"Matrix கனவு உலகம் "

"Matrix கனவு உலகம்"

"ரா.பிரபு"

உண்மையா பொய்யா ?
இருக்கா இல்லையா? எந்த உலகத்தில் இப்போ நீங்க இருக்கீங்க எது ரியாலிட்டி எது மாயை என்று தெரியாமல் நம்மை குழப்பி எடுக்கும் பல படங்கள் வந்துள்ளன. உதாரணமாக island, identity, triangle, total recall, tejavu இப்படி பல. ஆனால் இது எல்லாவற்றை விட 1999 இல் முதல் முதலில் இந்த கான்செப்ட் தாங்கி வந்த "matrix " தனி சிறப்பு வாய்ந்த ஒரு படம்.
இப்போது அதை பார்த்தாலும் நேத்து ரிலீஸ் ஆனது போல அப்படி ஒரு fresh ஆக இருக்கும் அதன் காட்சி அமைப்புகள். அது வெளி வந்த போது அந்த கதை மிக மிக புதுமை.

Metrix என்பது உங்களை நிஜம் போல கவ்வி கொள்ளும் ஒரு ரியாலிட்டி .சொல்ல போனால் metrix இல் இருக்கும் வரை அது தான் உங்களுக்கு நிஜம். நிஜம் தான் உங்களுக்கு போலி.
(Matrix என்பது ஒரு சிமுலேடட் ப்ரோக்ராம் ரியாலிட்டி.. அதாவது யாரோ டிசைன் செய்த உலகில் நீங்கள் உண்மை என்று நம்பி வாழ்வது..எனது ரயில் முகில் திகில் கதையில் வரும் call-con உலகம் போல)

இப்போ சொல்ல போகும் விஷயம் உங்களை குழப்பலாம் .
நீங்கள் இப்போ ரியாலிட்டி என்று நம்பும் இந்த உலகம் நிஜமாக ஒரு மேட்ரிக்ஸ் ஆக ஏன் இருக்க கூடாது ?இது நான் சொன்னது அல்ல தலை சிறந்த விஞ்ஞானிகள்  பலர் கருத்து.
அதெப்படி நாம் ரத்தமும் சதையுமாக உணரும் உலகம் வெறும் ப்ரோக்ராமாக இருக்க முடியும் ? என்று கேட்கிறீர்களா சொல்கிறேன் அதற்கு முன் matrix திரை படதின் கதை பற்றி கொஞ்சம் பார்க்கலாம்..

சொல்ல போனால் டெர்மினேட்டர் 2 மற்றும் metrix இந்த படத்தின் நிஜமான  கதை என்ன என்பது இன்னுமும் பலருக்கு தெரியாது. அல்லது பாதி தான் தெரியும்.
மேட்ரிக்ஸ் கதை என்ன என்பதை ரத்தின சுருக்கமாக இப்போ பார்க்கலாம். கதை சிக்கலானது ஆதனால் சுருக்கமாக எளிமையான பேசிக் லைன் என்ன என்பதை மட்டும் பார்கலாம்.

1999 ஆம் ஆண்டு நடக்கும் கதை.
ஒரு soft ware கம்பெனில ப்ரோக்ராமரா வாழ்ந்து வராறு androson (ஹீரோ ) . இரவு நேரத்தில் வேறு ஒரு வாழ்க்கையும் வாழ்கிறார் neo எனும் பெயரில் ஒரு haker ஆக.
இந்நிலையில்  தான் வாழும் வாழ்க்கையில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை உணர்கிறார். குறிப்பாக matrix என்றால் என்ன என்பதில் தேடல் கொண்டவராக இருக்கிறார். இப்போதைக்கு அந்த வார்த்தை மட்டும் தான் அவர் அறிந்தது. இந்நிலையில் trinity னு ஒரு பொண்ணு இவரை சந்தித்து "matrix பற்றி தானே தேடுகிறாய் அதற்கு பதில் morphues எனும் மனிதனிடம் உண்டு அவனை போய் பாரு என்கிறாள்.

இதற்கு இடையில் சில ஏஜென்டுகள் ஹீரோவை தொடர்புகொண்டு உலகின் மிக ஆபத்தான ஒரு மனிதனை பிடிக்க நீங்கள் உதவ வேண்டும் என்று உதவி கேட்கிறார்கள் அந்த மனிதனின் பெயர் "morphues "

இது என்னடா வம்பா போச்சு இப்ப அந்த பொண்ணு பேச்சைக் கேட்டு அந்த மனிதரிடம் உதவி கேட்கலாமா அல்லது ஏஜென்ட்கள் பேச்சைக்கேட்டு அவனைப் பிடித்துக் கொடுக்கலாமா என்கிற குழப்பத்தில்.' நமக்கு மேட்ரிக்ஸ் பற்றி தெரிந்தால் போதும் 'என்று morphues ஐ சந்தித்து உதவி கேட்கிறார்.
அந்த morphues ஒரு சிகப்பு மாத்திரை ஒரு நீல மாத்திரையை இரண்டு கைகளிலும் வைத்துக்கொண்டு நீட்டுகிறார்.
" இதில் நீல மாத்திரையை தேர்ந்தெடுத்தால் நீ இப்பொழுது இருக்கும் உலகத்திற்கே எந்த பிரச்சனையும் இன்றி திரும்பலாம் . சிகப்பு மாத்திரையை தேர்ந்தெடுத்தால் மேட்ரிக்ஸ் என்றால் என்ன உன்னை சுற்றி நடப்பது என்ன என்பதை நீ அறிந்து கொள்ளலாம் அதாவது உண்மையை உணரலாம் " என்கிறார். ( கிட்ட தட்ட ஆதாம் கடித்த ஆப்பிள் கு நிகரானது அந்த சிகப்பு மாத்திரை.)

ஹீரோ சற்றும் யோசிக்காமல் சிகப்பு மாத்திரையை எடுத்து விழுங்குகிறார்.
அதன் பின் எங்கோ மயங்கி விழுந்து எங்கோ கண் விழிகிறார். அவர் கண் விழிக்கும் இடத்தில் அவர் கானும் காட்சி அவரை அதிர்ச்சி கடலில் தள்ளுகிறது.
தான் ஒரு ஹைபர்னேசன் pod இல் திரவத்தில் மூழ்கடிக்க பட்டு இருப்பதை காண்கிறார். உடல் பூரா பைப்புகள் வயர்கள் ஊடுருவி இருக்கிறது. நீண்ட நாளாக.... வருடமாக தான் இங்கே தான் உறங்கி கொண்டு இருப்பதை உணர்கிறார். அப்போ அவர் இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்க்கை ??
நிமிர்ந்து பார்த்த ஹீரோக்கு மேலும் அதிர்ச்சி..அங்கே தன்னை போலவே ஆயிர கணக்கில் லட்ச கணக்கில் pod களில் உறக்க நிலை மனிதர்கள்.

அப்பொழுது ஒரு ரோபோ பறந்துவந்து இவரை வேஸ்ட் பிராடகட் என்று கழிவில் தள்ளுகிறது அவரைக் கழிவிலிருந்து மீட்கிறார் morphues.
"Welcome to real world " என்கிறார்.
ஹீரோ ஒன்றும் புரியாமல் குழம்பி நிற்க அவரை zeon என்கிற ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். அங்கே ஒரே பாழடைந்த கட்டிடங்கள் கை விட பட்ட பில்டிங்குகள்...

அங்கே தான் ஹீரோவுக்கு சில உண்மைகளை சொல்கிறார் morphues.
" தம்பி நீ நினைக்கிற மாதிரி இப்ப நீ வாழ்ந்து கொண்டிருப்பது 1999 ஆம் வருடம் இல்ல . இப்ப நடந்துகிட்டு இருக்கிறது 2199 ஆம் வருடம். நீ பார்த்த உலகம் ஒரு மேட்ரிக்ஸ் .மொத்த மனிதர்களும் இப்ப artificial inteligent கட்டுப்பாட்டில். நீ கண் முழிச்சியே ..அந்த pod அந்த pod இல் உறக்கத்தில் தான்  AI கள் கட்டமைத்த  matrix உலகை உண்மை என்று நம்பி வெறும் மூளையில் நினைவுகள் வாயிலாக மொத்த மனித இனமும் வாழ்ந்து வருகிறது. அவர்களது நினைவு உலகம் ஒரே உலகமாக இணைக்க பட்டுள்ளது. அவற்றை கட்டுப்படுத்துவது single  conscious ஆக மாறி நிற்கும் AI கள் தான்.

21 ஆம் நூற்றாண்டில் மனிதர்களுகும் செயற்கை நுண்ணறிவுக்கும் நடந்த போரில் செயற்கை நுணறிவுகள் மனிதர்களை பிடித்து வைத்து இப்படி pod இல் போட்டு வளர்க்கின்றன. மனிதர்கள் கொடுத்த சோலார் எனர்ஜியை மனிதர்கள் பிடிங்கி கொள்ள இப்போ மனிதர்களை பிடித்து வைத்து மனித உடல் உண்டு பண்ணும் வெப்பம் மற்றும் மின்சாரம் தான் அவை களுக்கு எனர்ஜி கொடுக்கின்றன.
அதாவது அவைகள் வாழ மனிதன் ஒரு  battery அவ்வளவு தான்.

தான் ஒரு செயற்கை நுண்ணறிவு பேட்டரி ஆக இருக்கிறோம் என்று அறியாத மனிதகுலம் மீளா உறக்கத்தில் pod இல் உறங்கி கொண்டு இருக்க அதில் எதிர்பாராத விதமாக' ஞானம் பெற்று ' உண்மை உணர்ந்து தப்பி ஒன்று சேர்ந்து இருக்கும் இடம் தான் zeon . இப்போ மொத்த மனித குலத்தை Ai கள் இடமிருந்து காபற்ற neo வால் தான் முடியும் என்பதால் தான் அவரை தப்ப வைத்து இருப்பதாகவும்... எஞ்சி (விழித்து ) நிஜ உலகில் இருக்கும் மனிதர்கள் நாம் ஒன்று சேர்ந்து உறக்கத்தில் இருக்கும் மனித குலத்தை காபற்ற வேண்டும் என்றும்  கதை சொல்லி முடிக்கிறார் மார்பியஸ்.

அதன் பின் நடந்தது என்ன என்பதை படத்தில் பாருங்கள்.

அந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயத்தை நீங்கள் கூர்ந்து கவனிப்பீரகளேயானால் சில உண்மைகளை உணரலாம்.
உதாரணமாக matrix இல் இருக்கும் வரை அது மாயை பொய் என்று யாரும் உணர்வே முடியாது. ரியாலிட்டிக்கும் மாயைக்கும் வித்தியாசம் அறிய நீங்கள் வேறு பரிமாணத்தில் விழித்து கொண்டால் தான் முடியும். மேலே சொன்னது உங்களை குழப்பலாம் அதனால் எளிமையாக ஒரு கேள்வி கேட்கிறேன்.

நீங்கள் அனைவரும் கனவு கண்டு இருப்பீர்கள் அதில் நடைமுறைக்கு சற்றும் சாத்தியமில்லாத நீங்கள் ஒருபோதும் நம்பாத வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்து இருப்பீர்கள் உதாரணமாக கனவில் நீங்கள் ஒரு குதிரையாக இருக்கலாம் அல்லது வானத்தில் பறக்கலாம்.

நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் குதிரை என்பதை நம்ப மாட்டீர்கள் அல்லது பறக்க முடியும் என்பதை நம்ப மாட்டீர்கள். ஆனால் அந்த கனவு கலையும் வரை நீங்கள் நம்புவது என்ன ??  நீங்கள் ஒரு குதிரை என்பதில் உங்களுக்கு அப்போது சிறிதளவும் சந்தேகம் வந்து இருக்காது அல்லவா? நீங்கள் அதை உண்மை என்று நம்புகிறீர்கள். அது ஒரு கனவு என்பதை உணர நீங்கள் கனவிலிருந்து விழித்துக் கொள்ள வேண்டும்.
கனவில் அது கனவு என்று அறிய சாத்தியம் இல்லை. (கனவு என்று அறிந்து கொண்டே கனவு காணும் முறை தியானத்தால் கை கூடும் அந்த நிலையில் நமது கனவுகளை நாமே வடிவமைக்க கூட முடியும் அதை பற்றி பிறகு சொல்கிறேன்.)

ஒரு வேளை கனவு கண்டு கொண்டிருக்கும் ஒரு மனிதன் கடைசிவரை விழிக்கவே இல்லை என்றால் என்ன ஆகும் ? அவன் வாழ்நாள் முழுவதும் கனவுக் உலகை நிஜமென்று வாழ்ந்து இறப்பான் அல்லவா ? அதாவது கனவு என்பது நாம் அவ்வபோது வாழ்ந்து வரும் ஒரு matrix.

இப்போ நான் கட்டுரை ஆரம்பத்தில் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.
"இப்போது நீங்கள் வாழும் வாழ்க்கை ஏன் ஒரு matrix ஆக இருக்க கூடாது ? ஆன்மீக பாஷையில் சொல்வது என்றால்" மாயை ".
கனவின் விதி நாம் அறிவோம் அதாவது விழிக்கும் வரை அது கனவு என்று நம்மால் உணர முடியாது. எனில் இப்போது இருக்கும் கான்ஷியஸ் ஐ விட இன்னும் உயர்தர கான்ஷியஸ் இருக்குமா ? அங்கே விழித்து கொண்டால் இது வரை நாம் வாழ்ந்த வாழ்க்கையை கனவாக நாம் காண்போமா ?
அங்கே விழித்தவர்கள் யாராவது வந்து நாம் தூங்கி கொண்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்களா ??.

ஆம்..

ஆனால் அவர்களில் பலரை தான் நாம் கடவுள்கள் அவதாரங்கள் ஞானிகள் என்று அழைக்கின்றோம். பலரும் இந்த வேலையை மட்டும் தான் செய்து இருக்கிறார்கள்.
இயேசு தொடங்கி புத்தர் வரை. லாவோட்சூ தொடங்கி சுஃபி வரை.ஜென் தொடங்கி கிருஷ்ணர் வரை.முகமது தொடங்கி மகாவீரர் வரை. திரும்ப திரும்ப மக்கள் உறங்கி கொண்டு இருப்பதாகவும் இந்த கான்ஷியஸ் கடந்த ஒரு உயர் விழிப்பு உள்ளதாகவும் அங்கே விழித்தால் தான் இந்த உலகம் ஒரு மாயை என்றும் உணர முடியும் என்றும் தொடர்ந்து சொல்லி வந்து இருக்கிறார்களே அது ஏன் என்று யோசித்து இருக்கிறீர்களா ?

(என்னதான் ஐந்து புலன்களின் வழியாக நாம் இந்த உலகை உணர்ந்தாலும் நாம் உணரும் உணர்வு என்பது மூளையில் நடக்கும் மின்சார சிக்னல் தவிர வேறு இல்லை.
நீங்கள் எந்த உணர்வையும் உணராமலே அந்த சிக்னலை மட்டும் கொடுத்தாலே நீங்கள்" உணர்ந்ததாக " உணர்வீர்கள். எனில் உண்மை எது என்று எதை வைத்து அளப்பது.? )

மாயை எது உண்மை எது என்பதை அறிய ஒரு வழியைச் சொல்லித் தருகிறார் ஓஷோ.
அதாவது நீங்கள் காணும் கனவில் கவனத்தை செலுத்தாதீர்கள் நீங்கள் காண்பது உணர்வது எல்லாம் கனவாக  பொய்யாக இருக்கலாம்.
உங்கள் கவனம் எப்போதும் அந்த கனவு காண்பவரின் மேல் இருக்கட்டும். கனவு பொய்யாக இருக்கலாம். ஆனால் கனவை காண்பவன் பொய்யாக இருக்க முடியாது. கனவை கானும்" நான் " என்பது யார் ? இந்த கேள்வி தான் நமது matrix இல் இருந்து விடுபடும் சாவி. இதை தான் ரமணர் முதல் ஓஷோ வரை சொல்லி சென்று இருக்கிறார்கள்.

ஆமாம்" நான் " என்பது தான் யார்.??
யோசிப்போம்...

(கட்டுரை யாருக்காவது ஆன்மீக கட்டுரையாகவோ மத கட்டுரையாகவோ தெரிந்தால் அதுக்கு நீங்களே காரணம். என்னை பொறுத்த வரை கட்டுரையை அறிவியல் பார்வையில் மட்டுமே எழுதி இருக்கிறேன்.)

Comments

  1. மரணிப்பவர்கள் நிஜத்தில் இருக்கலாம்🤔

    ReplyDelete
  2. Matrix படம் பலமுறை பார்த்து ரசித்து இருக்கிறேன். ஆனால் அதன் தெளிவான கதை இப்போது தான் புரிகிறது. நன்றி

    ReplyDelete
  3. Bro lucid dream epdi kanurathu podunga plz

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"