முத்ரா ( இருள் உலகம் வருக)





#முத்ரா(இருள் உலகம் வருக)

நண்பர்களுக்கு வணக்கம் !
வழக்கமாக அறிவியல் கட்டுரைகளை தவிர்த்து, இம்முறை அமானுஷ்யத்தை....ஒரு கற்பனை குறுந்தொடரை ...முயற்சித்து உள்ளேன்...


           #முத்ரா(இருள் உலகம் வருக)    
                   
              (அத்தியாயம் 1)

(கதை, கற்பனை , எழுத்து : ரா.பிரபு)

"யுகம் யுகமாக அவர்கள் வருகிறார்கள்....
என்றும் உங்களோடு......
மக்களோடு மக்களாக.....
அவர்கள் இருள் உலக மாந்தர்கள்....
காத்திருக்கிறார்கள் தங்கள் சக்தியூட்ட படுவதற்கு....
ஒவ்வொரு முறை அந்த சிகப்பு பவுர்ணமி வரும் போதும்...
அவன் காத்திருக்கிறான்....
கருப்பு உலகின் தலைவன்...
மரணத்தின் பிரதிநிதி....
அவன் பெயர் ................"

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அது ஒரு மாலை நேரம்
அதீத மேதாவிகள் மெத்த படித்தவர்கள் கர்வம் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்ல படுகிறது...

அதனால் தானோ என்னமோ உலக அறிவுகளை தன்னகத்தே கொண்டுள்ள அந்த நூலகம் அவ்வளவு அமைதியாக இருந்தது....

அந்த மூலை பெஞ்சில் இருவர்..
அவர்களை பார்த்தாலே சொல்லி விடலாம் காதலர்கள் என்று...
அவர்கள் வெட்கமும் ... முகத்தில் அவ்வபோது திடீர் புன்னகையும்....பார்வை பரிமாறல்களும்....

"ஏய்..." என்றான் அவன் கிசு கிசுபாக..

"என்ன " என்றாள் அவள் மேலும் கிசு கிசுபாக.

"ஒன்றுமில்லை சும்மா கூப்பிட்டேன்"

"இது நூலகம் கொஞ்சம் நேரம் எதையாவது படி கணேஷ்"

"படிச்சிட்டு தான் இருக்கன்....உன் முகத்தை".

"அங்க என்ன தெரிது..."

"அழகு ...நான் பார்த்து மயங்கிய அந்த கிராமத்து அழகு... நம்ம காலேஜில் நான் வேற எந்த பெண்ணிடமும் காணாத அழகு"....

"கொஞ்ச நேரம் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்கியா"..

"வாயை வைத்து கொண்டு ஏன் சும்மா இருக்கனும்?? வாயை வைத்து நிறைய பண்ணலாமே... உதாரணமா முத்..."

"ம்ம்ம்ம்" - என்று அவள் முறைத்து அதட்ட...

"முத்தரசி என்ற உன் அழகான பெயரை உச்சரிக்கலாம்... என்று சொல்ல வந்தேன் செல்லம்"

"நீங்க என்ன சொல்ல வந்திங்க என்ன செய்ய்ய வந்திங்கன்னு எல்லாம் எங்களுக்கு தெரியும்..... முத்தரசி ஒன்னும் முட்டாள் இல்லை... ஒழுங்கா எதையாவது  படி... புத்தகங்களில்...."

"உனக்கு முத்தரசினு ஏன் பேர் வச்சாங்க..நிறைய முத்தம் தருவியா..?"

அவள் வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பி புத்தகத்தில் மூழ்கி போனாள்..
அவன் கெஞ்சும் விதமாய்...

" சின்ன வயசுல அப்பா அம்மாவுக்கு கொடுத்திருப்ப இல்ல அதை சொன்னேன்" என்றான்
அவன் சமாதானம் ஒன்றும் எடுப்பட்டதாய் தெரியவில்லை.... அவள் மூழ்கிய புத்தகத்தை விட்டு வெளி வர வில்லை....
அதன் பின் பல நிமிடங்கள் அவர்கள் பேசவில்லை...

பிறகு,

கணேஷ் திடுமென்று எழுந்தான்..
அந்த நூலகத்தில் வேறு வரிசை நோக்கி நடந்தான்.
'எங்க போற ' சைகையால் கேட்ட அவளை கையமரத்தி விட்டு நடந்து வந்து அந்த இருண்ட மூலையில் இருந்த புத்தக வரிசையை அடைந்து...
அண்ணாந்து பார்த்தான்..
மேலே அந்த வரிசைகளின் தலைப்பு தெரிந்தது.

"அமானுஷ்யம்".

கைகளால் தடவி தள்ளி கொண்டே வந்து...அந்த கருப்பு நிற அட்டைப்படத்தில் நடுவே மூன்று ரத்த துளி சிந்திய படத்தை உடைய ... அந்த கொஞ்சம் பருத்த புத்தகத்தை கை நீட்டி எடுத்தான்.
விரித்து அதன் முதல் வரிகளை படிக்க தொடங்கினான் .
அது இப்படி தொடங்கி இருந்தது....

"யுகம் யுகமாக அவர்கள் வருகிறார்கள்....
என்றும் உங்களோடு......
மக்களோடு மக்களாக....."

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~            

அவன் அந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்கலானான்...
"யுகம் யுகமாக அவர்கள் வருகிறார்கள்....
என்றும் உங்களோடு......
மக்களோடு மக்களாக.....
அவர்கள் இருள் உலக மாந்தர்கள்....
காத்திருக்கிறார்கள் தங்கள் சக்தியூட்ட படுவதற்கு....
ஒவ்வொரு முறை அந்த சிகப்பு பவுர்ணமி வரும் போதும்...
அவன் காத்திருக்கிறான்....
கருப்பு உலகின் தலைவன்...
மரணத்தின் பிரதிநிதி....
அவன் பெயர் ...
"முத்ரா"

அமானுஷ்யம் தொடரும்.....................







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~








        #முத்ரா_( அத்தியாயம்  2 )


தீர்மானத்துக்கு வந்தவனாய் கணேஷ் அந்த புத்தகத்தை மூடி கையில் எடுத்து கொண்டான்

"வா போகலாம் " என்று முத்தரசி கையை பற்றி கிளம்பினான்...

லைப்ரரி பணியாளிடம் அந்த புத்தகம் எடுத்ததுகான குறிப்பை கொடுத்து விட்டு கிளம்பினான்..

"என்ன சார் திரும்ப அந்த புத்தகத்தை எடுத்துடீங்க"

கேட்ட பணியாளர்களுக்கு ஒரு புன்னகையை பதிலாக வீசி விட்டு கிளம்பி வெளியேறினான்...

வெளியே இரண்டுசக்கர வாகன நிறுத்தத்தில் காத்திருந்தாள் சஞ்சனா..
சஞ்சனா??
இவர்களின் பொது தோழி
நடிக்க இன்னும் கூப்பிடாமல் விட்டிருப்பது வியப்பு என்கிற அளவு அழகு... அல்ட்ரா மாடன் புயல்.
கணேஷ் முத்தரசி வருவதை பார்த்து கையசைத்தாள்...
"ஹாய் இந்தா இது உன்னிடம் இருக்கட்டும் "
என்று புத்தகத்தை நீட்டினான்.
"இல்லை இது உன்கிட்டயே இருக்கட்டும் நான் உங்க வீட்டுக்கு வந்து இதை பற்றி பேசலாம் " என்றால் சஞ்சனா...

முகத்தில் வந்து விழுந்த முடியை பின்னுக்கு தள்ளியதில் அழகு இருந்தது..
'சிட்டி பொண்ணுங்கக்குன்னு சில விஷயம் வரும் போல ' என்று நினைத்து கொண்டாள் முத்தரசி....

'இவள் மேக் அப்களைத்தாலும் இதே அழகா இருப்பாளா ' என்று அடிக்கடி தோன்றும் அவளை பார்த்தால்..
"பை சஞ்சனா " என இருவரும்  கையசைத்து கிளம்பினார்கள்..

"இவ எதுக்கு காத்திருந்தா ...உங்க தோழி" என்று கேட்டாள் காதோரமாய் முத்தரசி..
"நாம காதலிக்கறதுக்கு முன்னாடி தான் என் தோழி இப்போ நம்ம தோழி இல்லையா" என்று திறுத்தினான்..
"இந்த புத்தகத்துக்கு தான் காத்திருந்தா அப்புறம் ஏனோ வேணாம்னு சொல்லிட்டா..." என்றான்..
இவர்கள் போவதை பார்த்து கொண்டிருந்த சஞ்சனா பார்வையில் அவள் கண்களில்  தெரிந்த அந்த உணர்ச்சி....
அது ..
என்ன என்பது சொல்ல கடினமாய் இருந்தது.... ஆனால் அது எதுவோ மிக தீவரமாய் இருந்தது....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சூரியனின் ஒளி எப்படியாவது உள்ளே நுழைந்திட முயற்சித்து கொண்டிருக்கும் அடர்ந்த காட்டு பகுதி அது...
ஆள் அரவம் என்கிற சொல்லுக்கு அங்கே இடமே இல்லை போல.
அதுவும் வனத்தின் இந்த குறிப்பிட்ட பகுதியில் மனித கால்தடம் பட்டு எவ்வளவு நாள் ஆச்சோ... தெரியாது..
பேய்கள் தலையை விரித்து போட்டு ஆடுவதை போல் இருந்தது அந்த குறிப்பிட்ட வகை மரங்கள்...
அதன் அடர்திகளை தாண்டி போனால் நடுவே இருந்தது அந்த குகை..
அதற்குள்ளே அமர்ந்திருந்தது அந்த உருவம்..
சராசரி மனித ஆக்ருது யை தாண்டிய ஆஜனுபாகு...
அந்த கரிய உருவம் பார்க்க ஆப்ரிக்க பழங்குடியையா....அல்லது மனித குரங்கையா ...எதை நினைவு படுத்து கிறது என்பது சொல்லவது கடினம்...
தற்போது கண்மூடி அமர்ந்திருந்தது..
அதன் தடித்த எறுமையின் போல உதடுகள் ஏதோ மந்திரத்தை உச்சரிப்பது தெரிந்தது...
முன்னாள் வைக்க பட்டிருந்த மண்டையோடு முறைத்து பார்ப்பது போல் இருந்தது..
அருகில் நின்றிருந்த உருவம் ஒரு ஒல்லி சிறுவனை போல காண பட்டாலும் அதன் வயது 194 .
உடலில் ரத்தம் மொத்தம் எடுத்து விட்டதை போல அது வெளுத்து இருந்தது .. தலையில் துளி முடியில்லை   கண்ணில் பிண கலை..
தன் எஜமான் கண் விழிக்க காத்திருந்தது..
நீண்ட நாள் கழித்து இப்போது தான் கண் விழிக்க உள்ளார் ..
இம்முறை நல்ல செய்தி சொல்வாரா அல்லது கெட்டதா?
கருப்பு உருவம் திடுமென கண்ணை திறந்து பார்த்து புன்னகை செய்தது...
பிறகு வாய் திறந்து மெதுவாக பேசியது..
பல்லெல்லாம் பழைய பாத்திரத்தின் அடி பகுதியை நினைவு படுத்தியது...

"வருகிறார்... முத்ரா வருகிறார்... இந்த சிகப்பு பவுர்நமியில் ...சிறப்பு பவுர்ணமியில் ... மீண்டும் வருகிறார் ..
இந்த முறை சக்தி யூட்ட பட்டு மனித இனத்தை ஆளுவார்.."

"குருவே இம்முறை எனக்கு விடுதலை உண்டா குருவே... நூற்றாண்டு கால எனது அடிமை வாழ்க்கை முடிய போகிறதா" ..

அந்த ஒல்லி உருவத்தின் கண்களில் நப்பாசை ஒளி நம்பிக்கை பிரகாசித்தது...
பேசும் போது  பாம்பு  போன்ற பிளவு பட்ட நாக்கை ஒருமுறை சுழற்றி காட்டியது.

"உனக்கு மட்டும் அல்ல மொத்த பிசாசு இனத்துக்கும் விடுதலை..."
சொல்லி விட்டு கரிய உருவம் சிரிக்க தொங்கியது.....
முதலில் மெதுவாக ...
பிறகு உடலில் தொங்கி கொண்டிருந்த மண்டை ஒட்டு மாலை அதிரும் படி கொஞ்சம் வேகமாக..
பிறகு குகைகுள் தொங்கி கொண்டிருந்த வவ்வால்கள் பயந்து தெரிச்சி வெளியே பறக்கும் அளவு மிக வேகமாக...
அது தொடர்ந்து சிரித்து கொண்டே இருந்தது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கணேஷ் தனது வீட்டில் தனியறையில்
விளக்குகள் அணைக்க பட்டு ஒரே ஒரு மெழுகு வத்தி வெளிச்சத்தில் அந்த புத்தகத்தை பிரித்து வைத்து படித்து கொண்டிருந்தான்..
படிக்க படிக்க அவன் முகம் வித வித உணர்ச்சிகளை வெளி படுத்தியது அந்த மெல்லிய மெழுகு வத்தி வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது...

கொஞ்ச நேரம் நிமிர்ந்து உட்கார்ந்து தன்னை ஆசுவாச படுத்தி கொண்டான்
நீண்ட பெருமூச்சு விட்டான் பிறகு எழுந்து பாத்ரூம் இருந்த திசை நோக்கி நடந்தான்....

5 நிமிடம் கழித்து பாத்ரூம் விளக்கு அணைத்து விட்டு அறைக்குள் நுழைந்து போது தான் அதை உணர்ந்தான்..

'அறையில் யாரோ இருக்கிறார்கள்'

இருண்ட மூளை யில் ஒரு உருவம் அமர்ந்திருந்தது...தெரிந்தது..
உற்று கவனிதத்தில் அது ஒரு பெண் உருவம் என்பது புரிந்தது..
சற்றென்று பாய்ந்து லைட் ஆன் செய்ய போனவனை
"விளக்கு வேணாம் கணேஷ் "என்ற சஞ்சனாவின் குரல் தடுத்ததது

"நீ எப்படி உள்ள வந்த அநியாயத்துக்கு பயத்துடன் தெரியுமா ... படிக்கிற புக் அப்படி"

"எந்த இடத்தலையும் புகுந்து செல்பவள் நான் .உன்னோட வீடு என்ன பிரமாதம்..
என்ன சொல்லுது புத்தகம்... இதை தான் மொத்தம் 10 வாட்டி படிச்சிட்டியே கடந்த 8 மாசத்துல... என்ன தான் சொல்லுது புத்தகம் "

"அது என்ன சொல்லுதுன்னு நானும் 10 வாட்டி சொல்லிட்டேன் உன்கிட்ட நீ தான் நம்ப தயங்கற"

"அதுகில்ல இந்த விஞ்சான உலகத்துல ..."

"மீண்டும் உன் விஞ்சான உலக கதை யெடுகாத .. இன்றைக்கு தேதிக்கு உன் விஞ்சாணம் பதில் சொல்ல முடியாம திணறும் விஷயம் ஏராளம் .. அது உனக்கே தெரியும்".

கொஞ்ச நேரம் அங்கே மௌனம் நிலவியது ... அதை இரவு பூச்சி ரீங்காரம் பூர்த்தி செய்தது...
பின் மீண்டும் பேசினான் கணேஷ்...

"இங்கே பார் முத்ரா என்கிற தீய சக்திகளின் தலைவன் இருப்பது நிஜம் ..
அவன் யுகம் தோறும் மனித குலத்தில் சாதாரண பிறவி போல மக்களோடு மக்களாக வாழ்ந்து வருவது நிஜம்...
நான் குறிபிட்ட அந்த சிறப்பு பவுர்ணயில் குறிப்பிட்ட பூஜை செய்தால் அவன் சக்தி ஊட்ட படுவது நிஜம்..
அந்த சக்தி மீண்டும் அடுத்த அந்த சிகப்பு பவுர்ணமி வரை நீடிக்கும் என்பது நிஜம்...
இதை ஏற்கனவே சில பெயர் செய்து இருக்கிறார்கள் ..
இதற்கு முன் ஒரு ஜமீன்தார் இதை செய்தார்... அவருக்கு சில அமானுஷ்ய சக்தியை பரிசளித்தான் முத்ரா...விளைவு....
தனது வாழ்நாளில் மொத்தம் 2018 பெண்களை அனுபவித்தான் அந்த ஜமீன்தார்..
தனக்கு சக்தி யூட்டுபவர்களுக்கு முத்ரா சக்திகளை பரிசலிக்கிறான்.
இம்முறை அந்த பரிசை பெற போவது நாம் தான்.

"ஆனால் அந்த பூஜை...."

"உனக்கு கவலை வேண்டாம் எனக்கு தெரிந்த ஒரு மலையாள மந்திர வாதி இதற்காக பல காலம் காத்திருக்கிறான்...
ஒரு காட்டு குகையில்.."

கொஞ்சம் இடைவேளை விட்டு கணேஷ் சொன்னான் "என்ன இதுக்கு தேவையானது எல்லாம் ஒரு நர பலிதான்"
சஞ்சனா கண்கள் கொஞ்சமே கொஞ்சம் திகிலில் விரிந்தது..

"எனக்கு பயமா இருக்கு கணேஷ்" என்றாள் மெதுவாக பூனை போல

"பயப்படாதே சஞ்சு ..இது நடந்தால் நான் தான் ராஜா...
நீ தான் ராணி...அதை பற்றி மட்டும் யோசி" என்றான்...

அவள் மெல்ல வெட்க பட்டவளாய் கணேஷை நெருங்கினாள் ..
அவன் கண்கள் எதிர்கால கற்பனையில் மூழ்கி இருந்தது...
அவனை இன்னும் நெருங்கினாள்.....
'மணி 12 என்பதால் கடிகாரத்தில் இரண்டு முள் களும் ஒண்டொரு ஒன்று பின்னி பிணைந்து இருந்தது'
காற்று இவர்களிடையே புக முயற்சித்து தோற்று போன அந்த 10 நிமிடங்கள் கழித்து சஞ்சனா மெல்ல கேட்டாள்

"ஆமாம்..... எப்படி இருக்கா ... உன் கிராமத்து காதலி"..

"ம்ம்ம் நல்லா இருக்கா..."
-பாவம் தான் பலி இட பட போவது தெரியாத அப்பாவி ஹா ஹா தேடி பிடிச்சு ஒரு கிராமத்து பொண்ண லவ் பண்ணது எதுகாம்??

என சொல்லி சிரித்தான்..
கொஞ்சம் இடைவேளை விட்டு சஞ்சனாவும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டாள்..

தொடரும்............







~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~








        #முத்ரா (அத்தியாயம் 3)

அங்கே கணேஷும் சஞ்சனாவும் பேசி கொண்டு இருந்த அதே இரவில் வேறு ஒரு இடத்தில............

அமானுஷ்யத்தை அநியாயத்திற்கு வாரி இறைத்து கொண்டு இருந்தது நமக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்த அந்த காட்டு பகுதி ..

பகல் நேரத்திலேயே அந்த வனத்துக்குள் நுழைந்தவர்கள் இரவை உணர்வார்கள்..
இப்போது நிஜமாகவே இரவு
அந்த நேரத்துக்கு என விஷேசமாய் விழித்திருக்கும் சில ஜந்துக்களின்
நடமாட்டம் தெரிந்தது.
இரவின் அமைதியை அவ்வபோது கிழித்து கொண்டு எங்கோ ஊளை இடும் நரிகள்....
பயத்திலா ..பசியிலா ..தெரியவில்லை...

அங்கே அந்த குகையில்....
தேர்தல் நேர தொகுதி போல திடீர் பரபரப்புக்கு ஆளானது அந்த இடம்...
குகைகுள் அலங்காரம் பலமாக செய்ய பட்டிருந்தது.
சுத்தி வைக்க பட்ட மண்டை ஓடு களின் தலை மேல் விளக்கு ஏற்ற பட்டு எரிந்து கொண்டு இருந்தது..
நடுவே ரத்தத்தை கொண்டு போட பட்ட அந்த வடிவம் எண்கோணமா அருங்கோணமா சரியாய் தெரியவில்லை ...
பூவுக்குள் பூவுக்குள் பூ போல சுற்றி சுற்றி ஏதோ படம் ...
அதன் மையத்தில் யாக குண்டம் போல அமைப்பு தயாராக வைக்க பட்டு இருந்தது...
குகையின் சுவற்றில் சமதளமாக இருந்த அந்த பகுதியில் ..அது வரைய பட்டிருந்தது...

"முத்ரா"

இருள் உலக தலைவன்...

தலை முடிக்கு பதில் கொத்தாக பாம்புகள் வரையப்பட்டு இருந்தது..
கண்கள் உடும்பு ...முதலை கண்கள் போல இருந்தது...
வாயில் உள்ளே நெருப்பு எரிந்து கொண்டு இருக்க உள்ளே புள்ளி புள்ளியாக மனிதர்கள் விழுந்து கொண்டு இருப்பது தெரிந்தது...
முத்ராவின் கூர் நகம் கோரை பல் எல்லாம் பயமுறுத்தும் வகையில் இருந்தாலும் உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது...
சக்தியூட்ட படாமல்.
சாப்பாடு இல்லாமல் முத்ரா வாடுவது தெரிந்தது... வயிறு மட்டும் அப்போதும் பெருத்து காணப்பட்டது ... உற்று பார்த்த போது அதில் உலக உருண்டை வரைய பட்டது தெரிந்தது..

ஆம் ..

இனி உலகம் இருக்க போவது முத்ராவின் இரைப்பையில் தான்.
படம் புரியாத மாடர்ன் ஆர்ட் வகையில் வரைய பட்டிருந்தது...இது முத்ரா வை விளக்கும் படம்..

அதன் முன் விழுந்து வனங்கியது அந்த இரண்டு விசித்திர உருவங்களும்...
அந்த மந்திரவாதியின் கண்கள் கோவை பழம் போல சிவந்திருந்தன...
பயபக்தியாலா அல்லது கடந்த சில தினங்கள் தூக்கம் இல்லாததாலா தெரியவில்லை...

"காலம் வந்து விட்டது முத்ரா... காலம் வந்து விட்டது... இனி நீ பசியால் வாடியது போதும்...உன் பிள்ளைகள் உனக்கு உணவு தருவோம்..
உனக்கான நாள்....சிகப்பு பவுர்ணமி நெருங்கி விட்டது..."
சொல்லி விட்டு அந்த மந்திர வாதி பூஜையை தொடர்ந்து செய்யலானான்...
அருகில் இருந்த ஒல்லி உருவம் வணங்கி விட்டு குகை சுவற்றில் பல்லி போல் ஏற தொடங்கியது..
பின் குகையின் மேல் சுவற்றில் வௌவால் போல தலை கீழாய் தொங்கி ஒய்வு எடுத்தது...
வழக்கம் போல்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கணேஷ் காரில் காத்திருந்தான் ...
முத்தரசி வந்து ஏறிய போது பட பட பாக காண பட்டாள்....
"கணேஷ் கொஞ்சம் பதட்டமா இருக்கு வீட்டுல பொய் சொல்லிட்டு இப்படி எப்பவும் வெளிய வந்தது இல்லை.."

"ஹலோ காதலி ....காதலித்தால் எல்லாம் செய்து தான் ..ஆக வேண்டும். நாம் என்ன விதிவிலக்கா....
நான் கூட்டி போகும் மலை பிரதேசம் இருக்கே ஒரு முறை வந்து பார் அப்புறம் நீயே அடுத்து எப்ப போலாம் கணேஷ் ..எப்போ போலாம் கணேஷ் னு கேட்க அரம்பிப்ப..."

கார் கதவு தட்ட படும் சத்தம் கேட்க திரும்பி பார்த்த போது சஞ்சனா நின்றிருந்தாள்... கையில் இருந்த பையை முத்தரசியை நோக்கி நீட்டினாள்

பத்திரமா போயிட்டுவாங்க லவ் பேர்ட்ஸ் என்று கண்ணடித்தாள்...
"ஏய் சஞ்சனா வீட்டில் யாரவது கேட்டாள்......" என்று முத்தரசி இழுக்க....

"கலவி சுற்றுலா போய் இருக்காங்கன்னு உண்மையை சொல்லிட்ரன்"..

"ஏய்"

"சாரி கல்வி சுற்றுலா போய் இருக்கங்கன்னு சொல்லிட்ரன்"

"ஹ்ம்ம் ஓகே பை"

இருவரும் கையசைத்து விட்டு கிளம்பி னார்கள்..

திரும்பி பாரத்த கணேஷை பார்த்து கண் அடித்தாள் சஞ்சனா... ரகசியமாக.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் அந்த இரண்டு உருவங்களும் காத்திருந்தன

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திடீரென தன் செல் போன் ஒலிக்க பையை திறந்து அதை எடுத்து காதுக்கு கொடுத்தவள் முகம் மாறி..
"வண்டியை நிறுத்து கணேஷ் நான் வீட்டுக்கு போய் ஆகணும் என்றாள்..

ஒருகணம் திகைத்து சுதாரித்தவன்
"என்ன ....எ.... என்னாச்சு என்றான்"

"அக்கா குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்துடிச்சாம் நான் போயாகனும்"

கணேஷ் இதய துடிப்பு கூடியவனாய் முடியாது என்றான்

"என்ன"

" முடியாது அன்பே கண்டிப்பா முடியாது... நான் உன்னோடு ஒரு நாளாவது தனியாக இருக்க ...ஒரு சுற்றுலா செல்ல ஆசை பட்டது என் தவறா?"
அவன் கண்கள் கலங்கி இருந்தன குரல் தழுதழுத்தது...

"இல்லை கணேஷ் வந்து....குழந்தை..."

"குழந்தைக்கு ஒன்னும் ஆகாது... உன்னோட நல்ல மனசுக்கு உங்கள் குடும்பத்துக்கே எப்போதும் ஒன்றும் ஆகாது "

சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் காரை ஓட்டினான்...

கார் தன் பாதையில் தொடர்ந்து சென்றது...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

காட்டில் அந்த இரண்டு உருவங்கள் காத்திருந்தன...
கருப்பு உருவம் கையில் அந்த பெரிய கத்தி பளபளத்தது...
ஒல்லி உருவம் ஒரு கிண்ணத்தை பளபளபாக துடைத்து கொண்டிருந்தது...
அது ரத்தம் பிடிக்கும் கிண்ணம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாலை நேரம்..
சூரியன் தனது ஷிபிட் ஐ முடித்து விட்டு தனது ரிலிவர் நிலா விடம் விடை பெற தொடங்கி இருந்தான்.

கார் அந்த காட்டு பகுதியை நெருங்கி கொண்டிருந்த போது
நீண்ட நேர சிந்தனைக்கு பின் அவள் தீர்மானமாக சொன்னாள்...
"என்னால் வர முடியாது கணேஷ் ... மனசாட்சி உறுத்தலோடு எந்த காரியத்தையும் என்னால் செய்ய்ய முடியாது...காரை இப்போதே திருப்பு ப்ளீஸ்.."

கணேஷ் கண்களில் மெதுவாக ஒரு கொடூர தனம் குடியேற தொடங்கியது...
ஒரு வெறிகொண்ட ஓநாய் போன்ற பார்வையோடு அவள் பக்கம் திரும்பினான்...

தொடரும்.......................






~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~







.   #முத்ரா (அத்தியாயம் 4)

#அறிவியல்_காதலன்

(கதை, கற்பனை, எழுத்து : ரா.பிரபு)

அந்த காட்டு சாலையை ..பால் அபிஷேகம் செய்ததை போல நிலவு ஒளியை ஊற்றி கொண்டிருந்தது...

அந்த காருக்குள் தீர்மானமாக' முடியாது காரை திருப்பு'
என்றவளை திரும்பி முறைதான் கணேஷ்...
கண்களில் கோவம் .. அது அவன் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்ததில் தெரிந்தது...

அதை வெளி படுத்தி கொள்ளாமல்...

"உனக்கு என்னமா பிரச்னை "
என்றான்..

"என்ன பிரச்சனையா அங்கே அக்கா குழந்தை ஆஸ்பித்திரியில் உள்ள போது நான் இப்படி ஊர் சுற்றுவது நல்லது அல்ல... அது என்னால் முடியாது".

"நான் தான் ஒன்னும் ஆகி இருக்காதுன்னு சொல்றன் இல்ல"

"நீங்க சொன்னா... எல்லாம் சரியா போய்டுமா"

கணேஷ் ரத்தம் இப்போ எரிமலை குழம்பு....

"சரி நீ திரும்ப போன் பண்ணி கேட்டியா"

ஒரு கணம் யோசித்தவள்
போனை எடுத்து எண்களை ஒத்தினாள்..
வீட்டில் விசாரித்தவள் முகத்தில் ஆறுதல் தெரிந்ததை கவனிக்க தவறவில்லை கணேஷ் ...

"என்னாச்சு" என்றான். பொறுமையாக..

"ஹ்ம்ம் ஓகே ஒன்னும் இல்லையாம் சின்ன கால் பிசகு... சரியாகி விட்டதாம்".

"நான் தான் சொன்னேன் இல்ல உங்க குடும்பத்துக்கே ஒன்னும் ஆகாது...
குறிப்பா நீ நூறு வருடம் வாழ்வ... "

கணேஷ் கண்களில் குள்ளநரி மின்னல்..

அதன் பின் அவள் பேச வில்லை...
அந்த காட்டுக்குள் நுழையும் வரை...

"இது...இது... என்ன இடம்.... கா..காட்டுக்கு எதுக்கு வந்தோம்"

"இங்கே உள்ள ஒரு அருமையான டூரிஸ்ட் ஸ்பாட் இருக்கு"

"இங்கையா... ஐயோ எனக்கு பயமா இருக்கு வேணாம் பிளீஸ் இந்த இடம் எனக்கு பிடிக்கல..."

"ஆனா எனக்கு பிடிச்சிருக்கு ... இங்கே பார் சும்மா சும்மா எதையாவது கேட்டுகிட்டே இருக்காத என் மேல நம்பிக்கை இருந்தால் ப்ளீஸ் எதையும் கேட்காம யென் கூட வா...
அது வந்து இந்த காட்டுக்கு நடுவுல ஒரு அருவி இருக்கு பவுர்ணமில அதை பார்க்க சும்மா பால் ஊத்தர மாதிரி இருக்கும். அதை காட்ட தான் உன்னை கூட்டி வந்தேன்"

அதன் பிறகு அவள் பேச வில்லை...

அந்த குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்தி கணேஷ் காத்திருந்த இடத்தில வழி ஏதும் இல்லை வெறும் புதர் தான் இருந்தது..

."நான் ஒன்னு கேட்கலாமா இங்கே வழியே இல்லையே... இங்கே எதற்கு காத்திருக்கிங்க"

கணேஷ் சிரித்து விட்டு

"நம்மை அழைத்து செல்ல கைடு வருவார் "

 என்றான்.

சரியாக 20 நிமிடம் பவர்ணமி ஒளியில் காத்திருந்த பின் அந்த புதரில் ஒரு சலசலப்பு தெரிந்தது ... தூரத்தில் இருந்து ஏதோ முதலை தன்னை நெருங்குவதை போல் புதரில்  சல சலப்பு சப்தம் நெருங்கி வந்தது..

திடீரென ...

புதரை விலக்கி அந்த ஒல்லி உருவம் எட்டி பார்த்தது... பாம்பு போல அது தரையில் படுத்து ஊர்ந்து கொண்டு வந்திருந்தது....

"கணேஷ் எ....என்ன... இதெல்லாம் ..இ இது... இந்த உயிரினம்......"

"முத்தரசி ப்ளீஸ் நீ கொஞ்ச நேரம் எதையும் கேட்காமல் இருந்தால் இந்த காட்டில் நான் உனக்கு பல அதிசயத்தை காட்டுவேன்.."

அந்த உருவம் புதரை விளக்கி வழி காட்டி கொண்டு ஒரு தேர்ந்த உடும்பு போல... ஊர்ந்து மட மட வென முன்னேறியது..
அந்த குகையை நெருங்கிய போது அங்கே பேய் மரங்கள் அடர்த்தி கொஞ்சம் குறைந்து சமதளம் தெரிந்தது..

அந்த குகைக்குள் நுழைந்த போது ஏதோ கேட்க வாயை திறந்தவளை
"எதையும் கேட்க மாட்டேன்னு சொல்லி இருக்க " என கையமார்த்தினான்.

பிறகு..

அரை மணி நேரம் கழித்து அந்த மர்ம மந்திரவாதி முன்னாள் இருவரும் அமர்ந்து இருக்க ..
பக்கத்தில் ஒல்லி உருவம் கைகட்டி இருந்தது....
அந்த ஒல்லி திடீரென...பக்கத்தில் மரத்தில் தெரிந்த ஒரு பெரிய பல்லியை டக்கென பிடித்து லபக்கென விழுங்கியது.

மந்திரவாதி பேசினான்..

இருட்டின் அமானுஷ்யத்தில் அவன் குரல் திகிலை கலந்தது.

" முத்ரா.. மக்களோடு மக்களாக கலந்து இருந்து வருகிறார்... யுகம் யுகமாக ... யாரோ ஒரு சிறுவனை போல அல்லது கிழவனை போல ... ஏழை பிச்சைக்காரனை போல அல்லது நாட்டை ஆளுபவனாக... அவர் சக்தி யூட்டபடும் நாளுக்காக காத்திருக்கிறார்.. அவர் சக்தி அடைந்த பின்......"

"போதும் "என்றாள் முத்தரசி..
இல்லை.... இங்கு எதுமே சரியில்லை இனி இங்கு ஒரு கணம் கூட இருக்க முடியாது....இப்படி ஒரு கோரமான இடத்தில..... கூட்டி வந்து....ச்ச ..இது என்ன விளையாட்டா?"

சொல்லிவிட்டு விறு விறு என நடக்க தொடங்கினாள்... அவளை தடுக்க போன கணேஷை கையமார்த்திய மந்திர வாதி... கையில் இருந்து ஏதோ ஒரு துகளை காற்றில் வேகமாக ஊதினான்..
அவள் அங்கேயே ஆணி அடித்தார் போல் நின்றாள்... பார்வைகள் நிலை குத்தின...
கணேஷ் பாய்ந்து சென்று...

 "இங்கே பார் இங்கே வந்து உட்கார வா "

 என்று பதட்டமானதை அவள் கண்டு கொள்ள வில்லை..

"இப்போ அவள் ஒரு குழந்தை மாதிரி நீ பேசுவது புரியாது சைகை மொழி தான் உதவும் ... ம்ம் சீக்கிரம் நேரம் நெருங்கி கொண்டு உள்ளது சரியாக 12 மணிக்கு பலி முடிதாக வேண்டும்... இல்லை என்றால் முத்ரா கோவத்திற்கு ஆளாக வேண்டும்"

அவன் அவளை செய்கையில் வந்து அமர சொன்னான்...
அவள் புரியாமல் ஏதோ பொம்மை போல பார்க்க.. வந்து அமர்ந்து செய்கையில் காட்டினான்... அதை பார்த்து அவளும் சாவி கொடுத்தார் போல் வந்து அமர்ந்தாள்... பூஜை தொடர்ந்தது....
சரியாக மணி 12..

"அவளை பலி பீடத்தில் படுக்க சொல் சீக்கிரம்"

கணீரென மந்திரவாதி கூவினான்...
கணேஷ் அவளை அந்த மேடையில் படுக்க வற்புறுத்த அவள் புரியாமல் பார்த்தாள்...
அவன் தனது கழுத்தை பலி பீடத்தில் வைத்து படுத்து  காட்டி ..

"இப்படி ....இப்படி... படு "

என சைகை செய்தான்....

சரியாக அந்த கணத்தில்.....................

கழுத்தில் சுறீர் என மின்னல் அக்கினி பாய்ந்ததை போல உணர்ந்தான்...
அடுத்த கணம்....
துண்டிக்க பட்ட அவன் தலை காற்றில் சுழன்று கொண்டு எழும்பியது....
வெற்று தலையில் மிக குறைந்த ஒரு மைக்ரோ வினாடிக்கு இருந்த உயிரில்... அவன் கடைசியாக பார்த்த காட்சி......

தனது முண்டம் கீழே கிடைக்க ....

அந்த இரண்டு உருவங்களும் அவள் காலில் விழுந்து வணங்கி கொண்டு இருந்தன....
அவள்...
முகத்தில் பிண களையும் கொலை வெறியும் தெறிக்க... கத்தியில் வழிந்த ரத்தத்தை வழித்து... நாக்கால் ருசித்து கொடூரமாக சிரித்து கொண்டு இருந்தாள்...

"'முத்தரசி ...என்கிற ....முத்ரா'"

"முற்றும்"


.

Comments

  1. 😆😆😆😆😆👍👍👍👍👌👌👌👌👌Arumai nanbarae... Ethirpaarkkavillai intha thiruppam... Kollappaduvaan endru ethirpaartthaen... Aanaal, Mutharasi thaan Muthra endru ethir paarkkavilai... 15 aandugal kazhitthu Novel padittha thiruppthi undaagiyathu👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"