Posts

Showing posts from November, 2019

"கருப்பு டா '' வாண்டா பிளாக்

Image
"கருப்பு டா (" வாண்டா பிளாக் ) #ரா_பிரபு உங்களுக்கு vanta black என்றால் என்ன தெரியுமா ?? பொதுவாக நமக்கு நிறங்களை பற்றி ஒரு குறிப்பிட்ட விஷயம் தெரியும். (அல்லது சிலருக்கு இன்னும் தெரியாமல் இருக்கலாம்) அதாவது உண்மையில் நாம் என்ன பொருளை என்ன நிறத்தில் பார்க்கிறோமோ உண்மையில் அந்தப் பொருள் அந்த  நிறம் கொண்டது அல்ல. உதாரணமாக ஒரு நீலநிறத்தை நாம் பார்க்கிறோம் என்றால் அந்த பொருள் நீல நிறத்தை தவிர மற்ற அனைத்து நிறத்தையும் உள்ளிழுத்துக்கொண்டு  நீலத்தை மட்டும் நமது கண்களுக்கு பிரதிபலிக்கிறது என்று அர்த்தம். ஒரு பொருள் எந்த நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை என்றால் அந்த பொருளை நாம் வெள்ளை நிறத்தில் காண்போம். ஒரு பொருள் அனைத்து நிறத்தையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது என்றால் அதைதான் நாம் கருப்பு நிறமாக காண்போம். நாம் காணும் அனைத்து கருப்பு நிற பொருட்களும் ஒளியை உள்ளே இழுத்து கொள்பவை தான் ஆனால்... அது 100 சதம் அல்ல.. எப்பேர் பட்ட அடர்த்தியான கருப்பு நிறமும் கொஞ்சம் ஒளியை நமக்கு மிச்சம் அனுப்புகிறது ஒரு பொருள் கிட்ட தட்ட 100 சதம் ஒளியை உட்கிறகித்தால் அது எப்படி இருக்கும்.

தொலை தூர கோள்கள் கண்டு பிடிப்பது எப்படி ?

Image
"தொலை தூர கோள்கள் கண்டு பிடிப்பது எப்படி ? #அறிவியல்_காதலன் #ரா_பிரபு விண்வெளியில் நீண்ட தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களை சுற்றி வரும் கோள்களின் இருப்பை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் தெரியுமா..? பல ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து நமக்கு வரும் ஒளியை ஆராய்ந்து அந்த நட்சத்திரம் இருக்கும் தொலைவை எப்படி சொல்கிறார்கள் என்பதை கடந்த பதிவில் பார்த்தோம். ஆனால் அந்த நட்சத்திரத்தை ஒரு கோள் சுற்றி வருகிறது என்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள் ? ஒரு கிரகம் நட்சத்திரத்தை சுற்றி வரும்போது அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பினால் கிரகம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி கிரகத்தின் ஈர்ப்பினால் நட்சத்திரமும் சிறிதளவு பாதிக்கப்பட தான் செய்கிறது. இரு நபர்கள் ஒன்றோடொன்று கையை கோர்த்துக் கொண்டு தட்டாமாலை சுற்றுவது போல கற்பனை செய்து கொள்ளுங்கள் அதில் ஒருவர் திடகாத்திரமாக மாமிச மலை போல இன்னொருவர் மிகச்சிறிய ஒரு சிறுவன் போலவும் கற்பனை செய்து கொள்ளலாம். இப்படி சுற்றும் போது இதில் பெரியவர் சிறியவர் ஐ அதிகமாகவும் சிறியவர் பெரியவரை குறைந்த அளவும் பாதிப்புக்கு ஆளாக்குகிறார்கள். உதாரணமாக

"Wireless charger எப்படி வேலை செய்கிறது ?"

Image
"Wireless charger எப்படி வேலை செய்கிறது ?" ரா_பிரபு Samsung galaxy s10, Sony xperia xz3, nokia 9 ,google pixel 3 போன்ற பல மொபைல்கள் wireless charger இல் சார்ஜ் ஆவதை பார்த்து இருப்பீர்கள். இந்த வயர் அற்ற சார்ஜர்கள் எப்படி வேலை செய்கின்றன? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன ? மின்னியலில் induction என்ற ஒரு விஷயம் உண்டு. யாராவது கொட்டாவி விட்டால் பக்கத்தில் இருக்கும் நமக்கும் கொட்டாவி வருவது போல ஒரு நிகழ்வு இது. அதாவது ஒரு coil ஐ எடுத்து கொண்டு அதில் மாறுதிசை மின்னோட்டம் (ac curent) கொடுத்தால் அந்த காயிலில் ஒரு electro magnetic flux உண்டாகி காற்றில் கொஞ்சம் தூரம் கண்ணுக்கு தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கும். அந்த காந்த அலைகள் அலையும் எல்லையில் இன்னொரு காயிலை கொண்டு வந்து வைத்தால் அதில் அந்த காந்த புலன்கள் விட்டு விட்டு வெட்டுவதால் காயிலில் மின்சாரம் உண்டாகும். (பொதுவாகவே காந்த புலத்தில் வேகமாக கடத்தி கடந்தாலோ அல்லது கடத்தி உள்ள இடத்தில் காந்த புலம் வேகமாக கடந்தாலோ மின்சாரம் உண்டாகும்) இந்த நிகழ்வுக்கு பெயர் தான் இண்டக்ஷன். நாம் பார்க்கும் டிரான்ஸ்பார்மர்கள் (

டைம் லூப் நம்பர்_67"

Image
"டைம் லூப் நம்பர்_67" (அறிவியல் சிறுகதை ) #ரா_பிரபு தலைக்குள் மெல்லிய மிக்சி சப்தம் போல் கேட்டு நினைவுக்கு வந்தேன். தூக்கத்தில் இருந்து திடீரென விழித்த குழந்தை போல திரு திரு . அறை யின் அரை இருட்டு கண்ணுக்கு பழகி இருந்ததது.. கையில் வைத்திருந்த அந்த பொருள் தனது உடல் எங்கும் சிறு வெளிச்சங்களை இறைத்து தனது எலக்ட்ரானிக்ஸ் கண்ணை கொண்டு என்னை பார்த்து கண் அடித்து  கொண்டிருந்ததது கொஞ்சம் சூடாக இருந்தது. சடாரென அறை கதவுகள் திறந்து கொண்டு அம்மாவின் சப்தம் அபாயமான டெசிபலில் ஒலித்தது... அல்லது முதலில் ஒலித்த பின் அறை கதவு திறந்ததா ?? குழப்பமாக இருந்தது . எதுவாய் இருந்தாலும் இதை உடனே மறைக்க வேண்டும் கடந்த முறை செய்ததை உடைத்து தள்ளியதை  போல இதை உடைத்து தள்ள அனுமதிக்க முடியாது  ஐயையோ எனது உழைப்பு மீண்டும் வீணாகி போகும்... எங்கே ஒளித்து வைக்கலாம் ?? கட்டில் அடியிலா எனது ஸ்கூல் பேகிலா...  எனது மூளை எலெக்ட்ரான் வேகத்தில் யோசித்தது ஆனால் அம்மா அதற்குள் ஒளியின் போட்டான் வேகத்தில் உள்ளே நுழைந்து இருந்தாள். கண்ணில் 415 வோல்ட்க்கு  குறையாமல் மின்சாரம்.. இன்னும் கொஞ்ச நேரத்தில் எ

Synesthesia பற்றி தெரியுமா

Image
Synesthesia பற்றி தெரியுமா ? #அறிவியல்_காதலன் #ரா_பிரபு சில எளிமையான கேள்விக்கு பதில் கூறுங்கள் நண்பர்களே... 1)புதன் கிழமையின் நிறம் என்ன. (அல்லது )நம்பர் 6 என்ன நிறம் ? 2 ) காரின் ஒலி என்ன சுவையில் இருக்கும் ? 3 ) பியானோ ஓசை என்ன நிறத்தில் இருக்கும் ? 4 ) மஞ்சள் நிற ஒளி விளக்கின் ஒளி உங்கள் உடலை தொடுவது எப்படி உணர்வீர்கள் ? சிகப்பு ஒளி தொடும் போது என்ன வித்தியாசம் ? 5 ) இந்த கட்டுரையில் வரும் அ என்கிற எழுத்து மட்டும் என்ன நிறத்தில் காண்கிறீர்கள்..? 6 ) பருத்தி துணி தொட்டால் என்ன இசை கேட்கும் ? மேலே கேட்க பட்ட கேள்வி நமக்கு அர்த்தமற்ற அபத்தமாக தோன்றலாம். ஆனால் நீங்கள் ஒரு'' Synesthesis "  ஆக இருந்தால் உங்களுக்கு இது அர்த்தமற்ற கேள்வி அல்ல. மொத்த உலக தொகையில் வெறும் 4 சதம் ஆட்களே..Synesthesis ஆட்கள் உள்ளனர். இது 2000 பேரில் ஒருவருக்கு இருக்கும் திறன். நாம் நமது புலன்கள் வாயிலாக இந்த உலகை உணர்கிறோம். அந்த புலன்களின் ஒரு விசித்திர விளையாட்டு இந்த Synesthesia. அதாவது இரு புலன்கள் தங்களுக்குள் பாலம் அமைத்து கொள்வது. அதாவது ஒரு புலனின் உள்ளீடு அடுத்த புலனின