Posts

Showing posts from 2022

உயிர் வேட்டைஉ

  "உயிர் வேட்டை " (திரில்லர் குறுந்தொடர் ) "ரா.பிரபு "                  april 2022 (அத்தியாயம் 1 ) அந்த  'சந்திரபாலா 'மலை காடு பகல் நேரத்தில் கூட ஏதோ இருட்டி விட்டதை போல காட்சிதர கூடியது. இப்போதோ இரவு மணி 12.10 . மொத்த காட்டை கருப்பு தாருக்குள் முக்கிவைத்தது போல இருந்தது. தேய்பிறையின் பலகீனமான நிலா இருள் உடன் போராடி தோற்று கொண்டிருந்தது. வீசும் காற்றில் குளிர் இருந்தது.  அந்த காட்டின் ஆரம்ப எல்லையில் அந்த தற்காலிக டென்ட் போடப்பட்டிருந்தது. உள்ளே சோகையாக பேட்டரி விளக்குகள் எரிந்து கொண்டிருக்க பெயர் தெரியாத பூச்சிகள் அந்த விளக்கை சுற்றி வந்து கொண்டிருப்பதை அசுவார்ஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி.  " இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவங்க வர்றதுக்கு " என்றார் உள்ளே எட்டி பார்த்து. உள்ளே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தொப்பியை வைத்து முகத்தை மூடி கொண்டு பாதி நித்திரையின் பிடியில் இருந்த இன்னோரு அதிகாரி மெல்ல தொப்பியை விலக்கி.... "அவங்க சொன்ன நேரம் ஆயிடுச்சி சார் இனி எப்போ வேணா வரலாம் " என்றார். "என்ன எழவு பிடிச்ச வேலையோ