Posts

Showing posts from April, 2017

"சூரியன் எனும் சூரன்"

Image
" சூரியன் எனும் சூரன்" அறிவியல் காதலன் ரா.பிரபு நமது சூரிய குடும்பத்தின் 'தலை'யான சூரியன் எனும் சூரனை பற்றியும் அது வேலை செய்யும் விதம் பற்றியும் சில தகவல்களை தான் நாம் இன்று பார்க்க போகிறோம். முதலில் இந்த பூமியின் மொத்த ஆற்றல்காண ஆற்றல் மூலம் சூரியன் தான் என்று நாம் கேள்வி பட்டு இருந்தாலும் அது எப்படி என்பதை இன்னும் பல பேர் முழுதாக புரிந்து கொள்வதில்லை. அதாவது நாம் அன்றாடம் பல செயல்கள் செய்கிறோம் படிக்கிறோம் எழுதுகிறோம் ஒடுகிறோம்.. பேசுகிறோம் பாடுகிறோம் இது எல்லாவற்றிற்கும் ஆற்றல் தேவை படுகிறது அல்லவா... அந்த ஆற்றலை நமக்கு கொடுத்ததே சூரியன் தான். அதாவது சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றல் தாவரங்களுக்கு கடத்த படுகிறது (சூரியனில் இருந்து நேரடியாக ஆற்றலை உள்வாங்க உலகில் இரண்டு உயிரினங்களால் தான் முடியும் ஒன்று தாவரம். இனொன்று கற்பனை கதாபாத்திரமான சூப்பர் மேன்) அந்த ஆற்றல் தாவரத்தை உண்ணும் மனிதனுக்கு அல்லது அதை உண்ணும் விலங்குக்கு கடத்த படுகிறது. இந்த உலகம் மனிதனின் சிந்தனையில் உண்டானது என்றால் அந்த சிந்தனையை சிந்திக்க மனிதனுக்கு ஆற்றலை கொடுத்ததே சூரியன் தான்

"வெள்ளி எனும் மரண கிரகம்"

Image
"வெள்ளி எனும் மரண கிரகம்" (அறிவியல் காதலன்) (ரா.பிரபு) நாம் வெறும் கண்ணால் எளிமையாக பார்க்க முடிய கூடிய கிரகமான வெள்ளியின் அழகில் மயங்காதவர் யாரும் இல்லை. காரணம் இரவு வானில் நிலவிற்கு அடுத்த படியாக அதிக ஒளி பொருந்திய ஒன்று என்றால் அது வெள்ளி தான். மேலும் அதன் மின்னும் தன்மையும் நட்சத்திரங்களில் இருந்து மாறு பட்டு மிக அதிக மின்னும் தன்மைகொண்டு அழகாக இருக்கும். ஆங்கிலத்தில் Venus  என்று அழைக்க படும் அந்த பெயர்  ரோம் நாட்டில் காதல் மற்றும் அழகிற்கு உகந்த தேவதை கடவுளின் பெயர். காலம்காலமாக வெள்ளி அழகிற்கு இலக்கணமாக உதாரணமாகவே கதைகளிலும் நிஜத்தில் ஒப்பிடுகளிலும் சொல்ல பட்டு வந்தது. 20 ஆம் நூற்றாண்டில் பல கற்பனை எழுத்தாளர்கள் அந்த கிரகம் எப்படி இருக்கும் என தனது கதைகளில் வர்ணித்து எழுதி இருந்தார்கள் . அந்த வர்ணனையில் வெள்ளி கிரகம் தெய்வ கடாட்சகம் பொருந்திய அழகிய மலைகள் சோலைகள் அருவிகள் பூத்து குலுங்கும் இயற்கை அழகும் பூமியை காட்டிலும் அதிக பசுமை கொண்டதுமாக இருந்தன. ஆனால் இதெல்லாம் எது வரை என்றால் வானியல் அறிவியல் வளர்ச்சி அடைந்து விண்வெளி ஓடங்களை கொண்டு ஆய்வாளர்கள்