Posts

Showing posts from August, 2016

விளக்கின் மேல் வெளிச்சம்...

Image
வெளிச்சத்தை கொடுக்கும் சில விளக்கு களின் மேல் வெளிச்சம் போட்டு அவைகள் எப்படி வேலை செய்கின்றன என்று இன்று பார்ப்போம்.. LED என படும் மின் விளக்கு...சொல்ல போனால் மின்னணு விளக்கு ...அதை பற்றி... அது வேலை செய்வதில் உள்ள அறிவியல் என்ன என்பதை பற்றியும் இன்று பார்க்கலாம்.. முதலில் LED என்பது ஒரு பல்பே அல்ல காரணம் நாம் பல்பு க்கு என்ன தத்துவத்தை வைத்திருக்கிறோமோ அந்த தத்துவத்தில் இது வேலை செய்வது இல்லை.. சாதாரணமாக நமக்கு அறிமுகமான பல்பின் அடிப்படை தத்துவம் என்ன.. ? எந்த பொருளாக இருந்தாலும் அதை சூடாக்கினால் அது ஒளி உமிழும் பொருளாக மாறும். அப்படி நன்கு வெளிச்சத்தை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் அந்த வெப்பத்தை தாங்கும் வலிமை கொண்ட டங்ஸ்டன் இழை கொண்டது தான் நமக்கு முதலில் அறிமுகம் ஆன குண்டு புல்புகள்..இதில் உள்ள இழை எதற்கு கண்ணாடியில் மூடப்பட்டு உள்ளே மந்த வாயு நிரப்ப பட்டுள்ளது தெரியுமா... இல்லை என்றால் இழை ஏற்படுத்தும் வெப்பத்தில் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து நிஜமாகவே எரிந்து விடும் ஆபத்து உள்ளது.. ஒரு வெற்றிடத்தில் வைக்க பட்டால்  இழை மட்டுமே போதும் குண்டு பல்பு வேலை செய்யும்... (இங

முழுமை எனும் உண்மை பாகம் 3

Image
முழுமை எனும் உண்மை (பாகம் 3) (கருத்தும்,எழுத்தும் #ரா_பிரபு) உலகை பொருளியல் ரீதியாக ஆராய முற்பட்ட அறிவியலாளர்கள் .பொருட்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்பதை கண்டார்கள்.. பின் அந்த அணு எதனால் ஆனது என ஆராய்ந்து பார்த்து அதன் சப் அடமிக் பார்டிகல்களை கண்டார்கள் பின்பு அதையும் தாண்டி தோண்டி நோண்டி பார்த்த போது வெறும் பஞ்சு பொதி போல தான் அதன் தொடக்கம் இருப்பதை பார்த்தார்கள் மிக ஆழத்தில் பொருட்கள் ஒன்றும் இல்லாத சூனியமாக இருப்பதை பார்த்தார்கள்.. ஏதும் அற்ற சக்தி நிலையில் இருந்து இப்படி கண்ணுற கூடிய பொருட்கள் உண்டாகி இருப்பதை பார்த்து அதிசையித்தார்கள் . . கிட்ட தட்ட இதே ரீதியில் தான் தனக்குள் தேடிய மெய்ஞான விஞ்ஞாணிகளும் முதலில் தனக்குள் பிரமாண்டமாய் இருப்பது மனது தான் என்பதை பார்த்து அந்த மனம் என்பது என்ன என்று ஆராய்ந்து பார்த்த போது அது ஒன்னும் இல்லாத ஒன்று அதாவது மனம் என்ற ஒன்றே இல்லாததை கண்டு அதிசையித்தார்கள்.. உலகமெங்கும் உள்ள மெய்ஞான விஞ்ஞாணிகளும் இந்த விஷயத்தில் மட்டும் ஒத்து போகிறார்கள். மனம் என்பது வெறும் எண்ணங்களின் குவியல் தான் அகந்தை இல்லாமல் தனியாக மனதால் இருக்க முடிய

முழுமை எனும் உண்மை (பாகம் 2) ஆன்மீகத்தின் அறிவியல் அலசல்

Image
முழுமை எனும் உண்மை (பாகம் 2) ஆன்மீகத்தின் அறிவியல் அலசல் கருத்தும்,எழுத்தும்( ரா.பிரபு) நாம் பார்க்கும் உலகை மாயை என்கிறார்களே அதை  அறிவியல் ரீதியாக விளக்க முடியுமா? சொல்கிறேன் ... தொடர்ந்து படியுங்கள்..  அப்பாலுக்கு அப்பால் பிரபஞ்சத்தில் என்ன உள்ளது என்பதை எட்டி பார்க்கும் போது மனிதனால் ஒரு கட்டத்துக்கு மேல் விஷயங்களை கற்பனையில் கூட  புரிந்து கொள்ள முடியவில்லை உண்மையை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல் அது முழுமையாக இருப்பது தான் என்பதை போன கட்டுரையில் நான் விளக்கி இருந்தேன். சரி நமது புரிதல் எல்லைக்கு உட்பட்டு நாம் புரிந்து கொண்ட அனைத்தும் அறுதியிட்டு உண்மை என சொல்ல முடியுமா..என்றால்.. முடியாது.. எனது ஐன்ஸ்டைன் கட்டுரைகளில் ஆரம்பத்தில் சொன்னதை போல பல உண்மைகளை நாம் உண்மை என சொன்னாலும் அது நமது கண்ணோட்டத்தில் மட்டும் தான் உண்மை..  அது உண்மையான உண்மை அல்ல.. உதாரணமாக ஒரு இருட்டை பார்த்து நாம் இது இருட்டு என முத்திரை குத்துகிறோம் .ஆனால் அது நமக்கு மட்டும் தான் இருட்டு அக சிவப்பு பார்வை கொண்ட பாம்பு மற்றும் முதலை போன்ற உயிரினங்களுக்கு அது இருட்டு அல்ல.. அவை முழு இருட்டில் உய

"முழுமை எனும் உண்மை( பாகம் 1)

Image
"முழுமை எனும் உண்மை( பாகம் 1) கருத்தும்,எழுத்தும் (ரா_பிரபு) இம்முறை நான் எழுதி இருப்பது எனது வழக்கமான கட்டுரைகளில் இருந்து  சற்று மாறு பட்ட கட்டுரை. இதை நான் எழுத காரணம் இருக்கிறது ..அதை கட்டுரை முடிவில் சொல்கிறேன். இன்றைக்கு அறிவியலை பற்றி பார்க்கப்போவது இல்லை மாறாக அறிவியலை பற்றிய அறிவியலை பார்க்க போகிறோம்.. அறிவியலை கொண்டு கடவுளை விளக்க முடியுமா..? முடியாது என்பதை உடனே சொல்லி விடலாம். அல்லது பல சோதனைக்கு பின் கடவுள் இல்லை என்ற முடிவை பொறுமையாக சொல்ல வேண்டி வரும். காரணம் ,ஒன்றை அறிவியல் பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் அது ஆதாரப்பூர்வமான... அல்லது ஆய்வு மூலம் தெரிந்து கொள்ள கூடிய ..பரிசோதனை முடிவுகளுடன் கூடியதாக இருக்க வேண்டும்.. கடவுளுக்கு அந்த தகுதி இல்லை... சரி அந்த ஆளு ரொம்ப சர்ச்சை கூறியவர் என்பதால் அவரை விட்டு விடுவோம்... நம்மால் அன்றாடம் பயன்படுத்த கூடிய நாம் சாதாரணமாக காண கூடிய எல்லா வற்றையும் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா...பல விஷயங்களை நாம் பார்க்க முடியாவிட்டாலும் சில விளைவுகளை கொண்டு புரிந்து கொள்கிறோம் உதாரணமாக மின்சாரத்தை ஒரு போதும் உங்களால்

MRI என்ன ஏது எப்படி

Image
MRI என்ன ஏது எப்படி (கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு) Mri இன் அறிவியல் என்ன..?? ஆ ..னா , ஊ..னா  டாக்டர்ஸ் ஒரு MRI scan எடுத்திடுங்க என்கிறார்களே... அந்த MRI ஸ்கேன் எப்படி வேலை செய்கிறது அதற்கு பின்னால் உள்ள அறிவியல் என்ன ...? வாருங்கள் இன்று MRI ஐ ஸ்கேனை ..ஸ்கேன்  செய்வோம்..... "Magnetic resonance imaging "என்கிற M RI ஐ உருவாக்கியவர் டாக்டர் ரேமண்ட் டாமண்டியன் என்பவர். 1977 இல் சில மாணவர்களின் துணை கொண்டு இதை உருவாக்கினார். இது மிக வலிமையான காந்த புலத்தை கொண்டு இயங்கும் ஒரு கருவி என்பதால் முதலில் இதில் தன்னை பரிசோதனை செய்வித்து கொள்ள அனைவரும் பயந்தனர். பின்னே.... காமா கதிர்வீச்சால் பச்சை மனிதனாக மாறி போன ஹல்க் கதையா ஏதாவது ஏடாகூடமா ஆயிடிச்சினா!! .. எனவே இது ஒரு ஆபதில்லாத மெஷின் என்பதை காட்ட இதில் முதலில் தன்னையே பரிசோதனை செய்து காட்டினார் டமாண்டியன்... இன்று உலகளவில் மிக பெரிய அளவில் பயன் படுத்தபட்டு வருகிறது. எக்ஸ் ரே வில் எலும்பில் உள்ள பாதிப்புகளை கண்டறிவதை போல இதில் தசையில் உள்ள பிரச்சனைகளை கண்டறியலாம்... உங்களுக்கு மூலையில் கட்டியா இதில் தெரிந்து விடும் ..

"கோல்டன் ரேஷியோ" (இயற்கையின் கணிதம்)

Image
"கோல்டன் ரேஷியோ" (இயற்கையின் கணிதம்) அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா_பிரபு) உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா? Fibonacci number...?? இவை நம்மை சுற்றி இயற்கையில் ..இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்.. இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்.. உங்களுக்கு "pi "என்பதை பற்றி தெரிந்திருக்கும்..அதாவது.. அந்த 3.14.... ஆனால் "phi" பற்றி தெரியுமா? இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல். ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ...அந்த விகிதாசாரதைதான் Golden ratio  என்கிறார்கள். கோல்டன் ரேஸ்யோவை  குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான். இந்த phi ஆர்வலர்கள் ஆ

சுற்றுவட்டத்தில் ஒரு செயற்கைகோள்.

Image
சுற்றுவட்டத்தில் ஒரு செயற்கைகோள். (கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு) . செயற்கை கோள் எப்படி orbit இல் நிலை நிறுத்துகிறார்கள் என்பதை இன்று எளிமையான முறையில் பார்க்கலாம். அதாவது ராக்கெட் மேலே அனுப்பும் நடைமுறை பற்றியோ ....அது அடுக்கடுக்காக கழண்டு கொண்டு கடைசியாக செயற்கைக்கோளை விண்வெளியில் தள்ளி விடும் செயல்பாடு பற்றியோ ...நான் சொல்ல போவது இல்லை.. அதை எப்படி சுற்று வட்ட பாதை orbit இல் நிலை நிறுத்துகிறார்கள்... அது தொடர்ந்து பூமியை சுற்றுவது எப்படி என்பதை பற்றி தான் நான் சொல்ல போகிறேன். செயற்கைகோள் பூமியை சுற்றிவருவதை புரிந்து கொள்ளும் முன் நிலா ஏன் எதற்கு எப்படி பூமியை சுற்றிவருகிறது என்பதை பார்ப்போம் காரணம் நிலவும் செயற்கை கோளும் ஒரே அறிவியல் காரணத்தால் தான் பூமியை சுற்றி வருகின்றன. தன் தலை மேல் விழுந்த ஆப்பிளை பார்த்து பூமி ஈர்ப்புவிசையால் இது கீழே விழுந்துள்ளது என்று சொன்ன நியூட்டன், நிலவை பார்த்து ஒரு கேள்வி கேட்டார் .. "அப்போ ஈர்ப்பு விசையால் நிலாவும் என் தலையில் விழுமா? " இதை பற்றி 10.8.16 தேடல் பெஞ்ச் "நியூட்டன் எனும் ஈர்ப்பு விசை" யில் சொல்லி இரு

"பூமியின் மையத்தில் என்ன உள்ளது"

Image
பூமியின்_மையத்தில்_என்ன_உள்ளது (கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு) Center core of the earth அதாவது பூமியின் மைய்ய பகுதியில் என்ன இருக்கும் அது எப்படி இருக்கும் என என்றைக்காவது சிந்தித்தது உண்டா? Journey to the center of the earth படத்தில் அங்கே travel செல்வதை போல காட்டி இருப்பார்கள் அனால் மனிதன் தோண்டிய அதிக பட்ச ஆழமான சுரங்கங்கள் சில கிலோமீட்டர் தான். ஆனால் பூமியின் மையத்தை சென்று பார்க்க கிட்டத்தட்ட 11000 கிலோமீட்டர் ஆழம் செல்ல வேண்டும் ..பூமியின் இந்த முனையில் தோண்டி அடுத்த முனையில் வெளிவர வேண்டும் என்றால் (இந்தியாவில் அப்படி தோண்டினால் நாம் எட்டி பார்ப்பது அமெரிக்காவில் இருக்கும் காரணம் உலக உருண்டையில் நமக்கு நேர் எதிரே இருப்பது அமேரிக்கா) அதற்கு நாம் 23000 கிலோமீட்டர் தோண்ட வேண்டும். இந்த முனை to அந்த முனைக்கு ஓட்டை போட்டு gravity இல் இயங்கும் ஒரு கற்பனை வண்டி செய்தால் அது எப்படி இயங்கும் என்பதை பற்றி  எனது 9.8 என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அது ஒரு கற்பனை தானே தவிர உன்மையில் மையத்தை உலகில் உள்ள எந்த கருவியை கொண்டும் நெருங்க முடியாது காரணம் அதன் வெப்பநில

#தேடல்_பெஞ்ச்(17.8.16) #நான்_ரசித்த_புத்தகங்கள் (கருத்தும்,எழுத்தும்:#ரா_பிரபு)

Image
#தேடல்_பெஞ்ச்(17.8.16) #நான்_ரசித்த_புத்தகங்கள் (கருத்தும்,எழுத்தும்:#ரா_பிரபு) இன்றைக்கு நான் (மீண்டும்)சில புத்தகங்களை அறிமுகம் செய்யலாம் என இருக்கிறேன். கடைசியாக 3.8.16 தேடல் பெஞ்ச் இல் புதையல் புத்தகங்கள் என்ற தலைப்பில் சில புத்தகங்களை அறிமுகம் செய்தேன் இன்று என்னிடம் கலக்ஷனில் உள்ள நான் ரசித்த சில புத்தகங்களை அறிமுகம் செய்கிறேன். முதல் புத்தகம் "தண்ணீர் தேசம்.." ஒரு நிருபர் ...அவனுக்கு கடல்னா உயிர்.. அவனுக்கு ஒரு காதலி அவளுக்கு தண்ணினாலே பயம் .. அதற்கு ஒரு பிளாஷ்பேக் காரணம் இருக்கு... அவளுக்கு அந்த பயத்தை போக்க காதலன் அவளை சில மீனவ நண்பர்கள் துணை யோடு விசை படகில் ஒரு இரவு கடல் நடுவே கொண்டு போகிறான்.. எதிர் பாராமல் படகு நாடு கடலில் கோளாறு ஆகி விடு கிறது... எந்த உதவியும் இல்லாமல் அங்கேயே பல நாள் இருக்க நேருகிறது.  முதல் சில நாள் இருக்கும் உணவை சாப்பிடு கிறார்கள் அதன் பின் சோறு சாப்பிடாமல் சோற்றில் மீண்டும் மீண்டும் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை குடிக்கிறார்கள் .. காலப்போக்கில் தண்ணீர் தீர்ந்து போக ஆமை ரத்தம் கூட குடிக்கிறார்கள்...இனி உயிர் தப்பிப்பது கேள்விக்க

" கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி"

Image
.                   கொலம்பஸ் எனும் கொடூர கொலையாளி (கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு) டெஸ்லா கட்டுரை ஒன்றில் எடிசன் பற்றிய மக்கள் அறியாத புது கோணத்தை ...அவரது இன்னொரு முகத்தை பற்றி கூறி இருந்தேன். இன்றைக்கும் எனது கட்டுரை அதை தான் செய்ய போகிறது. இன்றைக்கு நான் வெளிச்சம் போட்டு காட்டஇருக்கும் முகத்திற்கு சொந்தக்காரர் அணைத்து மாணவர்களும் நன்கு அறிந்த ஒருவர் அவர்தான் அமெரிக்காவை கண்டு பிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.. நமது பாட புத்தகங்களில்  கோலம்பஸ் ஐ ஒரு நல்ல கண்டுபிடிப்பாளர் ரேஞ்சுக்கு புகழ்ந்து மரியாதையாக சொல்லப்பட்டிருக்கிறது.. ஆனால் உண்மையில் கொலம்பஸ் என்ற அந்த மனிதன் எப்படி பட்டவன் தெரியுமா? அது 1492 கால கட்டம் ... ஐரோப்பா கண்டம் உலகின் பல பகுதிகளில் காலணிகளை அமைத்து அவர்களது ரத்தத்தை உறிஞ்சி கொழுத்து கொண்டு இருந்த காலம் இன்னும் வேற எங்கெல்லாம் இளிச்சவாய் நாடு இருக்கு போய் அடிமை படுத்தலாம் என்ற அதிகார வெறி கொண்டு அலைந்து கொண்டு இருந்த போது.. இந்தியா அவர்கள் கண்ணை உறுத்தியது... ஐரோப்பாவிலிருந்து அப்படியே கிழக்கே நில பகுதி வழியாக சென்றால் இந்தியாவை சென்றடையலாம் என்று அவர்க

"அணுகரு பிளவு அணுக்கரு இணைவு அதிசய நிகழ்வு"

Image
°                         அணு_கரு_பிளவு....               அணு_கரு_இணைவு.....               அதிசய_நிகழ்வு. (கருத்தும்,எழுத்தும் :#ரா_பிரபு அணு என்பது தான் ஒரு பொருளில் உள்ள மிக சிறிய அலகு அதை அதற்கு மேல் பிரிக்க முடியாது என்று ஒரு காலத்தில் நம்பி வந்துள்ளோம். ஆனால் பிற்காலத்தில் அதை பல பேர் பிரித்து மேய்ந்து விட்டார்கள். உள்ளே உள்ள சப் அட்டமிக் பார்டிகள்ஸ்களை எல்லாம் எப்போதோ நலம் விசாரித்து விட்டார்கள். தற்போதய அறிஞ்ஞர்கள் நூற்றினோ போன்ற சில துகள்களை எடுத்து வைத்து கொண்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் (நூற்றினோ பற்றி விரிவாக அறிய எனது "நியூட்றினோ ஒரு அடங்காத துகள்" கட்டுரையை படித்து பாருங்கள். அனால் அணுவை பிளந்து பார்க்கும் போது அணுவை பிளந்தாலும் சரி இணைத்தாலும் சரி கனகிலடங்காத சக்தி வெளி படுவதை பார்த்தார்கள்.. அதை ஒவொன்றாக பாப்போம். முதலில் அணு கரு இணைவு.. இதை பற்றி சொல்லும் முன் ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும் அதாவது ஒரு பொருளை நாம் எரிபொருளாக பயன்படுத்தி அதில் சக்தியை எடுப்பதை போல அதை முழுவதமாக அப்டியே மிச்சம் வைக்காமல் ஆற்றலாக மாற்ற முடிந்தால் அது

"நிகோலா டெஸ்லா ஒரு மறைக்க பட்ட மகா வி்ஞ்ஞானி"

Image
.         " நிகோலா டெஸ்லா  ஒரு மறைக்க பட்ட மகா வி்ஞ்ஞானி" (கருத்தும், எழுத்தும் :ரா_பிரபு) உஷார் இம்முறை நான் எழுதி இருப்பது ஒரு controversial அதாவது சர்ச்சை குரிய கட்டுரை இது உங்கள் நம்பிக்கைகளை கொஞ்சம் மாற்றி அமைக்கலாம் ஜாக்கிரதை.. ஐன்ஸ்டைன் மேல் எனக்கு மிகுந்த ஈடுபாடும் மரியாதையும் உண்டு என் faverat விஞ்ஞாணி அவர் ... இதை நான் பல கட்டுரைகளில் ஆங்காங்கே(என்னையே மீறி) வெளிப்படுத்தி இருப்பேன். அதே போல எனக்கு அவ்வளவாக பிடிக்காத விஞ்ஞாணிகளும் உண்டு அதில் குறிப்பிட்ட ஒருவர் பெயரை சொன்னால் நீங்கள் அதிர போவது உறுதி .. அவர்தான் பல்பை கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன். உலகதுக்கே ஒளி கொடுத்த உத்தமரை நான் குறை கூறுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. முதலில் அவரை ஒரு விஞ்ஞானியாக ஏற்பதில் எனக்கு தயக்கம் உள்ளது காரணம் நம்மை சுற்றி இந்த பிரபஞ்சத்தில் உள்ள அறிவியலை புரிந்து கொண்டவர் அதை உள்வாங்கி கொண்டு புதிதாக ஒரு பொருளை கண்டு பிடிப்பவனை நாம் விஞ்ஞானி எனலாம் ஆனால் ஏற்கனவே உள்ள ஒரு கண்டுபிடிப்பு அல்லது தொழில் நுட்பத்தை மேம்படுத்தி அன்றாட வாழ்க்கைக்கு உதவுபவையாக மாற்றி கொடுப்பவரை

"குவார்ட்ஸ் வாட்ச் ஒரு குறுக்கு பார்வை"

Image
.          " குவார்ட்ஸ் வாட்ச் ஒரு குறுக்கு பார்வை" (கருத்தும் ,எழுத்தும் : ரா_பிரபு) கடிகாரங்களில் இந்த குவார்ட்ஸ் கடிகாரங்கள் இருக்கிறதே... அதில் ஒரு அறிவியல் அடங்கி இருக்கிறது (எதுலதான் அறிவியல் இல்ல?) Quartz என்பது என்ன பொருள் அது கடிகார இயக்கத்திற்கு எப்படி பயன்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்... முதலில் சாதாரண பெண்டுல கடிகாரம் எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம் . கடிகாரத்தை இயக்க அதன் முட்களை நகர்த்த நாம் எந்த விதமான விசையை பயன்படுத்தினாலும் அதற்கு ஒரு கண்டிஷன் மிக முக்கியமானது அதாவது நாம் கொடுக்கும் விசை ஒரே சீரானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் கடிகாரம் ஒரு நேரம் வேகமாக ஒரு நேரம் மெதுவாக ஓடி தவறான நேரத்தை காட்டும். பெண்டுல கடிகாரத்தில் இப்படியும் அப்படியும் அலைந்து ஆடும் அந்த பெண்டுலம் இருக்கிறதே .அது ஒரே சீரான வேகத்தில் அலைய கூடியது.. எனவே அதனுடன் இணைக்க பட்ட கியர் அமைப்பின் மூலம் கடிகார முட்களுக்கு சுழற்சியை கொடுத்தால் அது ஒரே சீராக இருக்கும். மேலும் அந்த பெண்டுலத்தின் நீளத்தை ஒரு குறிப்பிட்ட அளவு வைப்பதன் மூலமாக சரியாக ஒரு வினாடி ந

"ஜீன் என்ன ஏது எப்படி"

Image
ஜீன் என்ன ஏது எப்படி (கருத்தும், எழுத்தும் : ரா_பிரபு) இன்றைக்கு DNA என்கிற சிக்கலை கொஞ்சம் எளிமையாக்கி பார்ப்போம். பிரபஞ்சத்தில் பிரமாண்டமான...பெரி்தினும் பெரிதான நட்சத்திரங்கள், ப்ளாக்ஹோல்ஸ்கள், யூனிவர்ஸ்கள், க்லெஸ்டர்கள், இவைகளை உற்று பார்க்கும் போது என்ன வியப்பு ஏற்படுமோ அதே வியப்புதான் பிரபஞ்சத்தில் சிரிதினும் சிறிதான அணுக்கள் , உயிர்செல்கள் இவைகளை உற்று பார்க்கும் போது ஏற்படுகிறது . இன்றைக்கு நாம் வியக்க இருப்பது.. செல்களில் அடங்கி உள்ள ஜீன்களை பார்த்து. ஜீன்களை பற்றி புரிந்து கொள்ளும் படி எளிமையாக விளக்கும் முன் ஒரு அடிப்படையான கேள்வி ...உங்கள் உடல் பல கோடி கணக்கான அணுக்களால் ஆனது என்பது சரியா ? அல்லது செல்களால் ஆனது  என்பது சரியா ? என்றால் உடல்  செல்களால் ஆனது ஆனால் அந்த செல்கள் அனுகளால் ஆனது  என்பது தான் சரி  . அதுவும் 37.2 trillions செல்கள் .  அதை எப்படி  எண்ணனீங்க  என கேட்டால் ஒரு செல்லின் எடை ஒரு நானோ கிராம் என்பது எங்களுக்கு தெரியும் ஒருமனிதன் சராசரியா 70 கிலோ என வைத்து கொண்டால் 70 kg யில் எத்தனை நானோகிராம் அடங்கும் என்று கணக்கிடலாம்... அனால்.... நாங்கள் அ