கால பயணம் சாத்தியம் என்ன (பாகம் 4) (மாயை)

கால பயணம்
சாத்தியம் என்ன (பாகம் 4)
(மாயை)

அறிவியல் காதலன்

(கருத்தும் எழுத்தும் :ரா.பிரபு)

மகா விஷ்ணு ஒரு முறை நாரதருடன் வாக்கிங் சென்று கொண்டு இருந்த போது, நாரதர் விஷ்ணு விடம் ,
"ஏன் சார் இந்த மாயை ..மாயை என்கிறார்களே அது இன்னா மேட்டர்" என்று கேட்டு வைக்க...
"அது அப்புறம் சொல்றன் மொதல்ல எனக்கு செம தண்ணி தாகம் ..மொதல்ல எங்கனா போய் கொஞ்ச தண்ணி பிக் அப் பண்ணிட்டு வாயேன் ப்ளீஸ்"
என்று கேட்க.. நாரதர் அங்கே அருகில் இருந்த ஆற்றில் தண்ணி பிடிக்க சென்றார்..
அங்கே...
 தண்ணி யுடன் சேர்ந்து ஒரு அழகிய கண்ணியையும் கண்டு கவுதம் வாசுதேவ் எஃபக்டில் கண்டதும் காதல் ஆகிவிட  கண்ணனை மறந்து கண்ணி பின்னால் போய்விடுகிறார் .
பிறகு அவளை திருமணம் செய்து கொள்கிறார் ..வாழ்க்கை நடத்துக்குகிறார் ..ரேஷன் கடைக்கு போகிறார் ..பாங்க் சென்று 500, 1000 சில்லறை மாற்றுகிறார்..
இப்போது அவர்களுக்கு 4 பிள்ளைகள் ..

ஒரு நாள்.....

சரியான மழை வந்து ஊரெல்லாம் வெள்ளம்... இவர் வெள்ளத்தில் மாட்டி தத்தளித்து.. ஒரு வழியாக வீட்டை அடைந்தால் ...அங்கு நான்கு பிள்ளைகள் பிணமும் வெள்ளத்தில் அடித்து செல்கிறது ..அழகிய மனைவியும் வெள்ளத்தில் சிக்கி இறந்து விட்டார்.
துக்கம் தொண்டை அடைக்க அழுது அப்படியே மயக்கமாகி விழுகிறார் .
 பிறகு திடீரென கண்விழித்து பார்த்த போது .. வெள்ளம் .. மனைவி மக்கள் ஏதும் அங்கு இல்லை .
அங்கே இருந்தவர் மகா விஷ்ணு மட்டும் தான் "தம்பி ..தண்ணி இன்னும் வரல.." என்று நின்றிருந்தார் .
"யோவ் இப்போ என்னணமோ நந்துச்சே அதுல எதுயா உண்மை " என்று நாரதர் கேட்க...
மகா விஷ்ணு சிரித்து கொண்டு ஏதும் அல்ல .. நான் இன்னும் தாகமா இருக்கேன் என்பது மட்டும் தான் உண்மை என்கிறார்...
"அப்போ அது எல்லாம்" நாரதர் கேட்க..
"எல்லாம் மாயை" என்று ஒலிக்கிறது மஹா விஷ்ணுவின் குரல்.

இப்படி ஒரு கதை நமது புராணத்தில் சொல்ல பட்டிருக்கிறது....
(கொஞ்சம் modify பண்ணி இருக்கன்)
இது மாயை யை விளக்க சொல்ல பட்ட கதையாக நமக்கு சொல்ல பட்டாலும்
இது பக்கா சார்பியல் கோட்பாடு கதையாக.. சொல்ல போனால் time travel ...மற்றும் வேற டைமன்ஷன் ..மாதிரி கதையாகவே நமக்கு தோன்றுகிறது...

விஞ்ஞாணிகளால் காலம் பலவகை சாத்திய கூறாக பார்க்க பட்டு கொண்டிருக்க இது குறித்த மெய்ஞானிகள் பார்வை என்ன தெரியுமா ... ??
அவர்களை பொறுத்த வரை காலம் என்பது ஒன்று இல்லை...
அல்லது வேறு விதமாக சொல்லவேண்டும் என்றால் நமக்கு கடந்த ...நிகழ்....மற்றும் எதிர் ..என மூன்றாக தெரிவது அவர்களை பொறுத்த வரை ஒரே காலம் தான் ..நமக்கு ஆயிரம் ஆண்டு கடந்த காலமாகட்டும் அல்லது 2500 ஆண்டு எதிர் காலமாகட்டும்... அவர்களுக்கு எல்லாமே நிகழ் காலத்தில் தான் நடக்கிறது..
இதை விளக்க ஓஷோ தனது: "பகவத் கீதை சாராம்சம் பார்ட் 2 சாங்கிய யோகம் "  என்ற புத்தகத்தில் ஒரு அருமையான எடுத்து காட்டு சொல்லி இருந்ததை படித்தேன்..

அது....

வண்டி ஒன்று வருவதை ஒரு மரத்தில் மேலே இருந்து ஒருவனும் அந்த மரத்திற்கு கீழே நின்று ஒருவனும் பார்க்கிறார்கள்...
மேலே இருப்பவன் அதோ வண்டி வருது என்கிறான் அவனுக்கு நிகழ் காலத்தில் வண்டி ஓடுகிறது.
ஆனால் கீழே உள்ளவன் எங்கே தெரிலேயே என்கிறான் அவனை பொறுத்த வரை வண்டி எதிர் காலத்தில் உள்ளது.பிறகு கொஞ்ச நேரத்தில் வண்டி நெருங்கிய உடன் அடடே வண்டி வருது என்கிறான் இப்போ அவனுக்கு வண்டி நிகழ் காலத்தில் ஓடுகிறது...'ஆமாம் வண்டி ஓடுது' என்கிறான் மேலே இருப்பபவன் அவனுக்கு இப்பவும் நிகழ் காலம் தான்..
பிறகு சிறிது நேரம் சென்ற பின் வண்டி கடந்து விட்டது என்கிறான் கீழே உள்ளவன் அவனுக்கு இப்போ வண்டி கடந்தகாலம் ஆகிவிட்டது...
ஆனால் மேலே உள்ளவன் இப்பொழுதும் வண்டி ஓடுவதை நிகழ் காலத்திலேயே காண்கிறான்...
இப்படி தான் ''மேலே இருப்பவனு''க்கு எப்போதுமே  எல்லாமே நிகழ் காலம் தான்.

கால பயணத்தின் பல வித சாத்திய கூறை கடந்த பாகங்களில் ஆராய்ந்து வரும் நாம் இந்த அத்தியாயத்தில் காலத்தில் பயணம் செய்வது என்பது ஒரு மாயை என்று சொன்னால் நமக்கு கொஞ்சம் ஏமாற்றம் அளிக்கிறது..
எனவே அடுத்த சாத்தியத்திற்கு போவோம்...

நீங்கள் டெர்மினேட்டர் படம் பார்த்திருப்பீர்கள் அதில் ஆரம்ப பாகங்களில் ஒரு infinity loop பயன் படுத்தி இருந்ததை நீங்கள் கவனித்து இருக்கலாம்..
அதாவது...
எதிர்காலத்தில் நம்மை அடக்கி ஆள போகும் A.I அறிவு கொண்ட மிஷின்களின் ராஜ்யத்தை அழிக்கும் வல்லமை கொண்ட ஒரே மனிதரான' ஜான் காணர்,  தனது தாய்கு கடந்த காலத்தில காலபயனம் செய்து சென்றுள்ள ஒரு ரோபோவால் ஆபத்து என்பதை உணர்ந்து தனது காலகட்டத்திலிருந்து ஒரு மனிதரை தன் தாயை பார்த்துக்க சொல்லி கடந்த காலத்திற்கு அனுப்புகிறார் அவர் அந்த பெண்ணை சந்தித்து லவ் ஆகி கட்டி கொள்கிறார் .. என்ன விசேஷம் என்றால் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறகிறது அந்த குழந்தை தான் ஜான் ஓ காணர்..
அதாவது இவர் எதிர்காலத்திலிருந்து வராமல் போய் இருந்தால் ஜான் காணர் என்ற ஒருவன் இல்லை....
அப்படியே இன்னொரு முனையிலிருந்து பார்த்தால்.. ஜான் காணர் என்ற ஒருவனே இல்லை என்றால் இவர் எதிர் காலத்தில் இருந்து வந்திருக்க போவதே இல்லை...
(Infinity loop புரிகிறதா) புரியாதவர்கள் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள் புரியும்.

பொதுவாக கால பயணம் எதிர் காலத்தில் போக வேணா சாத்தியம் ஆனால் கடந்த காலத்திற்கு போவது சாத்தியம் இல்லை என்று பலரும் நம்புவதை பார்த்திருக்கலாம் அதற்கு காரணம் கடந்த காலம் என்பது தான் போய் விட்டதே... என்ற சிந்தனையாக இருக்கலாம்.
மேலும் இன்னொரு நடைமுறை பிரச்னை ஒன்றை சொல்லி இருந்தேன் "grand father paradox.."
அதன் படி தனது கடந்த காலத்திற்கு ஒருவன் சென்று தனது உற்பத்தி சோர்ஸ் ஆன தன் தாத்தாவை கொன்று விட்டால் என்னாகும் என்று சொல்லி இருந்தேன் இவன் தாதாவே இல்லை எனும் போது அப்புறம்  இவன் என்ன ஆவான் ..எப்படி தப்புவான்??
 'இவன் தாத்தாவே வந்தாலும் இந்த முரண்பாட்டில் இருந்து தப்ப முடியாது '
என்று நீங்கள் நம்பி இருந்தால் ... மன்னிக்கவும் இவனால் முடியாது ஆனால் குவாண்டம் அணுவிற்கு இந்த முரண்பாடு ஜுஜுபி...(எப்படி அது..என்ற யூகம் இருந்தால் வாசகர்கள் comment இல் தெரிவிக்கலாம்)
அது எப்படி முடியும் என நீங்கள் கேட்டால்...அதை விளக்க உங்களுக்கு குவாண்டம் பிஸிக்ஸ் சொன்னால் தான் புரியும் என்று நான் சொன்னால் நீங்கள் ஏகத்திற்கு டென்ஷன் ஆவீர்கள் என்பதால்...
அடுத்த பார்டில் சத்தியமாக சொல்லி விடுகிறேன்..
(அடுத்த பகுதி இறுதி பகுதி)

'பின்னூட்டத்தை மறக்காதீர்க்கள்..'

உங்கள் நண்பன்
அறிவியல் காதலன் ..ரா.பிரபு

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"