Posts

Showing posts from November, 2020

ஜெட் வேக கதை 4

Image
 " ஜெட் வேக கதை "4 ரா.பிரபு செல்வராஜ் தனது பள்ளி படிக்கும் மகனும் பக்கத்து வீட்டு சிறுவனும் பேசிக்கொள்வதை தூர இருந்து அசுவாரசியமாக கவனித்துக் கொண்டிருந்தார். "டே உனக்கு உங்க அம்மாவை பிடிக்குமா டா.. " "ஆமாம் டா ரொம்ப பிடிக்கும் " "இல்ல நீ பொய் சொல்ற " என்றான் பக்கத்து வீட்டு பையன் "நான் ஏண்டா பொய் சொல்றேன் எங்க அம்மானா எனக்கு உயிர். " என்றான் செல்வராஜ் மகன். "அப்படியா.. அது உண்மைனா எங்க எனக்கு ஒரு 20 ரூபாய் கொடு பார்ப்போம். அப்போ தான் நம்புவேன் " என்று அவன் கூறியதும் மகன் உடனே அவனுக்கு பாக்கெட் மனிக்கு கொடுக்க பட்ட பணத்தில் 20 ரூ கொடுப்பதை பார்த்து செல்வராஜ் அதிர்ந்தார்.. "டே இங்க வாடா முட்டாள் பயலே " என்று கத்தினார். அவன் பயந்து அப்பாவிடம் வர.. அந்த உஷார் சிறுவன் ஓடி ஒளிந்து இருந்தான் " ஏண்டா உனக்கு அறிவு இல்ல அவன் உன் அம்மா பாசத்தை பயன்படுத்தி உண்ண ஏமாற்ற பார்க்கிறான்.. உனக்கு புரியலையா..." "அவன் அம்மா பாசத்தை சொன்னான் பா அம்மாவை விட்டு கொடுக்க முடியுமா...பா.. அதான்.." என்று மகன் குறைந்த ஸ்தாயியி