இன்னும் இருக்கிறது. இந்த மீத்தேன் திட்டம் தான் இப்போது ஹைட்ரோ கார்பன் என்று கொஞ்சம் பெயர் மாற்றம் செய்ய பட்டு வந்திருக்கிறது. ஹைட்ரோ கார்பன் என்பது இதன் பொது பெயர். இதை ஆபத்து என்று பார்க்கும் முன் இது என்ன என்பதை அறிவியல் ரீதியாக கொஞ்சம் அறிந்து கொள்வோம். மீத்தேன் என்பது ஒரு கரிம சேர்மம் . அதாவது ஒரு கார்பன் அணுவும் 4 ஹைட்ரஜன் அணுவும் இணைந்த ஒன்று. (இதில் ஒரு கார்பன் அனுக்கு பதில் இரண்டு இருந்தால் அது ஈத்தேன் 3 இருந்தால் ப்ரொபென் 4 இருந்தால் பியூட்டேன்..... இப்படி எண்ணிக்கை கூட கூட பென்டென் ,ஹெக்ஸேன் என பெயர் மாறிக்கொண்டு போகும் 10 கார்பன் அணு இருந்தால் டெக்கேன் இந்த ...

"சின்ன சின்ன பேய் கதைகள்"

Image
"சின்ன சின்ன பேய் கதைகள்" கதை 1: ("அப்பா ஒரு கதை சொல்லு") (கதை, கற்பனை, எழுத்து :ரா.பிரபு) பேய் கதைகள் என்கிற விஷயம் இருக்கே அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்த ஒரு சமாச்சாரம். அதனால் இம்முறை சிறியவர்கள் முதல் அனைவரும் படிக்கும் படி அதிக கொடூரம் இல்லாமல் சில பேய் சிறு கதைகள் எழுத இருக்கிறேன்... வாங்க முதல் கதைக்கு போவோம்.. (கதை 1 :  "அப்பா ஒரு கதை சொல்லு") இருளும் குளிரும் கலந்து ஊரை போர்த்த தொடங்கிய நேரம் புஜ்ஜிமா என்று அழைக்க படும் சந்தியா தன் போர்வையை இறுக்கி போர்த்தி கொண்டாள்.. தயாரானாள். " அப்பா சீக்கிரம் வா ..பா ஐ ஏம் வெயிட்டிங் கம் பாஸ்ட் " "ஜஸ்ட் 5 மினிட்ஸ் புஜ்ஜிமா "என்றது சமையல் அறை கதவு "நோ 3 மினிட்ஸ் ஒன்லி" என்றாள் சந்தியா... " ஓகே டன் " என்றது மீண்டும் சமையல் அறை. சந்தியாவுக்கு பள்ளியில் நண்பர்கள் குறைவு ஆனால் வீட்டில் மனோஜ் முதலில் அவளுக்கு மிக சிறந்த நண்பன் பிறகு தான் அப்பா . 3 வருடம் ஆகி விட்டது அம்மா இறந்து ஆனால் அந்த வேதனை வந்து விடாமல் சந்தியாவை வளர்த்து வருவது

"எலிசபெத் பாத்தரி ஒரு நிஜ ரத்தகாட்டேறி"

Image
"எலிசபெத் பாத்தரி ஒரு_நிஜ_ரத்தகாட்டேறி" (ரா.பிரபு) வரலாறு எனும் நீண்ட நெடிய புத்தகத்தில் பல கருப்பு பக்கங்கள் இடம் பிடித்திருப்பது நமக்கு தெரியும். பல சைக்கோ மன்னர்களும் கொடூர கொலையாளிகளும் ,ரத்த வெறி கொண்ட அரக்கர்களும் அந்த பக்கத்தை ஆக்ரமித்துருப்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்களாக இல்லாமல் பெண்களும் அந்த இருண்ட வரலாற்றில் தங்கள் இடத்தை பிடித்திருப்பது நம்மில் பல பேருக்கு தெரியாத ஒன்று. அப்படி ஒரு வரலாற்றின் கருப்பு பக்கத்தை தான் இன்று நாம் புரட்ட போகிறோம். அப்படி ஒரு கொடூர பெண்மணியின் பெயர் தான் எலிசபெத் பாத்தரி (Elizabeth bathory) தற்போது இருக்கும் ஸ்லோவேகியா பகுதியில் ஒரு மலைப்பாங்கான ... ஊருக்கு ஒதுக்கு புரமான இடத்தில் இருந்தது அந்த கேத்தட்டிக்  கோட்டை (the castle of cathetic) அக்கம் பக்கம் வீடுகள் இல்லாமல் இல்லை.. அனால் மிக குறைவு. அந்த உறைய வைக்கும் பணி பொழியும் இரவுகளில் திடீர் என ரத்தத்தை உறைய வைக்கும் அலறல் சப்தம் கேட்கும் .. பக்கத்து குடியிருப்புகள் பெரும்பாலும் அந்த அலறல் சப்ததிற்கு பழகி போயிருந்தார்கள். அதனால