Posts

Showing posts from September, 2019

தேடல்_கேள்விகள் (கேள்வி 8 )

Image
"# தேடல்_கேள்விகள்  (கேள்வி 8 ) #ரா_பிரபு 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️     🎯  கேள்வி : Space இல் இந்த நட்சத்திரம் இத்தனை ஒளி ஆண்டுகள் தூரம் இருக்கிறது என்கிறார்களே. Space இல் தூரத்தை எப்படி கணக்கிடுகிறார்கள். - sheihana paua . Kadayanallur - 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️    ✍️ பதில் : விண்வெளியின் முடிவற்ற கால வெளியில் கொட்டி கிடக்கும் நட்சத்திரங்களின் தூரங்கள் நமது கற்பனையின் எல்லை தாண்டிய அளவு இடைவெளி கொண்டவை என்றாலும் மனிதன் அவைகள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை பூமியில் உட்கார்ந்த இடத்தில் சொல்ல முடிவதற்கு காரணமாய் இருப்பது 'ஒளி '. பிரபஞ்ச முழுவதிலிருந்தும் நமது பூமிக்கு வந்து சேரும் ஒளியை ஆராய்வதன் மூலம் அந்த ஒளியின் மூலங்களாகிய  நட்சத்திரங்கள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை சொல்லிவிட முடியும். எப்படி ?? பொதுவாக விண்வெளியில் தூரத்தை கணக்கிடுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில் அருகில் இருக்கும் கோள்கள் மற்றும் நிலா மாதிரி  துணை  கோள்களின் தூரத்தை அளக்க உதவும் முறையை ப

"கடைசி காஃபி "

Image
"கடைசி காஃபி " (க்ரைம் சிறுகதை ) ரா.பிரபு அந்த ஊரின் கடைசி பஸ் அந்த நிறுத்தத்தில் நிறுத்த பட்டதும் சேகர் தயார் ஆனான்.கண்டெக்டருக்கு ஒருவேளை நினைவுத்திறன் அதிகமாக மிக அதிகமாக இருந்திருந்தால் ," என்னையா கடைசி சிங்கிள் ல இந்த பஸ்ல தான் போன ..கீழே கூட  இறங்காமல் திரும்பவும் இதே பஸ்ல வர " என்று ஆச்சர்யமாக கேட்டிருப்பார். சேகரை இறக்கி விட்டு ரை ரைட் என்று இருட்டில் சென்று பேருந்து மறைந்த பின் சேகர் ஊரை நோக்கி தன் வீட்டை நோக்கி நடக்க தொடங்கினான். வயிறு வேறு நேரம் காலம் தெரியாமல் கப கப என்று பசித்தது. அந்த நேரத்தில் அங்கு தெரிந்த டீ கடை ஒன்றின் ஒன் மேன் ..முதலாளி கம் தொழிலாளி ஒருவன் மூடும் அவசரத்தில் டபராய்களை இன்னைசையுடன் உருட்டி கொண்டு இருந்தான். "டீ இருக்கா பா " என்று கேட்டதற்கு "டீ இல்லப்பா மூடியாச்சி " என்று பதிலுக்கு இவனை போலவே சொன்னான். இவன் குரலை மிமிகரி பண்ணியது போல இருந்தது சேகருக்கு. கடுப்பாய் வந்தது. பேசாம ராணிக்கு பதிலா இன்னைக்கு இந்த டீ கடை காரனை கொன்னுட்டா என்ன..? இன்னும் சற்று நேரத்தில் தான் ஒரு கொலை செய்யப் போவதை பற்றி இந

சிகப்பு_சிலந்தி

Image
# சிகப்பு_சிலந்தி 🕷️🕷️🕷️ (சஸ்பென்ஸ் சிறுகதை ) #ரா_பிரபு டாக்டர் முருகேசன் ஆகிய நான்..... கொட்டாவி விட்டு நேரம் பார்த்த போது ஒரே ஒரு பேஷண்ட் மிச்சம் இருந்தான். கசங்கிய சட்டை 3 நாள் தாடி நிச்சயம் பொண்டாட்டி பிரச்னை என புலம்ப வந்து இருப்பான். இங்க வரும் கேஸில் பலதும் அந்த கேஸ் தானே. ச்சை ஒரு மன நல மருத்துவரா இருப்பது எவ்வளவு தலை வலி தெரியுமா.  "வர சொல்லுமா " என்று பொத்தானை அழுத்தி ஆறாவது நொடியில் அவன் உள்ளே நுழைந்தான். "உட்காருங்க " உட்கார்ந்தான். "சொல்லுங்க மனைவியால் என்ன பிரச்சனை" என்றேன் . சொல்லிவிட்டு ஷேர்லக் ஹோம்ஸை போல அவனை பார்த்தேன். 'எப்படி கண்டுபிடித்தேன் பார்த்தியா' என்கிற பார்வை அது. அவன் லேசாக திடுக்கிட்டு பொண்டாட்டியா எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலயே..!  என்று சொல்லி என் மூக்கை அறுத்தான் கொஞ்சம் சமாளித்து  "சரி சொல்லுங்க என்ன பிரச்னை" என்றேன். அவனை உற்று பார்த்து கவனமாய் அவன் சொல்வதை கேட்பது போல அமர்ந்தேன். இது ஒரு டெக்னீக் அதாவது நோயாளி பேசுவது கவனிக்க படுகிறது என்று அவர்களுக்கு உணர்த்துவது . மனநோயாளிக

"தியானம் என்றால் என்ன"

Image
# தியானம்_என்றால்_என்ன ?? #ரா_பிரபு இந்த தியானம் என்றால் என்ன இது பலருக்கும் இருக்கும் கேள்வி தியானத்தைப் பற்றி நான் படித்ததை அறிந்த விஷயங்களை சிலதை பகிர்ந்து கொள்கின்றேன். தியானம் என்பது ஒரு செயலல்ல அதை நீங்கள் பழக முடியாது அதை நீங்கள் "செய்ய "முடியாது அது ஒரு தன்மை அந்தத் தன்மையில் நீங்கள் இருக்கலாம். தியான தன்மையோடு நீங்கள் நடக்கலாம் சாப்பிடலாம் குளிக்கலாம் உங்கள் வாழ்வின் அன்றாட வேலைகள் அனைத்தையும் தியான நிலையில் இருந்து செய்ய முடியும். பலரும் நினைப்பது போல தியானம் என்பது எதையும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து மட்டுமே செய்யக் கூடியது அல்ல ஒருவன் தியான தன்மையோடு போர் புரிய கூட முடியும். முதலில் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது அல்ல (அது consentretion) தியானம் என்பது  மனதை பயன்படுத்தாமல் இருப்பது (meditation ) மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பதும் சிந்தனை என்பதும் நீங்கள் செய்யும் மற்ற செயல்களை போல ஒரு செயல்தான் ஆனால் தியானம் என்பது எந்த செயலும் செய்யாத ஒரு அமைதி நிலை. சுற்றிவரும் சக்கரத்தின் ச