Posts

Showing posts from December, 2019

"செல்லுக்குள் செல்வோமா "

Image
" செல்லுக்குள்_செல்வோமா " அறிவியல் காதலன்  ✍️ ரா.பிரபு 🎯 ( உடல் செல்களின் உள்ளே ஒரு பார்வை) ஆச்சர்யத்தை அள்ளி தரும் உலகின் பல விஷயங்களில் இந்த உடலும் ஒன்று. உற்று பார்த்தால் உடலில் இருக்கும் பல கட்டமைப்புகள் பிரமிப்பை உண்டு பண்ணும். உதாரணமாக ஒரு மனிதனின் உடலில் உள்ள மொத்த DNA வை எடுத்து அந்த நூலை நேராக நீட்டி வரிசையாக வைத்தால் அது பூமியில் இருந்து சூரியன்  சென்று மீண்டும் பூமி வந்தால் எவ்வளவு தூரம் இருக்குமோ..அந்..த ... தூரம்... (இருங்க அவசர படாதீங்க.. )அந்த தூரம்.. அதை விட கிட்ட தட்ட ஒரு 300 மடங்கு அதிகம் தூரம் இருக்குமாம்...( அல்லது கிட்ட தட்ட மொத்த சூரிய குடும்ப தொலைவை போல இரு மடங்கு என்று சொல்லலாம்..'எம்மாடி..' ) DNA வில் நாம் மெமரியை பதிய முடியும் எனில் ஒரே ஒரு கிராம் DNA வில் நாம் உலகின் மொத்த டேட்டா வை சேகரித்து வைக்க முடியும். இப்படி நிறைய ஆச்சர்யங்களை சொல்லி கொண்டே போகலாம். "செல் " படம் வரைந்து பாகம் குறித்த பள்ளி நினைவு நம் அனைவருக்கும் இருக்கும். இன்று மீண்டும் ஒரு முறை செல் என்பதை பற்றி அதில் உள்ள உறுப்புகள் பற்றி...அது செயல் படும

"Matrix கனவு உலகம் "

Image
"Matrix கனவு உலகம்" "ரா.பிரபு" உண்மையா பொய்யா ? இருக்கா இல்லையா? எந்த உலகத்தில் இப்போ நீங்க இருக்கீங்க எது ரியாலிட்டி எது மாயை என்று தெரியாமல் நம்மை குழப்பி எடுக்கும் பல படங்கள் வந்துள்ளன. உதாரணமாக island, identity, triangle, total recall, tejavu இப்படி பல. ஆனால் இது எல்லாவற்றை விட 1999 இல் முதல் முதலில் இந்த கான்செப்ட் தாங்கி வந்த "matrix " தனி சிறப்பு வாய்ந்த ஒரு படம். இப்போது அதை பார்த்தாலும் நேத்து ரிலீஸ் ஆனது போல அப்படி ஒரு fresh ஆக இருக்கும் அதன் காட்சி அமைப்புகள். அது வெளி வந்த போது அந்த கதை மிக மிக புதுமை. Metrix என்பது உங்களை நிஜம் போல கவ்வி கொள்ளும் ஒரு ரியாலிட்டி .சொல்ல போனால் metrix இல் இருக்கும் வரை அது தான் உங்களுக்கு நிஜம். நிஜம் தான் உங்களுக்கு போலி. (Matrix என்பது ஒரு சிமுலேடட் ப்ரோக்ராம் ரியாலிட்டி.. அதாவது யாரோ டிசைன் செய்த உலகில் நீங்கள் உண்மை என்று நம்பி வாழ்வது..எனது ரயில் முகில் திகில் கதையில் வரும் call-con உலகம் போல) இப்போ சொல்ல போகும் விஷயம் உங்களை குழப்பலாம் . நீங்கள் இப்போ ரியாலிட்டி என்று நம்பும் இந்த உலகம் நிஜமா