Posts

Showing posts from March, 2019

தேடல் கேள்விகள் ரா.பிரபு ✴ கேள்வி 7

Image
"தேடல் கேள்விகள்" ரா.பிரபு ✴ கேள்வி 7 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯 கேள்வி : ரத்தத்தில் பல வகை சொல்கிறார்களே.. அவற்றை எப்படி இது இந்த குரூப் என வகை படுத்துகிறார்கள்.? - செந்தில் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் : முதலில் ஒரு விஷயம் சொல்லி விடுகிறேன்.. ரத்தத்தில் பார்ப்பதற்கு ஏதோ நிறைய வகை இருப்பது போல தோன்றினாலும்.. உண்மையில் அப்படி இல்லை. ரத்தம் மொத்தமே 4 வகை தான். 1.A வகை 2. B வகை 3. AB வகை மற்றும் 4. O வகை இவற்றை தான் ABO பிரிவுகள் என்கிறோம். இந்த நான்கிலும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் உண்டு என்பதால்.. மொத்தம் 8 வகையாக பிரித்து வைத்து இருக்கின்றோம். அதாவது.. (A + , A -, B+, B -, AB+ ,AB - ,O +,O - ) சரி இப்போ இவற்றை எந்த அடிப்படையில் பிரிக்கிறார்கள் என்று பார்க்கலாம். ரத்தத்தில் கலந்துள்ள ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து தான் இந்த 'வகை பிரிப்பு ' நடக்கிறது. அந்த பொருளின் பெயர் antigens (ஆன்டிஜென் னா வேற ஒன்னும் இல்ல  சர்க்கரை மற்றும் புரதத்தின் ஒரு வகை ) இந்த ஆன்டிஜென் எங்கே இருக்கும் என்றால் ரத்த சிகப்பணுக்களில் இருக்கும்... அப்புறம் antibodies களில் இர

"ஆவியின் புகை படம் "

Image
" ஆவியின் புகைபடம் " (சிறுகதை ) ரா.பிரபு "என்ன சார் பயமா இருக்கா ?" விக்டர் முகத்தில் சிறு புன்னகை உடன் கேட்டான்.. சதீஸ் அவனை பதிலுக்கு சிரிப்பு இல்லாமல் பார்த்தான். ஊரை விட்டு ஆள் நடமாட்டம் விட்டு பல கிலோமீட்டர் தள்ளி.. இந்த இரவு நேரத்தில் .. இந்த சுடுகாட்டு பகுதியில்.. தனிமையில்... இருப்பவனை பார்த்து கேக்கிற கேள்வியா இது.. "இன்னும் எவ்ளோ தூரம் போகணும் விக்டர் " ?? குளிர் காலம் என்பதால் பணி மூட்டம் "ஹா " என ஊதிய கண்ணாடி போல மங்கலாக காட்சியை மறைத்து இருந்தது.. அந்த காட்சிக்கு ஊடாக மெலிதாக ஒரு காம்பவுண்ட் சுவர் தெரிந்தது. "அதான் சார் சுடுகாடு காம்பவுண்ட் . கேட் இப்ப மூடி இருக்கும் . நாம சுவர் ஏறி தான் போகணும் "  சதீஸ் கொஞ்சம் பதட்டமானவன் போல தெரிந்தான் . அதை சரி செய்ய தான்  ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தது போல் தெரிந்தது அந்த சுடுகாட்டில் அது கொள்ளி வாய் பிசாசு போல ஒற்றை கண்னை சிமிட்டி சிகப்பாக எரிந்தது.. " அதுங்க எப்ப வரும் ??"  "சார் நாம ஒன்னும் உயிரோடு இருக்கிறவனை படம் ப

போர் விமானம் ஒரு பார்வை

Image
போர் விமானம் ஒரு பார்வை  ரா.பிரபு (Mig 21 V/S  F-16 ) ஒருவன் கையில் பழைய ரிவால்வரை வைத்து கொண்டு தனக்கு முன்னால் AK 47 வைத்து இருக்கும் எதிரியை சுட்டு வீழ்த்தினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு செயல் தான்... தீரன் அபினந்தன் வர்தமான் , Mig 21 விமானத்தை வைத்து F-16 ஐ வீழ்த்திய சம்பவம். (உலகில் F 16 யை சுட்டு வீழ்த்திய முதல் F 16 ஷூட்டர் விங் கமாண்டர் அபினந்தன் தான்.) இது ஏன் அவ்வளவு பெரிய சாகசம் ?? காரனம் அபினந்தன்  ஓட்டி சென்ற மிக்21 என்பது அரத பழசான .. ஆயுள் முடிந்த 2 ஆம் மற்றும் 3 ஆம் தலை முறை விமானம் . இதில் விபத்து வாய்ப்பு மற்றும் கோளாறு வாய்ப்பு அதிகம் என்பதால் இதை" flying coffin "என்று அழைக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். ஆனால் எதிரி ஓட்டி வந்த F 16 சக்தியில் அட்வான்ஸ் தொழில் நுட்பத்தில் ... ஆற்றலில் முற்றிலும் மேம்பட்ட 4 ஆம் தலை முறை விமானம். இதை எதிர்க்க சரியான ஆள் நம்மிடம் உள்ள miraj 2000 மட்டுமே..(முதல் நாள் தீவிர வாதிகள் முகாமில் பாம் போட்டது இது தான் ) ஆனால் அதை அனுப்பாமல் இதை அனுப்பிய காரணம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்வது.. அந்த நேரத்த