Posts

Showing posts from July, 2018

"நியூட்டனின் நிதர்சன விதிகள் "

Image
" நியூட்டனின் நிதர்சன விதிகள் " ⚛அறிவியல் காதலன்⚛     ரா.பிரபு கி.மு 300 களில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் அக்காலத்தில் மக்கள் அறிந்த ஒரு மாபெரும் சிந்தனையாளர். ஒரு முறை அவர் பொருட்களின் இயக்கம் பற்றி சில கருத்துக்களை சொன்னார் அதாவது ஒரு பந்தை உருட்டி விட்டால் ஏன் அது கொஞ்ச தூரம் சென்ற பின் நின்று விடுகிறது?? அதற்கு அவர் சொன்ன காரணம் "ஏனென்றால் அது களைப்படைகிறது " பொருட்கள் ஏன் பூமியை நோக்கி வருகிறது? "ஏன் என்றால் அது பூமியுடன் ஒன்றிணைய ஆசை படுகிறது" இந்த கருத்தை மாற்றி அமைக்க உலகம் நீண்ட நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. இந்த கருத்தை சொன்ன பின் கிட்ட தட்ட 2000 ஆண்டுகள் தாண்டி பிறந்த நியூட்டன் பொருட்களின் இயக்கம் பற்றி மிக சிறப்பான மிக தெளிவான ஆதார பூர்வ உண்மைகளை சில கோட்பாடுகளின் வாயிலாக உலகத்திற்கு கொடுத்தார். ஆயிர கணக்கான விஞ்ஞானிகள் வரலாற்றில் வந்தாலும் உலகின் பார்வையை மொத்தமாக தனக்கு பின் மாற்றிவிடும் விஞ்ஞானிகள் மிக அரிதாக தோன்றுவது உண்டு. அறிவியலில் நியூட்டனின் பங்களிப்பு அந்த மாதிரியான ஒன்று தான். அவரது கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு அதன