"சார்பியல் எனும் சமுத்திரம் '(full part)




"சார்பியல் எனும் சமுத்திரம்..." 

(ஐன்ஸ்டைனின் கடினமான சார்பியல் தத்துவம் "theory of relativity" எளிய தமிழில்........)

அறிவியல் காதலன்
ரா.பிரபு


(பாகம் 1 : ஐன்ஸ்டைன் எனும் அப்பாடக்கர் )

பூக்களை பற்றி யாரவது பேச விரும்பினால் ரோஜாவை விட்டு விட்டு பேச முடியாது என்பதை போல தான் அறிவியல் காதலர்களால் தவிர்க்க முடியாத அற்புதம் ஐன்ஸ்டைன்...ஜெர்மனி யில் பிறந்தார் லண்டன் இல் வாழ்ந்தார் என்பதை போல இல்லாமல் அவரை பற்றி சில ஆச்சரியம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்...
என்னுடன் சேர்ந்து வாருங்கள்...

ஐன்ஸ்டைன் என்னும் "அப்பாடக்கர்"

ஐன்ஸ்டைன் பற்றி நான் பேசும் முன் உங்களுக்கு ஒரு சின்ன கேள்வி..
உங்கள் மூளையை எத்தனை சதவீதம் நீங்கள் பயன் படுத்து கிறீர்கள் என்பதை...மூளையை பயன்படுத்தி சொல்ல முடியுமா?
உலகின் மொத்த வரலாற்றில் அதிகமாக சிந்தித்த மனிதர் அதாவது அதிகம் மூளையை பயன் படுத்திய மனிதர் என்று வர்ணிக்க படும் மனிதர் தான் அல்பர்ட் ஐன்ஸ்டைன்....அதாவது மொத்த மனித குல வரலாற்றில்...என்றால் ஆயிரத்தில் ஒருவர் போல இவர் எத்தனை கோடியில் ஒருவர்? 

அவர் இறந்த பின் அவர் மூளையை பதப்படுத்தி கண்ணாடி ஸ்லைடில் சின்னதாக இரண்டு மூன்று பகுதியாக்கி .."இது மட்டும் இப்படியெல்லாம் எப்படி யோசிச்சது" என்று இன்றளவும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் .

mattar musiam penisulveniya வில் இன்னும் அவர் மூளை பத்திரமாக உள்ளது..(ஒரு சராசரி மனிதன் ...அதாவது நீங்களும் நானும் எத்தனை சதவீதம் தன மூளையை பயன் படுத்துகிரோம் என்பதை சொன்னால் நீங்கள் சண்டைக்கு வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகிறேன்)
இப்போது ஐன்ஸ்டைன் பற்றி திடீரென கட்டுரை எழுத காரணமென்ன என்பதை நான் கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்...
முதலில் ஐன்ஸ்டைன்...
உங்களிடம் யாரவது எடிசன் என்ன கண்டுபிடித்தார் என்றால் உடனே 'பல்பு 'போட்டார் போல பல்பு என்று பதில் சொல்லி விடுவீர்கள்..

மாற்கொணி என்றால் மறக்காமல் ரேடியோ என்பீர்கள்...கிரஹாம் பெல் என்றால் பெல் அடித்தால் போல் போன் என்பீர்கள்...ராண்ட்ஜ்ன் :எக்ஸ் கதிர். நியூட்டன் : ஈர்ப்புவிசை.

ஆனால் போகிற போக்கில் ஒரு பத்து பேரிடம் ஐன்ஸ்டைன் எதை கண்டு பிடித்தார் என கேட்டு பாருங்கள்..அதில் 6 பேர் தெரியாது என்பார்கள்....
மீதி நாலு பேர் ..லைட்டாக தியரி ஆப் ரிலேடிவிடி என்பார்கள்....அப்படி என்றால் என்ன என்று அவர்களை திருப்பி கேட்டால்...அவர்கள்
'திரு திரு ' என்பார்கள்.....

வரலாற்று விஞ்ஞாணிகளில் தனி இடம் பிடித்துள்ள ஒருவர் என்ன கண்டு பிடித்தார் அவர் செய்த சாதனை தான் என்ன என்பதை பல பேருக்கு தெரியாததற்கு காரணம் உண்டு...

The photo electric effect என்ற கண்டுபிடிப்பிற்கு ஐன்ஸ்டைனுக்கு நோபல் பரிசை கொடுத்த போது....
ஐன்ஸ்டைன் தனக்கு தானே கொஞ்சம் நொந்து கொண்டார்...இந்த முட்டாள் மக்களை என்னத்த சொல்ல என்று..

காரணம் தனது மிக அற்புத கண்டுபிடிப்பாகிய" theory of relativity "கு முன்னால் இது யானை முன் பூனை போல்...அப்படி இருக்கும் பொது பூனைக்கு பரிசு கொடுக்கப்பட்டதற்கு காரனம்.. யானையை பற்றி மக்களுக்கு ஒன்றுமே புரிய வில்லை என்பது தான்...
ஐன்ஸ்டைன் இருந்த கால கட்டத்தில் theory of relativity பற்றி சும்மா பேச வேண்டும் என்றாலும் கூட அதற்கு தகுதியானவர்கள் உலகத்தில் ஒரு 5 பேர் தான் இருப்பார்கள்...
இது ஐன்ஸ்டைனே சொன்னது...

அவர் ஆராய்ச்சிக்கு எடுத்து கொண்ட பொருள் மற்ற அராய்ச்சியாளர்களை விட பெரியது ...மிக மிக பெரியது... அவர் எடுத்து கொண்ட பொருள் இந்த அண்டம் (யூனிவர்ஸ்) எந்த ஒரு கருவிக்கும்...மெஷினுக்கும் ...ஒரு இயங்கு தத்துவம்..(working principal) இருப்பதை போல இந்த மொத்த அண்ட சராசரமும் எப்படி இயங்குகிறது என ஆராய முற்பட்டார் அவர்...

விளைவாக சில கோட்பாடுகளை வெளியிட்டார் ...என்ன ஆதாரம் இந்த கோட்பாடுகளுக்கு இது உண்மை என எப்படி ஆய்வு செய்தீர் எப்படி நிரூபிபீர் என கேட்டவர்களுக்கு  உதட்டை பிதுக்கினார்...
இது உண்மை ..அவ்ளோதான் சந்தேகம் இருந்தால் பரிசோதித்து பார்த்து கொள்ளுங்கள்..என்றார்..

அவர் சொல்ல வந்த உண்மைகளை கேட்டவர்கள் தலை கிறுகிறுத்து போனார்கள் ..
"தண்ணியில் உளறுறார் "என விமர்சனம் செய்தார்கள்...
கோட்பாடுகள் அப்படி இருந்தன..

சரி அவர் சொன்னது ஆராய்ச்சி செய்து பார்ப்போம் என களம் இறங்கியவர்கள் அந்த காலத்தில் அதை ஆராய தொழில் நுட்பம் போதாமல் தவித்தார்கள்....
இந்த மனுஷனை நம்பலாமா வேண்டாமா என உலகம் சந்தேக கண்ணோடே அவரை பார்த்து கொண்டு இருந்தது....

பல ஆண்டுகள் கழித்து தொழில் நுட்பம் முன்னேறிய பின் அவர் சொன்னதை ஆய்ந்து பார்த்தவர்கள் ஆச்சர்யத்தில் அதிர்ந்து போனார்கள்....அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம் அவர் கண்டு பிடித்த அந்த உண்மைகள் அல்ல...
மாறாக இப்படி பட்ட மகா உண்மைகளை எந்த ஒரு ஆராய்ச்சி சாதனமும் இல்லாமல் இந்த மனிதரால் எப்படி கண்டு கொள்ள முடிந்தது என்ற ஆச்சர்யத்தில் தான் அவர்கள் மூழ்கி போனார்கள்..

அந்த மறைகழன்ற போன்ற மனிதன்...ஒரு அசாதாரண அப்பாடக்கர் என கண்டு கொண்டார்கள்...
அவர் சொன்ன உன்மை.....அது இது வரை யாரும் சிந்திக்க கூட துணியாதது...கற்பனை கூட பண்ண முடியாதது...
அவருடைய E=MC ²பார்முலா தான் உலகத்திலேயே மிக சிறிய பார்முலா...ஆனால் உலகத்தின் மிக பெரிய உண்மைகளை எடுத்து சொல்லும் பார்முலா...

 நட்சத்திரங்கள்.. நம் சூரியன்..எப்படி எரிகிறது அதற்கு எனர்ஜி எப்படி உருவாகிறது....விடை E=MC ²

 Space time என்றால் என்ன அது தன் பாதிப்பை எப்படி ஏற்படுத்து கிறது...விடை E=MC ²

ஒளி வேகத்தில் பிரயாணம் செய்தால் என்ன நடக்கும் விடை E=MC ²
                 
காலதை நிறுத்தி வைக்கும் ஈர்ப்பு விசை எப்படி இருக்கும் விடை ...அதே...
.
நியூட்டன் கண்டு சொன்ன ஈர்ப்பு விசைக்கு எல்லாம் இவர் சொன்ன விளக்கம் மிக புதுமையாக... ஆழமான உண்மையாக இருந்தது .

அப்படி என்னதான் யா இருக்கு theory of relativity ல ....??

என்ன உண்மைய தான் அவர் கண்டு தொலைத்தார்....??

E=MC ²என்ற சங்கத்தியில் அப்படி என்னதான ஒளிந்து  இருக்கிறது .??

இனி எழுத போவது அதை பற்றி தான்.
அதற்காக தான் ஐன்ஸ்டைன் அறிமுகம்

 தொடர்ந்து  வாருங்கள்...
சார்பியலுக்குள் நுழையலாம்.

தொடரும்.........

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சார்பியல் எனும் சமுத்திரம் 
(பாகம் 2)
          

உலக வரலாற்றின் மிக பெரிய விஞ்ஞானியான ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவமும் (theory of relativity) ..
மேலும் அவர் கண்டு பிடித்த சில கோட்பாடுகளும் ..மற்றும் அவரது trade மார்க் formula  E=MC² உம் அறிவியல் உலகின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்த சங்கதிகள்.

நம் புருவத்தை உயர்த்த செய்து நம்மை அச்சயர்யத்தில் ஆழ்த்தி பிறகு பிரமிப்பை கொடுக்க கூடியவைகள். அவரது சில கண்டுபிடிப்புகளை கோட்பாடுகளை அவர் கண்டறிந்த உண்மைகளை ..எளிமையாக ஆனைவருக்கும் புரியும் படி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம்..

சமுத்திரதுக்குள் மூழ்கும் முன்:

நான் அழைத்து செல்ல இருக்கும் சார்பியல் எனும் சமுத்திரத்தை அணுகும் முன் சில முன்னெச்சரிக்கைகளை முன்னேற்பாடுகளை நான் செய்தாக வேண்டும்...

1) இக்கட்டுரையின் நோக்கம் அறிவியலை மிக எளிமையாக விளக்க வேண்டும் என்பது.. எனவே சில இடங்களில் குழந்தை தனமான எடுத்துகாட்டுங்கள்....விளையாட்டு தனமான விளக்கங்கள் இருக்கலாம் ..இந்த subject பற்றி நன்கு தெரிந்தவர்கள்..கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள்..(.சுத்தமாக ஒன்னும் தெரியாதவனை மனதில் கொண்டே நான் அறிவியல் எழுதுகிறேன். என்பதால் சில இடங்களில் அவன் மொழிக்கு அவன் வழிக்கு நான் இறங்கி செல்ல வேண்டி இருக்கிறது)

2) இந்த தலைப்பு உண்மையிலேயே பல பேர் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒரு சமுத்திரம்...நான் அறிமுகம் செய்ய போவது சில துளிகளை தான்...விரிவாக கடலை ஆராய விருப்பம் உள்ளவர்கள் அறிவியல் அறிஞர்களின் கட்டுரையை தேடி படியுங்கள்...நான் வெறும் ஆச்சர்யத்தை பகிர்ந்து கொள்ளும் சக பயணி....
உலகை வியந்து நோக்கும் குழந்தை....
சரி தயாரா இனி சார்பியல் கோட்பாடு என்னும் சமுத்திரத்தில் இறங்குவோமா....

சார்பியல் எனும் சமுத்திரம்:

முதலில் ஒரு சாதா உண்மைக்கும் சார்பியல் உண்மைக்கும் உள்ள வேறுபாடு என்ன வென்பதை தெரிந்து கொள்வோம்...
மற்ற அறிவியலாளர்கள் சாதா உண்மையை விளக்கும் போது ஐன்ஸடீன் சார்பியல் உண்மையை பேசுவதுதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறு படுத்துகிறது...

உதாரணமாக உங்கள் கைகளில் நான் ஒரு பணிகட்டியை வைத்துவிட்டு இது குளிரான பொருளா இல்லை சூடான பொருளா என கேட்டால் என்ன சொல்லுவீர்கள்...??
இதற்க்கு என்ன ஆராய்ச்சி வேண்டி கிடக்கு..இது குளிர்ச்சியான பொருள் தானே..என்பீர்கள்...உங்களுக்கு இந்த கேள்வி கொஞ்சம் முட்டாள் தனமாக கூட தெரிந்திருக்கும்.
ஆனால் உஷார்...ஐன்ஸ்டைன் போன்ற மாமேதைகளுடன் பழகும் போது முதலில் முட்டாள் தனமாக தெரிவது எல்லாம் பிறகு அதிமேதவி தனமாக தெரியும் ..

காரணம் இந்த கேள்வியை ஐன்ஸ்டைனிடம் கேட்டால் அவர் அது குளுர்ச்சியா இல்லை சூடா என்பது சார்புடையது என்பார்...
அதாவது பணிகட்டியை நீங்கள் குளுமையாக உணர்வதற்கு காரணம்...நீங்கள் சூடாக இருப்பது ....உங்கள் கை கிட்டத்தட்ட 30 டிகிரி இருப்பது தான்..
ஒரு பேச்சிற்கு இப்படி வைத்து கொள்ளுங்கள் நீங்கள் இயற்கையில் சூடானவர் இல்லை...குளிர்ச்சியான.. மிக மிக குளிர்ச்சியானவர் ..உங்கள் கைகளில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி...இப்போ உங்கள் கைகளில் 0 டிகிரி வெப்பத்தில் இருக்கும் பனிகட்டி வைக்கப்பட்டு அதே கேள்வியை கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ?

கண்டிப்பாக சூடா இருக்கு என்று தான் சொல்வீர்கள்..இதாங்க...சார்பியல் தத்துவத்தின் எளிய எடுத்துக்காட்டு..
இந்த அடிப்படை புரிந்தால் நீங்க சார்பியல் எனும் சமுத்திரத்தில் இறங்க தயார் என்று பொருள்.

சரி இந்த அடிப்படை நமக்கு சொல்வது என்ன???

ஒரு உண்மையை நீங்கள் அவ்ளோ சீக்கிரம் உண்மை என்று சொல்லிவிட முடியாது...காரணம் அந்த உண்மை பார்க்க படுவர் மற்றும் பார்க்க  படும் பொருளின் பல்வேறு நிலைகள் மற்றும் சூழ்நிலைகள் பொறுத்து ..சார்ந்து உள்ளது...(நம்ம வீட்டுப் பெண் நெறய பேசினா சுட்டி...பக்கத்து வீட்டுப் பெண் அதிகம் பேசினால் வாயாடி ...அப்படிதான்)

 சரி இப்போ நான் சொல்வதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்... ஒரு இருட்டில் அழைத்து போய் இது இருட்டா என கேட்டால் நமக்கு இருட்டுதான் ஆனால் நாமே ஒரு பாம்பாக பிறந்திருந்தால் அங்கே அகசிவப்பு ஒளி யில் எல்லா உயிரையும் பார்க்கலாம்.(பாம்பு ..முதலைகள்.. அகச்சிவப்பு கொண்டு இருட்டில் பார்க்கும்)அப்போ அங்கே இருப்பது இருட்டு என அறுதி இட்டு சொல்வது தவறு தான்  அல்லவா...? (நம்மை பொறுத்து தான் இருட்டு ஆனால் உண்மையில் அந்த இடம் இரட்டு அல்ல அல்லவா)

ஒரு அமைதியான நிசப்தமான இடம் உண்மையிலேயே நிசப்தமா? ..
அங்கே பரவி இருக்கும் மீயோலியை நாய் டால்பின் வௌவால் கேட்டக முடியும் நம்மால் முடியாது...
இப்படியே யோசித்து பார்த்தால் இந்த பிரபஞ்சத்தை நாம் புரிந்து கொண்டுள்ள படி நாம் உண்மைகள் என சொல்லி கொண்டிருக்கும் படி தான் இந்த பிரபஞ்சம் இருக்கிறதா...இல்லை இல்லவே இல்லை ..நாம் பெரிது என்று சொல்வது நிஜமாக பெரிது இல்லை. நாம் சிறிது என்று சொல்வது நிஜமாக சிறிது இல்லை.. எல்லாம் நம்மை பொறுத்து மட்டுமே இருக்கும் ஒரு சார்பு உண்மைகள்.
பெரிது சிறிது அழகு அசிங்கம் சூடு குளிர்ச்சி... வேகம் ..போன்ற எத்தனையோ விஷயங்களை நாம் இது இப்படி தான் என அறுதி இட்டு முடிவு கட்டி வைத்திருக்கின்றோம்.

ஆனால் உண்மையில் பிரபஞ்சம் இப்படியானது என்ற உண்மையை நம்மால் சொல்லவே முடியாது...காரணம் அது பார்க்க படுபவனை சார்ந்து மாறுபடும்...

நாம் உணர்வதை நமக்கு தெரிந்ததை நமது புரிதலின் நமது சிற்றறிவின் எல்லைக்கு உட்பட்டு அல்லது நமது சிறிய அனுபவத்தை அடிப்படையாக கொண்டு  தான் நாம் சொல்லுகிறோம். 
ஒரு மைக்ரோ செகண்ட் நமக்கு மிக குறைவு ஆனால் ஒரு மைக்ரோ செகண்டுக்கு மட்டும் தோன்றி அழியும் நுண்ணுயிரியை என்ன சொல்ல.. அதன் வாழ்நாள் அதை பொறுத்தவரை நாம் 100 ஆண்டு வாழ்நததை போல. 500 கோடி ஆண்டு என்று சொன்னால் நமக்கு மிக மிக மிக பெரிய காலம்.
ஆனால் ஒரு விண்மீனுக்கு அது மனிதனின் 40 வயதை கடந்தது போல.(நமது சூரியன் ஆயுட் காலம் மொத்தம்1000 கோடி ஆண்டுகள் அதில் 500 கோடியை அது கடந்து விட்டது).

ஐன்ஸ்டைனுக்கு முன் நாம் சில விஷயங்களை மாறாத ஒன்றாக கருதினோம்..
உதாரணமாக நியூட்டன் போட்ட சமண்பாடுகளில் நிறை மாற கூடியது... தூரம் மாற கூடியது... ஏன் ஈர்ப்பு விசைகூட மாற கூடியது தான் (ESCAP velacity ஒவ்வொரு கிரகத்துக்கு அளக்கும் போது ஈர்ப்பு விசை பூமியில் செய்ததை போல 9.8 per செகண்ட் ஐ பயன் படுத்த முடியாது) ஆனால் அவருடைய சமன் பாடுகளில் ஒன்றே ஒன்று மட்டும் மாறாமல் இருந்தது...அது தான் காலம்..ஆமாம் அது என்ன செய்தாலும் மாற போவது இல்லை தானே...நாம் முந்தை எடுத்து காட்டுகளில் பார்த்ததை போல ஒருவன் மைனஸ் 20 டிகிரி காரனாக இருந்தாலும்...அல்லது பாம்பு போல அக சிவப்பு பார்வை கொன்டிருந்த்தாலும் ..நாயாக இருந்தாலும் நரியாக இருந்தாலும் நெட்டையாக இருந்தாலும் குட்டையாக இருந்தாலும் ஒருவனுக்கு அரைமணி நேரம் என்பது எல்லாருக்கும் அரை மணி நேரம் தானே...காலம் மட்டும் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் ஒன்று தானே.?

அதான் இல்லை என்கிறார் ஐன்ஸ்டைன்.

உங்களுக்கு ஒரு மணி நேரம் ஓடிய காலம் உங்கள் நண்பருக்கு மட்டும் 15 நிமிடம் ஓட முடியும்...5 வருடம் கழித்து அவரை நீங்கள் சந்திக்கும் போது நீங்கள் 5 வருடம் கழிந்தவராகவும் அவர் மட்டும் 2 வருடம் கழிந்தவராகவும் இருக்க முடியும்...
அனால்  என்ன ...அதற்கு அவர் ஒளி வேகத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்...ஒளி வேகத்தில் பயணம் செய்யமுடியும் போது என்ன நடக்கும் ..?

ஒரு ட்ரெயின் வேகமாக ஓடுவதை நீங்கள் நின்ற இடத்தில இருந்து பார்க்கும் போது ஒரே கோடு போல பூசி மெழுகினாற்போல தெரியும் ஆனால் அந்த ட்ரெயின் வேகத்தில் நீங்களும் பக்கத்தில் பயணம் செய்து கொண்டு அந்த ட்ரைனை பார்த்தால் அதில் எந்த மாறுதலும் இல்லாமல் வண்டி நின்று கொண்டு இருப்பதை போல தெரியும் அல்லவா.
அதே போல ஒளி பரவும் போது நாமும் ஓளி யுடன் சேர்ந்து ஒளி வேகத்துலயே..பயணித்து கொண்டு அந்த ஒளி யை பார்த்தால் அது எப்படி தெரியும்..? இவ்ளோ வேகத்தில் (வினாடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோமீட்டர்) ஒளியாக தெரியும் அது அப்போது எப்படி தெரியும்...இந்த சிந்தனை வரும் போது அவருக்கு வயது 16.
ஐன்ஸ்டைனுக்கே சந்தேகம்னா அவர் யாரை போய் கேட்பது...நிலமை கொஞ்சம் கஷ்டம் தான்...அதனால் பின்னாளில் விடையை அவரே கண்டுகொண்டார்..

ஜேர்மன் ஆராய்ச்சி மாத இதழில் அவர் மொத்தம் 4 கட்டுரை களை எழுதினார் அந்த தம்மாம்துண்டு கட்டுரைகள்..உலகை புரட்டி போட்டன...பின்நாளில் குவாண்டம் கொள்கை உருவாக விண்வெளியை ஆராய நட்சத்திரத்தை புரிந்து கொள்ள காலம் மற்றும் வெளியை உணர்ந்து கொள்ள அந்த கட்டுரைகள் தான் அடிகோலிட்டன.
உங்களை சமுத்திரம் காட்டுவதாக அழைத்து வந்த நான் மன்னிக்கவும் இப்போ தான் கடற்கரைகே அழைத்து வந்திருக்கிறேன்

 உண்மையான கடல் ஆரம்பிப்பது ...அந்த கட்டுரைகளில் இருந்து தான் ...நான் உங்களிடம் இவ்ளோ நேரம் காட்டியது..வெறும் கடற்கரை மணல் தான்
அந்த கட்டுரைகள்...

1)முதல் கட்டுரை :ப்ரவுனியின் மோக்ஷன் சார்ந்தது..

2) ரெண்டாவது கட்டுரை :போட்டோ எலக்ட்ரிசிட்டி பற்றியது

3) மூன்றாவது கட்டுரை :   ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேடிவிட்டி..

4)நான்காவது :         ஜென்ரல் தியரி ஆப் ரிலேடிவிட்டி..

கடைசியாக அவரது trade mark equation...
E=MC ²

இனி வரும் கட்டுரைகளில்..மேலே சொன்ன நாலு பாய்ண்டை கொண்டு அறிவியலை கொஞ்சம் ஆழமாக அலசுவோம் வாருங்கள்.


தொடரும்...........






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~






"சார்பியல் எனும் சமுத்திரம்".(அத்தியாயம் 3)

யாரும் கற்பனைக்கூட பண்ணி இருக்க முடியாத பல உண்மை கருத்துக்களை ஐன்ஸ்டைன் எழுதிய போது அவர் ஒரு பேடன்ட் காப்பக அலுவலகத்தில் சாதாரண க்ளர்க்.. (இங்க்ரிமெண்டுக்கு எழுதி போட்டு நிராகரிக்க பட்டிருந்தார்)ஏதோ வார இதழ்க்கு கவிதை எழுதுவதை போல அலுவலக வேலைகளுக்கிடையே அவர் எழுதிய கட்டுரை..மஹா அறிவியல்..
அவர் எழுதிய 4 கட்டுரைகள் என நான் கடந்த கட்டுரையில் சொல்லி இருந்தேன் அதில்
முதலில் பிரவுனின் மோஷன் ஐ விளக்கும் ஒரு கட்டுரை....
 இது சார்பியல் கோட்பாடு அளவு சிக்கல் இல்லை...கொஞ்சம் எளிமையானது...

அரைகுறை இருட்டில் அமர்ந்து ஜன்னல் வழியே வரும் சூரிய ஒளியை கவனித்தால்..அதில் சின்ன சின்ன தூசி துகள்கள் ஒரு ஒழுங்கு இல்லாமல் அங்கும் இங்கும் அலைவதை பார்க்கலாம் இதுதான் பிரவுனின் எபெக்ட் ...
(அதை கண்டு பிடித்த அறிஞர் பெயர் பிரவுன்!) இந்த இயக்கம் திரவ மாலிக்கியுளிலும் நடக்கிறது.
.அன்றைய கால கட்டத்தில் அனு என்பது உறுதி செய்யப்படாத ஒரு சந்தேக கேசாக இருந்தது .ஐன்ஸ்டைன் அவர்கள் "கைனடிக் தியரி அப் ப்ளுயண்ட்" என்னும் கோட்பாடு மூலம் துகள்கள் தன்னிச்சையாக மோதி கொள்வதை விவரித்த பின் அனு இருப்பது உறுதி செய்யப்பட்டது..

இரண்டாவது அவர் எழுதியது

 "போட்டோ எலக்ட்ரிக் எப்பக்கட்"..
(நோபல் வாங்கிய பூனை)
நம் அன்றாட பயன் பாட்டில் உள்ள சோலார் பேணலில் மின்சார உற்பத்தி ஆகிறதே அதான் போட்டோ எலெக்ட்ரிக்..
அதாவது சோலார் பேணலில் சிலிக்கா அணுக்கள் இருக்கும் ஒளியின் போட்டான் துகள் அதை தாக்கினால் அது எலக்ட்ரானை ஓடும் படி செய்யும். 
(எலக்ட்ரான்களின் ஓட்டமே மின்னோட்டம் என்று நாம் 8 ஆம் வகுப்பிலேயே படித்து இருப்போம்)

ஓளி என்பது அலை வடிவில் பரவுகிறது என்ற கேட்பாட்டை இவர் மாற்றி அமைத்தார் அது துகள் வடிவில் இருக்கிறது என்பதை நிரூபித்து போட்டோ எலக்ட்ரிக்கை விளக்கினார்..அந்த துகளுக்கு பின்னாளில் 'போட்டான்' என பெயரும் வைத்தார்கள். (குவாண்டம் தியரி படி ஒளி அலையாகவும் துகளாகவும் இரட்டை தன்மை கொண்டு இருக்கும் )

 அவரது அடுத்த கட்டுரை தான் சார்பியல் கேட்பாடு.
நாம் பார்க்க வந்த சமுத்திரம்....

ஸ்பெஷல் தியரி ஆப் ரிலெட்டிவிட்டியை புரிந்து கொள்ள ஏதுவாக அதன் முன்னுரையான கிளாசிக் தியரி அப் ரிலேடிவிட்டி யை விளக்குகிறேன் (இன்னும் எத்தன வகைய்யா இருக்கு??)
ஒரு எளிமையான உதாரணம்..

ஒரு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் பேருந்தில் நீங்கள் இருக்கிறீர்கள்...அதன் டாப்பில்.. என வைத்து கொள்ளுங்கள்..உங்கள் கையில் ஒரு பந்து அதை நீங்கள் மெதுவாக முன்னோக்கி ஒரு 10 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறீர்கள் ...அப்போது உங்கள் பார்வையில் அந்த பந்து எவ்ளோ வேகத்தில் போகிறது? 10 கிலோமீட்டர் ..சிம்பிள்...

அதே பந்தை கீழே தரையில் நின்று கொண்டிருந்தவர் கவனித்தால் ..அப்போ அவர் அதை பேருந்தின் வேகம்80 கிலோ மீட்டரோடு சேர்த்து 90 கிலோமீட்டர் வேகத்தில் அல்லவா உணர்வார் ..உங்களுக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் தெரிந்த பந்து அவருக்கு மட்டும் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தெரிவது தான் கிளாசிக் தியரி ஆப் ரிலேடிவிட்டி...

  (அடடே ரிலேடிவிட்டி எளிமையாதான் இருக்கு!)..

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது...ஒரு பொருள் என்ன வேகத்தில் நகர்கிறது..அல்லது நகர்கிறதா இல்லயா..என்பதெல்லாம் அதை கவனிப்பவர் எந்த இடத்தில நிற்கிறார் என்ன வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை பொறுத்தே அமைகிறது..(ட்ரெயின் கூடவே அதே வேகத்தில் நாம் ஓடினால் ட்ரெயின் நம்மை பொருத்தவரை நகராத தோற்றம் கொண்டிருக்கும் என்றே முன்பே அறிவோம் அல்லவா )

 இப்போது இதை கொஞ்சம் வேற கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும் அதாவது பஸ் ..ரோடு ...என்று பார்க்காமல் பிரபஞ்சம் கிரகம் என....
இந்த பிரபஞ்சத்தில் நாம் கவனிக்கும் நகரும் பொருள்கள் எல்லாமே உண்மையிலேயே நாம் கவனிக்கும் வேகத்தில் தான் நகர்கிறதா...நீங்கள் உங்கள் பால்வெளியில் எந்த இடத்தில நிற்கிறீர்கள் என்ன வேகத்தில் நகர்கிறீர்கள் என்பதை பொறுத்து அது மாறும் அல்லவா...

இந்த பூமி கிட்டத்தட்ட 29 கிலோமீட்டர் வினாடிக்கு நகர்கிறது...சூரியன் 250 கி.  மி வினாடிக்கு...நகர்கிறது..நமது பால்வெளி திரளே இந்த பிரபஞ்ச வெட்ட வெளியில் 600 கி .மி வினாடி என்ற வேகத்தில் நகர்ந்து கொண்டு தான் உள்ளது..(இந்த உலகம் நிலை இல்லாததுன்னு கேள்வி பட்டிருபோம் பிரபஞ்சமே அப்படித்தானா)

ஒரு மைய அச்சில் சுழல கூடிய தட்டில் அங்கங்கே வெவேறு இடைவெளியில் சில எலுமிச்சை பழத்தை வைத்து ஒட்டி விட்டு தட்டை சுற்றி விட்டால் அது பார்க்க நம்ம சூரிய குடும்பம் போல தெரியும் ஆனால் அதில் ஒன்று கூட மையத்தை தானே சுற்றிவரவில்லை என்பதை கவனிக்கவும் இருந்த இடத்தை விட்டு அசைய கூட  இல்லை (அதான் ஒட்டியாச்சே...) சுழல்வது தட்டு தான் என்பதை போல வெறும் வெளி தான் சுழல்கிறதா..கிரகங்கள் நகர்வது ப்ரமையா உண்மையா அல்லது இரண்டும் கடந்து ஐன்ஸ்டைன் ஸ்டைலில் சார்புடையதா??(இப்ப தானயா எளிமையா இருக்கு னு சொன்னேன். அதுக்குள்ள குழப்பிடேயே)

சரி விடுங்கள் நாம திரும்ப அந்த 29 c பஸ்ஸுக்கே போவோம்..(ஒரு பேச்சுக்கு சொன்னேன்)..அனால் இம்முறை பேருந்து ஓடுவது மவுண்ட் ரோட்டில் அல்ல பிரபஞ்ச வான வெட்ட வெளியில் ..வேகம் ..கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதி வேகம் (ஒளி வேகம் எனபது வினாடிக்கு 3 லட்சம்)எனவே நமது பேருந்து இப்போ கிட்ட தட்ட 1.5 லட்சம் வேகத்தில் ஓடுகிறது..(டீசல் விளையேற்றத்துல இது தேவையா) உங்கள் கையில் இருப்பது பந்து அல்ல டார்ச் ...இப்போது நீங்கள் பஸ் போகும் திசை நோக்கி ஒளியை வீசினால் உங்களுக்கு ஒளி 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்திலும் இதை கீழே நின்று கவனிக்கும் (கீழ எங்க நிப்பான்) நண்பருக்கு 3 லட்சம்+ 1.5 லட்சம் மொத்தம் 4.5 லட்சம் கி. மி  வேகத்திலும் தெரியவேண்டும் அல்லவா...
அனால் அப்படி நடக்க வில்லை என ஐன்ஸ்டைன் கண்டார்...அவருடைய ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேடிவிட்டி விவரிப்பது இதை தான்(ஹை ..!கடலுக்கு வந்துட்டமா)

 ஒளி நின்று கொண்டு வீசினாலும் ஒளிக்கு எதிர் திசையில் நகர்ந்த வண்ணம் வீசினாலும் அல்லது ஒளியோடு சேர்ந்து நகர்ந்து கொண்டு வீசினாலும் ஏன் ஒளியோடே சேர்ந்து ஒளி வேகத்தில் ஓடிக்கொண்டு வீசினாலும் ...கவனிப்பவர் எங்க இருந்து கவனிதாலும் ஒளி கான்போருக்கு தனது வேகத்தை மாற்றி கொள்வதே இல்லை (ஒரு கற்பனைக்கு ஒளி யின் வேகம் மிக மிக மிக குறைந்து விட்டால் என்னாகும் என்று சொல்கிறேன் ..ரோட்டில் ஒரு ஃபிகர் போகும் நீங்கள் பின்னாலேயே போய் பார்த்தால் ...அங்க பிகர் இருக்காது உண்மையில் அது 3 மணி நேரம் முன்னாடி அங்க போனதை இப்போ தான் நீங்க பார்ப்பீங்க ...(விளைவு பயங்கரமா இருக்கு இல்ல)

இது எப்படி நடக்கும் என ஐன்ஸ்டைன் சிந்தித்தார் (ஃபிகரை இல்லை...).
அப்போது ஒளி வேகத்தில் நகரும் பொருளுக்கு என்ன நேர்கிறது என்ற உண்மையை ஆறாய்ந்தார்.
முடிவுகள் சொன்னால் நம்பும் படியாக இருக்காது என்றாலும் சொல்லத்தான் வேண்டும்..

ஒளி வேகத்தில் நீங்கள் நகர்ந்தால் நகரும் திசையை நோக்கி நீங்கள் தட்டையாக சுருங்குகிறீர்கள்...உங்கள் நிறை உங்கள் டயட்டை மீறி எக்கச்சக்கமாக அதிகரிக்கிறது...
எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் காலம்..அது நிலையா இருப்பவனை ஒப்பிடும் போது மிக குறைந்து விடு கிறது...

ஒளி வேகத்தில் நகரும் சாத்தியம் இருந்து நீங்கள் ஒளி வேகத்தில் எங்காவது டூர் கிளம்பி போய் ஒரு வருடம் கழித்து வந்து பார்த்தால் உங்களுக்கு ஒரு வருடம் மட்டுமே ஓடிய காலம் மற்றவருக்கு 5 வருடம் ஓடி விட்டிருக்கும் (அந்த ரோடு பிகருக்கு 2 குழந்தை இருக்கும் நீங்கள் இன்னும் சிங்கில் ஸ்டேட்டஸ் இல் தான் மாறாமல் இருப்பீர்கள்).

பிரபஞ்சத்தில் மிக வேகமாக ஒரு விஷயம் என்றால் அது ஒளி மட்டும் தான் அதை மிஞ்சும் வேகம் வேற எதற்க்கும்  இல்லை..
அப்படி மிஞ்சினால் காலத்தை தலைகீழகவே திருப்பும் அபாயம் உண்டு என்றாலும் ஒளி வேகத்தை நெருங்கும் பொருளின் நிறை முடிவிலியாக அதிகரிப்பதால் அது மிஞ்ச விடுவது இல்லை. எனவே பிரபஞ்சத்தில் மிக வேகமானது ஒளி என்றும் அதன் வேகத்தை மிஞ்ச எதற்க்கும் அனுமதி இல்லை என்றும் ஐன்ஸ்டைன் அறிவித்தார்.
இப்படி பட்ட கருத்தை எல்லாம் முதல் முதலில் சொன்ன போது நம்ம தல நிலமை எப்படி இருந்திருக்கும் யோசிச்சி பாருங்க...உலகம் அவரை பரிகாசம் செய்தது...
அந்த நேரத்தில் இருந்த ஒரு பெரிய அறிவியலாளர் இவர் கண்டுபிடிச்சது மகத்தான ஒண்ணுன்னு எடுத்து சொன்ன பின் தான் மக்கள் ஓரளவு நம்பினார்கள்...

இதுலாம் உண்மையா என சோதிக்க அப்போதைக்கு வழி இல்லாது போனாலும் பல ஆண்டுகள் கழித்து... பூமிக்கு அடியில் கிட்ட தட்ட 20 கி. மி சுற்றளவில் மிக பெரிய ஹைட்ரான் கொளையிடர் என்ற பிரமாண்ட கருவியை கொண்டு சோதித்ததார்கள்.
இயற்கையாகவே மிக சில கணங்கள் மட்டுமே வாழ கூடிய மையான் துகளை கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் முடுக்கி விட்டு பார்த்த போது அதன் ஆயுட் காலம் 6 மடங்கு அதிகமானதை கண்டு அதிசையித்தார்கள் .

எந்த கருவியும் இல்லாமல் ஆய்வும் இல்லாமல் ஐன்ஸ்டைன் எனும் அப்பாடகர் இதை எப்படி கண்டு கொண்டார் என பிரமித்தார்கள்..உலக வரலாற்றில் தலை சிறந்த விஞ்ஞாணி என அவருக்கு புகழாரம் சூட்டினார்கள்...
சிந்திப்பதில் யாரும் தொடாத உயரத்தை அவர் தொட்டிருப்பதை உலகம் உணர்ந்து கொண்டது...

ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் கோட்பாடுகள் பலரை பைத்தியம் ஆக்கியது...

 ஈர்ப்புவிசையில் வின்வெளியே வளைகிறது..
.காலமும் வெளியும் வெவ்வேறு அல்ல அது காலவெளியாக செயல் படுவது..
மற்றும் நிறையும் ஆற்றலும் வெவ்வேறு அல்ல போன்ற ஆச்சர்யத்தை..வரும் கட்டுரைகளில் (general theory மற்றும் e=mc2)என்ற கட்டுரைகளில் விளக்குகிறேன்.


தொடரும்...............



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


சார்பியல் எனும் சமுத்திரம் (பாகம் 4)
          
"உங்களுடைய சார்பியல் தத்துவத்தை பற்றி மொத்தம் 3 பேருக்கு தான் தெரியுமாமே அது உண்மையா''என்று ஒரு நிருபர் ஒருமுறை ஐன்ஸ்டைனை கேட்டார்..
அதற்கு அவர் "இரண்டு பேர் இருக்கிறார்கள தெரியும் மூன்றாவது யார் ?" என்றார்.
அவர் கோட்பாடு சாதாரண மக்களின் புரிதற்கு அப்பாற்பட்டு இருந்தது...

ஒருமுறை சார்லிசாப்ளினை நமது தல சந்திக்க நேர்ந்தது .ஒருவர் சிரிப்பு சக்கரவர்த்தி இன்னொருவர் சிந்தனை சிற்பி..அப்போது தல சொன்ன ஒரு பஞ்ச் "மச்சி நான் இந்த உலகத்துக்கு இன்னானாமோ சொல்ல வரன் ...நெறய சொல்லறேன் ஒரு பயலுக்ககும் ஒன்னும் புரியல ..அனா பாரு உன் படத்த பாத்திருக்கன் நீ ஒரு வார்த்த கூட பேசரதே இல்ல ஆனாலும் நீ என்ன  சொல்ல வரேன்னு மக்கள் கரெக்டா புரிஞ்சுகிறாங்க "

 அவரது கண்டுபிடிப்புகள் அரம்பகாலகட்டத்தில் சந்தேகத்திற்கு உரியவையாக மட்டும் அல்ல பரிகாசத்துக்கும் ஆளாயின..என ஏற்கனவே சொல்லி இருந்தேன் பல சில பேர் பரிகாசம் செய்தாலும் அவரை சீரியஸாக எடுத்து கொண்டு பல பேர் பல ஆண்டுகளாக பல ஆராய்ச்சியில் இறங்கினார்கள்
கிட்டதட்ட நூறு ஆண்டுகள் கழித்துவரை...எல்லா டெஸ்டில் நூற்றுக்கு நூறு எடுத்து பாஸ் செய்தார் அந்த அப்பாடகர்...சில வருடங்களுக்கு முன் சனியை ஆராய கஸ்ஸினி எனும் விண்கலத்தை அனுப்பினார்கள் அதில் கூட இவர் கோட்பாட்டை சோதனை செய்து பார்த்தார்கள் விளைவு??
இன்று வரை அவர் முடிவுகள் இம்மி பிசகவில்லை...இன்று வரை அவரது கோட்பாடுகள் பல நூறு முறை பரிசோதிக்க பட்டு கொண்டே இருக்கிறது ஆனால் எந்த ஆய்வும் செய்யாமல் அவர் கண்டு கொண்ட பிரபஞ்ச உண்மைகள் இன்று வரை அணைத்து டெஸ்ட் இலும் எடுத்துள்ள மார்க் 100 க்கு 100 மட்டுமே. 

இப்போது அவர் சொன்ன கோட்பாடுகளில் ஈர்ப்பு அலை என்பதை பற்றி பார்க்கலாம் ..(gravitational wave)
ஒரு குளத்தில் நீங்கள் செய்து விட்ட காகித கப்பல் மிதக்கிறது..கொஞ்சம் ஓரமாய்..என வைத்து கொள்ளுங்கள் இப்போது குளத்தின் மையத்தில் ஒரு பெரிய கல்லை போட்டால் என்னாகும்? அதனால் ஏற்பட்ட அலையானது நகர்ந்து நகர்ந்து சென்று கப்பலை பலமாக உலுக்கும் அல்லவா...இதே ரீதியில் பிரபஞ்சத்தில் நடக்கும் சில கல்எறிதல் நிகழ்வுகளால் gravitational wave(ஈர்ப்பு அலைகள்) உருவாகிறது என்றார் ஐன்ஸ்டைன்.

அந்த கல் ஏறி நிகழ்வு எப்படி நடக்கிறது என்றால் ..பலமான ஈர்ப்பு விசை காரணமாய் இரண்டு நட்சத்திரங்கள் மோதி அழியும் போது நடக்கிறது..அல்லது இரண்டு கருமதுளைகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒன்றினையும் போது நடக்கிறது அந்த நேரத்தில் உச்ச கட்டத்தை நெருங்கும் போது வேகம் அதிகரித்து அதிகரித்து ஒரு கட்டத்தில் அவைகள் ஒன்றோடு ஒன்று சுழலும் வேகம் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாதியை எட்டுகிறது...பின் ஒன்றோடு ஒன்று மிக பலமாக மோதி கொண்டு இந்த ஒன்றிணைவு காரணமாக உடனடி குழந்தையாக நியூட்ரான் குண்டு என்ற ஆன் குழந்தையோ அல்லது கரும்த்துலைகள் என்னும் பெண்குழந்தையோ பிறக்கிறது..(கதை சார்பியலை விட்டு எங்கெங்கோ சொல்கிறதே என முனக வேண்டாம் திரும்பி வந்துவிடுகிறேன் பொறுங்கள்) இந்த நிகழ்வில் குளத்தில் கல் எரிந்தது போன்ற ஒரு அலை புறப்பட்டு அசால்டாக 100 கோடி ஆண்டுகள்கூட தாண்டி இந்த பிரபஞ்சத்தில் பயணம் செய்கிறது...என்று ஐன்ஸ்டைன் சொன்னதை நிரூபிக்க அவரது காலத்திற்கு கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து ஒரு ஆராய்ச்சி குழு முயன்றது.

லேசர் கருவியுடன் கூடிய ஒரு ஆய்வு குழாய்...அதில் லேசர் புறப்பட்டு போயி அடுத்த முனையில் உள்ள கன்னாடியில் பிரதிபலித்து திரும்பும் படி ஏற்பாடு அந்த சென்று வந்த வேகத்தை அளக்க ஒரு மிக நுட்பமான கருவி...இதே போல இரண்டு கருவிகள் செய்து இரண்டு வெவேறு இடத்தில வைத்து விட்டார்கள். அந்த குழாயின் நீளம் 4 கிலோமீட்டருக்கு இருந்தது. அந்த லேசர்  ஒளி வேகம் எதாலும் பாதிக்க படாது...ஐன்ஸ்டைன் சொன்ன ஈர்ப்பு அலையை தவிர ...குருவி பிடிக்க பொறி வைத்து விட்டு காத்திருப்பதை போல ..இந்த கருவியை செய்து வைத்து விட்டு காத்திருந்தார்கள்..
அந்த பொறியின் பெயர் interferometar..
அந்த ஆய்வகத்தின் பெயர் 'லைகோ' (LIGO - Laser Interferometer Gravitational wave Observatery)..
2002 இல் அமைக்க பட்ட இந்த பொறி 13 ஆண்டுகளாய் ஒரு குருவியும் பிடிக்கவில்லை ஆனால் 2015 இல் காத்திருந்துக்கு பலன் கிடைத்தது.
செப்டம்பர் 14 ஆம் நாள் 9.51மணிக்கு வாஷிங்டன் மற்றும் லூசியானா..இரண்டிலும் அமைக்க பட்ட கருவிகள் சிக்னளை கொடுத்தது...
ஐன்ஸ்டைன் சொன்ன ஈர்ப்பு அலைகள் இருப்பது சந்தேகம் இல்லாமல் நூறு ஆண்டுகள் கழித்து...சமீபமாக சில வருடம் முன் நிரூபிக்க பட்டது...

1.3 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டிருந்த இரண்டு கருந்துளைகள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கருந்துளையாக மாறியபோது ஏற்பட்ட ஈர்ப்பலைகள் தான் அது அந்த இரண்டு கருந்துளைகளும்,கிட்டத்தட்ட 30 சூரியனின் அளவையுடயனவாக இருந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் 150 கிலோமீட்டர்கள் குறுக்களவுள்ளவையாக இருந்திருகின்றன.
ஐன்ஸ்டைனை நாமும் ஒருமுறை பாராட்டிவிட்டு நமது சமுத்திரதுக்கு திரும்புவோம்..

இப்போது general theory of relativity...யை பற்றி கொஞ்சம் பாப்போம்.

ஸ்பெஷல் தியரி இல் காலம் சாசுவதமானது என்ற நியூட்டனின் கருத்தை மறுத்த அவர் இம்முறை general theory of relativity இல் நியூட்டன் கண்டு பிடித்த ஈர்ப்பு விசையை கேள்விக்கு அளாக்கினார்...சர் ஐசக் நியூட்டன் கூற்று படி...பூமி சூரியன் போன்றவை பொருட்களை தன்னை நோக்கி இழுக்க காரணம் அதற்குள் இருக்கும் ஆக்ரஷ்ன சக்தி...காந்தம் போல...இருப்பதனால் தான்...ஆனால் ஐன்ஸ்டைன் ஈர்ப்பு சக்திகு வேறு விதமான விளக்கம் கொடுத்தார்....அந்த விளக்கத்தை பார்க்கும் முன்...
உங்ளால் இரும்பை வளைக்க முடியும்..மரத்தை உடைக்கமுடியும்...ரப்பரை இழுக்க முடியும் ...துணியை சுருட்ட முடியும்...
ஆனால் வெட்ட வெளியில் கொண்டுபோய் விட்டு வெளியை கொஞ்சம் சுருட்டி வைப்பா என்றால் முறைப்பீர்கள் ..
சரி சுருட்ட முடிலனா கொஞ்சம் வளைத்தாவது வைப்பா என்றால் அடிப்பீர்கள்..

ஆனால் ஐன்ஸ்டைன் கூற்று படி வெறும் வெளியை நாம் வானம் என்று சொல்லும் அந்த சூனியத்தை...வளைக்க சுருட்ட விரிக்க முடியும்....(ஆனால் பிய்த்து எடுக்க முடியாது ) என்ன அதை செய்வதற்கு...பெரிய நட்சத்திரம் அல்லது கிரகங்களின் ஈர்ப்பு வலிமை தேவைப்படும்...அவர் கூற்று படி பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து பொருளும் தனது நிறைக்கேற்ப தன்னை சுற்றி உள்ள வெளியை கொஞ்சம் வளைத்து வைத்துள்ளது ...அந்த வளைவு காரணமாக அந்த வளைவு எல்லைக்கு உட்படும் எல்லா பொருளும் வளைவில் விளைவால் அந்த பொருளை நோக்கி வட்ட பாதையில் ஓடும் அதற்கு பெயர்தான் ஈர்ப்பு விசை என்று gravitation கு புது விளக்கம் கொடுத்தார்.

 ஒரு அறையில் நான்கு பேர் ஒரு பெட்ஷீட்டை விரித்து பிடித்து கொள்ளுங்கள்..இது தான் வானம்.... வெளி ...என்று வைத்து கொள்ளுங்கள்...இப்போது அதன் நடுவில் ஒரு பெரிய இரும்பு குண்டை வைத்தால் (சூரியன்) பெட்ஷீட் கீழ் நோக்கி வளைந்து தொங்கும் அல்லவா அப்படி தான் வானம் நட்சத்திரங்களின் வலிமையால் வளைந்து இருக்கிறது என்றார் ஐன்ஸ்டைன்..மேலும் அந்த பெட்ஷீட்டில் ஒரு ஓரமாய் ஒரு எலுமிச்ச பழதை உருட்டிவிட்டால் அது மையத்தை நோக்கி நேரே ஓடாமல் சுற்றுவட்ட பாதையில் சுற்றி சுற்றி அந்த இரும்பு குண்டை நெருங்கும் அது போல தான் கிரகங்கள் வானத்தின் அந்த வளைவுகளில் சூரியனை சுற்றி வருகின்றன...

 1905 இல் தனது ஸ்பெஷல் தியரியை வெளியிட்ட பின்...எக்ஸாமில் தெரிந்த கேள்வியை எழுதாமல் விட்டு விட்டு வந்த மாணவனை போல ச்சை அதை எழுதாம விட்டுடோமே இத இன்னும் டெவலப் பண்ணி இருக்கலாமே என புலம்பிகொண்டு இருந்துதார் .

விளைவாக அவரது general theory யை 1915 இல் வெளியிட்டார்..அவர் கோட்பாடுகளை கேட்டவர்கள் கேட்ட கேள்வி" இதை எப்படி நிறுப்பிபீர்கள்..என்ன ஆதாரம்.."
ஐன்ஸ்டைன் சிரித்து விட்டு "இன்னும் எத்ன பேரு டா இதே கேள்விய கேப்பீங்க" என்றார் சிவாஜி ரஜினி போல..போங்க போங்க போயி ஆராய்ச்சி பண்ணி பார்த்துக்கங்க..என்றார்
அது மட்டும் அல்ல பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் தங்கள் ஆக்ரஷ்ன சக்திக்கு ஏற்றார் போல வெளியை மட்டும் அல்லாமல் ஒளியையும் ஏன் காலத்தையும் வளைக்க வல்லது என்று இன்னொரு போடு போட்டார்...
அவர் சொல்வதை சரி பார்க்க ஆய்வு கூடம் உதவாது.... இந்த பிரபஞ்சத்தையே ஆய்வு கூடமாக மாற்றினால் தான் அவர் சொன்னதை ஆராய முடியும்...
அப்படியும் செய்யத்தான் செய்தார்கள்..
அவருடைய கோட்பாடு படி  பெரிய நட்சத்திர மண்டலங்களில் இருந்து வரும் ஒளியானது..நமது சூரியனை கடந்து வரும் போது அதை சுற்றி வளைந்து..வருகிறது..(ஒரு ஆற்றின் நடுவில் ஒரு பாறை நீட்டிகொண்டு இருந்தால் தண்ணீர் அதை சுற்றி கொண்டு போவதை போல..)

இதை பார்க்க வேண்டும் என்றால் சாதாரண நேரத்தில் சூரியனை பார்த்து கண்டு பிடிக்க முடியாது...சூரிய கிராகணத்தின் போது தான் அது முடியும்...நல்ல வேலையாக அவர் கோட்படு வெளியிட்ட 2 வருடத்தில் ஒரு சூரிய கிரகணம் வந்தது..ஆராய்ச்சியாளர்கள் ஆர்வமானார்கள் சூரிய கிராகணத்தின் போது உற்று கவனித்தார்கள்...theory of bending off light ....நட்சத்திர மண்டல் ஒளி சூரியனை சுற்றிக்கொண்டு...வட்டப்பதையில் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தது...அப்படி ஒளி வளைந்து வருவதை gravitational lense..(ஈர்ப்பு வில்லை)என அழைத்தார்கள்.
ஐன்ஸ்டைன் கூற்று சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் நிரூபிக்க பட்டது....

              ஐன்ஸ்டைனிடம் ஒரு பிரச்னை உள்ளது அவர் கோட்பாடு ஒன்றை நீங்கள் ஆம் என ஏற்று கொண்டால்..domino effect போல அல்லது சைக்கிள் ஸ்டாண்டில் ஒரு சைக்கிளை தள்ளிவிட்டார் போல வரிசையாக பல விஷயங்களை ஒத்து கொள்ள வேண்டி வரும் அது எல்லாமே நமது அறிவுக்கு ஒவ்வாத நமது அன்றாட physics கு அப்பாற்பட்டு இருக்கும்...

குறிப்பிட்ட இடத்தில வெளி சுருங்கி சுருட்டி வைத்தால் என்னாகும் தெரியுமா...நீங்கள் மைலாப்பூரில் அந்த சுருங்கிய வெளி புள்ளியில் உங்கள் தலையை விட்டால் மாயாஜால படத்தில் வருவதை போல நேரே திருநெல்வேலியில் எட்டி பார்ப்பீர்கள்...(அந்த சந்திப்பு புள்ளிக்கு பெயர் தான் worm hole அதை பற்றி எனது "பிளாக் ஹோல் வாம் ஹோல் " கட்டுரையில் விரிவாக எழுத இருக்கிறேன்) இப்போதைக்கு மயிலாப்பூரில் அந்த இடம் இல்லை ஆனால் பிரபஞ்சத்தில் நிறைய உண்டு...

இப்படி தூரத்தை கடந்தால் நாம் கூடவே வேற ஒன்றையும் கடந்து செல்வோம் அது தான் ''காலம் ''.
ஐன்ஸ்டைன் கூற்று படி காலம் வெளி இரண்டும் வேறு வேறு அல்ல ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்த space-time கால வெளி...
Worm hole பயன்படுத்தி பல ஓளி யாண்டு தொலைவை கடக்கும் போது நேரத்தையும் கடந்தே செல்கிறோம்.

     ஐன்ஸ்டைன் எனும் மாமேதை சொல்லி விட்டு போனதை வைத்து கொண்டு இன்றளவும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன...வான்வெளியை ஆராயனுமா இல்ல அணுவை ஆராயனுமா இல்லை குவாண்டம் பிஸிக்ஸ் ஆ ...இல்லை டைம் டிராவலா...
அல்லது அணுகுண்டு தொழில்நுட்டம்மா அங்கே ஐன்ஸ்டைன் என்னும் அற்புதம் இல்லாமல் இருக்க முடியாது...அந்த அளவு அறிவியலை ஆட்டி பார்த்த அப்பாடகர் தான் ஐன்ஸ்டைன்..என்பதால் தான் நான் அவரை பற்றி அவர் கண்டுபிடிப்புகளை பற்றி எளிய முறையில் எழுத விரும்பினேன்.. ..எனது சிறு வயதில் சார்பியல் கோட்பாடுகளை படித்த போது மிகுந்த ஆர்வம் கொண்டேன் அரைகுறையாய் புரிகிறதே யாராவது புரியும் படி விளக்கினால் நல்லா இருக்குமே என தவித்தேன்...அந்த தவிப்பு     இன்றைக்கும் உள்ளவர்களை இலக்காக வைத்து தான் இந்த கட்டுரையை எழுதினேன் .நான் முன்பே  குறிப்பிட்டதை போல சுத்தமா ஒன்னும் தெரியாதவனை மனதில் கொண்டு தான் இதை எழுதி இருக்கிறேன்.இது எந்தளவு சிறப்பாய் வந்துள்ளது என்பதை நீங்கள் தான் படித்து விட்டு சொல்ல வேண்டும்..

என்ன தான் ஐன்ஸ்டைன் ஒரு அப்பாடக்கர் என்றாலும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு...இப்போது சமிபகாலமாய் பேச்சு வாக்கில் அடிபடும் நியூட்ரிநோ ஆய்வு என்ன தெரியுமா....நியூட்ரிநோ என்னும் துகளால் ஒளி வேகத்தில் மிஞ்ச முடியும் என்பது தான் அது...அது நிரூபிக்க பட்டால் நியுட்டனை ஐன்ஸ்டைன் upgrade செய்ததை போல அவர் கருத்துகள் upgrade செய்ய படலாம் என்றாலும் இன்றளவும் தீர்க்கமாய் அவரை மிஞ்சியவர் எவரும் இல்லை....
நியூட்ரான் ஆய்வு இன்று வரை ஒளியை மிஞ்ச முடியவில்லை என்பதை காட்டி உள்ளது (ஒரு முறை மிஞ்சி விட்டது நியூட்ரினோ வென்று விட்டது என்று விஞ்ஞானிகள் அறிவித்தார்கள் ஆர்பரித்தார்கள் ஆனால் மறு சோதனை செய்து பார்த்த போது அது கருவியில் உள்ள பிழையால் ஏற்பட்ட தவறான தகவல் அது என்று தெரிய வர அவர்கள் முடிவு பல்லை இளித்தது.)
(நியூட்ரினோவால் ஒரு போதும் ஒளியை மிஞ்ச முடியாது அதற்க்கு காரணம் நியூட்ரினோ துகளுக்கு கொஞ்சமே கொஞ்சம் ஒரு கிராமில் கோடி கோடி கோடி கோடி யில் ஒரு பங்கு அளவு எடை உண்டு. ஆனால் ஒளியின் போட்டான் துகளுக்கு அது கூட இல்லை. இதை பற்றி விரிவாக எனது "நியூட்ரினோ ஒரு அடங்காத துகள் " கட்டுரையில் எழுதி உள்ளேன் படித்து பாருங்கள்.)

ஆமா...ம்..... எதையோ நாம மறந்துட்டோமே....இல்ல??

ஆம்.....

E=MC ² 

அது என்ன ஏது என்பதை இனி பார்க்கலாம்.

தொடரும்...............



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"சார்பியல் எனும் சமுத்திரம் "(பாகம் 5)


                     E=mc² 

உலகின் மிக ஆச்சர்யமான நம்ப முடியாத சமன்பாடுகளில் ஒன்று
E = mc²

இதை பற்றி விளக்கமாக பார்க்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வி...நன்றாக சிந்தித்து பாருங்கள் நெருப்பு எங்கே இருந்தாலும் அங்கே புகை இருக்கும் என்று நமக்கு தெரியும் ..மேலே தகித்து கொண்டிருக்கும் சூரியன் ஒரு பெரும்நெருப்பு அல்லவா அப்போ அது வெளியிடும் புகை எங்கே?
சிந்தித்து கொண்டே வாருங்கள கட்டுரைக்கு போவோம்...

உங்களிடம் ஒரு கிலோ நிலகரியை கொடுத்து இதன் ஆற்றலை பயன்படுத்தி வீட்டுக்கு வெளிச்சத்தை கொடுத்து கொள்ளுங்கள் என்று சொன்னால் எவ்வளவு நேரத்திற்கு அதை உங்களால் பயன் படுத்த முடியும் அதிக பட்சம் 1 மணி அல்லது 2 மணி நேரம்?

ஆனால் உங்கள் கையில் உள்ள வெறும் ஒரு கிலோ நில கரியை கொண்டு உங்கள் மொத்த ஊருக்கே சப்ளை கொடுக்கலாம்....அதுவும் பல காலங்களுக்கு தொடர்ச்சியாக என்று சொன்னால் எப்படி இருக்கும் ? ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டு விட்டால் போதும் வாழ்நாள் முழுக்க வண்டி ஓட்டலாம் என்றால்?

இது சாத்தியமா என்றால் கண்டிப்பாக சாத்தியம் தான் .என்ன ......நீங்கள் அதற்கு பொருளை எரி பொருள் போல பயன்படுத்தாமல் அதை அப்படியே ஆற்றலாய் மாற்ற வேண்டும்.
இந்த நிறை ஆற்றல் சமன் பாடு இணை பிரபஞ்ச கோட்பாடு போல...ஏலியின் கோட்பாடு போல இருக்கா இல்லயா என தெரியாத சந்தேக கேஸ் சமன்பாடு அல்ல இது 100 சதம் நிரூபிக்கப்பட்ட விஷயம்...பொருள் ஆற்றலாக மாறுவதை காண நீங்கள் எங்கேயும் போக தேவை இல்லை..வானத்தை அண்ணாந்து பார்த்தால் போதும் ..எரிந்து கொண்டிருக்கும் சூரியன் ஏதோ எரிபொருள் பயன்படுத்தி எரிந்து கொண்டிருந்தால் அதிக பட்சம் சில நூறு ஆண்டுகளில் எரிந்து முடிந்திருக்கும் ஆனால் அது 500 கோடி ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறது. ..துளி புகை கூட இல்லாமல்.

பொருளை ஆற்றலாக மாற்றும் நிகழ்வு அதில் எப்படி நடக்கிறது எனபதை பார்க்கலாமா.?
அணுக்கருவை நீங்கள் பிளந்தாலும் சரி அல்லது இணைத்ததாலும் சரி அளப்பரிய ஆற்றலை நம்மால் பெற முடியும். அணுவை பிளந்து ஆற்றல் எடுப்பதற்கு எடுத்து காட்டு தான் அனுகுண்டு.
அணுவை இணைப்பதன் மூலம் ஆற்றல் கிடைப்பதற்கு எடுத்து காட்டுதான் ஹைட்ரஜன் குண்டு மற்றும் சூரியன்.

சூரியன் என்பது ஒரு மிக பெரிய ஹைட்ரஜன் குண்டு தான். அதிலும்  இதிலும் ஒரே செயல் தான் நடக்கிறது அதன் பெயர் அணுக்கரு இணைவு.
உலகத்தில் மிக எளிமையான தனிமம் ஆகிய ஹைட்ரஜன் தான் சூரியனில் அடங்கி உள்ளஆற்றல் மூலம். ஹைட்ரஜன் அணுவில் உற்று பார்த்தால் ஒரே ஒரு எலக்ட்ரான் ஒரே ஒரு புராடானை சுற்றி வருவது தெரியும் .
அது பக்கத்தில் உள்ள இன்னொரு ஹைட்ரஜனுடன் இணைந்தால் அதன் புரோட்டான் எலக்ட்ரானுடன்  சேர்ந்து இப்போது அதன் அணுவில் இரண்டு புரோடானை இரண்டு எலெக்ட்ரான் சுற்றி வரும் இப்போது அதன் பெயர் ஹீலியம்.

ஆனால் 3 கிலோ ஹைட்ரஜன் (கிலோ ..ஒரு எடுத்துக்காட்டு காக சொல்கிறேன்) பக்கத்தில் உள்ள இன்னொரு 3 கிலோ ஹைட்ரஜனுடன் சேர்ந்தால் மொத்தம் 6 கிலோ தானே இருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லாமல் அந்த அனு தனது எடையில் 7 சதத்தை இழக்கிறது (மிக சிறிய இழப்புதான்) அந்த குறைந்த எடை எங்கே சென்றது என்றால் அது தான் ஆற்றலாக மாறி எரிகிறது. இதனால் தான் ஒவ்வொரு வினாடியும் சூரியன் எடை குறைந்து வருகிறது என்றாலும் பல கோடி வருடங்கள் சூரியனால் ஆற்றல் தர முடியும்.

ஜப்பானில் போட பட்ட குண்டில் பயன்படுத்த பட்டது சில அவுன்ஸ் யுரேனியம் தான் அதை வைத்து தான் இவ்வளவு பெரிய ஆற்றலை நாம் எடுத்ததோம்.
அம்மையார் மேரி கியூரி கண்டு பிடித்த ரேடியம் மற்றும் அதை போன்ற இன்னும் சில தனிமங்களிலிருந்து தன்னிச்சையாக 24 மணி நேரமும் ஆற்றல் வெளிப்படுவதை (அவெஞ்ஜர் படத்தில் வரும் டெசரக்டர் போல )கவனித்தார் ஐன்ஸ்டைன்.
இதை போன்ற தனிமங்களின் இருந்து அளப்பரிய ஆற்றலை நம்மால் எடுக்க முடியும் என்பதை உணர்ந்தார்..ஒரு பொருளில் எடுக்க முடிய கூடிய ஆற்றல் அந்த பொருளின் நிறையை சார்ந்து உள்ளது என்பதை கண்டு கொண்டார்
தோராயமா இவ்ளோ எடுக்கலாம்பா என சொல்லாமல் மிக துல்லியமாக அவர் சொன்ன சமன் பாடுதான் E=MC². 
தம்மாந்துண்டு இது நட்சத்திரங்களை கிரகங்களை ஆராயும் சக்தி கொண்டது.
இனி சமன்பாட்டை பார்ப்போம்..

முதன்முதலில் தனது கட்டுரையில் E=MC²என்பதை அவர் M=E/C²என்ற வடிவில் தான் வெளியிட்டிருந்தார் பின்னால் ஈசியாக இருக்கட்டுமே எண்று அது தற்போதய வடிவில் மாற்றி அமைக்க பட்டது.
இப்போது இது என்ன வென்று பாப்போம்...

இதில் இருக்கும் E என்பது தான் energy அதாவது ஆற்றல் இது ஜூல் என்ற அலகால் அளக்க படுகிறது சமன் பாட்டில் உள்ள M எனபது mass அதாவது நிறை இதை கிலோகிராமில் கணக்கிட வேண்டும்...மேலும் C என்பது ஓளியின் வேகம் வினாடிக்கு ...இதை மீட்டரில் எடுத்து கொள்ள வேண்டும் . என்ன......கிட்ட தட்ட 30 கோடி மீட்டர் வரும்.
உதாரணமாக கட்டுரையின் ஆரம்பத்தில் உங்கள் கையில் கொடுத்த ஒரு கிலோ நிலகரியை கொண்டு எவ்வளவு ஜூல் ஆற்றல் எடுக்கலாம் என்று பாப்போம்
நம்மிடம் உள்ள m ...நிறையானது 1 kg .
C அதாவது ஒளியின் வேகம் 299792458 மீட்டர்..இப்போது சமன்பாடு படி C ஸ்கொயர் என்றால் 299792458 x 299792458 = 89875517873681764 இப்போது இதை நம்மிடம் உள்ள நிறையாகிய 1 உடன் பெருக்கினால் அதே தான் வரப்போகிறது..எனவே ஒரு கிலோ நிறை உள்ள நில கரியை பயன் படுத்தி நீங்கள்...8987.........................சில்லறை..  ஜுல் ஆற்றலை எடுக்கலாம் ..

இந்த சமன் பாட்டை கொண்டு நிலகரியயை தவிர நெறய விஷயம் ஆராயலாம் ..உதாரணமாக நமது சூரியன் இன்னும் எவ்வளவு காலம் உயிர்வாழும்...? சூரியனில் இன்னும் எவ்வளவு ஆற்றல் அடங்கி இருக்கிறது..
ஒளி வேகத்தில் பிரயாணம் செய்யும் போது நமது mass தாறு மாறக ஏறும் என்று முந்தய கட்டுரைகளில் சொல்லி இருக்கிறேன் எனவே இவ்வளவு mass என்றால் எவ்வளவு energy உற்பத்தி ஆகும் என்றும் இவ்வளவு எனர்ஜி என்றால் அது பொருளாக மாறினால் எவ்வளவு பெரிய பொருளாக இருக்கும் எனவும் ஆராயலாம்.

உதாரணமாக ஓளி வேகத்தை ஏன் எதனாலும் மிஞ்ச முடியாது என்று பார்க்கலாம்...ஓளி வேகத்தை நெருங்கும் போது பொருளில் மாஸ் மிக அதிகமாகிறது. அதனால் farmula படி மாஸ் அதிகரித்தால் வேக ஆற்றலில் குறை ஏற்பட வேண்டும் எனவே இ்தால் ஓளியை மிஞ்ச முடியாது. மேலும் எடை இல்லாத காரணத்தால் ஓளி மட்டுமே அந்த வேகத்தில் பிரயாணம் செய்யும்.

நண்பர்களே ஆச்சர்யமே உருவானது தான்  ஐன்ஸ்டைனின் கோட்பாடுகள்.
சார்பியல் என்பது மிக பெரிய  சமுத்திரத்தின் அதை முழுதாக விளக்கிவிட என்னால முடியாது.ஆனால் அதை எளிமையாக புரிய வைத்து அதை பற்றி மேலும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தை என்னால் தூண்ட முடியும். அதை தான் நான் இந்த கட்டுரையில் செய்துள்ளேன அதில் இரண்டோர் துளிகளை ருசிகாட்டி இருக்கிறேன்.
(அறிவியல் உலகின் மிக பெரிய கோட்பாடுகள் இரண்டு...
ஒன்று இந்த ஜென்ரல் ரிலேடிவிட்டி இனொன்று குவாண்டம் பிசிக்ஸ். இந்த ரிலேடிவிட்டியை "சார்பியல் எனும் சமுத்திரம்" மூலம் விளக்கியது போல குவாண்டம் கோட்பாடுகளை "குவாண்டம் எனும் கடல் " கட்டுரை தொடர் மூலம் விளக்கி இருக்கின்றேன் கண்டிப்பாக அதையும் படித்து பாருங்கள் )

 இதை இறுதி பாகமாக நிறைவு செய்கிறேன்
ரசித்து என்னுடன் பயனிததற்கு நன்றி.

முடிவுரை:

அறிவி்லாளர்களை பற்றி உள்வாங்கி படிப்பது எனபது வெறும் அறிவியலை தெரிந்து கொள்வது மட்டும் அல்ல அது மிக பெரிய motivation ஐ ஊக்கத்தை ஏற்படுத்தும் விஷயம் இந்த E=MC²ஐ வெளியிட்ட போது ஐன்ஸ்டைன் ஒரு வயதான சிந்தனையாளர் அல்ல வெறும் நாம் தல தளபதி என சுற்றி திரியும் 26 வயது.

நியூட்டன் தனது கண்டுபிடிப்பை வகுத்ததும் இந்த வயதில் தான். இப்போது உயிரோடு இருக்கு ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் ...நம்மால் முடியாது என்ற தாழ்வுமனபான்மை கொண்ட ஒவ்வொருவரும் இவரை கொஞ்சம் உற்று பாத்தாலே போது காரணம் இவர் உடம்பில் அணைத்து பாகங்களும் செயல் இழந்துவிட்டது இவர் குரல் முதல் கொண்டு..இவர் உடலில் வேலை செய்யும் (இவரால் இயக்க முடிய கூடிய)உறுப்பு இவர் மூளையும் இவர் கண்ண சதைகளும் தான் .இவர் ஒரு வார்த்தை பேச வேண்டுமானால் கன்னத்தின் சதைகளை அசைக்க வேண்டும் அதனுடன் இணைந்த சென்சார் இவர் சக்கர நாற்காலியில் இவருடுடன் இணைக்க பட்ட ப்ரதேயேக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய பட்ட ஒவ்வொரு வாக்யமாக தேடி செலக்ட் செய்து இவர் குரலிலேயே அதை ஒலி பரப்பும்..இப்படி ஒரு கடின வாழ்க்கையில் தான் அவர் இந்த நூற்றாண்டின் மிக பெரிய விஞ்ஞானியாக ஆஸ்ட்ரோ பிஸிஷிஷ்டாக திகழ்கிறார்..கேம்பரிட்ஜ் பல்கலை கழகதில் டைரக்டராக இருக்கிறார்.

எனக்கு மிக பிடித்த என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அறிவியளார் ஐன்ஸ்டைன். அவரை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சியிடு இந்த கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

சமுத்திரத்தில் இனைந்து பயணித்ததற்கு நன்றி....

அன்பு நண்பன் அறிவியல் காதலன்
ரா.பிரபு..

கட்டுரை குறித்த உங்கள் கருத்துகளை
என்னுடன் பகிர
9841069466 என்ற எண்ணில் ..
whats app இல் தெரிய படுத்துங்கள்

நன்றி... 

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"