Posts

Showing posts from June, 2019

"ரயில் ,முகில் ,திகில் "

Image
"ரயில் ,முகில் ,திகில் " ரா.பிரபு (சஸ்பென்ஸ் குறுந்தொடர் ) அத்தியாயம் 1 : முகிலுக்கு இந்த ரயில் பயணம் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு திகில் பயணமாக இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்தது இல்லை........... இருங்க...இருங்க .... ஒரு நிமிஷம்.. இப்படி திடீர்னு 5 ஆவது அத்தியாயதின் ஆரம்ப வரிகளை இங்கே தூக்கி சொருகி விடுவது சரி அல்ல என்பதால் ஆரம்பத்தில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்தே பயணத்தை தொடங்கலாம்.... ☢☢ சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்..( என்ன தான் பெயர் மாற்றி விட்டாலும் மனதின் சென்டரில் பதிந்துள்ளது இன்னும் சென்ட்ரல் தான் ) மாலை மணி 7.00. மன்னிக்கனும்...மணி 19.00 கலைத்து விட்ட கரையான் கூட்டம் போல ரயிலில் இருந்து இறங்கி சிதறி ஓடி கொண்டிருக்கும் களைத்து போன மனிதர்கள் ...ரயிலை பிடிக்க ரயிலை விட வேகமாக ஓடி கொண்டிருக்கும் மனிதர்கள்... இவர்களுக்கு இடையே..அதோ அந்த காபி ஷாப்பில் இரண்டு காபி வாங்கி கொண்டிருக்கும் அவன்... முகில் அல்ல ..முகிலின் நண்பன் டேனியல்.. அந்த இரண்டாவது காபியை 5 நிமிட எதிர்காலத்தில் சொந்தமாக்க  போகும் நான் ... நான் தான் முகில். நான் நமது நாட்டின் லட்ச கணக