"பூமியின் மையத்தில் என்ன உள்ளது"


பூமியின்_மையத்தில்_என்ன_உள்ளது

(கருத்தும்,எழுத்தும் :ரா_பிரபு)

Center core of the earth அதாவது பூமியின் மைய்ய பகுதியில் என்ன இருக்கும் அது எப்படி இருக்கும் என என்றைக்காவது சிந்தித்தது உண்டா?

Journey to the center of the earth படத்தில் அங்கே travel செல்வதை போல காட்டி இருப்பார்கள் அனால் மனிதன் தோண்டிய அதிக பட்ச ஆழமான சுரங்கங்கள் சில கிலோமீட்டர் தான்.
ஆனால் பூமியின் மையத்தை சென்று பார்க்க கிட்டத்தட்ட 11000 கிலோமீட்டர் ஆழம் செல்ல வேண்டும் ..பூமியின் இந்த முனையில் தோண்டி அடுத்த முனையில் வெளிவர வேண்டும் என்றால் (இந்தியாவில் அப்படி தோண்டினால் நாம் எட்டி பார்ப்பது அமெரிக்காவில் இருக்கும் காரணம் உலக உருண்டையில் நமக்கு நேர் எதிரே இருப்பது அமேரிக்கா) அதற்கு நாம் 23000 கிலோமீட்டர் தோண்ட வேண்டும்.

இந்த முனை to அந்த முனைக்கு ஓட்டை போட்டு gravity இல் இயங்கும் ஒரு கற்பனை வண்டி செய்தால் அது எப்படி இயங்கும் என்பதை பற்றி  எனது 9.8 என்ற கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தேன்.

ஆனால் அது ஒரு கற்பனை தானே தவிர உன்மையில் மையத்தை உலகில் உள்ள எந்த கருவியை கொண்டும் நெருங்க முடியாது காரணம் அதன் வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ் (சூரியனின் மைய பகுதி எவ்வளவு தெரியுமா? 15 கோடி டிகிரி செல்சியஸ்)

பூமியின் மைய பகுதியில் இருப்பது முழுக்க முழுக்க இரும்பு அதுவும் எவ்வளவு தெரியுமா கிட்டத்தட்ட 1200 கிலோ மீட்டர்களுக்கு.. அதுவும் நடு பகுதி கெட்டியாகவும் அதைசுற்றி திரவநிலையிலும் இருப்பதாக சொல்கிறார்கள்.

பூமி பொதுவாகவே மேல் பகுதி நன்கு கடினமான ஒடுகளால் (நாம் பார்க்கும் தரை) ஆனது அதற்கு கீழ் கொஞ்சம் கொழகொழா.. ஈர களிமண் போன்ற பகுதி அப்புறம் இன்னும் உள்ளே செல்ல செல்ல திரவநிலை பாறை இப்படி தான் அமைந்துள்ளது.. பூமி உருவாகும் போதே சுழற்சியால் மைய்ய நோக்கு விசையால் கனமான பொருட்கள் நடுவேவும் கணம் குறைந்த பொருட்கள் ஓரத்திலும் ஒதுங்கி கொண்டன.

நடுவே இருக்கும் இரும்பு கருவில் ஓரங்களில் நிக்கல் மற்றும் பாறை குழம்பு மேக்மாவும் கலந்துள்ளது.. பூமியின் மிக சூடான பகுதி இது தான். இவ்வளவு சூடு இதற்கு எங்கே எப்படி வந்தது என்றால் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் இருந்து பிரிந்து வந்த போது இருந்த சூடு படிப்படியாக குறைந்து ஆறி இறுகி போக இன்னும் மைய பகுதி மட்டும் வெப்பத்தை சுமந்து கொண்டுள்ளது.

பூமியின் இந்த மைய பகுதி மட்டும் மற்ற பகுதியை விட அதிகம் வேகமாக சுழலுகிறது..
450 கோடி ஆண்டுகளாய் இன்னும் சூடு குறையாமல் இருக்க சில பல காரணம் இருக்கிறது..

1) பூமி ஆரம்ப நாட்களில் பெற்ற வெப்பமே இன்னும் தீராமல் உள்ளது.
2) friction effect அதாவது உராய்வு இருக்கும் இடம் சூடு இருக்கும் என நமக்கு தெரியும். பூமி பல அடுக்குகள் வெவேறு வேகத்தில் சுழலுவதை சொன்னேன் அதில் ஏற்படும் உராய்வு சூடு ஒரு காரணம்.
3)ரேடியோ அக்ட்டிவிடி கொண்ட பொருட்களினால் (அதாவது நிலையில்லாத அணுக்கள் கதிர்வீச்சு மூலம் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்துவது) உண்டாகும் வெப்பம்
4) மற்றும் வெப்பம் கதிர் வீச்சாக வெளியேறாமல் மூடிவைத்து தடுக்க பட்டு விட்டது (பிளாஸ்க் மாதிரி).
இப்படி பல காரணங்களால் இன்னும் சூடு குறையாமல் உள்ளது.

இரும்பு தொடர்ந்து உரசி கொண்டே சுழல்வதால் தான் காந்த புலமே உண்டாகிறது என்கிறார்கள்..
இந்த காந்த புலம் இல்லை என்றால் நாமெல்லாம் காலி..
காரணம் சூரிய ஒளி நாம் நினைப்பதை போல இதமானது அல்ல அது மனிதனை கொல்லும் UV கதிர்களை நம்மை நோக்கி அனுப்பி கொண்டுள்ளது. அதை நம்மை நெருங்க விடாமல் தடுப்பது இந்த காந்த புலம் தான்.

Center core of the earth என்பது ஒரு கான்செப்ட் தான் உன்மையில் 100 சதம் அங்கே இப்படி தான் உள்ளது என்பதை எந்த அறிவியலாளரும் அடித்து சொல்ல முடியவில்லை

 எனவே
மேல் பகுதியில் நாம் என்னதான் கெத்து காட்டினாலும் பூமியின் மைய்ய பகுதி இன்னும் "நெருப்புடா ...நெருங்கு டா ..முடியுமா" என யாரும் அண்ட முடியாத அதிசயமாக உள்ளது .


Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"