உயிர் வேட்டைஉ

"உயிர் வேட்டை "

(திரில்லர் குறுந்தொடர் )

"ரா.பிரபு "                  april 2022

(அத்தியாயம் 1 )

அந்த  'சந்திரபாலா 'மலை காடு பகல் நேரத்தில் கூட ஏதோ இருட்டி விட்டதை போல காட்சிதர கூடியது. இப்போதோ இரவு மணி 12.10 . மொத்த காட்டை கருப்பு தாருக்குள் முக்கிவைத்தது போல இருந்தது. தேய்பிறையின் பலகீனமான நிலா இருள் உடன் போராடி தோற்று கொண்டிருந்தது.

வீசும் காற்றில் குளிர் இருந்தது. 

அந்த காட்டின் ஆரம்ப எல்லையில் அந்த தற்காலிக டென்ட் போடப்பட்டிருந்தது. உள்ளே சோகையாக பேட்டரி விளக்குகள் எரிந்து கொண்டிருக்க பெயர் தெரியாத பூச்சிகள் அந்த விளக்கை சுற்றி வந்து கொண்டிருப்பதை அசுவார்ஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த அதிகாரி. 

" இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் அவங்க வர்றதுக்கு " என்றார் உள்ளே எட்டி பார்த்து.

உள்ளே நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து தொப்பியை வைத்து முகத்தை மூடி கொண்டு பாதி நித்திரையின் பிடியில் இருந்த இன்னோரு அதிகாரி மெல்ல தொப்பியை விலக்கி....

"அவங்க சொன்ன நேரம் ஆயிடுச்சி சார் இனி எப்போ வேணா வரலாம் " என்றார்.

"என்ன எழவு பிடிச்ச வேலையோ போ சுடுகாட்டுக்கு காவல் காக்கர மாதிரி....  எப்போ எந்த விலங்கு டெண்டுக்குள்ள பூரும் தெரியல எப்போ எங்க இருந்து பாம்பு கொத்தும் தெரியல .. இப்படி ஒரு இடத்தில இந்த வேலை தேவையா...." முதலாமவர் குரலில் சலிப்புடன் கொஞ்சம் பயமும் இருந்தது

"என்ன பண்ண அந்த சனியன் T 82 வை வேட்டையாட வேற ஒழுங்கான வழி தெரியலேயே .. நம்ம மேலிடத்துக்கு.." என்று சொன்ன இரண்டாமவர் ஆன்டெனாவுடன் கூடிய ஒரு கையடக்க தொலைக்காட்சியை இப்போது உயிர்ப்பித்து கொண்டு இருந்தார்.

" நம்மளை அந்த ஒத்த பல்லன் T82 இப்போ வந்து தாக்கி விடாது என்பது என்ன நிச்சயம் ? இதெல்லாம் நம்ம மேலிடத்திற்கு தெரியாதா இஷ்டத்துக்கு இந்த அபாயகரமான இடத்துல டெண்ட் போட்டு விட்டிருகாங்க. அதும் இல்லாம....வந்து... இந்த காட்டுல.. ஏதோ அமானுஷ சக்திலாம் இருக்கு னு....மக்கள்..."

"சார் அதை எல்லாம் கூட நீங்க நம்பரிங்களா....?."

" சார்.. நைட் 12 மணிக்கு காட்டுக்குள்ள இருக்கும் போது எல்லோரும் இதை நம்புவாங்க சார்..ஏதாவது உண்மையா இருந்து தொலைச்சா...? சுத்தி காது கொடுத்து கேளுங்க சார்.. என்னென்ன கிடந்து கத்திட்டு இருக்க பாருங்க...இன்னைக்கு நைட்டு நல்ல படியா போனா போதும். ஏன் உங்களுக்கு ஏதும் பயமா இல்லையா..?" 

உள்ளே இருந்தவர் அதற்கு பதில் அளிக்காமல்...

"தொலை காட்சி திறந்தா அந்த சனியன் புராணம் தான் இங்கே பாருங்க..."  என்று காட்டினார்..

' இது வரை 8 பேரை கொன்று தின்றுள்ள T 82 ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஒரு தரப்பினர் அந்த புலியை சுடக்கூடாது என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆட்கொல்லி புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கும் வனதுரை செய்வதறியாது தவித்து வருவதாக கூற படுகிறது. ..' -மேக்கப் கலையாத அழகி ஒருத்தி லேசாக தலையை ஆட்டிக்கொண்டு செய்தி வாசித்துக் கொண்டு இருந்தாள் .

"அந்த குடிகாரன் எண்ணயா பண்றான். அவங்க வர நேரத்துல இவன்தூங்கிட்டு இருக்க போறான் போய் அவனை எழுப்பு..." 

அந்த டென்டில் இவர்கள் இருவரை தவிர 3 ஆவதாக ஒருவன் ஒரு மூலையில் படுத்து இருந்தான். ஒரு பழைய தோல் பையை தலையணை போல வைத்து தூங்கி கொண்டிருந்தான். அவனை நெருங்கிய அதிகாரி கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்து நீரை அவன் முகத்தில் சுள்ளென்று அடிக்க அவன் பாம்பு தீண்டியவன் போல எழுந்தான்...

"வந்துடாங்களா அய்யா.. அவங்க வந்தாச்சுங்களா ..." என்றான் 

காட்டு பகுதியில் வளர்ந்த முரட்டுதனம் அவன் உடல் எங்கும் தன் முத்திரையை பதித்து இருந்தது. ஒரு குட்டிப் புதர் போன்ற தலைமுடி வைத்திருந்தான். இருட்டில் சரியாக கலந்துவிடும் நிறத்தில் இருந்தான். அணிந்திருந்த சட்டை எனக்கும் சலவைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொன்னது. எல்லா வற்றை விட முக்கியமாக அவன் முகத்தை அதி கொடூரமாக காட்டுவது அவன் முகத்தில் மேலிருந்து கீழாக தெரிந்த அந்த ஆழ்ந்த வெட்டு தழும்பு தான். நீர் அற்ற வயல் வெடிப்பு போல அது நெற்றி தொடங்கி கீழ் தாடை வரை நீண்டு இருந்தது. தையல் போட்டு ஆறிய வடுக்கள் அடையாளம் காணும் வண்ணம் இருந்தது.

" இல்ல வர நேரம் தான் எந்த நேரம் வேணாலும் அவங்க வரலாம் நீ தயாராய் இருக்கணும்னு தான் உன்னை எழுப்பி விட்டேன் இனி தூங்க வேணாம் உட்கார்ந்து இரு" என்றார் அவன் தலையை ஆட்டி விட்டு ஒரு மூலையில் சாய்ந்து உட்கார்ந்து கொள்ள...

"நல்லா நியாபகம் வச்சிக்கோ.. கண்டிஷன் மறக்க கூடாது ..ஸ்பெஷல் ஷூட்டர் டீம் எத்தனை நாள் காட்டுக்குள் இருந்தாலும் நீ கடைசி வரை கூட இருக்கணும். அவங்க காட்டின் எந்த மூலைக்கு அழைத்துக் கொண்டு போக சொல்கிறார்களோ அங்கே அழைத்துப் போய் வழி காட்ட வேண்டும் .. அவங்க சொல்ற சின்ன சின்ன வேலைகள் செய்து தர வேண்டும்  இதெல்லாம் சரியா செஞ்சி முடிச்சா தான் உனக்கு பேச பட்ட தொகை தர முடியும் புரிதா ? "

என்று கேட்டார்..

அவன் " சரி சார் பண்ணிடலாம் " என்றான் தனது பேஸ் குரலை வைத்து 

அதன் பின் அந்த அதிகாரிகள் இருவரும் அவனுக்கு கேட்காத படி நாற்காலியை நெருக்கி போட்டு  உட்கார்ந்து.....

"யோவ் இவனை நம்பலாமா.. இவனே T 82 கிட்ட அடி வாங்கி உயிர் தப்பி மரண பயதுல இருக்கிற பய இவனை போய் எதுகுய்யா கைடா தேர்ந்தெடுத்து அனுப்பி வச்சி இருக்காங்க...." 

"அந்த புலி கிட்ட தப்பிச்ச ஆளுங்கள்ல இவனும் ஒருத்தன் என்பதனால்தான் இவனைஅனுப்பி வச்சிருக்காங்க மத்தவங்களை விட இவனுக்கு அந்த புலியை பற்றி நல்லாவே தெரிந்திருக்கும் " 

"அதுகில்ல திரும்ப பயமில்லாம அந்த புலி இருக்கிற இடத்துக்கு வழி காட்ட இவன் போவானா அதான் சந்தேகமா இருக்கு " என்று கேட்க அதற்கு இரண்டாவது அதிகாரி.. இன்னும் கொஞ்சம் குரலை தாழ்த்தி கொண்டு...

" நீங்க வேற சார்... கஞ்சா அடிக்க காசு தரலை னு பெத்த அம்மா கழுத்தை அறுத்து கொலை பண்ணி இருக்கான். காசு கொடுத்தா என்ன வேணா பண்ணுவான்... " என்றார்.

" பாத்து சார்.. அவன் விஷயத்துல உஷாரா இருங்க.. அவன் கிட்ட பேசுன காசுலாம் சரியா கொடுத்திடுங்க நம்ம கழுத்தை எதுனா அறுத்துட போறான்...சரி சரி வண்டி வர சத்தம் எதுனா கேட்குதா பாருங்க.. "

இந்த இன்னொரு அதிகாரி இடத்தை விட்டு வெளியே வந்து கண்ணுக்கெட்டிய வரை தூரத்தில் பார்த்தார் அடிவாரத்தில் ஒரு ஜீப் வரும் ஒளி புள்ளி கண்ணுக்கு தெரிந்தது...

"சார் அதோ வந்துட்டாங்க இன்னும் 20 நிமிஷத்துல இங்க வந்துடுவாங்க " என்றார்..

அவர்கள் காத்திருந்தார்கள்............

அவர்கள் காத்திருக்கட்டும்...அந்த இடைவேளையில்  நாம் இந்த காட்டில் சில நாட்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் ஒன்றை  பார்த்து விட்டு வந்து விடலாம்.....

                 🔘     🔘      🔘     🔘    

அந்த காட்டில்....

சில நாட்களுக்கு முன் ஒரு நாள்.....

உச்சி வெயில் தரையை தொட முடியாத அளவிற்கு அந்த மரங்கள் அடர்த்தியாக இருந்தன. அந்த பழைய கால ஜீப் கஷ்ட பட்டு முக்கி சந்திரபாலா மலையை ஏறி காட்டுக்குள் நுழைந்து அந்த இடத்தை அடைந்த போது இன்ஜின் அநியாயத்துக்கு சூடாகி இருந்தது...

ஜீப்பில் 3 பேர் இருந்தார்கள் 3 பேரும் பார்க்க நல்ல காரியம் செய்பவர்களாய்  இல்லை.

"மாரி.. போதும்டா இங்கயே நிறுதிக்கோ.. " என்றான் கஜா.. 

அந்தக் கூட்டத்திற்கு அவன்தான் தலைவன் என்பதை அவன் உடல் மொழி சொன்னது. தலையில் சிகப்பு ரிப்பன் ஒன்றை கட்டி இருந்தான் கழுத்தில் வெள்ளி சங்கிலியில் புலி பல் தொங்கி கொண்டிருந்தது. முகத்தில் முரட்டு தனம் குடி இருந்தது. 

"முத்து ...அந்த கேனை தூக்கிகிட்டு  கீழே இறங்கு " என்று பின்னால் அமர்ந்து இருந்தவனை பார்த்து கட்டளை பிறப்பித்தான்.  ஒரு நீண்ட  ரைபிளை எடுத்து தோலில் மாட்டி கொண்டு இறங்கினான்.

முத்து அந்த 25 லிட்டர் கேனை கொஞ்சம் கஷ்ட பட்டு இறக்கி வைத்தான்.

"உஷாரா பண்ணனும்.. டா.. எந்தப் பக்கத்திலிருந்து கொளுத்தனும் னு பார்த்து சரியா கொளுத்தனும். கொளுதிட்டு உடனே ஜீப் ல ஏறி ஓடிடனும் ...கொஞ்சம் தப்பாச்சுனா கூட தீயில்  நாம சிக்கிடுவோம்.."

"அதெல்லாம் தீயா பண்ணிடலாம் னே...கொளுதறது நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே " என்றான் மாரி.

"இவ்ளோ பச்சை மரமா இருக்கே எப்படினே எரியும் " என்றான் பெட்ரோல் கேனை தூக்கி வந்து கொண்டிருந்த முத்து.

"காட்டுல காட்டு தீயின் போது  எரியறதுக்கு மரம் மட்டும் காரணம் இல்லைடா மர மண்டை.. காட்டுல இருக்கிற அபரிமிதமான ஆக்சிஜன். அதான் காட்டு தீ எரிய முக்கிய காரணம் ." என்றான் கஜா சைன்டிஸ்ட் போல.

இப்போது மாரி  "ஆனா அன்னே எனக்கொரு சின்ன சந்தேகம்..." என இழுத்தான்.

நடந்து வரும் போது அவன் முகத்தில் ஏதோ பட கூடாத செடி பட்டு உரசி முகத்தில் வீக்கம் உண்டாகி இருந்தது.

"உனக்கு என்ன டா சந்தேகம்...?"

"வந்து..நம்ம தலைவர் எதுக்கு இப்போ சம்பந்தம் இல்லாம காட்டை கொளுத்த சொல்லி இருக்காரு ? நாட்ல காஸ் விலை பெட்ரோல் விலை ஏறி போயிடுச்சு பஸ் கட்டணம் ஏத்திட்டாங்க னு மக்கள் போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க சாலைமறியல் பண்றாங்க அதனால் தான் காட்டை கொளுத்த போறோம் னு வர வழி ல சொல்லிட்டு வந்தீங்க அதுக்கு எதுக்கு தலைவர் காட்டை கொளுத்த சொல்றார் அதுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ஒன்னும் புரியலையே.." என்றான் முக வீக்கத்தை சொரிந்து கொண்டே 

" ஹ.. ஹ .. ஹ ... " அதை கேட்டு நாய் இளைப்பாறுவது போல ஒரு சத்தத்தில் சிரித்தான் கஜா அவன் நெஞ்சுப் பகுதியில் இருந்த புலிபல் செயின் கடகடவென ஆடியது.

" சொல்றேன் கேளு.. இப்ப முகத்துல அலர்ஜியாகி மூஞ்ச சொறிஞ்சுகிட்டு வரல்ல.... " 

"ஆமாம் னே.. தாங்க முடியாம அறிக்குது..."

"ம்..இப்ப இந்த நேரத்துல உன் காலுல ஒரு பாம்பு கொத்துது னு வை.. நீ முகத்தை சொறிவியா இல்ல காலை கவனிப்பியா..." 

"அய்யோ உடனே பாம்பு கடி ய தான் கவனிப்பேன்..."

"அப்போ உனக்கு முகம் மறந்து போகும் கால் தான் நியாபகத்துல இருக்கும் .. அது மாதிரி தான் இதும்.. இந்த காட்டுல எல்லை பகுதியில் சில ஆதிவாசிகள் குடி இருக்காங்க..அதுல பல பேர் இப்போ காட்டுக்குள்ள தான் சுத்திட்டு இருப்பாங்க.. இப்போ தீ வச்சேன்னு வை... அவங்கள குறைஞ்சது ஒரு 8..10 பேராவது கருகி சாவாங்க.. நாளைக்கு நியூஸ் பூரா இதான் கொட்டி கிடக்கும்.. சமூக வலைத்தளத்துல மக்கள் இதை தான் பேசிட்டு இருப்பாங்க  தலைவர் தீ அணைக்க ஹெலிகாப்டர் லாம் அனுப்ப பிளான் பண்ணி இருக்கார்.. ஒரு 3..4 பேரை தீயில் இருந்து காப்பாற்றுவார். நியூஸ் ல மீடியால தலைவர் பணியை பாராடுவாங்க ..அப்படி பாராட்ட சொல்லி தனியா செலவு பண்ணுவார் தலைவர். அதை பார்த்து இப்போ எதிரா போராட்டம் பண்ணிட்டு இருக்கிற மக்கள் கூட சேர்ந்து பாராட்டுவாங்க.. விலை வாசி பிரச்னை எல்லாம் மறந்தே போவாங்க... " 

" ஓ.. பயங்கர மூளை னே நம்ம தலைவருக்கு..." 

" அதான் அதனால் தான் அவர் தலைவர்.. அதான் அரசியல்... இதெல்லாம் மரம் வெட்டுர மரமண்டை உண்ண மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் புரியாது... சரி சரி.. அந்த பெட்ரோலை நான் சொல்ற இடத்துல ஊத்துங்க.. சீக்கிரம்.. "

அதன் பின் அவர்கள் பரபரப்பு ஆனார்கள் பெட்ரோலை தூக்கி சுத்தி இருக்கும் மரம் செடியில் புதரில் ஊற்றினார்கள்.. அந்த இடத்தில் பெட்ரோல் வாசம் குப்பென வீசி பூச்சிகளை குழப்பம் அடைய வைத்தது..

கஜா தன் பாக்கெட்டில் இருந்த தீ பெட்டியை எடுத்து.. குச்சியை கையில் எடுத்தான்.. அதை உரச போன அந்த அந்த கடைசி வினாடி தான்.....

அந்த சத்தம் கேட்டது.... 

" என்ன சத்தம் யா அது விசித்திரமா இருக்கு... " 

அங்கே அடர்ந்து இருந்த ஒரு புதருக்கு பின்னாடி இருந்து அந்த சத்தம் வந்தது கூடவே புதர் ஆடும் சலனம் தெரிந்தது..

கஜா உடனே உசாராகி தன் ரைபிளை எடுத்து பிடித்தான். 

"அன்னே எண்ணனே அது... " 

"ஒன்னும் பயப்பட தேவை இல்லை.. அது ஒரு சிங்கமோ புலியோ இருக்கலாம்.. "

"எண்ணனே அசால்டா சொல்றீங்க..." அந்த இருவர் விழி விரிக்க .

" யானையே வந்தாலும் அசால்ட் பண்ற சக்தி என் கையில இருக்குன்றதால தான் அசால்டா சொல்றேன் பாயிண்ட் 375 மேக்னம்.. ஹாலந்து தயாரிப்பு தலைவர் ஆசையா கொடுத்தது... வரட்டும் எது வந்தாலும்.. நாங்க பாக்காத புலி சிங்கமா..."

அவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக புதரையே பார்த்து கொண்டிருக்க...

கொஞ்சம் கொஞ்சமாக புதருக்கு பின்னாடி இருந்து அது வெளியே வந்தது.... 

புலி, சிங்கம், யானை என வெறும் மிருகத்தை எதிர் பார்த்த அவர்கள் கண்கள் ஆச்சர்யத்தில் அகல விரிந்தது.. கஜா கணநேரம் காணும் காட்சியை நம்ப முடியாமல் உறைந்தான்.  பின்னால் இருந்த இருவரும்.." எண்ணயா இது...." என விரிந்த விழிகளோடு கேட்டு கொண்டார்கள்.

அங்கே.....................

                      ✴️    ✴️    ✴️    ✴️

"உயிர் வேட்டை "

(அத்தியாயம் 2. )

"இன்னும் அரை மணி நேரத்துல அவங்க சொன்ன டெண்ட்க்கு போயிடலாம் சார்..இதோ நெருங்கிட்டோம் "

இருட்டை கிழித்து கொண்டு அந்த சந்திரபாலா மலை காட்டு பகுதியில் அந்த ஜீப் முன்னேறி கொண்டிருந்தது.

ஜீப்பில் 4 பேர் இருந்தார்கள். ஜீப் நிறைய பைகளும்.. வித விதமான ரைபில்களும் சில அட்வான்ஸ் கருவிகளும் கேமராகளும்  வைத்திருந்தார்கள் .

"ஹ்ம்ம் புலி வேட்டை.  ஹா ஹா.. எப்போ அந்த T82 வை நேருக்கு நேர் பாக்க போறேன் இந்த ட்ரிகரை  இழுக்க போறேன் னு கை பர பர னு இருக்கு ..." என்று தன் மீசையை தடவி கொண்டார் ராஜ சேகர்.. அந்த சிறப்பு டீம் தலைவர்.

அஜானுபாகுவாக WWE இல் இருந்து தப்பி வந்தவர் போல் இருந்தார். முகத்தில் மீசையை வளர்க்க உரம் போடுவாரோ என சந்தேகிக்க வைத்தது.

" ஒரு உயிரை என் கையால எடுத்து எவளோ நாள் ஆகுது...கடைசியா ராணுவத்தில் இருந்த போது மேலதிகாரியோட வேலைக்காரனை கொன்னது... அதுக்கப்புறம் நேரடியா கையால கொல்றதுக்கு வாய்ப்பு கிடைக்கல ஏதும். எல்லாம் உங்களை வச்சி பண்ணிடறேன் இப்போ."

"அவனை எதுக்கு சார் கொன்னிங்க..." 

என்று கேட்டான் ஜீப் ஓட்டி கொண்டிருந்த பிரதீப். 

"அந்த மேலதிகாரி மனைவி கூட நான் செஸ் கேம் விளையாடி கொண்டிருந்தேன் அதை பாத்துடான் ..அதான் கொன்னு அடையாளம் தெரியாத புதைச்சிட்டேன்..." ராஜ சேகர் தன் அடர்ந்த மீசையை தடவி கொண்டார்

ராணுவ வீரர்கள் இருவகை ..அதில் பெரும்பான்மை உயிரை கொடுக்க ஆசை கொண்டவர்கள். ஆனால் சில புல்லுருவிகள் உயிரை எடுக்க வெறி கொண்டவர்கள் . அவர்களுக்கு நாட்டு பற்று எல்லாம் இல்லை கொலை வெறிக்கு ஒரு வடிகால் தேவை . இந்த ராஜசேகர் அந்த இரண்டாம் ரகம்.

"என்ன சார் செஸ் கேம் விளையாடரதை பாத்தது என்ன அவ்வளவு பெரிய குற்றமா..." என்று கேட்டான் பின்னால் அமர்ந்து இருந்த யோகேஷ்.

" ஹா ஹா..நான் நடுவுல' க் ' வச்சி இல்ல விளையாடிட்டு இருந்தேன்..." 

அந்த 4 பேரும் சத்தம் போட்டு சிரித்தார்கள்.

ராஜசேகர் ராணுவத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பட்டு வெளியேற்ற பட்டவர். வெளியே வந்து கொஞ்ச நாள் ஏதேதோ வேலை செய்து பார்த்தார் அவருக்குள் இருக்கும் கொலை வெறிக்கு ஏதும் தீனி போடுவதாய் இல்லை.' பிறரிடம் கை கட்டி வேலை செய்வதை விட நாம் நான்கு பேருக்கு வேலை  கொடுக்க வேண்டும் ' என முடிவு செய்தார்.

3 பேருக்கு வேலை கொடுத்தார்.... அடியாள் வேலை. 

பெரும் பணக்காரர்கள் அரசியல் வாதிகளுடன் தொடர்பு வைத்து கொண்டார் . அவர்கள் சொல்லும் ஆளை தீர்த்து கட்டுவது தான் வேலை .தனக்கு ஒரு டீமை உண்டு பண்ணி கொண்டார்.

பிரதீப்,யோகேஷ், சுஜித் தன்னை போலவே கொலை வெறி ஆர்வம் கொண்டவர்கள்... இளைஞர்கள். அவர்களை வைத்து சிட்டியில் பல உயிர்களை உருவி கொண்டிருந்த போது தான் 'தலைவர் ' கிட்ட இருந்து அந்த அழைப்பு வந்து இருந்தது.

" நம்ம பையன் பா..கஜா னு .. காட்டுக்குள்ள ஒரு வேலையா அனுப்பி இருந்தேன் அவன் டீமோட போனான்.இன்னும் திரும்பி வரல சொன்ன வேலையும் நடகல... அங்கே ஏதோ ஆட்கொல்லி புலி ஒன்னு நடமாடுதாம்.. T 24 ஓ என்னமோ பெயர் சொன்னாங்க..அதை வேட்டையாட சிறப்பு டீம் கேட்டு இருந்தாங்க. இது ஒரு ரகசிய ஆபரேஷன். வெளி உலகத்துக்கு மீடியாவுக்கு நாங்க வேற ஒரு டீமை வச்சி புலியை உயிரோடு பிடிக்க தேடிக்கிட்டு போற மாதிரி பாவ்லா பண்ணுவோம். 

ஊடகத்துல அந்த டீமை பத்தி தான் காட்டுவாங்க .. இன்னும் தேடிட்டே இருக்கோம் னு சொல்வோம். ஆனா உன் டீம் அந்த புலியை ரகசியமா கொன்னு காலி பண்ணிடுங்க... அது மத்த மிருகத்துடன் சண்டை போட்டு தானா செத்து போச்சு னு நாங்க கணக்கு காட்டிக்குவோம். 

 இருக்கிற அரசியல் தலைவலி பத்தாது னு இந்த புலி ஒரு பக்கம் ....ஆளுங்களை கொன்னு பெரும் தலைவலி பண்ணிக்கிட்டு இருக்கு. தினம் தினம் ஆளுங்களுக்கு பதில் சொல்ல முடியல.

அவங்களுக்கு நான் உன் டீமை அனுபறதா சொல்லி இருக்கேன். ப்ரோசிஜர் லாம் நான் பாத்துக்கறேன்.. நான் சொல்ற அதிகாரிகளை போய் பாரு.. அந்த புலியை  தேடும் போது கஜாவையும் தேடி கண்டு பிடி அவன் என்ன ஆனான் எங்க இருக்கான் னு எனக்கு தகவல் கொடு முடிச்சிட்டு வந்து உன் பேமண்ட் வாங்கிக்கோ.. "

" மனிதர்களை கொல்லும் நமக்கு இந்த T 82 எம்மாத்திரம்.. அந்த புலியா இந்த ராஜசேகர் என்கிற சிங்கமா னு பாத்துடலாம்.. "

அந்த கூட்டத்தில் இளையவனாக இருந்த சுஜித் கொஞ்சம் சிகபாய் அழகாய் இருந்தான்.இப்போது ஜீப்பில் இருந்து எட்டி பார்த்து...

'' சார் அதோ வெளிச்சம் கண்ணுக்கு தெரியுது ..பாருங்க டெண்ட் அங்க இருக்கு "என்றான்.

பிரதீப் ஜீப் ஹாரனை பாங்..என அடித்து தன் வரவை தெரிவித்தான்.

               🔘    🔘    🔘    🔘

"பாங்....."

ஒலியை கேட்டு அந்த அதிகாரி டென்டை விட்டு எட்டி பார்த்தார்..

"சார் அதோ அவங்க வந்துட்டாங்க.. " மணி இரவு 12.30 ஆகி இருந்தது.

ஜீப் நெருங்க நெருங்க இருவரும் வெளியே வந்து வரவேற்றார்கள்.

ஜீப்பில் இருந்து கீழே குதித்த நால்வரும் கைகளை உதறிக் கொண்டு சோம்பல் முறித்தார்கள்.

அவர்கள் டெண்டுக்குள் நுழைந்து ஒரு மேஜையை சுற்றி அமர்ந்தார்கள். அவசர அவசரமாக 10 நிமிடம் திட்டத்தை விவரித்தார்கள் அந்த அதிகாரிகள். பின் ஒரு மேப்பை விரித்தார்கள்

"இந்தாங்க சார் இதான் மேப்.இதை தவிர ஒரு உயிருள்ள மேப்பை உங்க கிட்ட ஒப்படைக்க உத்தரவு...டேய் இங்க வாடா..."

அவர்கள் உள்ளே திரும்பி குரல் கொடுக்க அந்த குடிகார முரடன் வெளியே வந்தான்.

"உங்க கைடு...இந்த காட்டை பற்றி நல்லா தெரிஞ்ச காட்டு வாசி...மேலும் இவனுக்கு அந்த புலியை இவன் கையால கொல்லனும் னு ஆசையாம்..ஹா ஹா இவனை யூஸ் பண்ணிகொங்க.. பய அந்த ஒத்த பல் புலி கிட்ட அடி பட்டு தப்பிச்சி வந்தவன்."

அந்த இரண்டாம் அதிகாரி இடைமறித்து.".இன்னோரு ஒற்றுமையும் இருக்கு சார் புலிக்கும் இவனுக்கும் ..அதை சொல்ல மறந்துட்டோமே. டேய் வாயை திறந்து காட்டுடா..." என்றார்

அவன் சற்று தயங்கி விட்டு வாயை திறந்தான் ராஜசேகர் அவன் முகத்தில் வசதியாக டார்ச்சை அடித்து பார்த்தார். அவனுக்கு வலது பக்கம் ஒரு பல் மிஸ் ஆகி இருந்தது. 

'' அந்த புலி இவனை அடிச்சி இவனையும் தன்னை மாதிரியே மாத்திடிச்சி..." அவர்கள் பாத்திர கடைக்குள் எலி புகந்த மாதிரி கல கல வென சிரித்தார்கள். அந்த முரடன் சற்றே வெட்க பட்டவனாய் தலை குனிந்து கொண்டான்.

                   🔘  🔘  🔘  🔘

"இன்னும் எவ்வளவு தூரம் பா ஜீப் ல உள்ள போக முடியும் ....தம்பி உன் பெயர் என்ன சொன்ன ? " ராஜ சேகர் அந்த குடிகார கைடை பார்த்து கேட்டார்

மணி 2 ஐ தாண்டி கொண்டிருந்தது.

அவர்கள் ஜீப் இப்போது நீண்ட தூரம் காட்டுக்குள் பயண பட்டு இருந்தது. 

"யது அய்யா... " 

"என்னது எது ? நான் கேட்டது புரிலையா ? "

" நீங்க கேட்டதற்கு தான் பதில் சொன்னேன் யா.. என் பெயர் 'யது '

" முழு பெயரே 'யது ' தானா "

" ஆமாங்க ராமாயண பெயரோ மகாபாரத பெயரோனு சொல்லி வச்சாங்க...அம்மா "

" அம்மா என்ன பண்றாங்க.. "

" இருந்தாங்க இப்போ இல்ல .. "

" இல்லைனா என்ன அர்த்தம்.. "

"எனக்கு பிடிக்கல.." 

"எது உங்க அம்மா இருக்கிறதா..."

" இல்ல ..என்ன கேள்வி கேட்கறது.. ..

வந்து ...இந்த கேள்வி நீங்க கேட்கறீங்க இல்ல அது  பிடிக்கல னு சொன்னேன். அம்மா பத்தி வேணாம் வேற எதுனா கேளுங்க சொல்றேன்.. "

" வேற கேட்டேனே.. இன்னும் எவ்வளவு தூரம் ஜீப் ல போக முடியும்... னு..."

" ஒரு தொங்கும் பாலம் வரும் காட்டு நடு ல அதுக்கு பிறகு ஒரு 1கிமி போலாம் அவ்வளவு தான். அப்புறம் நாம எங்க போனாலும் நடந்து தான் போயாகனும்.. எப்படியும் விடியறதுக்குள்ள அந்த பாலத்தை அடைந்திடலாம்."

அந்த ஜீப் இப்போது ஒரு சரிவில் இறங்க தொடங்கி இருந்தது.... 

அவர்களை சுற்றி கானகம் தன் பயங்கர இருள் கரத்தை வைத்து அனைத்து இருந்தது . அந்த அபாயகரமான காட்டின் உள்ளே அந்த ஜீப் மெல்ல மெல்ல ஒரு மலை பாம்பின் வயிற்றில் செல்லும் முயலை போல காணாமல் போய் கொண்டு இருந்தது  அந்த காட்டில் இனி அவர்கள் சந்திக்க போகும் ஆபத்தை பற்றி அவர்கள் அப்போதைக்கு அறிந்திருக்க வில்லை.

                   🔘   🔘     🔘     🔘

மணி 3 ஐ தாண்டி கொண்டிருந்தது...

ஜீப்பில் அனைவரும் அவ்வபோது தற்காலிகமாக தூங்கி வழிந்து எழுந்து கொண்டிருந்தார்கள்..

சுஜித் அவர்களின் கொஞ்சம் இளையவனாக இருந்தவன் ... யதுவை நோக்கி..

" யோவ்  ..காட்டுக்குள்ள பொண்ணுங்க இருக்குமா "என்றான். 

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் வெளியே திரும்பி கொண்டான் யது .

ராஜசேகர் சத்தமாக சிரித்தார்...

மாப்பிளை கு இன்னும் கல்யாணம் ஆகல எங்க டீம் ல இன்னும் கல்யாணம் ஆகாத ஒரே ஆளு. அதான் எப்போ பாரு பொண்ணுங்க நினைப்பு... விட்டா இங்கேயே நல்ல காட்டுவாசி பொண்ணு ஒன்னு பாத்து இழுத்துட்டு போயிடுவான் " 

" மன்னிகனும் சார் எனக்கு கல்யாணத்துல ஆர்வம் இல்லை.. எனக்கு தினம் ஒரு கல்யாணத்துல தான் ஆர்வம்.." என்று சிரித்தான் சுஜித்

" அந்த பெங்களூர் பொண்ணை லவ் பண்றேன்னு சொன்னியே டா..."

" அது வழக்கமா எல்லா பொண்னுங்க கிட்டயும் சொல்றது தானே.. வழக்கம் போல முடிய வேண்டியது முடிஞ்சதும் டாடா காட்டிட்டேன். கடைசியா ஒரு ஷாப்பிங் மால் ல தூண் ல என் மேல சாஞ்சிட்டு மூக்கால அழுதாள் .நான் பப்ளிக்கா அவளை ஓங்கி ஒரு அறை விட்டேன். அன்னைக்கு அதிர்ச்சியானவ தான்.. அதுக்கு பிறகு  என் கிட்ட பேசவும் இல்ல என் வழிக்கு வரவும் இல்ல.."

அவர்கள் சிறந்த ஜோக்கை கேட்டது போல ரசித்து சிரித்தார்கள்..

"அடேய் யது தம்பி உனக்கு காதல் கீதல் இருக்கா "

" பிடிக்காதுங்க..."

"எது காதலா. "

." பொண்ணுங்க பிடிக்காதுங்க.. "

"அடேய் நீ ஆம்பள தானா. ..சரி இப்போ காட்டுக்குள் ஒரு அழகான பொண்ணு உன்னை காதலிக்க வற்புறுத்தரா னு வைய்யி என்ன பண்ணுவ..ம்ம்ம் ? "

" பிடிக்காதுன்னு சொன்னேன் இல்லைங்க அதனால வற்புறுத்தினா வெட்டி வீசிடுவேங்க..." 

" அடேய் எங்க 'கேங்'குக்கு ஏத்த கைடு தாண்டா நீ ..ஆமாம் அந்த தோல் பை ல என்ன வச்சி இருக்க...?" 

" கொஞ்சம் தழைங்க... அப்புறம் மூஞ்சியும் நகமும்...ங்க..புலி கிட்ட இருந்து தப்ப... "

" என்னது மூஞ்சியா அப்படினா...? " 

அப்போது...

" சார் அங்க பாருங்க..." என்றான் சுஜித்..

தூரத்தில் அவன் காட்டிய இடத்தில் வெகு தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது..தீயின் வெளிச்சம்..

"என்ன அது காட்டு தீயா...?"

" அது காட்டு தீ இல்லைங்க..காட்டு தீ னா இன்னும் பெரிசா இருக்கும்.. "

"அப்போ என்ன அது.."

'' சந்திரபாலா வழிபாடு... அதி காலைல தான் பண்ணுவாங்க அது ஒரு காட்டு சாமிங்க...புலி மேல ஏறி வந்து  காட்டை பாதுகாக்கிறதா சொல்லுவாங்க.. அது பெயர் ல தான் காடே இருக்கு ."

"இங்க மக்கள் எல்லாம் இருகாங்களா "

" அது தெரியர இடம் காட்டுக்கு ஓரசாரமான இடம் அங்கே மக்கள் குடியிருப்பு குட்டி கிராமங்கள் உண்டு.. நாம இப்போ போயிட்டு இருக்கிற பாதையில் தான் இனி மக்களை பார்க்க முடியாது..இது மனிதர்கள் வராத பகுதி காரணம் இங்க மிருக நடமாட்டம் அதிகம். இனிமே நாம ரொம்ப உஷாரா இருகணுங்க..."

அவர்கள் ஜீப் மெல்ல காட்டுக்குள்ள மிக அடர்த்தியான இடத்துக்கு போய் கொண்டிருந்த போது...

                 🔘   🔘     🔘     🔘

அந்த ஜீப் நகர்ந்து கொண்டிருந்த இடத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தாண்டி......

அந்த தீயை சுற்றி அந்த காட்டுவாசிகள் உட்கார்ந்து இருந்தார்கள். சுற்றி பூஜை பொருட்கள் கடை விரிக்க பட்டு இருந்தது. நடுவே அதிக பொட்டுகள் வைத்திருந்த கையில் கயிறு கட்டி இருந்த கழுத்தில்  நிறைய மாலைகள் போட்டிருந்த அந்த நபர் தான் பூசாரியாக இருக்க வேண்டும். அவர்கள் ஒரு  பாறையின் முன்னால் அமர்ந்து இருந்தார்கள்.

" தீய சக்தி எதுவும் இந்த காட்டுக்குள்ள நுழையாம நீ தான்ம்மா ஆத்தா பாத்துக்கணும்."  என்று பூசாரி வாய் முணுமுணுத்தது.

                      🔸 🔸 🔸 🔸

" உள்ள நுழைஞ்சிட்டோம்.. காட்டுக்குள்ள வந்துட்டோம்.... அதோ தூரத்தில் தொங்கும் பாலம் தெரியுது பாருங்க " என்றான் யது அங்கே ஜீப்பில்..

                     🔸 🔸 🔸 🔸

அந்த மக்கள் பூஜையை தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அந்த பூசாரி  அமர்ந்து இருந்த இடத்திற்கு முன் இருந்த பாறையில் வரிசையாக சில ஓவியங்கள் வரைய பட்டு இருந்தன. உற்று பார்த்தால் அவைகள் ஓவியம் அல்ல பாறையில் அப்படியே செதுக்க பட்ட முப்பரிமாண ஓவியம் என்பது புரியும். அப்படி வரிசையாக 7 ஓவிய சிலைகள் இருந்தன . இவர்கள் அதற்கு தான் ஒவ்வொன்றாக பூஜை போட்டு கொண்டிருந்தார்கள். முதலில் முதல் 3 படத்திற்கு பூஜை போட்டார்கள். 

விளக்கு எரியும் தட்டு ஒன்றை ஒவ்வொரு ஓவியமாக காட்டினார் பூசாரி.

முதல் படத்தில் அந்த பெண் தெய்வம் தனி ஆளாக காட்சி கொடுத்தது. கொஞ்சம் உக்கரமான தெய்வம் என பார்த்ததும் புரிந்தது. 

2 ஆவது படத்தில் அந்த தெய்வத்தின் அருகில் ஒரு புலி இருந்தது. 

3 ஆவது படத்தில் அந்த பெண் தெய்வம் புலியின் மேல் அமர்ந்து இருந்தது. அந்த மூன்றாவது படத்தில் புலியின் முகம் மிக தெளிவாக செதுக்க பட்டிருப்பது தெரிந்தது.விளக்கு வெளிச்சத்தில் அந்த புலியின் முகம் இப்போது இன்னும் தெளிவாக தெரிந்தது.

அந்த புலிக்கு .........

ஒரு பல் தான் இருந்தது. 

பூசாரி அடுத்த 4 படங்களை நோக்கி நகர்ந்தார்.

                    ✴️     ✴️    ✴️    ✴️

"உயிர் வேட்டை "

(அத்தியாயம் 3 )

அந்த காட்டில்....

சில நாட்களுக்கு முன் ஒரு நாள்.....

" டேய் பயமா இருக்குடா.. இங்கலாம் நான் இது மாதிரி வந்ததே இல்ல..." 

அகல்யா அழகாக சிணுங்க..

அந்த சிகப்பு நிற R15 பைக்கை மெதுவாக ஓட்டி கொண்டு இருந்தான் விக்னேஷ்.. 

" நான் மட்டும் என்ன அடிகடி காட்டுக்கு டூர் வரனா என்ன... அங்க உன் காலேஜ் பக்கத்துல வந்தா தான் சரியா பேச கூட நேரம் ஒதுக்க மாட்டேன்ற உன் ஹாஸ்டல் பக்கம் வந்தா அய்யோ யாராவது பாத்துடுவாங்கன்ற....இப்படி எங்கனா காட்டுக்குள்ள கூட்டி வந்து பேசினா தான் டி உண்டு.. " 

வழியில் ஒரு கல் மேல் இன்னோரு கல் அடுக்க பட்டு அதற்கு பூஜை செய்து இருந்தார்கள். அது புலி மேல் அமர்ந்த வனதேவதையை குறிக்கும் கல். காட்டுகுள் இது போன்ற கல் நிறைய பார்க்கலாம். அதை பார்த்து அகல்யா கன்னத்தில் போட்டு கொண்டாள்

" சொன்னா கேளு டா திரும்பி போயிடலாம்... எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை..ஏதோ மூவி போலாம் னு கூப்பிட்டயே னு தான் வந்தேன் நீ திடீர்னு பைக்கை காட்டுக்குள்ள ஒட்டிக்கிட்டு வர.... "

" அப்படி கூப்பிட்டா தானே நீ வருவ..அகல்யா மை டார்லிங் உள்ள உன்னை போலவே அழகான இடம் ஒன்னு இருக்கு. ஒரு இடத்தில் 1000 பூக்கள் கலர் கலரா ஒண்ணா பூத்து இருக்கு நான் அப்படி ஒரு காட்சியை இது வரை பார்த்ததே இல்லை..அதை பாத்த உடன் உன் நியாபகம் தான் வந்துச்சி..அதை காட்ட தான் கூட்டி வந்தேன் . உன்னை மாதிரி வன தேவதையை கூட்டி செல்ல வனம் தான் செல்லம் ஏற்ற இடம்.."

" வாவ் நீ சொல்றது எக்ஸைடிங் ஆ தான் இருக்கு ..எங்க டா இருக்கு அந்த இடம்...ஆனாலும் கொஞ்சம் பயமா தான் இருக்கு..." என்றாள் கலவையாக.

" நெருங்கிட்டோம்.அதோ அந்த சின்ன பள்ளம் மாதிரி இடத்துல செடிகள் மண்டி கிடக்கு பாரு அங்க தான் வா வந்து நீயே அந்த கொள்கை அழகை பாரு... " 

கொஞ்சம் தூரம் சென்றபின் விக்னேஷ் தன் பைக்கை நிறுத்திவிட்டு ஸ்டாண்ட் போட்டான். 

"வா " என அகல்யா தோளில் கையைப் போட்டு அழைத்து சென்றான். அந்த பள்ளமான பகுதியை நெருங்கி...

இங்க வந்து பாரு அகல்யா அந்த அழகை...என்று சுட்டி காட்டினான்.

அகல்யா அருகில் வந்து கீழே பார்த்தாள். எங்கே அவன் சொல்வது போல பூக்கள் ஒன்றும் அங்கே இல்லையே என்று அவள் மெலிதாக ஆச்சரியப் பட்டுக் கொண்டிருக்கும் பொழுது விக்னேஷ் அவள் முதுகில் கையை வைத்து சடாரென அந்த சின்ன பள்ளத்தில் தள்ளி விட்டான். 

"டேய் என்னடா இப்படி பண்ற "என்று புரியாமல் அகல்யா அழுக்கு பட்ட உடையில் எழுந்து நிற்க...

விக்னேஷ் சிரித்த படி உள்ளே குதித்து இறங்கினான். 

"செம தமாஷ் "என்றான். 

வாயில் விரலை வைத்து க்விக்... என வேகமாக விசிலை அடித்தான்.

எங்கேயிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் நான்கு இளைஞர்கள் மறைவிடத்திலிருந்து வெளிப்பட்டு எட்டிப் பார்த்தார்கள்.

அகல்யா குழப்பத்தின் உச்சிக்கு சென்று "டேய் விக்னேஷ் யாருடா இவங்க எல்லாம் ?என்னடா என்ன இங்க கூட்டி வந்து இப்டிலாம் பண்ற..  எனக்கு பயமா இருக்கு டா "  என்றாள்..உடைந்த குரலில்.அந்த பெண்ணின் கண்கள் பயந்த மானை போல இருந்தன .

" ச்சி வாயை மூடு.. இப்போ என்ன பண்ணிட்டாங்க பயமா இருக்குன்ற உன்ன என்ன கொலையா பண்ணிட்டோம்... இவங்க எல்லாம் என் நண்பர்கள் எதையும் ஷேர் பண்ணிக்கிற நண்பர்கள்..கொஞ்சம் ஒரு ஒரு மணி நேரம் நாங்க சொல்ற மாதிரி கேட்டு கம்முன்னு இருந்தா உண்ண ஒழுங்கா கூட்டி போய் விட்டுட போறேன். .. புரியுதா... " என்றவன்..பின்னால் திரும்பி,

" மச்சி... செம தமாஷ் டா.. 1000 பூக்கள் னு சொன்னதும் பீஸு அதை நம்பிச்சி பாரு..ஹா ஹா ..மாமே... அதான் ஹைலைட்டே.. ங்கொக்காமக்கா.. சரியான சோப்ளாங்கி தேவாங்கு  இவ...இவளை வன தேவதைன்னு வர்னிச்சத்தும் வெட்க பட்டதை பார்க்கணுமே...அய்யோ ..அய்யோ. ஹா ஹா..." 

அகல்யாவுக்கு கணநேரத்தில் சூழ்நிலை புரிந்துபோனது தான் படுமோசமாக ஒரு அயோக்கியனிடம் ஏமாந்து இருப்பது பட்டவர்த்தனமாக அவளுக்கு உறைத்தது. 

அவர்கள் சிரித்து கொண்டு அவளை நெருங்கினார்கள்..

"அய்யோ கையெடுத்து கும்பிடரென் டா ப்ளீஸ் என்னை விட்டுட்டுடு.."

" டேய் என்னடா  பேசிட்டு இருக்க ..." என்று ஒருவன் பாய்ந்து.. அகல்யா உடையில் கையை வைத்து இழுக்க அவள் உடை முதுகு பக்கம்...டர்ரென கிழிந்து தொங்கி அவளது சிவந்த முதுகு சலவை கல் போல வெளி பட்டது .அதை பார்த்து அவர்கள் ஓநாய் போல சிரிதார்கள்.அவளுக்கு பயம் இன்னும் அதிகமானது.  கண்ணை மூடி வழியில் பார்த்த வனதேவதை சிலையை மனதுக்குள் நினைத்து கொண்டாள்.. ' தெய்வமே என்னை எப்படியாவது காப்பாற்று..' 

அவர்கள் அப்படியே கும்பலாக சேர்ந்து அகல்யா மேல் பாய்ந்தார்கள்........

சரியாக அந்த நேரம் தான்...அந்த ஒலி கேட்டது...புலி உறும்பும் ஒலி....

அவர்கள் அதிர்ச்சியில் நின்ற இடத்தில் உரைந்தார்கள்..

'காட்டின் இந்த பக்கத்தில் புலிகள் நடமாடுதா என்ன...'

மீண்டும் அந்த உறுமல் இப்பொழுது மிக பலமாக கேட்டது.

அவர்கள் மேலே எட்டி பார்த்த போது..அதிர்ச்சியில் இமைக்க மறுத்தார்கள்.

அங்கே ஒற்றை பல் உடன் ஒரு பெரிய சைஸ் புலி நின்றிருந்தது.

                    🔘   🔘   🔘   🔘

தொங்கும் பாலத்தை ஜீப் நெருங்கும் போது தூரே தொடுவானில் தெரிந்த ரத்த கறை போன்ற சிகப்பு கீற்று எது கிழக்கு என்பதை எடுத்து காட்டி கொண்டிருந்தது. சூரியன் இன்னும் நேரடியாக எட்டி பார்க்க வில்லை என்றாலும் ஒளிந்து இருந்து தனது பலகீனமான கிரணங்களை வீசி காட்டுக்கு மெல்லிய வெளிச்சத்தை கொடுத்து கொண்டிருந்தான்.

ஜீப் அந்த பாலம் அருகே வந்து நின்றது.

அந்த தொங்கும் பாலத்தின் கயிறுகள் காற்றில் கலைந்த ஷாம்பு போட்ட எண்ணெய் தடவாத கேசம் போல ஆங்காங்கே நீட்டி கொண்டு கயிறு பிசிறுகள் தொங்கி கொண்டிருக்க .பாலத்தின் மர பலகைகள் கிழவியின் பல்லை போல ஆங்காங்கே காணாமல் போய் இருந்தது. 

" இந்த பாலத்தை கடக்க முடியாது போல இருக்கே..." என்றான் யோகேஷ் 

" ஆம் இனி வண்டியை எடுப்பது ஆபத்து " என்று முன்மொழிந்தான் ட்ரைவர் சீட்டில் இருந்த பிரதீப். 

"ஜீப்பை இங்கேயே விட்டுட்டு போக முடியாது எப்படியாவது பாலத்தை கடந்து தான் ஆக வேண்டும் நான் சொல்ற மாதிரி பண்ணுங்க பிரதீப் தவிர எல்லோரும் கீழ இறங்கி நடங்கள் அவன் தனியா ஜீப்பில் வரட்டும்... "

 அவர்களுக்கும் அது சரி என பட இறங்கி நடந்தார்கள்...

"முடிஞ்சளவு ஆளுக்கு ஒரு பேக் எடுத்தது கொள்ளுங்கள்..."

அவர்கள் எடுத்து கொண்டார்கள்.

" ஜாக்கிரதை சில அட்வான்ஸ் கேமரா வாக்கி டாக்கி.. துப்பாக்கி னு எல்லாம் முக்கியமான பொருட்களா இருக்கு உள்ள .." 

அவர்கள் ஜாக்கிரதையாக ஒவ்வொரு ஆளாக கடந்தார்கள். பாலத்தின் பலகீன தன்மையால் பாலம் தள்ளாடி அவர்கள் நடையை 2 வயது குழந்தை போல மாற்றி இருந்தது. தத்தகா புத்தகா என நடந்து அனைவரும் கடந்த பின் பிரதீப் ஜீப்பை உசுப்பி பாலத்தில் நுழைந்தான். மிக மெதுவாக மெதுவாக கன கன கன என கணைத்த படி ஜீப் பாலத்தில் முன்னேறியது. பாதி தூரம் கடந்த நிலையில்.. க்ரீச்..... பின் பக்க கயிறு ஒன்று பாதியாக கிழிந்து தொங்க.. பாலம் சைடு ஸ்டான்ட் போட்ட பைக் போல ஒரு பக்கம் சாய்வது உணர முடிந்தது..

"பிரதீப் கமான் சீக்கிரம் பாலம் அறுந்து விழ போகுது..." 

அனைவரும் கூச்சலிட. பிரதீப் பதட்டமாக ஆக்சிலெக்டரை ஓங்கி மிதித்தான். ஜீப் திடீர் வேகம் எடுத்தது. அந்த வேகத்தில் பாலம் மேலும் தள்ளாட தொடங்க... பலகைகள் இப்போது பொல பொல வென நொறுங்கி விழ ஆரம்பித்து... .ஏதோ டோமினோ எபெக்ட் போல பலகைகள் வரிசையாக விழ தொடங்க.... பதறி போன பிரதீப் ஜீப்பை அவசர கதியில் விரட்டினான் .இப்போது கயிறு மிக சில இழைகளில் அபாயகரமாக தொங்கியது.. பிரதீப் பதட்டமாக ஜீப்பை ஆட்டி ஆட்டி ஓட்டி அபாய எல்லையை ஒரு வழியாக கடந்தான் .ஜீப் ஓடி கடந்து பாலத்தை விட்டு விலக சரியாக அந்த நேரத்தில் கயிறு படக்கென அறுந்தது. அந்த பாலம் அறுந்த பட்டம் போல ஸ்லோ மோஷனில் சரிந்து கீழே விழுந்தது. 

" அய்யோ என்ன சார் இப்படி சிக்கிட்டோம். இனி ஜீப்பை எடுத்து கொண்டு எப்படி திரும்ப போறது.." சுஜித் பதற...

"ஜீப் இருக்கும் போதே ரொம்ப கஷ்ட பட்டு வந்தோமே சார் " என்றான் பிரதீப்.

"அய்யோ காட்டுக்குள்ள வசமா சிக்கிட்டோமே "என்றான் யோகேஷ் .

"அய்யா நான் ஒன்னு சொல்லட்டுங்களா.. தப்பா நினைக்க கூடாது ..இது ஒரு சகுனம் சார் தீய சகுனம்...நாம வந்தது வன தேவதைக்கு பிடிக்கல னு நினைக்கிறேன். நம்மள இப்படியே திரும்ப போக சொல்லுது னு நினைக்கிறேன் சார்.."  என்றான் யது. கொஞ்சம் பதட்டமாக இருந்தான்.

அனைவர் பார்வையும் ராஜசேகர் பதிலை எதிர்நோக்கி இருந்தது..

"நாம திரும்ப போகணும்னு வன தேவதை விரும்புதா ஹா ஹா அப்படினா பாலத்தை ஏன் உடைச்சா வன தேவதை ..பாலம் இல்லாம போக முடியாது னு தெரியாதா உன் தேவதைக்கு... பாலத்துக்குள்ள என்டர் ஆகறதுக்கு முன்னாடி உடைஞ்சி இருந்தா ஓகே நீ சொல்றது அக்ஸப்ட் பண்ணலாம். " என்றான் ராஜ சேகர்.

" அப்படினா அய்யா.. இது ம் .. வந்து..வேற மாதிரி இருக்கும்...னு தோணுதுங்க..." என்றான் குரலில் கொஞ்சம் பயம் காட்டினான்.

.

"வேற மாதிரி னா..."

" தேவதை நம்மள வெளிய போக சொல்லல.... மாறா.. ஏதோ ஒரு சக்தி நாம காட்டை ...விட்டு ...இனி வெளியே போக கூடாதுனு விரும்புதோ னு தோணுது...." 

                  ✴️     ✴️    ✴️    ✴️

"உயிர் வேட்டை "

(அத்தியாயம் 4 )

பெண்கள் விடுதி அது...

"இன்னாடி லவ்வு கிவ்வுன்னு கொஞ்ச நாள் ஒரே உற்சாகமா இருந்த இப்போ என்னவோ நம்ம லெக்சுரர் கனகாவாட்டம் சொங்கி மாதிரி ஆயிட்ட.. என்ன ஆச்சு லவ்வு ஹோகையா வா..."

" வாயை மூடு ..அதான் ஆளு நல்லா இருக்கான் பைக் வச்சி இருக்கான் னு அப்போவே கண்ணு வச்சியே அதான் மண்ணா போச்சு..."

" என்ன ஆச்சுப்பா ஆளு சரி இல்லியா.."

" அவன் மனுஷனே இல்ல....ஏதோ கடவுள் தான் அவன் கிட்ட இருந்து என்னை காப்பாற்றியது.. வர வர மனுசங்க மிருகம் மாதிரி நடந்துக்குறாங்க , மிருகம் மனுஷன் மாதிரி நடந்துக்குதுங்க....ஒன்னுமே புரியல "

 என்று சொல்லிவிட்டு தன் மொபைலை தொட்டு கும்பிட்டாள் அகல்யா.

"என்ன டி ஆச்சு என்ன நடந்தது"

"விடு சொன்னா நம்ப மாட்ட " 

" மொபைல் ல என்ன டி இருக்கு அதை தொட்டு கும்பிடற... ." தோழி எட்டி பார்க்க..

" சாமி டி..நேர் ல போட்டோ எடுத்தேன்.."

"வாட்... என்னடி சொல்ற.." என்று தோழி மொபைலை பிடிங்கி பார்க்க..

அதில் ஒரு ஒற்றை பல் புலியின் புகைபடம் மிரட்டலாக இருந்தது..

                      🔘   🔘   🔘   🔘

''தேவதை நம்மள வெளிய போக சொல்லல.... மாறா காட்டை ...விட்டு ...இனி வெளியே போக கூடாதுனு விரும்புதோ னு தோணுது சார் " என்று யது சொன்னதும்..

" ஸட் அப் யூ அக்லி பிக்... " என்று திடீரென கத்தினார் ராஜசேகர்..

" யாரும் பேனிக் ஆக வேண்டிய அவசியம் இல்லை இது ஒரு தற்செயல் நிகழ்வு..மேலும் நாம எப்படியாவது தலைவருக்கு தகவல் கொடுத்தால் போதும் நம்மை இங்க இருந்து மீட்டு கொண்டு போக ஹெலிகாப்டரே அனுப்புவார்.. சோ நோ மோர் ஓர்ரிஸ் டீம் அண்ட் கோ அஹெட்... வந்த வேலைய பாருங்க பிரதீப் ஜீப்பை எடு போ..."

அதற்கு பின் அவர்கள் பேச வில்லை கையில் எடுத்து இருந்த பேக்குகளை மீண்டும் ஜீப்பில் ஏற்றி விட்டு ஜீப் கிளம்ப பார்க்க...

" அய்யா... " என்றான் மீண்டும் யது.

"என்ன..."

" காலை சாப்பாடை நீங்க இங்கேயே சாப்பிட்டு போறது நல்லது.. ஆற்றங்கரை உணவு கிடைக்க நல்ல இடம்ங்க... இதுக்கு மேல உள்ள போக போக உணவுக்கு நீங்க கஷ்டப்படனும்.. நாம மிருகங்களை வேட்டை யாடி ஆகணும் இல்ல பழங்களை சாப்பிட்டு ஆகணும் ரெண்டும் சீக்கிரம் கிடைக்காது.."

ராஜசேகருக்கு அது சரி என பட..

" மணி இப்போ 5.32 ஆகுது 4 மணி நேரம் உங்களுக்கு டைம் இங்கேயே நல்லா தூங்கி எழுந்துகொங்க அப்புறம் சாப்பிடுங்க.. அதற்கு பிறகு T 82 வேட்டை ஆரம்பம்.. க்விக்..." 

அவர்கள் ஜீப்பில் சில பேரும் கரை ஓர புல் வெளியில் சில பேருமாக படுத்து கொண்டார்கள். இரவு கண்விழித்து களைப்பும் பயணக் களைப்பும் அவர்களை உடனடியாக தூக்கத்திற்கு அழைத்துச் சென்றது. 9 மணி வாக்கில் அவர்கள் விழித்துக் கொண்டார்கள்.

"நீங்க நெருப்பு உண்டு பண்ணி காத்திருங்க சார் இதோ வரேன் " 

என்று சொல்லி சென்ற யது கொஞ்ச நேரத்தில் நிறைய மீன்களை பிடித்து வந்தான். அவர்கள் உடனடி உணவு தயாரித்து வயிறார உண்டார்கள்... சாப்பிட்டு முடித்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தார் ராஜசேகர்.

"யது நீ சாப்பிடல...? "

" நான் அதெல்லாம் சாப்பிடறது இல்ல அய்யா "

" சாப்பிடறது இல்லையா...அப்புறம் ? "

" எனக்கு இதான் சாப்பாடு..." என்று சொன்னவன் தனது தோல் பையை திறந்து அந்த தழைகளை எடுத்து வாயில் போட்டு மாடு போல மென்றான்.

" என்ன அது பசி எடுக்காத மாதிரி எதுனா மூலிகை சமாச்சாரமா..இங்க காட்டு பாப்போம்..." என வாங்கி பார்த்தவர்..." யோவ் கஞ்சா யா..." என்றார் சின்ன அதிர்ச்சியாக..

''உங்க சிகரெட்டை இங்க காட்டுங்க சார்''  என வாங்கிய யது அதில் உள்ள புகையிலையை மெல்ல தட்டி வெளியே கொட்டி விட்டு கஞ்சா தூளை நிறப்பினான். 

"இப்போ இழுத்து பாரு சார் உனக்கு நாள் பூரா பசியே எடுக்காது. "

ராஜசேகர் வாங்கி 4 இழு இழுத்து கண்கள் சொருகினார். பிரதீப் யோகேஷ் சுஜித் அதில் போட்டி போட்டு கொண்டு ஆளுக்கு 2 இழு இழுத்து  கிறங்கினார்கள்.

               சற்று நேரத்தில்... அதன்  பின் அவர்கள் ஜீப்பை கிளப்பி மீண்டும் காட்டுக்குள்ள நுழைய தொடங்கினார்கள்...

" இன்னும் கொஞ்ச தூரம் மட்டும் தான் சார் ஜீப் போகும் அதுக்கு அப்புறம் வர இடங்களுக்கு எல்லாம் எனக்கும் வழி தெரியாது. பாத்து பாத்து தான் போகணும். ஆமாம் அந்த புலிய எப்படி தேடி கண்டு பிடிப்பீங்க..."

" அதுக்கு எல்லாம் எங்க கிட்ட சில அட்வான்ஸ் கருவிகள் இருக்கு.. சரி கேக்கனும்னு நெனச்சேன் இந்த புலி எப்படி திடீர்னு ஆளுங்கள கொல்ர புலியா மாறிச்சி.. "

" எல்லாம் புலியும் ஆட்கொல்லி புலியா மாறறது இல்ல சார்... மூப்பு காரணமாகவோ அல்லது வேறு விலங்குகளுடன் சண்டையிட்டோ புலியின் பல் மற்றும் நகங்கள் உடைந்து போனால் அதனால் சாதாரணமான வேட்டையாட முடியாது அதனால அது எளிய விலங்குகளை வேட்டை யாட ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் தற்செயலாக மனிதனை வேட்டை யாட நேர்ந்தால்...பொதுவாக மனிதன் கறி புலிக்கு பிடிக்காது.. ஆனால் இந்த மாதிரி புலிக்கு மனித வேட்டை எளிமையானது. அதனால் அது மனித கறிக்கு பழக்க பட்டு விடுகிறது.அதுக்கு அப்புறம் மனிதர்களை தேடி தேடி வேட்டையாட ஆரம்பிக்கிறது.  வயசான புலி தானேன்னு நினைக்காதீங்க சார். வயசானாலும் புலிபுலி தான் .அதன் ஆக்ரோஷம் பயங்கரமாயிருக்கும். " என்றான் யது தன் முகத்தின் வடுக்களை தடவி கொண்டு.

அப்போது...

"ஜீப் இதுக்கு மேல உள்ள போகாது சார்..." என்றான் பிரதீப்.

அவர்கள் ஜீப்பை விட்டு கீழே இறங்கினார்கள் அதில் அவர்கள் வைத்திருந்த ரைபில்கள் மற்றும் பைகளை இறக்கி தோளில் மாட்டி கொண்டார்கள். காட்டுக்குள் அடி எடுத்து வைத்தார்கள்.

"சார் ஒரு நிமிஷம்... இனி நாம புலி நடமாடற அபாயகரமான இடத்துக்குள்ள நுழைய ஆரம்பிச்சிட்டோம். இனிமே நாம மூஞ்சி மாட்டிக்கிறது தான் நமக்கு பாதுகாப்பு..." என்றான் யது

" மூஞ்சி மாட்டிக்கணுமா அப்படினா....? "

யது பதில் சொல்லாமல் தனது தோல் பையை திறந்து அதில் இருந்து 'அதை' எடுத்தான். 

முகமூடிகள் ...மனிதனைப் போன்று முகத்தை கொண்டிருந்த முகமூடிகள்.

" இதை என்ன பண்ணனும் ?முகத்தில் போட்டுக்கனுமா.. ஏன் புலிக்கு நம்ம முகம் அடையாளம் தெரிஞ்சுட கூடாதா என்ன ? "

" அப்படி இல்ல சார் நாம காட்டுக்குள்ள நடந்து போகும் போது நமக்கே தெரியாமல் புலி நம்மள கண்காணிசிட்டு இருக்கும். உங்களால் அதை உணர கூட முடியாது புதரிலிருந்து பதுங்கி நம்மளையே அது பின்தொடரும். யார் கண்டா இப்போ கூட அது நம்மள எங்க இருந்தாவது ஒளிந்து பாத்துட்டு இருக்கலாம்.முதுகு காட்டி இருக்கற எந்த உயிரினத்தை பார்த்தாலும் புலிக்கு தாக்குவதற்கான உள்ளுணர்வு வேலை செய்யும். அதனால காட்டுக்குள்ள போகும்போது நாங்க இப்படி தலைக்கு பின்பக்கமா இந்த முகமூடிய மாட்டிக்குவோம். இப்ப பின்னாடி இருந்து புலி நம்மள பாத்துச்சினா நாம அதை உற்று பார்க்கறதா அது நினைச்சிக்கும் நம்ம மேல தாக்குதல் நடத்தாது.."

அவர்கள் கொஞ்சமாய் ஆச்சரியப்பட்டு ஆளுக்கு ஒரு முகமூடி எடுத்து தலைக்கு பின் பக்கமாக திருப்பி மாட்டி கொண்டார்கள். இப்போ பார்க்க இருமுகம் கொண்டவர்களாக விசித்திரமாக இருந்தார்கள். சலசலப்பை உண்டு பண்ணி கொண்டு முன்னேறினார்கள்.

அந்த காட்டிற்குள் மேற்கொண்டு நடப்பது மிக சிரமமாக இருந்தது. மரங்கள் வானைத் தொடும் அளவு உயரம் வளர்ந்து இருந்தது. எண்ணற்ற பெயர் தெரியாத பூச்சிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. சுத்தி பல விதமான பறவை  சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தது. அங்கே காடு தனது முழுமையான முரட்டுத்தனத்தை காட்டி கொண்டிருந்தது. 

" எதுக்கு அப்படி செடியை உடைச்சிட்டு போற " என்று கேட்டார் ராஜசேகர்.

யது தான் செல்லும் வழியில் செடிகளை உடைத்து அடையாள படுத்தி கொண்டு முன்னேறி கொண்டு இருந்தான்.

" காட்டுக்குள்ள போயிட்டா நீங்க வச்சிருக்கிற திசைகாட்டி எல்லாம் உதவாது சார் எந்த பக்கத்தில் இருந்து வந்தோம் எந்த பக்கம் போனோம் னே புரியாது நம்மள குழப்பி அடிச்சிடும்.  இப்படி செடியை உடைச்சிட்டு போனா தான் நாம வந்த வழியை நியாபகம் வச்சிக்க முடியும். "

" நாய் ஒண்ணுக்கு விட்டுட்டு போற மாதிரி எப்படி ஒரு சூப்பர் சமாச்சாரம் வச்சி இருக்கான் பாருயா..." என்று அவர்கள் சிரித்தார்கள்.

சில மணி நேரம் காட்டுக்குள் நடந்த பின்.. திடீரென யது...

"உஷார் இனி நாம எந்த கனத்திலும் புலியால் தாக்க படலாம் " என்றான்.

"எப்படி சொல்ற..."

" காரணம் அது நம்ம பக்கத்துல தான் எங்கேயோ இருக்கு.... " 

"வாட்..எப்படி சொல்ற...." ராஜ சேகர் அதிர்ந்து கேட்க...

யது கீழே தரையை காட்டினான்..

அங்கே ஒரு புலியின் கால் தடம் தெளிவாக மிக மிக சமீபத்தில் பதிந்து இருந்தது .

                   ✴️    ✴️    ✴️    ✴️

   "உயிர் வேட்டை"

   (அத்தியாயம் 5 ) 

அந்த காட்டின் வேறு ஒரு வெளி புற எல்லையில்.....

அந்த கும்பல் கூடி இருந்தது அதில் பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் இருந்தார்கள். யாரோ வருகைக்காக காத்திருந்தார்கள். 

அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த கார் சற்றைக்கெல்லாம் அங்கே வந்து நிற்க திடீரென இடம் கொஞ்சம் பரபரப்பானது. பத்திரிக்கையாளர்கள் அந்தத் 'தலைவரை ' சூழ்ந்து கொண்டார்கள்.

" சார் இந்த அதிகாரிகளை இப்போ காட்டுக்குள்ள அனுப்ப போறதா சொல்றாங்க.. அந்த புலியை இதுவரைக்கு உயிரோடு பிடிக்க முடியாத சூழ்நிலையில் இந்த டீம் அதை பிடித்து விடுவார்களா சார் "

தலைவர் மெல்ல சிரித்தார்...

" பலபேர் இப்போ புலி கொல்லக்கூடாதுன்னு போராட்டம் நடத்தி வருவது உங்களுக்குத் தெரியும்..

நான் அவர்கள் உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன். எனக்கு மக்கள் உணர்வுதான் முக்கியம் இந்த டீம் நிச்சயம் புலியை உயிருடன் பிடித்து கொண்டு வரும் நன்றி "  

" சார் ..சார்... அந்த செத்து போன 8 பேரு...."

" மன்னிகனும் இந்த டீமை வழி அனுப்பி வைக்க தான் நேரடியாக வந்தேன். உங்க கேள்விக்கு பதில் சொல்ல இப்போ நேரம் இல்லை சாரி...உங்க கிட்ட இருந்து அன்போடு விடை பெற்று கொள்கிறேன்..."

அந்த டீமை வழியனுப்பி வைத்து விட்டு காரில் ஏறிய போது உதவியாளர் கேட்டார்..

" தலைவரே சின்ன சந்தேகம்...புலி நடமாடுவதாக சொல்ற இடத்துக்கும் இந்த டீம் போய் இருக்கிற

இடத்துக்கும் சம்பந்தமே இல்லையே..."

" யோவ் என்ன பத்திரிக்கையாளர்களே கேட்காத கேள்வி எல்லாம் நீ என்ன கேக்குற எல்லாம் எங்களுக்கு தெரியும் வாயமூடிட்டு வாயா...."  என்றார்.

ராஜசேகர் டீம் இன்னேரம் புலியை கொன்றிருப்பார்களா என யோசிக்க தொடங்கினார்.

                  🔘   🔘   🔘   🔘

" இதோ நடுவுல கொஞ்சம் சமவெளி தெரியுது பாருங்க காட்டுல இது கிடைக்கிறது அபூர்வம்.. ஓய்வு எடுக்கணும்னா இது மாதிரி இடத்துல எடுக்கிறது நல்லது.." என்றான் யது. அவர்கள் இப்போது நீண்ட தூரம் காட்டுக்குள் ஊடுருவி இருந்தார்கள்.

புலி தடம் பார்த்ததில் இருந்து பயமும் எச்சரிக்கையும் பல மடங்கு அதிகரித்து இருந்தது.

" இன்னோரு விஷயம்..நீங்க ஒண்ணுக்கு ரெண்டுக்கு போனா மறக்காம பூனை கணக்கா அதை மண்ணை போட்டு மூடிடனும்..."

"அது எதுக்கு...?"

"பூனை எதுக்கு பண்ணுதோ அதுக்கு தான்... பூனை உள்ளுணர்வு அதன் கழிவை மறைக்க சொல்ல காரணம் எதிரிங்க கிட்ட இருந்து தப்ப தான். கழிவுகளில் இருந்து வரும் வாசனை நீண்ட தூரம் உள்ள விலங்குகளுக்கும் நமது இருப்பிடத்தை காட்டி விடும். "

" ஓ..ரைட்.. சரி  இன்னைக்கு இரவு நேரத்துல தங்க இங்கே டெண்ட் போட்டுக்கலாம். சரி இப்போ வேலைல இறங்கலாமா...?" என்றார் ராஜசேகர். தன் அடர்ந்த மீசையை தடவி கொண்டார்.

அவர்கள் தங்கள் பைகளை பர பரபாக இறக்கி வைத்தார்கள் அதில் இருந்து சில அட்வான்ஸ் மோஷன் சென்சார் கேமராக்கள்,பைனாகுலர்கள் ,வெளியே எடுத்தார்கள். 

" இங்க இருந்து குறைந்த பட்சம் 100 மீட்டர் சரவுண்டிங்கை நாம இரவுக்குள் கவர் பண்ணியாகனும். எங்கெங்க கேமரா வச்சோம்னு சரியா நியாபகம் வச்சி இருக்கணும் .. இன்று பகல் மற்றும் இரவு அந்த கேமராவில் பதிவான நடமாட்டங்களை நாளை காலை எடுத்து பாக்கணும். இப்படி ஒவ்வொரு இடமா கண்காணிச்சு முன்னேறனும்.அந்த புலி நமக்கு குறுக்கே வரும் வரை அல்லது நாம அதன் குறுக்கே செல்லும் வரை... எத்தனை நாள் ஆனாலும் இதை பண்ணனும். பேச பட்ட தொகையின் அளவு நியாபகத்துல இருக்கு இல்ல ... நாம பொதுவா பண்ற 5 பிராஜெக்ட்க்கு சமம்... முக்கிய கண்டிஷன் இனி உங்க கையில் இருந்து துப்பாக்கி எப்போதும் கீழ வைக்க கூடாது "

யோகேஷ் சுஜித் கேமராக்களை பையில் அள்ளி போட்டு கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் சென்றார்கள். 

" இங்கே எந்த செல்போனும் சிக்னல் எடுக்காது.. கையில் வாக்கி டாக்கி வச்சிக்கோங்க.." 

"பிரதீப் நீ பைனாகுலரை எடுத்துக்கோ அதோ அந்த உயரமான இடத்துல போய் அங்கே இருந்து கண்காணிச்சிட்டே இரு..சுத்தி முத்தி பாரு என்ன எல்லாம் தெரியுது னு சொல்லு .அப்புறம் எல்லா துப்பாக்கியும் தோட்டாவும் தரோவா செக் பண்ணி வை. புலிய பார்க்கும் போது யாருக்கும் எந்த குழப்பமோ பயமோ இருந்திட கூடாது. எல்லார் கிட்டயும் ஆளுக்கு ஒரு கை துப்பாக்கியும் எக்ஸ்டரா இருக்கட்டும் எப்போ வேணா உதவும்...ம் கிளம்பு.. "

அவர்கள் பரபரபாக இயங்கினார்கள்.

                      🔘    🔘   🔘    🔘

உச்சி வெயில் வானை தொட்ட போது....

அவர்கள் அந்த பாறையின் பின் ஒளிந்து இருந்தார்கள் . சத்தம் வெளியே வராத அளவு கவனமாக இருந்தார்கள். அதில் ராஜசேகர் மட்டும் முன்னால் முகம் எட்டி பார்த்தார் மெல்ல கையில் பிடித்து இருந்த AR -15 ரக ஹன்டிங் துப்பாக்கியை நீட்டினார்.

"அது அதோ அங்க....அங்க தான் இருக்கு சார்..."என கிசு கிசுதான் பிரதீப்..

" பார்த்துட்டு தான் இருக்கேன் வெயிட்.. சரியான ஷாட் க்கு காத்திருக்கேன்..." என்றார் ராஜசேகர்..

பார்வையால் அந்த புதரை உற்று பார்த்து கொண்டிருந்தார்.. சடாரென கழட்டி விட்ட ஸ்பிரிங் விசை போல அந்த புதருக்குள் இருந்து அது துள்ளி ஓடியது..

"சார் ஓடுது..ஓடுது...."

ராஜ சேகர் ரைப்பிளை அழுத்தி பிடித்து விசையை இழுத்தார்...

'டிஸ்காவ்ங்ங்ங்..... ' அது..அந்த காட்டில் 4 முறை எதிரொலித்தது .

ராஜசேகர் பாறையை விட்டு வேகமாக வெளியேறி ஓடினார். ஓடும் வழியில் கல் ஒன்று தடுக்க காலில் சடாரென ரத்தம் எட்டி பார்த்தது அதை பற்றி அவர் கண்டு கொள்ள வில்லை.

அவர்கள் ஓடி சென்று பார்த்தார்கள் 

'வாவ் ஜாக் பாட் எவ்ளோ பெரிய மான்  '

கொஞ்ச நேரத்தில் மான் நெருப்பில் சூடாகி கொண்டு இருந்தது  அவர்கள் அது வேக காத்திருந்தார்கள்...

யது அந்த மானை சுத்தி கைகளை தூக்கி கொண்டு மெலிதாக நடனம் ஆட தொடங்கி இருந்தான்.

"ஏய் எதுக்கு இப்போ டான்ஸ் ஆடற.."

" எங்க ஆதிவாசிங்க பழக்கம் சார்.. விருந்து கிடைச்சா டான்ஸ் ஆடுவோம்..."

" பிரதீப் அந்த பாறை மேல இருந்து பார்த்தியே ஏதாவது சொல்லி கொள்ளும் படி தெரிந்ததா. ?"

" ம்ஹூம் ஏதும் இல்லை சார்.. சுத்தி ஒரே மரங்கள் அதை தவிர எதுவும் கண்ணுக்கு தெரியல.."

" சரி நாளைக்கு ஒட்டக பாறையில் இருந்து கண்காணிச்சு பாரு.."

" ஒட்டக பாறையா அப்படினா . "

" அடையாளத்துக்கு தற்காலிகமாக நான் வெச்ச பேர்.. " 

ராஜசேகர் கொஞ்சம் தூரத்தில் வேறு ஒரு குன்று மாதிரி இருந்த ஒரு பாறையை காட்டினார்.

"அதோ அந்த குன்றை பாரு..பார்க்க எப்படி இருக்கு..."

" ஆமாம் கற்பனை பண்ணி பாத்தா ஒரு ஒட்டகம் படுத்து இருக்கிற மாதிரி தான் இருக்கு . "

"அதான் அந்த பெயரை வச்சேன் நாளைக்கு அது மேல ஏறி கண்காணிக்கலாம் "

சற்றைக்கெல்லாம் ......

 சுட பட்ட மான் கறியை பல் இடையில் கடித்து இழுத்தார் ராஜ சேகர்.

" செம டேஸ்ட் இதையாவது ஒரு வாய் சாப்பிட்டு பாரு...தம்பி.."

வாய் நிறைய தழையை மென்று கொண்டு மெதுவாக மறுத்தான் யது..

"ஏண்டா...டான்ஸ் எல்லாம் ஆடின...ஹ்ம்ம் நீ ஒரு விசித்திர ஜந்து...." என்று முணுமுணுத்தார். "சரி விடு ஒரு பங்கு மிச்சம்"

" சார் ஒன்னு சொல்லட்டா...." என்றான் ராஜ சேகர் காலில் உள்ள காயத்தை பார்த்த படி..

" என்ன..."

"காட்டுக்குள்ள காய பட கூடாது சார்..."

"ஏன் இந்த சின்ன காயம் என்ன பண்ணிடும்ன்ற.. "

"காயம் ஒண்னும் பண்ணாது சார் ஆனா..... ரத்த வாசனை சிலதை உசுப்பி விடும்.."

" என்ன... புலி நம்மள தேடி வந்துடும்ன்றியா ..ஹா ஹா அதுக்கு தானே வெயிட்டிங்..."

அன்றைக்கு இரவு அவர்கள் அந்த பயங்கர அதிர்ச்சியை சந்திக்க போகிறார்கள் என்பது அப்போது அவர்களுக்கு தெரியாது.

                    🔘    🔘   🔘    🔘

அன்றைக்கு இரவு .....

இருள் கவ்வும் போது. காட்டுக்குள் அது அவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. சுத்திகேட்ட சத்தமே பயத்தை கிளருவதாய் இருந்தது. சிக்னல் கிடைக்காத பழைய டிவி போல 'ட்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ' என்று ஆயிர கணக்கான பூச்சிகள் கோர்ஸ் பாட தொடங்கி இருந்தது. ஏதோ ஒரு ஆந்தை அவ்வபோது ஒரே சீரான இடைவெளியில் 'ஹுஹு ... ஹு ஹு...' என்று ஸ்பெஷல் எபெக்ட் கொடுத்தது.

காட்டின் அமைதியிலும் இருளிலும் பயங்கரம் குடி இருந்தது. நடு நடுவே கேட்ட ஓநாயில் ஓலம்....எலும்பை ஊடுருவுவதாய் இருந்தது.

நடுவே தெரிந்த கொஞ்ச சமவெளிப் பகுதியில் ஒரு தற்காலிக டென்ட் அமைத்து அதற்குள் படுத்து இருந்தார்கள்.

" சொன்னது ஞாபகம் இருக்குல்ல யாராவது ஒரு ஆள் எப்போதும் முழித்துக் கொண்டிருக்க வேண்டும் அவன் தூங்கச் செல்லும் போது அடுத்த ஆளை எழுப்பி விட்டு தூங்கச் செல்ல வேண்டும். இரவு முழுக்க இப்படி சுழற்சி முறையில் தான் தூங்க வேண்டும். " ராஜ சேகர் விவரித்தார்.

முதல் தவனையாக சுஜித் முழித்து இருந்தான். டெண்ட் கு வெளியே நெருப்பு எரிய ஏற்பாடு செய்து இருந்தார்கள்.அருகே ஒரு கல்லை போட்டு அதில் உட்கார்ந்து கையில் துப்பாக்கி உடன் காவல் இருந்தான்.உள்ளே ராஜசேகர், பிரதீப், யோகேஷ் ,யது  நான்கு பேரும் மெல்ல மெல்ல நித்திரைக்கு சென்று கொண்டு இருந்தார்கள். 

இரவு காட்டில் கணக்கற்ற பூச்ச்சிகள் ரீங்காரம் இட்டு கொண்டிருந்தது. தேய் பிறை நிலாவின் மிக சொற்ப வெளிச்சம் கஷ்ட பட்டு மரங்களை ஊடுருவி கொண்டிருந்தது. 

அப்போது...தலை மேல் ஏதோ ஒரு சலசலப்பு கேட்டது.

அண்ணாந்து பார்த்தான் சுஜித்.. மரத்தின் மேல் பார்த்தவன்

"ப்பா இந்த சைசில் கூட ஆந்தை இருக்கா..."  என முனுமுனுதான். 

இந்த வனாந்தரத்தில் தன்னந்தனியாக தான் மட்டும் விழித்துக் கொண்டிருப்பது அவனுக்கு புதிய அனுபவமாக இருந்தது

மணி இரவு..11.48..

தூக்கம் மெல்ல கண்ணை தொட உள்ளே சென்று..யோகேஸை எழுப்பி விட்டான்...

யோகேஷ் ஆதி சிவன் போல பாதி கண்ணை திறந்து " தூக்கமா இருக்கு..இன்னும் ஒரு 2மணி நேரம் நீயே பாரேன்..ப்ளீஸ்.." என்றான்.

" நோ..ரூல் னா ரூல் தான்.." என சொல்லி விட்டு படுத்து போர்வையை இழுத்து கொண்டான் சுஜித்.

யோகேஷ் வேண்டா வெறுப்பாக துப்பாக்கியை பிடுங்கிக் கொண்டு டென்ட்டுக்கு வெளியே வந்து உட்கார்ந்தான். கஞ்சா சிகரெட் ஒன்றை பற்ற வைத்தான்.

இந்த செய்கைகளை எல்லாம்......

கொஞ்சம் தள்ளி அந்த பெரிய  மரத்துக்கு பின்னால் இருந்து  ..அந்த ஒரு ஜோடி கண்கள் நோட்டம் இட்டு கொண்டு இருந்தன. அந்த கண்கள் ரத்த சிகப்பில் இருட்டில் ரத்தின கல் போல மின்னி கொண்டிருந்தது.

                   🔘   🔘   🔘   🔘

பாதி தூக்கத்தில் விழித்து விட்டு வந்து இருந்ததால் யோகேஷ்க்கு கொஞ்ச நேரத்தில் கண்கள் சொக்கி கொண்டு வந்து... அப்படியே மெல்ல சாய்ந்து கண்ணை மூடினான்.

டெண்டுக்குள்.....

தூக்கத்தில் தன் காலில் உள்ள காயத்தில் ஏதோ ஒரு உருவம் ரத்தத்தை உறிஞ்சி குடிப்பதாக ஒரு கனவு ராஜ சேகருக்கு...திடுக்கிட்டு விழித்து கொண்டார்.

ச்சை கனவு.. 

ஆனால் அவர் காலருகில் பார்த்த போது அதிர்த்தார்..  என்ன இது காயத்தில் இருந்து இவ்ளோ ரத்தம் போய் இருக்கு..

அப்போ தான் அதை கவனித்தார்..அரை குறை இருட்டில் அவர் காலில் அருகில் அமர்ந்து ரத்தத்தை குடித்து கொண்டு ஒரு பருந்து... உற்று பார்த்து போது தான் தெரிந்தது.. அது ஒரு பருந்து இல்லை பருந்து  சைஸ் ரத்தம் குடிக்கும் வவ்வால்... அதை அடிக்க பக்கத்தில் இருந்த ரைபில் ஐ எடுத்து ஓங்கிய போது தான் அதை கவனித்தார். 

அந்த ரத்த நிற கண்கள்...

இருட்டில் டெண்டுக்குள் நுழைந்து.. இவர்களை ஒரு கரிய உருவம் உற்று பார்த்து கொண்டிருந்தது. திடீரென டெண்டுக்குள் அந்த உருவத்தை பார்த்ததில் கடும் அதிர்ச்சி அடைந்தார்

ராஜசேகர். பதட்டமாக டார்ச்சை எடுத்து அடித்தார்....மூச்சு விட மறந்தார்.

அது ஒரு இளம் வயது கருஞ்சிறுத்தை.

ராஜசேகர் பதட்டமாக கத்தி கொண்டு வெளியே ஓட துப்பாக்கி தடுமாறி கீழே விழுந்தது. அந்த கறுஞ்சிறுத்தை அவரை மின்னல் வேகத்தில் ஓடி பிடித்து நிற்க வைத்தது. இப்போது டென்டில் அனைவரும் முழித்து கொள்ள அங்கே மரண பதட்டம் தொற்றி கொண்டது.

வெளியே இருந்து பெரிய மரத்தில் ராஜசேகர் ஆயுதம் இல்லாமல் முட்டி நிற்க அந்த விலங்கு அவரை காதலியை நெருங்கும் காதலன் போல மெல்ல  மெல்ல நெருங்கியது... எச்சில் ஒழுக தாடையை திறந்து காட்டியது.... கர்ர்ரர்ர்ரர்ர் என மெலிதான ஒரு உறுமலை வெளி படுத்தியது...

யோகேசும் பிரதீப்பும் சடாரென தங்கள் AR- 15 ரைப்பிளை தாங்கி பிடித்தார்கள்.

அந்த மிருகம் அவரை அபாயகரமாக நெருங்கி கொண்டிருக்க 

விசையில் கையை வைத்தான் யோகேஷ். 

யது " இருங்க சார் அவசர படாதீங்க " என்றான்.

" இப்போ சுட்டா தோட்டா சார் மேல பட்டுடும்... நான் சொல்ற மாதிரி பண்ணுங்க..வானத்தை நோக்கி சுடுங்க.. "

அவர்கள் வானத்தை நோக்கி சுட அந்த விலங்கு ஒரு முறை பதட்டமாக திரும்பி பார்த்து விட்டு மின்னல் என இருட்டில் பாய்ந்து மறைந்து போனது... மரத்தின் மேலிருந்த ஆந்தை காட்டில் கேட்ட திடீர் சத்தத்தால் பதட்டம் அடைந்து சத்தமில்லாமல் பறந்து சென்றது. ( ஆந்தை பறக்கும் போது பக்கத்தில் மைக் வைத்து கேட்டாலும் சப்தம் கேட்காது...)

"என்ன ***** காவல் காத்து கொண்டு இருந்த..." 

ராஜசேகர் யோகேஷ் மேல் பாய்ந்த அந்த கணத்தில்.. நினைவு வந்தவராய்.

"ஆமாம்... சுஜித் எங்க ?"என்றார் இவ்வளவு களேபரம் நடக்கும் போதும் அவனை காண வில்லையே என்பது அப்போது தான் அவர்களுக்கு உரைத்தது.

அவர்கள் அவசர அவசரமாக டென்டுக்குள் ஓடிச்சென்று பார்த்தபோது சுஜித் இருந்த இடத்தில் சில ரத்தத் திட்டுக்கள் தான் இருந்தன. அந்த ரத்த அடையாளங்கள் டென்டை விட்டு வெளியே செல்ல அதை பதட்டமாக பின்  தொடர்ந்து சென்றார்கள்.

ரத்த கரை டென்டை விட்டு வெளியே செல்ல அதை கவனமாக பின் தொடர்ந்தார்கள். அந்த கரை தடம் பக்கத்தில் ஒரு பாறையில் சென்று முடிந்தது.

அந்த பாறையில் சுஜித் இருந்தான்.

'உயிரற்ற உடலாக.!'

அதைப் பார்த்ததும் அவர்கள் ரத்தம் உறைந்து போனார்கள் காரணம் அந்தப் பாறையில் சுஜித் தலைகீழாக வீசப்பட்டு இருந்தான். அவன் வயிற்றுப்பகுதி மற்றும் நெஞ்சு பகுதி. கொடூரமாக ...குதறப்பட்டு உள் உறுப்புகள் வெளியே தொங்கிக்கொண்டு இருந்தன. அதை விட பயங்கரம். அவனது ஒரு கண் மிஸ் ஆகி கண் இருந்த இடத்தில் ஓட்டை தான் இருந்தது. ஏதோ ஒன்னு அவன் கண்ணை தோண்டி எடுத்து இருந்தது..

               🔸🔸🔸🔸    🔸🔸🔸🔸

நேற்றைய  இரவில்...

இவர்கள் ஜீப் காட்டுக்குள் இறங்கி கொண்டு இருந்த நேரத்தில்...தூரத்தில் அந்த பூஜையில்.........நாம் பாதியில் விட்ட காட்சியை தொடர்ந்தால்....

அந்த பூசாரி மீதி நான்கு பாறை ஓவியங்களை நோக்கி தீபத்தை காட்டினார்.

அதில்...

 4 ஆவது படத்தில் அந்த பெண் தெய்வம் தலை முடியை விரித்து படு கோரமாக இருந்தது. 

5 ஆவது படத்தில் ஒரு அரக்கன் அந்த பெண் தேவதை காலில் கிடந்தான். 

6 ஆவது படத்தில் அந்த பெண் தேவதையின்  கைகள் காட்ட பட்டு இருந்தது . அவைகள் நீண்ட நகங்களுடன் கூடிய புலியின் கை களாய் இருந்தன. 

7 ஆவது படத்தில்.. அந்த கூரிய நகத்தை வைத்து அந்த அரக்கனின் ஒரு கண்ணை தோண்டி எடுத்து கொண்டிருந்தாள்...

"அம்மா..தாயே..தீய சக்திங்க கிட்ட இருந்து நீ தான் மா காப்பாத்தனும்.... "

                  🔸🔸🔸🔸     🔸🔸🔸🔸

"ஓ....மை... காட்... what the f*** " 

" ஏ..எப்படி..யாரு..எது..." ராஜசேகர் வார்த்தை வராமல் தடுமாறினார். சுஜித் உடலை நம்ப முடியாமல் மீண்டும் உற்று பார்த்தார்.

பிரதீப் அதிர்ச்சியாகி... 

" அந்த சிறுத்தை வருவதற்கு முன்னாடியே நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இவனை இழுத்து சென்று துளி சத்தம் கேட்காமல்... எப்படி எப்படி..இது சாத்தியம்....." என தடுமாற...

யோகேஷ் " சார் பயமா இருக்கு சார் .."என்றான்.

ராஜசேகர் தன் பல்லை நறநறவென்று கடித்தார்.. துப்பாக்கியை கையில் அழுத்தி பிடித்தார்.

" ஓ..இதான் அந்த T 82 வேட்டையா...இது அது பண்ண வேலையா தான் இருக்கும்.. பாத்துடலாம்..அந்த புலியை நான் சும்மா விட போறது இல்ல..என் கையாலேயே..........." 

" சார் நான் ஒன்னு சொல்லட்டுமா சார்..." என்றான் யது...

" எனக்கு மிருகங்களை பற்றி நல்லா தெரியும். அடிச்சு சொல்லவேன் சார்... நிச்சயமா இது புலி பன்னது இல்லை சார். அதுவும் அந்த T 82 வை நேருக்கு நேர் சந்தித்தவன் நான்.. இது அது பண்ண வேலை இல்ல... நிச்சயம் இல்ல..."

"பின்ன வேற எது பண்ணி இருக்கும்ன்ற....."

" வந்து ...சார் நாம புலியை வேட்டையாட காட்டுக்கு வந்து இருக்கோம்...ஆனா எனக்கு என்னவோ....."

யது நிறுத்தி விட்டு சொன்னான்..

" .....நம்மள ஏதோ ஒன்னு வேட்டையாடிட்டு இருக்கு னு தோணுது...." 

                    🔘    🔘   🔘   🔘

கொஞ்சம் தூரத்தில்......

அந்த ஒட்டக மலையில் இருந்து...

இங்கே நடக்கும் இந்த களேபரங்களை 'அது 'வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது .

                  ✴️     ✴️    ✴️    ✴️

"உயிர் வேட்டை.. "

(அத்தியாயம் 6 )

அந்த இரவு அதன் பின் யாரும் தூங்க வில்லை..அவர்களுக்கு நரகமாக விடிந்தது. சுஜித் பிணத்தை பக்கத்தில் தற்காலிகமாக அடக்கம் செய்தார்கள்.

அவனது ஒற்றை கண் , ராஜ சேகர் மண்டைக்குள் ஓடி கொண்டே இருந்தது... அது என்னவா இருக்கும் ஒரு கண்ணை தோண்டி எடுக்கிற சக்தி....

                   🔘   🔘   🔘  🔘     

சூரிய ஒளி பளிச்சென்ற பூமியைத் தொட்டது. ராஜசேகர் கோபம் பதட்டம் குழப்பம் என கலவையான மனநிலையில் இருந்தார்.

" யோகேஷ்..நேத்து நீயும் சுஜித்தும் செட் பண்ண கேமராஸ் ல ஒன்னு விடாம பாரு . கூட பிரதீப் ஐ கூட்டிட்டு போ.நேத்து டென்டுக்கு வந்துட்டு போனது என்னனு ஒரு க்ளூ வாவது கிடைக்கும். நானும் யதுவும் அந்த ஒட்டக பாறை வரை போய் பாத்துட்டு வறோம்.எனக்கு என்னமோ அந்த பாறை ல எனக்கு தேவையான ஏதோ கிடைக்கும் னு உள்ளுணர்வு சொல்லுது.. " ராஜசேகர் பேசி முடிக்க யோகேஷ் மற்றும் பிரதீப் கிளம்பினார்கள்.

ராஜசேகர் மற்றும் யது அந்த பாறையை நோக்கி நடந்தார்கள்.

கிட்ட தட்ட 20 நிமிட நடைக்கு பின் அந்த குன்றின் அடிவாரத்தை அடைந்தார்கள். நிறைய அடர்ந்த வகை செடிகளும் கொடிகளும் மண்டி கிடக்கும் அந்த குன்றில் எந்த இடத்தில் இருந்து ஏறலாம் என நோட்டம் விட்டார்கள்.

அப்போது...

"சார் அங்க பாருங்க " என கத்தினான் யது. 

தரையில் அவன் காட்டிய இடத்தில் மிக தெளிவாக ஒரு புலியின் கால் தடம் இருந்தது. 

" மை காட் அந்த புலி பக்கத்துல எங்கனா இருக்கலாம்..நாம உஷாரா இருக்கணும்.. "

" சார் நாம ரெண்டு பேரும் மேலே போறது ரிஸ்க்கு ஒரு வேளை அந்த புலி மேலே இருந்தா நீங்க வருவது அது கண்டு பிடிச்சிடும் அதுவே நான் போனா கண்டு பிடிக்காது அதனால் நான் போய் மொதல்ல பாத்துட்டு வரேன்..நீங்க இங்கயே காத்திருங்கள்..."

" அதெப்படி நான் போனா மட்டும் கண்டு பிடிச்சிடும் ? "

"வாசனை சார்... உங்க வாசனை வேற காட்டுக்குள்ளேயே கிடக்கிற எங்க வாசனை வேற.. சார்.. அதெல்லாம் உங்களுக்கு புரியாது..நான் சொல்ற மாதிரி இங்கேயே காத்திருங்க வரேன்..."

சொல்லி விட்டு விருட்டென மேலே ஏறி எங்கோ ஓடி மறைந்தான் யது...

"புலி பின்னாடி இருந்து வரலாம் சார் எதுக்கும் உஷாரா இருங்க " 

குரல் மட்டும் கேட்டது அவன் இருக்கும் இடம் செடிகளில் மறைந்து போனது...

                       🔸🔸🔸🔸

யோகேஷ் அந்த மரத்தில் ஏறினான் செட் செய்து வைத்திருந்த கேமரா வை இறக்கினான் அதை ஓட்டி பார்த்தான்..

இரவு நேரம் ஒரு ஓநாய் வந்து போய் இருந்தது.. ஒரு ஆந்தை குறுக்கே பறந்து இருந்தது..ஒரு முயல் ஓடி இருந்தது..

" 2 பேரும் ஒரே இடத்துல கலெக்ட் பண்ணா நேர விரயம்.. நான் கேமரா இருக்கிற இடத்தை எல்லாம் காட்டறேன் நீ ஒரு பக்கம் போய் கலக்ட் பண்ணிட்டு வா...." யோகேஷ் பிரதீப்பை இடம் காட்டி அனுப்பி வைத்தான்.

மீதமிருந்த கேமராக்கள் ஒவ்வொன்றாக வைக்கப்பட்ட இடத்தில் இருந்து பத்திரமாக எடுத்தான்.

மூன்றாவது கேமராவை ஆன் செய்து ஓடவிட்டு பார்த்தபொழுது.....

 12.45 க்கு அந்த காட்சி பதிவாகி இருந்தது அந்தப் புலியின் காட்சி .அதில் மிக தெளிவாக அந்த பெரிய சைஸ் புலி ஒன்று மெதுவாக நடந்து வந்து கேமரா இருக்கும் திசையை பார்த்து ஒரு முறை வாயை திறந்து பல்லைக் காட்டியது அதற்கு ஒரு பல் இல்லை.

"T 82 " என்று வாய்க்குள் முணுமுணுத்தான் யோகேஷ்.

பிரதீப் சீக்கிரமாக வா என வேகமாக குரல் கொடுத்தான்.

பிரதீப் பதிலுக்கு மௌனத்தை பதிலாக கொடுத்தான்.

"பிரதீப்" ....இன்னும் சத்தமாக கத்தினான் யோகேஷ்.  எதிர் தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

யோகேஷ்  குழப்பமும் அடைந்தவனாய் அந்த இடத்தை விட்டு மெல்ல நகர்ந்து பிரதீப் சென்று இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். 

"பிரதீப் எங்க போயிட்ட..... " 

அந்த அடர்ந்த செடிகளை விலக்கிவிட்டு பார்த்தபொழுது அங்கே ஒரு பெரிய சைஸ் மரம் ஒன்று இருந்தது பிரதீப் அங்கே இருந்தான்.

கொடூரமாக தாக்கப்பட்டு..... வயிற்றுப்பகுதி கிழிக்கப்பட்டு ....ஒரு கண் மிஸ் ஆகி.. 

ஆனால் இன்னும் உயிர் இருந்தது.

யோகேஷ் அலற வாயெடுத்த போது பின்னால் இருந்து அவன் மேல் பாரமாக ஏதோ ஒன்று விழுந்தது....

                  🔘    🔘    🔘   🔘

ராஜ சேகர் காத்திருந்தார்.. வெயில் மண்டையை ஊசி போல குத்த துவங்கி இருந்தது. யது சென்று நீண்ட நேரம் ஆதி திரும்பி வராதது ராஜசேகரை குழப்பத்தில் ஆழ்த்தியது .

'இவ்வளவு நேரம் என்ன பண்றான் 'தன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மேலே ஏறி பார்க்க முடிவு செய்தார்...

அப்போது....

"சார்...." யதுவின் அலறல் சத்தம் கேட்டது.. மேலே இருந்து இறங்கி வந்து கொண்டு இருந்தான்.

" என்ன ஆச்சு யது என்ன இவ்ளோ நேரம்..."

" சார்...மேலே...ஒரு குகை..அதுக்குள்ள வந்து..வந்து...சார் நீங்களே வந்து பாருங்க..." என்றான்.

" என்னப்பா என்ன இருக்கு அங்க.."

" வந்து பாருங்க அப்படியே ஆச்சர்யத்தில் மூழ்கி போயிடுவீங்க... " என்றான்

அவர்கள் இருவரும் அவசர அவசரமாக குன்றின் மேல் ஏறி செல்ல மேல் பகுதியை அடைந்ததும் அந்த குகை கண்ணுக்கு தெரிந்தது. 

பாறையில் நன்கு பெரிய சைஸ் குகை

"வாங்க சார் உள்ள வந்து பாருங்க..."

ராஜசேகர் அந்த குகையை பார்த்து ஆச்சரியப்பட்டார் மெல்ல உள்ளே நுழைந்தார் தனது பையிலிருந்து டார்ச்சை எடுத்து உயிர்பித்தார். உள்ளே செல்ல செல்ல ...

" பாத்து வாங்க சார் வழி ல 2 ..3 பிணம் கிடக்குது... " என்றான் யது...

" வாட்.. " ராஜசேகர் அதிர்ந்து போய் கீழே டார்ச் அடித்து பார்த்தார்  அழுகிய நிலையில் சில பிணங்கள்.. அதில் ஒரு பிணத்தின் நெற்றியில் சிகப்பு ரிப்பன் கட்டி இருந்தது கழுத்தில் வெள்ளி செயினில் புலி பல். 

ராஜசேகரை இப்பொழுது இன்னும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னவென்றால் கீழே பிணத்தை பார்த்தும் அதைப்பற்றி ஆச்சரியமாக சொல்லாமல் உள்ளே வேறு எதையோ ஆச்சரியமாக காட்டுவதற்கு அழைத்துக்கொண்டு செல்கிறானே அது என்னவாக இருக்கும்... ? 

உள்ளே செல்ல செல்ல குகை இன்னும் அகலம் அதிகமாக இருந்தது டார்ச் வெளிச்சம் பற்ற வில்லை...

"அதோ அங்க பாருங்க சார்..." என்று காட்டினான் யது.. கையில் ஒரு விறகு கட்டையை தூக்கி கொண்டான்.

அவன் காட்டிய இடத்தில்....

யோகேஷ்..மற்றும் பிரதீப் குற்றுயிர் குலை உயிராக ஒரு மர கொடியின் மூலம் கட்ட பட்டு இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் ஒரு கண் பிடுங்க பட்டிருந்தது.

"What the f*** "  என ராஜசேகர் அதிர்ச்சியாகி திரும்ப....

" ஹி ஹி எப்படி சார் நான் காட்டிய ஆச்சர்யம் " என்றான் யது . வாயில் ஒரு பக்கம் பல் இல்லாத இடைவெளி தெரிய சைக்கோ தனமாக சிரித்தான்.

கையில் வைத்து இருந்த விறகு கட்டையை வைத்து ராஜசேகர் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டான்.

                 🔘    🔘    🔘   🔘

கண் விழித்துப் பார்த்தபொழுது ராஜசேகர் தானும் ஒரு கொடியால் கட்டப்பட்டு இருப்பதை உணர்ந்தார்.

குகைக்குள் இப்பொழுது விறகுகள் சேகரிக்கப்பட்டு நெருப்பு ஏற்றப்பட்டிருந்தது .அந்த வெளிச்சத்தில் அவர் கண்ட காட்சி அவரை விழி விரிவடையச் செய்தது.

அங்கே அவர் முன் ஒரு பெரிய சைஸ் புலி இருந்தது ஒற்றை பல் புலி. யது அதை கழுத்தில் அனைத்து கொஞ்சி கொண்டு இருந்தான்.

" என்ன சார் அப்படி ஆச்சர்யமா பாக்கர.. அன்னைக்கு புதருக்கு பின்னாடி இருந்து நான் புலி மேல உட்கார்ந்து வர்றதை பாத்து கஜாவும் அவங்க ஆளுங்களும் கூட இதே மாதிரி தான் கண்ணை விரித்து கொண்டு ஆச்சர்யமா பாத்தாங்க...ஹா ஹா..

அப்படி வாயை பிளந்து அசந்து போய் அசையாம நின்ன நேரத்தை பயன் படுத்தி தான் அவர்களை நிரந்தரமா அசையாம பண்ணோம்.

இவன் என் நண்பன் சார்.. அதிகாரிங்க இவனுக்கு T82 னு பேர் வச்சி இருக்காங்க..

இவனும் பாவம் என்ன மாதிரி வஞ்சிக்க பட்டவன் தான் ..உங்களை மாதிரி மிருகங்களால ... " 

என்றான்.. 

" டேய்.. யார்ரா நீ எதுக்கு இப்படி பண்ற..." என்றார் ராஜசேகர் பலகீனமான குரலில்

" இப்படி பண்ண சொல்லி கத்து கொடுத்ததே உங்கள மாதிரி ஆளுங்க தான் சார் சொல்றேன் கேளுங்க..." 

என்று தொடர்ந்தான்...

" சாப்பாட்டுக்கு வழி இல்லாம ஒரு முறை கிராமத்துல ஒரு பண்ணையார் வீட்டில சாப்பாட்டை திருடி தின்னுட்டேன்  தப்பு தான்..தப்பு தான் இல்லன்னு சொல்லல.. பசித்த வயிறுக்கு சரி தப்பு எல்லாம் தெரியாதே சார் .. திருடிட்டேன். அதுக்காக என்ன பண்னாங்க தெரியுமா ? 

என்னை கட்டி வச்சி அடிச்சாங்க. முகத்தில் கத்திய வச்சி கிழிச்சாங்க. அந்த பண்ணையார் பையன் ஒரு கல்லை வச்சி என் வாயில அடிச்சி ஒரு பல்லை உடச்சி எடுத்தான். 

அந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமே வரல.. எந்த போலீசும் நீதி துறையும் வரல... கடைசில பழிய இந்த அப்பாவி புலி மேல போட்டாங்க..நானும் அதை அப்படியே விட்டுட்டேன். காரணம் எந்த போலீஸ் அதிகாரியும் எனக்கு நியாயத்தை வாங்கித் தரப் போவதில்லை என்று எனக்கு தெரியும் எனக்கு அதிகாரிகளைப் பற்றி நன்றாக தெரியும். 

ஒரு போலீஸ் அதிகாரி நான் கொடுத்த கேஸை எடுத்து விசாரிக்கிறேன் னு அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போனான் அப்புறமா தான் தெரிஞ்சது அவன் வந்தது எனக்காக இல்ல என் அம்மாவுக்காக. 

அவனுக்கு ஒத்துழைக்க மறுத்த என் அம்மா கழுத்தை அறுத்து போட்டான். கஞ்சா அடிக்க காசு கொடுக்காததால் நான்தான் ஆறுத்தேன் என என் மேல் பழியை போட்டான். போதிய அளவு சாட்சி இல்லை நல்ல வேலை நான் ஜெயிலுக்கு போக வில்லை. 

இப்படி வஞ்சிக்கப்பட்டு இருந்தபோதுதான் காட்டுக்குள்ள என்னைப் போலவே வஞ்சிக்கப்பட்ட ஒரு நண்பனை நான் சந்தித்தேன்...

கஜாவுக்கு புலி பல்லு னா ரொம்ப ஆசை அவன் தலைவர் அவனுக்கு வசதி பண்ணி கொடுத்தார் ..புலியை வேட்டையாட.

அவன் புலியை கொன்னா பிரச்னையாடும் னு.. இந்த T 82 வை  மயக்க மருந்து கொடுத்து பிடிச்சான் இதோட 3 நகத்தை விட்டுட்டு மீதி நகத்தை பிடிங்கி கொண்டான் ஒரு பக்க பல்லை விட்டு விட்டு இன்னோரு பக்க பல்லை பிடிங்கி கொண்டான்..பார்க்க ஏதோ விலங்களுக்குள் சண்டை போட்டு கொண்ட மாதிரி தெரியும் னு இப்படி பண்னான். புலி பல்லை வெள்ளி செயின் ல கோத்து கழுத்துல போட்டு ரசித்தான்.

நான் பார்க்கும்போது என்னைப் போலவே இவனும் ஒரு பல்லை இழந்துதுட்டு என்னை போலவே பாவம் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான் இவனால பெருசா விலங்கை வேட்டையாடி சாப்பிடவும் முடியல. "

 சொல்லி கொண்டே... கட்ட பட்டு இருந்த யோகேஷ் ஐ நெருங்கினான் யது அவன்  நெஞ்சு பகுதியில் குத்தி கிழிக்க பட்டு பிய்ந்து தொங்கி கொண்டிருந்த சதை பகுதியை கையால் பிய்த்து எடுத்தான்.. யோகேஷ் கத்தும் அளவு கூட திராணி இல்லாமல் மயங்கி கிடந்தான். யது அந்த நெஞ்சு கூட்டில் கையை விட்டு ரத்த சகதியில் இதயத்தை சேற்றில் இருந்து விரால் மீன் பிடிப்பது போல பிடித்து இழுத்து எடுத்தான். அது துண்டாக கையில் வந்தும் இன்னும் லேசாக துடித்தது.

"அதுக்கு அப்புறமா தான் நாங்க ரெண்டு பேரும்........மனித கறி தின்றவங்களா மாறினோம்....." 

சொல்லி விட்டு அந்த பிய்த்து எடுத்த இதயத்தை வாயில் இழுத்து கடித்தான்.

"நாங்க இப்போ வேற எதுவுமே சாப்பிடறது இல்ல சார்...நாங்க இப்போ ஆட்கொல்லி....."

" கேட்டு கொண்டிருந்த ராஜ சேகர் இதயம் துடிப்பதை நிறுத்தியது.. தனக்கு முன்னால் நின்று இருப்பது ஒரு cannibal (மனித உன்னி )  எனும் உண்மை அவர் உடலுக்குள் ஒரு நடுக்கத்தை கொடுத்தது..அவர் கால்கள் அவரை மீறி மெல்ல நடுங்க தொடங்கியது.

"என்னை அடிச்ச பண்ணையார் வீட்டு சாப்பாட்டை தின்னே தீரனும் னு ஒரு அல்ப ஆசை சார். கொஞ்ச நாள் கழித்து அவங்க வீட்டுக்கு மீண்டும் திருட்டுத்தனமா போனேன். பிரியாணி ஆக்கி வச்சி இருந்தாங்க நல்லா சாபிட்டேன் நல்ல காரம். சாப்பிட்டுவிட்டு தாகமா இருந்துச்சு. அந்த நேரம் பார்த்து திரும்பவும் பண்ணையார் பையன் என்ன கையும் களவுமா பிடிச்சான். 

" உன் பல்லை உடைச்சும் நீ திருந்தலையா உன் ஒரு கையை வெட்டினால் தான் சரிப்பட்டு வருவ " 

என அரிவாளோடு பாய்ந்தான். நான் சமையலறையில் இருந்த அம்மிக்கல்லை தூக்கி அவன் தலையில் ஒரே போடு.... ரத்தம் வழிய கீழே விழுந்தான். 

தாகமா இருந்த நான் முதல் முதலாக  ரத்தத்தை குடித்தேன் ரொம்ப ருசியாக இருந்தது. அதன்பிறகு நான் மத்த சாப்பாடு சாப்பிடுவது நிறுத்திட்டேன். நேத்து நைட்டு உன் காயதுல இருந்து  ரத்தம் குடிச்சேன்.. நீ வௌவால் தான் ரத்தம் குடிச்சது னு நினைச்சியா அது சும்மா என் கூட ரத்தம் குடிக்க போட்டிக்கு வந்தது. "

யதுவின் குரலோட்டம் உணர்ச்சி பெருக்காக மாறி கொண்டே வந்தது..

" அர்த்தமே இல்லாம வாழ்ந்துட்டு இருந்த என் வாழ்க்கைகு நானே ஒரு அர்த்தத்தை உண்டு பண்ணிகிட்டேன்."

 ("நமது வாழ்க்கையின் அர்த்தம்  எங்கோ ஒளிந்து இருப்பது போல அது என்ன என அனைவரும் தேடி அலைகிறார்கள் ஆனால் நமது வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதும் இல்லை அர்தத்தை நாம் தான் உண்டு பண்ண வேண்டும்." -ஓஷோ- )

"இந்த காட்டுக்குள்ள தீய என்னதோட வர்றவங்களை கொல்றது தான் என் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் னு எனக்கு தோணுச்சு... எனக்கு சாப்பிடவே தகுதி இல்லைனு நினைச்ச சமூகத்தில் இனி நான் சாப்பிட கூடாது என முடிவு பண்ணேன் ..என் சாப்பாடே இனி கயவர்கள் தான் னு முடிவு பண்ணினேன் .."

இப்போ யது குரலை உயர்த்தி மேடையில் பேசுவது போல பேச தொடங்கி இருந்தான். கிட்ட தட்ட 36 மணி நேரம் கூட இருந்தும் அவன் மன நிலை கலங்கியவன் என்பது இப்போ தான் வெளிப்பட தொடங்கி இருந்தது ராஜசேகருக்கு.

"ஒற்றை பல் புலி மேல் அமர்ந்து வந்து தீய சக்திகள் கண்ணை தோண்டும் எங்க வன தேவதை அவதாரம் நான் னு உணர்ந்தேன். பண்ணையார் பையன் உடலைத் தூக்கி வந்து என் நண்பனுக்கு கொடுத்தேன். இவனும் ரசித்து சாப்பிட்டான். மிச்சத்தை கொண்டு போய் காட்டு எல்லை ல போட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தன் ஒரு பெண்ணை ஏமாற்றி கூட்டி வந்து கெடுக்க பார்த்தான்.  நாங்க தான் அவளை காப்பாற்றினோம். T 82 வை பார்த்ததும் அவங்க அந்த பெண்ணை விட்டுட்டு... பதறி ஓடி வந்தாங்க அவனுங்க மறைவா பைக் நிறுத்தி இருந்த இடத்துல தான் நான் ஒளிஞ்சி இருந்தேன்.  அன்றைக்கு எங்க 2 பேருகும் நல்ல சாப்பாடு...ஹி ஹி..."

சொல்லி கொண்டே யது கையை தூக்கி மெலிதாக நடனமாட தொடங்கி இருந்தான்.. 

"அப்பப்போ ஒற்றை பல் புலி நடமாடுவதை பார்த்த மக்கள் எல்லாம் புலியின் வேலை என பேச தொடங்கினார்கள். ஆட்கொல்லி புலியை சுட அரசாங்கம் முடிவு செய்தது.

என் நண்பனை அழிக்க ஒரு டீம் வருதுனு கேள்வி பட்டு கவலை பட்டேன் அவங்களுக்கு ஒரு கைடு வேணும் னு எங்க கிராமத்துல வந்து ரகசியமா  கேட்டு இருந்தாங்க .இதான் நல்ல சாக்கு னு நான் வலினா வந்தேன். உங்க கிட்ட துப்பாக்கி இருந்ததால் உங்களை பிரிச்சி வச்சி தான் அடிக்க முடியும் னு முடிவு பண்ணேன். கூடவே இருந்து நாடகமாடி காட்டுக்குள்ள கூட்டி வந்து சிக்க வச்சேன். அப்பப்போ பயப்படற மாதிரி நடிச்சேன்.

நேற்று இரவு யோகேஷ் சிகரெட் ல நல்லா கஞ்சா ஏத்தி கொடுத்தேன். நீங்க சாப்பிட்ட எல்லாத்துலயும் கஞ்சா கலந்தேன். சுஜித்தை இழுத்து சென்று அடித்து கொல்ல எனக்கு எந்த பிரச்னையும் உண்டாகல.. எல்லாத்தையும் என் நண்பன் இங்க குன்றில் இருந்து பாத்துட்டு தான் இருந்து இருப்பான். 

காலைல தனி தனியா பிரிஞ்சி போனது ரொம்ப வசதியா போச்சு எனக்கு. உன்னை கீழ காக்க வச்சிட்டு நான் போய் இவங்களை அடிச்சி இழுத்துட்டு வந்தேன்.அதான் அவ்ளோ லேட். "

பின்னால் நின்றிருந்த T 82 இப்போது சத்தமாக கர்ர்ர்ரர்ர் என்றது...

நண்பன் பசிக்குது னு சொல்றான்...சரி சரி கதை கேட்டது போதும்..."

தன் தோல் பையில் கையை விட்டான் யது..அதை வெளியே எடுத்தான் புலி நகங்கள்...

"கஜா விட்டுட்டு போன 3 நகத்தால் என் நண்பனுக்கு எந்த பயனும் இல்லை அதான் எனக்கு பயன் படும் னு நான் எடுத்துகிட்டேன். " அதை ஒரு கம்பியில் கோத்து விரலில் கோத்து கொள்ளும் படி ஆயுதம் போல் செய்து இருந்தான்.

அதை விரல்களில் மாட்டி கொண்ட யது ராஜ சேகர் வயிற்றை குறி வைத்து பாய்ந்தான்....

"நோ...நோ..நோ....ஓ ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ .."

குகைக்கு வெளியே வரை அவர் குரல் எதிரொலித்தது.

                🔘    🔘    🔘   🔘

காட்டுப் பகுதியில் அந்த கார் வந்து நின்றது. அதிலிருந்து சில பெரும் பணக்கார மனிதர்கள் இறங்கினார்கள்...

அந்த மனிதர் மிடுக்கான உடையில் இருந்தார். நடை உடை பாவனையில் பணக்கார தன்மை தெறித்தது.

" இங்க தான் இருக்கு மலை.. நீங்க தாராளமா உங்களுக்கு சொந்தமாக்கிக்கலாம் வெட்டி  எடுக்கலாம்.."

" இயற்கை வளத்தை அழிக்கிறோம் னு போராட்ட  குரூப் ஒன்னு கிளம்புமே யா..."

"அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்..தலைவருக்கு கமிஷன் போயிடிச்சி இல்ல கவலையை விடுங்க நீங்க ஒரு முறை மலையை சுத்தி பாத்துட்டு வாங்க... "

" சரி சரி... எங்க கூட வர ஒரு கைடு தரேன்னு சொன்னியே..."

"இதோ... டே..தம்பி..இங்க வாடா.. சாரை கூட்டி போய் அதோ அந்த மலையை காட்டிட்டு வா..போ.. "

யது தன் பரட்டை முடியை சொரிந்து கொண்டு...

"சுத்தி பாக்க போராருங்களா... " என்று கேட்டான்...

" இல்ல வெட்டி எடுக்க போறார்...கொஞ்ச நாள் ல மொத்தமா..அதுக்கு...இடம் பாக்க வந்து இருக்கார்...."

" ஹி ஹி ..சீக்கிரம் வாங்க சார் போலாம் எனக்கு பசிக்குது......"

வன தேவதையின் வேட்டை தொடரும்........

"முற்றும். "

(நம்ப கடினமா இருக்கும் ஆனாலும் சொல்றேன் இது....'.based on a true story' )

பின் குறிப்பு : 

இக்கதை மதுவுக்கு சமர்ப்பணம்.

யார் மது ?

கதையை படித்த போது உங்களில் சிலருக்கு..."சாப்பாட்டை திருடி சாப்பிட்டதற்கு யாராவது பல்லை உடைப்பார்களா முகத்தை கீறுவார்களா" என்று ஒரு கேள்வி வந்து இருக்கலாம்.

2018 கேரளா அட்டபாடி காட்டு பகுதியை சார்ந்த ஒரு ஆதிவாசியை அப்பகுதி மக்கள் அடித்து கொன்றார்கள். அவன் செய்த தவறு சாப்பாட்டை திருடி சாப்பிட்டது. அவன் பெயர் மது..

"ஒரு சமூகத்தில் ஒருவன் பசியாக இருப்பது என்பது அந்த  சமூகத்தின் குற்றம்...மது என் சகோதரன் போல.. " அந்த சம்பவத்தின் போது  இதை  சொன்னவர் நடிகர் மம்முட்டி.

அந்த மது கதாபாத்திரத்தை யது என மாற்றி கொஞ்சம் கற்பனை கலந்து கொண்டேன்.

-2021 இல் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை 21 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு உயிருடன் பிடித்தார்கள். அந்த புலியின் பெயர் T23 . அந்த புலி கதையை கொஞ்சம் கற்பனைக்கு யது கதையில் கலந்து கொண்டேன். 

இன்னோரு மதுவை இந்த சமூகம் உண்டாக்கி விட கூடாது.

ரசித்து படித்ததற்கு நன்றி..

(ஆதிவாசி மது பற்றிய உண்மை செய்திக்கு madhu the tribe என்று தேடினால் போதும்..)

கதை பிடித்து இருந்தால் உங்கள் கருத்தை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் : 9841069466.

மற்றும் தேடல் திடல் fb page 

மற்றும் தேடலின் திடல் fb குரூப் இல் இணைந்து எனது மற்ற எழுத்துகளை படிக்கலாம்.

நன்றி ..

நண்பன் ரா.பிரபு

🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

Comments

  1. Hii.. where do I get your book "indru oru thedal" in paperback..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"