"வெள்ளி எனும் மரண கிரகம்"



"வெள்ளி எனும் மரண கிரகம்"

(அறிவியல் காதலன்)
(ரா.பிரபு)

நாம் வெறும் கண்ணால் எளிமையாக பார்க்க முடிய கூடிய கிரகமான வெள்ளியின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை.
காரணம் இரவு வானில் நிலவிற்கு அடுத்த படியாக அதிக ஒளி பொருந்திய ஒன்று என்றால் அது வெள்ளி தான். மேலும் அதன் மின்னும் தன்மையும் நட்சத்திரங்களில் இருந்து மாறு பட்டு மிக அதிக மின்னும் தன்மைகொண்டு அழகாக இருக்கும்.

ஆங்கிலத்தில் Venus  என்று அழைக்க படும் அந்த பெயர்  ரோம் நாட்டில் காதல் மற்றும் அழகிற்கு உகந்த தேவதை கடவுளின் பெயர். காலம்காலமாக வெள்ளி அழகிற்கு இலக்கணமாக உதாரணமாகவே கதைகளிலும் நிஜத்தில் ஒப்பிடுகளிலும் சொல்ல பட்டு வந்தது.

20 ஆம் நூற்றாண்டில் பல கற்பனை எழுத்தாளர்கள் அந்த கிரகம் எப்படி இருக்கும் என தனது கதைகளில் வர்ணித்து எழுதி இருந்தார்கள் . அந்த வர்ணனையில் வெள்ளி கிரகம் தெய்வ கடாட்சகம் பொருந்திய அழகிய மலைகள் சோலைகள் அருவிகள் பூத்து குலுங்கும் இயற்கை அழகும் பூமியை காட்டிலும் அதிக பசுமை கொண்டதுமாக இருந்தன.

ஆனால் இதெல்லாம் எது வரை என்றால் வானியல் அறிவியல் வளர்ச்சி அடைந்து விண்வெளி ஓடங்களை கொண்டு ஆய்வாளர்கள் வெள்ளியை கொஞ்சம் அருகில் சென்று ஆராயும் வரைதான்.

காரணம் அதீத எதிர்பார்போடு வெள்ளியை ஆராய தொடங்கிய விஞ்ஞாணிகள் அதன் நரக தனமான கொடூர முகத்தை பார்த்து வாயடைத்து போனார்கள்.
வழியில் தூரத்தில் ஒரு அழகிய பெண்ணை பார்த்து விட்டு அருகில் சென்று அவள் முகத்தை பார்க்கும் போது அது ரத்த காட்டேரி போல கொடூர முகமாக இருந்தால் ஒரு மனிதன் எப்படி பேந்த பேந்த முழிப்பாண் அந்த நிலை யில் தான் இருந்தார்கள் அந்த ஆய்வாளர்கள்.

பொதுவாக வெள்ளியை பூமியின் இரட்டை என்று சொல்லுவார்கள் அதற்க்கு காரணம் வெள்ளி ,உருவதில் அளவில் ,அடர்த்தியில் ,கிட்ட தட்ட பூமியை போல இருப்பது தான்.
அதனால் அதில் சூழல்கள் பூமி போல இருக்கலாம் என்று கற்பனை செய்தது தவறு இல்லை தான். ஆனால் வெள்ளி் ஒரு தீய இரட்டை. (எம் .ஜி. ஆர் இரட்டை வேடங்களில் ஒருவர் நல்லவர் இன்னொருவர் கெட்டவர் என்பதை போல)

1962  நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளியை 34760 கிமி தொலைவு வரை சென்று ஆராய்ந்தது. (விண்கலத்தில் நகர்ந்த படி கவனிக்க பட்ட முதல் கிரகம் என்ற சம்பவம் கூட இது தான் )

வெள்ளியின் அந்த விசேஷ ஒளிர்தலுக்கு காரணம் வெள்ளியின் மிக அடர்த்தியான மேகங்களும் அதன் பிரதிபலிக்கும் தன்மையும் தான் என்பதை முதலில் கண்டார்கள் . ஆம் வெள்ளி மிக மிக அடர்த்தியான மேகங்களால் எப்போதும் சூழ பட்டிருக்கும். ஆனால் என்ன ஒன்னு அந்த மேகங்கள் தண்ணீருக்கு பதில் கடுமையான சல்பியூரிக் அமிலங்களை சுமந்து இருக்கும்.

பிறகு வெள்ளி மேகங்களில் தொடர்ந்து மின்னல்களும் ஏற்பட்ட வண்ணம் இருப்பதையும் கவனித்தார்கள்.
வெள்ளியின் வளிமண்டலத்தில் மேல் பகுதி எபோதும் பயங்கர வேகத்தில் சுழற்சியிலேயே  இருக்கும். அந்த கோள் சுற்றும் வேகத்தை விடவும் இது அதிக வேகம்.
அது 360 கிமி வேகத்தில் சுழலும் புயலால் உண்டாக்க படுபவை. நாம்  பூமியில் ஓய்வாக மேகங்கள் நகர்வதை வேடிக்கை பார்க்கிறோம் அல்லவா.. அப்படி வெள்ளியில் அண்ணாந்து பார்த்தால் வானம் பார்ஸ்ட் பார்வட் இல் போடப்பட்டதை போல மேகங்கள் தருமாறு வேகதில் ஓடி கொண்டு இருப்பதை பார்க்கலாம்.

 பூமியில் மழையில் நனைவதை போல அங்கே ஆசை பட்டு நனைந்தால் உடல் முழுக்க கடுமையான தீ காயங்களுடன் G. H இல் போய் சேர வேண்டியதுதான். காரணம் அங்கே பொழிவது சல்புரிக் அமில மழை.
ஆனால் பயப்பட தேவை இல்லை அங்கே மழை பொழிந்தாலும்  நீங்கள் அங்கே மழையில் நனைய போவதில்லை .
காரணம்  வெள்ளியின் மழை அதன் தரை பகுதியை தோடுவதே இல்லை அதற்கு முன்பே ஆவியாகி மீண்டும் மேகம் ஆகிவிடுகிறது. அதற்கு காரணம் வெள்ளியின் அடுத்த மரண தன்மையான அதன் வெப்பம்.

சூரிய குடும்பத்திலேயே அதிக வெப்பம் கொண்ட கிரகம் என்றால் அது நியாய படி புதன் ஆக தான் இருக்க வேண்டும். காரணம் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் அது தான். ஆனால் வெள்ளியை சூழ்ந்துள்ள அடர்த்தியான மேகமும் அதன் மிக அடர்த்தியான வளிமண்டலமும் உள்ளே வரும் சூரிய ஒளியையையும் அதன் வெப்பத்தையும் வெளியே அனுப்பாமல் கைது பண்ணி வைப்பதால் அதன் கிரீன் ஹவுஸ் விளைவினால் (பூமியின் கிரீன் ஹவுஸ் விளைவு போல தான்) அதன் வெப்பம் அதிகரித்து அதிகரித்து 465 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை கொண்டுள்ளது. இந்த வெப்பம் ஈயத்தை உருக்கும் அளவு கடுமையானது.

இந்த புயல் வேக சூழல் மேகம் ..அமில மழை ... அதீத வெப்பம் இதையெல்லாம் சமாளித்து நீங்கள் வெள்ளியில் நிற்பதாக வைத்து கொண்டால் என்னாகும் தெரியுமா?
சப்பாத்தி மாவு பிசைய பட்டு பிறகு அதை தட்டையாக வைத்து உருட்டி விட்டதை போல தரையோடு தரையாக அங்கே தட்டையாக அழுத்தி நிரப்ப பட்டு விடுவோம். காரணம் அங்கே உள்ள வளிமண்டல அழுத்தம் அப்படி .. அங்கே நாம் உணரும் காற்றில் அழுத்தம் பூமியை போல 90 மடங்கு அதிகம் எனவே சில டன் எடையை நம் உடல் உடனே உணரும்.

என்னது காற்றா? என அவசர பட்டு ஆசையாக கேட்டு விட கூடாது. அங்கே உள்ள காற்று என்ன வென்றால்..
 96.5 சதம் கார்பன் டை ஆக்ஸைடு.. 3.5 சதம் நைட்ரஜன், அதனுடன் சிறிதளவு சல்பர் டை ஆக்ஸைடு,  ஆர்கான் கொஞ்சம் தண்ணீர்  . (ஆம் தண்ணீர் உண்டு ஆனால் அது தண்ணீராக இல்லை...சல்பர் உடன் இனைந்து சால்பியூரிக் அமிலங்களாக இருக்கிறது.) கார்பன் மோனாக்சைடு , ஹீலியம் ,நியான். இது எல்லாம் கலந்தது தான் வெள்ளியின் வளிமண்டலம். அதாவது ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் முழுக்க முழுக்க விஷம் .

சரி வெள்ளியின் தரை பரப்பு பார்க்க எப்படி இருக்கும் ? நிலா போல கரடு முரடான மேற்பரபாகவா ?  ச்சே ச்சே  இல்லை. நிறைய அழகிய சமதல பரப்பை கொண்டது தான் வெள்ளி . ஆனால் அவசர படாதீர்கள் அதை கிட்டே சென்று பார்த்தால் தான் தெரியும் அது சாதாரண தரை அல்ல அவ்வளவும் எரிமலை குழம்பு லாவா.

வெள்ளியில் பல்லாயிர கணக்கான எரிமைலைகள் தொடர்ச்சியாக லாவா எரிமலை குழம்பை கக்கி கொண்டே இருக்கின்றன. அதனால் வெள்ளியில் 80 சத பரப்பு லாவா சமவெளியால் ஆனது. மேலும் அது அரித்து கொண்டும் எரித்து கொண்டும் சென்ற பாதைகள் காரணமாக ஆயிர கணக்கான கி.மி நீளத்துக்கு அங்கே பிரமாண்ட கால்வாய்கள் இருக்கின்றன. அந்த எரிமைலைகள் தொடர்ச்சியாக சல்பரை வளிமண்டலத்தில் கக்கி கொண்டே இருக்கின்றன. அந்த சல்பர் அங்கே உள்ள கொஞ்ச நஞ்ச நீருடன் இணைந்து சல்பியூரிக் அமிலமாக மாறி மேகமாகிறது .

வெள்ளி தன்னை தானே சுற்றும் வேகத்தை விட சூரியனை சுற்றும் வேகம் அதிகம். அதாவது அங்கே ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விட பெரியது.
அதாவது ஒரு முறை சூரிய உதயத்தை நீங்கள் மேற்கே பார்த்தீர்கள் என்றால் அடுத்த சூரிய உதயத்தை நீங்கள் 117 நாள் (பூமி கணக்கு படி) கழித்து தான் பார்க்க முடியும்.

ஒரு நிமிடம் .....என்னது சூரிய உதயம்..மேற்கே வா? என்று நீங்கள் கேட்டால் ... அது தான் வெள்ளியின் அடுத்த விசித்திரம். இது மற்ற கோள் களை போல இடப்பக்கமாக சுழலாமல் மதிக்காத பையனாக இது மட்டும் வல பக்கமாக  சுழல்கிறது .எனவே அங்கே சூரியன் மேற்கே உதித்து கிழக்கே தான் மறைவான்.

அங்கே பூமி போல காந்த புலம் எல்லாம் இல்லை.(இருக்கு ஆனா பூமியை விட 0.000015  அளவு குறைவாக) எனவே சூரியனின் நேரடி புறஊதா கதிர் பாதிப்பு அங்கே இருந்து கொண்டே இருக்கும்.
வெள்ளி ரொம்ப மோசமான பய்யன் என்பதால் அதற்கு கேர்ள் பிரண்ட் ஏதும் இல்லை. அதாவது வெள்ளிக்கு துணை கோள் கள் ...நிலாகள் ஏதும் இல்லை.
வெள்ளியின் வெளி பரப்பு ஒரு சொட்டு கூட ஈரப்பதம் அற்றது.

வெள்ளியை ஆராய அமேரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா நாடுகள் கிட்ட தட்ட 20 கும் மேற்பட்ட வின் ஓடங்களை அனுப்பி உள்ளது.
முன்பு குறிப்பிட்ட நாசாவின் மரைன் 2 வை தொடர்ந்து சோவியத் யூனியன் அனுப்பிய venera 7 விண்கலம் தான் வெள்ளியில் தரை இறங்கிய முதல் (மேலும் வேற்று கிரகத்தில் தரை இறங்கிய முதல்) விண்வெளி ஓடம் ஆகும்.
அதற்கு பின்னால் சென்ற venara 9 தான் முதல் முதலில் வெள்ளியின் தளங்களை புகை படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வைத்த முதல் விண்கலம்.
ஆனால் அது தனது பணியை சில மணி நேரத்துக்கு தான் செய்ய முடிந்தது. ஏன் என்றால் அதற்குள் வெள்ளியின் உருக்கும் வெப்பமும் நொறுக்கும் வளிமண்டல அழுத்தமும் அந்த விண்கலத்தை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கிவிட்டது.

வெள்ளியின் சுற்று வட்ட பாதையில் முதலில் சுற்றி வந்த நாசாவின் magellan  ,ரேடார் ஐ பயன்படுத்தி வெள்ளியின் 98 சத துல்லிய வரைபடத்தை முதல் முதலில் வரைந்து தந்தது. அதாவது 300 அடி குருக்களவு வரை துல்லியமாக.
ஐரோபிய விண்கலம் venus express வெள்ளியின் சுற்று பாதையில் 8 ஆண்டுகள் தங்கி இருந்தது.. அதன் மேகங்களில் மின்னல் வெட்டுவதை கண்டு சொன்னது இது தான்.
ஆகஸ்ட் 2014 இல் அந்த செயற்கை கோள் அந்த கிரகத்தின் வளிமண்டல மேல் அடுக்கில் நுழைந்தது . அங்கே பல மாதம் தங்கி இருந்து அதன் எரிபொருள் தீரும் வரை தகவல் அனுப்பிய வண்ணம் இருந்தது.

அதனை தொடர்ந்து 2010 வில் ஜப்பானின் akatsuki ஆராய கிளம்பி என்ஜின் புழுதில் தோல்வியை தழுவியது ஆனால் 2015 இல் ஜப்பான் மீண்டும் முயன்று வெற்றி கண்டது.

பூமியால் தனது இரட்டையை ஆறாயும் பணி இன்னுமும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

வெள்ளி என்னதான் பார்ப்பதற்கு வசீகரமாக இருந்தாலும் நிஜத்தில்
 "தம்பி ...ஆள் அழகை பார்த்து யாரையும் எடை போடாதே "
 என்று நமக்கு பாடம் நடத்தி கொண்டிருக்கும் ஒரு நரக தனமான மரண கிரகம்.

பின்னிணைப்பு:

Orbit & rotation

Average distance from the sun: 67,237,910 miles (108,208,930 km). By comparison: 0.723 times that of Earth

Perihelion (closest approach to sun): 66,782,000 miles (107,476,000 km). By comparison: 0.730 times that of Earth

Aphelion (farthest distance from sun): 67,693,000 miles (108,942,000 km). By comparison: 0.716 times that of Earth

Comments

  1. அருமையான தகவல்கள்.
    வெள்ளி கிரகம் அல்ல கொள்ளி கிரகம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"