Posts

Showing posts from November, 2016

"நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா"

Image
"நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா" அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு) நீங்கள் இதை யோசித்து இருக்கிறீர்களா? அதாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை உண்டு, ஒவ்வொரு விதமான கருத்து உண்டு உங்களுக்கு மிக பிடித்த ஒன்றுதான் யாரோ ஒருவருக்கு மிக பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இனொருத்தர் ஒஸ்ட் உங்களது பெஸ்ட் ஆக இருக்கிறது. ஆனால் பொதுவாக நீங்கள் சில விஷயத்தை போற்றுகிறீர்கள், சில விஷயத்தை தூற்று கிறீர்கள். சிலதை கொண்டாடு கிறீர்கள் சிலதை வெறுகிறீர்கள். சில விஷயங்களை செய்வதில் பெருமை கொள்கிறீர்கள், சில விஷயங்களை செய்வதில் சிறுமை கொள்கிறீர்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட ரசனை அல்லவா..... ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. நீங்கள்  எதை போற்ற வேண்டும் எதை கொண்டாட வேண்டும் எதை வெறுக்க வேண்டும் எதில் பெருமை கொள்ள வேண்டும் எதை சிந்திக்க வேண்டும் எதை அழகு என்று ரசிக்க வேண்டும் என்பதை எல்லாம் யாரோ நாலு பேரால் முடிவு செய்யப்பட்டதாய் இருந்தால்??? நாலு சுவற்றுக்குள் சில பெயரால் பக்கா ஸ்கெட்ச் போட்டு வரைபடம் வரைந்தமாதிரி உங்கள

முத்ரா ( இருள் உலகம் வருக)

Image
#முத்ரா(இருள் உலகம் வருக) நண்பர்களுக்கு வணக்கம் ! வழக்கமாக அறிவியல் கட்டுரைகளை தவிர்த்து, இம்முறை அமானுஷ்யத்தை....ஒரு கற்பனை குறுந்தொடரை ...முயற்சித்து உள்ளேன்...            #முத்ரா(இருள் உலகம் வருக)                                       (அத்தியாயம் 1) (கதை, கற்பனை , எழுத்து : ரா.பிரபு) "யுகம் யுகமாக அவர்கள் வருகிறார்கள்.... என்றும் உங்களோடு...... மக்களோடு மக்களாக..... அவர்கள் இருள் உலக மாந்தர்கள்.... காத்திருக்கிறார்கள் தங்கள் சக்தியூட்ட படுவதற்கு.... ஒவ்வொரு முறை அந்த சிகப்பு பவுர்ணமி வரும் போதும்... அவன் காத்திருக்கிறான்.... கருப்பு உலகின் தலைவன்... மரணத்தின் பிரதிநிதி.... அவன் பெயர் ................" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அது ஒரு மாலை நேரம் அதீத மேதாவிகள் மெத்த படித்தவர்கள் கர்வம் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்ல படுகிறது... அதனால் தானோ என்னமோ உலக அறிவுகளை தன்னகத்தே கொண்டுள்ள அந்த நூலகம் அவ்வளவு அமைதியாக இருந்தது.... அந்த மூலை பெஞ்சில் இருவர்.. அவர்களை பார்த்தாலே சொல்லி விடலாம் காதலர்கள் என்று... அவர்கள் வெட்கமும் ..

"மரணம் துரத்திய பயணிகள் "

Image
மரணம்_துரத்திய_பயணிகள் அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும்: ரா.பிரபு) ஏப்ரல் 15 1912 அதிகாலை வட அடலான்டிக் கடலில் நடந்த டைட்டானிக் என்ற சரித்திர சோகத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும்... அதில் பயணம் செய்த 2224 பயணிகளில் உயிர் தப்பியவர்கள் 705 பேர். 1997 இல் வெளிவந்து சக்கை போடு போட்ட டைட்டானிக் திரை படம் மூலம் இந்த தகவல்கள் எல்லாம் உலகில் பல பேருக்கு தெரிய வந்தது... ஆனால்.. அந்த உயிர் தப்பிய பயணிகளில் பல பேருக்கு அதன் பின் நிகழ்ந்ததை பற்றி நம்மில் பல பேருக்கு தெரியாது. குறிப்பாக டைட்டானிக் இல் உயிர் தப்பிய பல பேர் அடுக்கடுக்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்ய படுவீர்கள் உதாரணமாக ... டைட்டானிக் மூழ்கி 6 மாதம் கழித்து. ஏனே ராபின்சன் என்ற பெண்மணி ...நீராவி கப்பலில் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.. அவர் டைட்டானிக் இல் ஸ்டீவாய்டிங் வேலை செய்தவர்.. வாஷிங்டன் டாட்ஜ் என்பவர் 1919 இல் தன்னை தானே சுட்டு கொண்டு தன் உயிரை மாய்த்து கொண்டார். 1927 இல் ஹென்றி வில்லியம் ஒரு மருத்துவமனையின் 7 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொ

"சார்பியல் எனும் சமுத்திரம் '(full part)

Image
"சார்பியல் எனும் சமுத்திரம்..."  (ஐன்ஸ்டைனின் கடினமான சார்பியல் தத்துவம் "theory of relativity" எளிய தமிழில்........) அறிவியல் காதலன் ரா.பிரபு (பாகம் 1 : ஐன்ஸ்டைன் எனும் அப்பாடக்கர் ) பூக்களை பற்றி யாரவது பேச விரும்பினால் ரோஜாவை விட்டு விட்டு பேச முடியாது என்பதை போல தான் அறிவியல் காதலர்களால் தவிர்க்க முடியாத அற்புதம் ஐன்ஸ்டைன்...ஜெர்மனி யில் பிறந்தார் லண்டன் இல் வாழ்ந்தார் என்பதை போல இல்லாமல் அவரை பற்றி சில ஆச்சரியம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்... என்னுடன் சேர்ந்து வாருங்கள்... ஐன்ஸ்டைன் என்னும் "அப்பாடக்கர்" ஐன்ஸ்டைன் பற்றி நான் பேசும் முன் உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி.. உங்கள் மூளையை எத்தனை சதவீதம் நீங்கள் பயன் படுத்து கிறீர்கள் என்பதை...மூளையை பயன்படுத்தி சொல்ல முடியுமா? உலகின் மொத்த வரலாற்றில் அதிகமாக சிந்தித்த மனிதர் அதாவது அதிகம் மூளையை பயன் படுத்திய மனிதர் என்று வர்ணிக்க படும் மனிதர் தான் அல்பர்ட் ஐன்ஸ்டைன்....அதாவது மொத்த மனித குல வரலாற்றில்...என்றால் ஆயிரத்தில் ஒருவர் போல இவர் எத்தனை கோடியில் ஒர