Posts

Showing posts from October, 2018

"இன்று ஒரு அறிவியல்"

Image
" இன்று ஒரு அறிவியல்" ⚛அறிவியல் காதலன் ⚛            oct - 2018 ரா.பிரபு அறிவியல் காதலர்களுக்கு வணக்கம் ! நான் பல இடங்களில் தினமும் காலை  "இன்று ஒரு அறிவியல் "என்ற பெயரில் பகிர்ந்து வந்த சிறிய துணுக்கு வகையிலான அறிவியல் தகவல்களை தான் இந்த பதிவில் ஒன்றாக தொகுத்து கொடுத்து இருக்கிறேன். படித்து பயனடையுங்கள். நன்றி. ☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢ "இன்று ஒரு அறிவியல் " ☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢ 1. பாம்பு கடிக்கு மருந்து எவ்வாறு தயாரிக்க படுகிறது தெரியுமா ?? பாம்பு விஷத்தில் இருந்து தான். ஆச்சர்யமாக இருக்கிறதா? சிறிதளவு பாம்பு விஷத்தை மாடு குதிரை போன்ற விலங்கின் உடலில் குறிப்பிட்ட அளவு செலுத்துவார்கள். அதன் உடல் அதை எதிர்க்கும் எதிர்பொருளை சுரக்கும் (antibodies ) அதை எடுத்து சுத்திகரித்து செய்ய படுவதே பாம்பு கடிக்கு மருந்தாகும். ☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢☢ 2.Betelgeuse Star பற்றி தெரியுமா ? பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டு தாண்டி இருக்கும் ஒரு நட்சத்திரம் தான் betelgeus இது இறக்கும் தருவாயில் உள்ள ஒரு சூப்பர் ரெட் ஜியன்ட் ஸ்டார். இது இரவு வானில் நாம்