Posts

Showing posts from August, 2017

'Imax எனும் அசத்தல் தொழில்நுட்பம் "

Image
'Imax எனும் அசத்தல் தொழில்நுட்பம் ரா.பிரபு. நிறைய ஆங்கில படங்களின் போஸ்டரில் அடியில் Imax என்று போட்டு இருப்பதை பார்த்து இருப்பீர்கள். அது என்ன அந்த imax என்பதை யோசித்து இருக்கிறீர்களா. அது ஒரு அசத்தல் தொழில் நுட்பம். அந்த தொழில் என்ன ஏது என்பதை பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். Image maximum என்பதன் சுருக்கம் தான் இந்த imax . நாம் சாதாரணமாக பார்க்கும் படத்திற்கும் இதற்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று கேட்டீர்களேயானால்....  எல்லாமே வித்யாசம் தான். ஒரு கருப்பு வெள்ளை படத்திற்கும் கலர் படத்திற்கும் உள்ள வித்தியாசத்தை விட அதிகம் வித்யாசம் என்று கூட சொல்லலாம். பீரங்கி குண்டுகளை பீரங்கியில் வைத்து தான் சுட முடியும்.... கைத்துப்பாகியில் அல்ல... அது போல imax தொழில் நுட்பத்தில்.. imax கேமரா வை கொண்டு எடுக்க பட்ட படத்தை பார்க்க imax திரையில் தான் முடியும். அந்த திரை எந்த வகையில் நம்ம சாதா திரையில் இருந்து மாறுபட்டது ?? முதலில் அதன் பிரமாண்டம்.....குறைந்த பட்சமாக 16 மீட்டர் உயரம்...22 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட திரை இது (52 அடி உயரம் ...72 அடி அகலம் அதாவ

"குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்''

Image
" குற்றவாளிகளின் சுவாரஷ்ய கதைகள்'' ரா.பிரபு குற்ற உலகில் யார் பெரியவர்? போலீஸா ?குற்றவாளியா ? கெத்து காட்டுவது யார் ? என்ற கேள்வி க்கு எப்போதும் கலவையான பதில்கள் தான் கிடைக்கும். சில நேரம் குற்றவாளிகளின் கை ஓங்கி இருக்கும் போலீசுக்கு தண்ணி காட்டிய குற்றவாளிகள் என்று பத்திரிகைகளில் பார்த்து இருக்கலாம் ஆனால் சில நேரம் மிக திறமையாக செயல் பட்டு குற்றவாளியை பிடித்தது போலீஸ் என்றும் பத்திரிக்கையில் வரும். எனவே இது ஒரு முடிவில்லா விளையாட்டு திருடன் போலீஸ் விளையாட்டு... இந்த விளையாட்டில் நிறைய சுவாரஷ்யங்கள் அவ்வபோது இருதரப்பிலும் இருந்திடும். சில நேரம் குற்றவாளிகளின் திறமை வாய் பிளக்க வைக்கும் சில நேரம் காவல் துறையின் திறமை ஆச்சர்ய படுத்தும். இன்று சிக்கிய சில குற்றவாளிகளின் சில சுவாரஷ்ய சம்பவங்களை பார்க்க போகிறோம். நிஜ குற்ற சம்பவங்கள் பார்க்கும் முன் ஒரு கதையை சொல்கிறேன்... இதை கிராம புறத்தினர் பல பேர் கேள்வி பட்டு இருக்கலாம். வாய் வழியாக சொல்ல படும் கதை இது.(இப்படி ஒரு க்ரைம் ஸ்டோரி யார் எழுதினது தெரில) கதை இது தான். ஒரு விவசாயி இரவில் நிலா ஒளியில் படுத்து இரு
Image
"குவாண்டம் எனும் கடல்" (Full part) (அணு உலகிற்குள் ஓர் ஆய்வு பயணம்) அறிவியல் காதலன் ரா.பிரபு அறிவியல் உலகில் எத்தனை ஆயிரம் அறிவியல் கோட்பாடுகள் வந்தாலும் இன்றளவும் அறிவியல் உலகை ஆட்டி படைத்து கொண்டு இருப்பது இரண்டு கோட்பாடுகள் தான். ஒன்று ஐன்ஸ்டைனின்-"ஜெனரல் ரிலேடிவிட்டி " இனொன்று -"குவாண்டம் பிஸிக்ஸ்." இதில் ரிலேடிவிட்டி பிரமாண்ட நட்சத்திரம் , பிளாக் ஹோல், க்ராவிட்டி, ஸ்பேஸ் டைம் , என்று பெரிது ...பெரிதினும் பெரிது என்று சென்று உண்மைகளை ஆராய்கிறது. குவாண்டம் தியரியானது அணுக்கள் அதற்குள் உட்கரு, அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகள், அதற்குள் ஒற்றை ஸ்ட்ரிங் ,அதிலும் நுணுக்கமாக வெறும் எனர்ஜி ஃபார்ம்... என்று சிறிது.... சிறிதினும் சிறிது என்று சென்று உண்மைகளை ஆராய்கிறது. இந்த இரண்டு பெருந்தலை கோட்பாடுகளும் அப்படி என்ன தான் விளக்குகின்றன என்று பார்த்தால் அடிப்படையில் அவை இரண்டும் ஒரே விஷயத்தை தான் விளக்குகின்றன. அதாவது இந்த பிரபஞ்சத்தின் இயல்பை ..அதன் இருப்பை அதன் இயங்கு தத்துவத்தை... ஆனால் இரண்டும் தனக்கே உரிய பாணிகளில் தனித்து இவைகளை செய்கி