Posts

Showing posts from June, 2020

"உருமாறும் வில்லன்"

Image
"உருமாறும் வில்லன்" (Grasshoppers and Locusts ) அறிவியல் காதலன்  -ரா.பிரபு - வெட்டுகிளியை இவ்வளவு நாளாக grasshopers னு தானே சொல்லி கொடுத்தாங்க.. இப்ப ஏதோ  locusts னு சொல்றோமே ஏன் என்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். சிலர் 'அட ரெண்டும் ஒன்னு தான் பா இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லலாம் 'என்று சொல்லலாம்.. இந்த கும்பலாக வரும் மஞ்சள் வெட்டுகிளிகள் திடீரென வருகின்றனவே இவ்வளவு நாள் இவைகள் எங்கே இருந்தன என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். வெட்டுகிளிகள் படையெடுப்பு என்பது வரலாற்றில் புதிது அல்ல கி.மு வில் இருந்தே பல வரலாற்று சம்பவங்கள் உள்ளன. Grasshopers.. locusts.. இவை இரண்டும் ஒன்றா..?  ஆம் இவை இரண்டும் ஒன்னு தான். ஆனால் ஒன்னு இல்லை. Grasshopers களின் உருமாறிய சூப்பர் வில்லன் வடிவம் தான் locust. பொதுவாக நாம் கூறும் கிராஸ் ஹோபார்ஸ்களை நாம் அவ்வபோது வயவெளிகளில் பார்த்து இருக்கலாம் அவைகள் பச்சை நிறத்தில் இருப்பதை பார்த்து இருப்போம். மேலும் அவைகள் கூட்டம் சேராமல் தனி தனியாக இருப்பதை தான் பார்த்து இருப்போம். பெரும்பாலும் அவைகளை நாம் பறந்து சென்றே பார்த்திருக்க மாட்டோம் குதித்