Posts

Showing posts from December, 2018

"நான் இனி சாக மாட்டேன் "

Image
"நான் இனி சாக மாட்டேன் " (சிறுகதை ) ரா.பிரபு (கதை எழுதி ரொம்ப நாள் ஆச்சி என்பதால் இன்று ஒரு சிறுகதை .....) அந்த சிறுவன் மிக விசித்திரமாக இருந்தான் உடல் முழுக்க சுருண்டு சுருண்டு கூன் விழுந்ததை போல. அவனை அந்த பிறந்த நாள் கூட்டத்தில் அனைவரும் விசித்திரமாக பார்த்தார்கள். இந்த விழாவிற்கு திடீரென எங்கே இருந்து வந்தான் இவன்... யார் இவன்..?? என்று ஆச்சரியம் கலந்து இருந்தது அவர்கள் கண்களில். அந்த பணக்கார பங்களாவின் மாடியில் அந்த பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. வந்தவர்கள் அனைவர் முகத்திலும் பணக்கார தனம் ஒட்டி இருந்தது. முகத்தில் சிரிப்பை மறைக்கும் அளவு அலங்காரம் செய்திருந்த பெண்கள் தனி கும்பலாக சேர்ந்து அரட்டை துவங்கி இருந்தார்கள்.  விழா ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. அப்போது....தான். அந்த கூட்டத்திற்கு பொருந்தாத ஒன்றாக அந்த சிறுவன் அந்த கூட்டத்தில் நுழைந்திருந்தான். அந்த சிறுவனிடம் ஏதோ விசித்திரம் இருந்தது. அனைவரிடமும் ஏதோ சொல்ல துடித்தது ஆனால் தொண்டையில் வார்த்தை வர வில்லை என்பதை போல சைகை காட்டியது. கைகால் களை வேகமாக ஆட்டி எதையோ சொல்ல

"தேடல்_கேள்விகள் " (கேள்வி : 6 )

Image
" தேடல் கேள்விகள்  " (கேள்வி : 6 ) #ரா_பிரபு 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 🎯கேள்வி : அதென்ன ட்ரிபில் பாயிண்ட் நீர் ஒரு குறிப்பிட்ட நிலையில் திட திரவ வாயு னு மூன்று நிலையையும் அடையும் இந்த ட்ரிபில் பாயிண்ட் ல னு படிச்சேன் அது எப்படி ஆச்ரயமா இருக்கு அது பற்றி விளக்கம் சொல்ல முடியுமா உங்க ஸ்டைல்ல ... இது நாம் சாதாரணமா பார்க்க முடியாதா. -Selvimani smpvaishnava - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் : முதலில் இந்த triple point என்பது வெறும் நீருடன் பொருத்தி பார்க்காதீர்கள் அது திட திரவ வாயு வாக மாறும் கிட்ட தட்ட அனைத்து பொருளுக்கும் இது பொருந்தும். (ஹீலியத்திற்கு ட்ரிபில் பாயிண்ட் இல்லை. ) ஜேம்ஸ் தாம்சன் என்பவர் முதல் முதலில் 1873 இல் இந்த வார்த்தையை பயன் படுத்தினார். அதாவது குறிப்பிட்ட வெப்ப நிலையில் குறிப்பிட்ட அழுத்தத்தில் ஒரு substance திட திரவ வாயு எனும் மூன்று நிலையிலும் இருக்கும் (.உதாரணம் நீரின் ட்ரிபில் பாயிண்ட் 0.01° Celsius at 4.56 mm Hg.) சரி என்ன இந்த ட்ரிபில் பாயிண்ட் என்று பார்க்கலாம். யாராவது உங்களிடம் ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாற்ற சொன்னால் (உதா

"சிங்கம் புலி "

Image
"சிங்கம் புலி" ரா.பிரபு காட்டின் இரண்டு பெரும் தலைகள்.. தேர்ந்த வேட்டைகாரர்கள்... கொடூர கொலையாளிகள் சிங்கம் மற்றும் புலி. இவைகள் இரண்டிற்கும் இடையிலான சில சுவாரஷ்யமான ஒற்றுமை வேற்றுமை பற்றி பார்க்கலாம். முதலில் ஒரு சுவாரஷ்யமான கேள்வி சிங்கம் புலி இவை இரண்டுமே பெரும் கொலையாளிகள் சிறந்த வேட்டை விலங்குகள். ஒரு வேளை இவை இரண்டுமே மோதி கொண்டால் இவற்றில் எது வெற்றி பெறும் ? இந்த கேள்விக்கு பதில் அந்த விலங்கின் வயது அனுபவம் உடல் ஆரோக்கியம் எல்லாம் சார்ந்த விஷயம் தான் என்றாலும் பொதுவாக இவை இரண்டும் மோதி கொள்வதாக வைத்து கொண்டால் இவற்றில் வெற்றி பெறுவது எதுவாக இருக்கும் தெரியுமா ?  உங்களில் பல பேர் சிங்கம் என்று நினைத்திருந்தால் மன்னிக்கவும் அது தவறான விடை .இவை இரண்டும் மோதிக் கொண்டால் அதில் வெற்றி பெறுவது பெரும்பாலும் புலியாக தான் இருக்கும். அதற்கான காரணத்தை பார்க்கும் முன் அதற்க்கான ஆதார சம்பவம் சிலதை பார்க்கலாம். இதற்க்கு பண்டைய காலத்தில் இருந்தே ஆதாரங்கள் இருக்கின்றன..பழைய ரோம் நகரத்து பேரரசர்கள் மக்கள் சூழ பெரும் விளையாட்டு மைதானங்களில் சிங்கம் மற்றும் புலிகளுக்