Posts

Showing posts from 2021

"இன்று ஒரு தேடல்"

Image
  "இன்று ஒரு தேடல்"  அறிவியல் காதலன்  🌏ரா.பிரபு ✍️ ⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳⏳ வணக்கம் நண்பர்களே ! ஒரு அணுவை எடுத்து கொண்டு உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஆராய்ந்து இது வரை சொன்ன உண்மைகள்... அந்த அணுவின் அனு அளவு தான் இருக்கும். அந்தளவு தேட தேட தகவலை புதைத்து வைத்து இருக்கும் ஒரு களஞ்சியம் தான் இந்த பிரபஞ்சம்.  எனவே உலகில் அரிய தகவல் என தேட தொடங்கினால் வாழ்நாள் பூரா தேடி கொண்டே இருக்கலாம். இந்த கட்டுரையில் அப்படி ஒரு 70 தகவல்களை பற்றி சொல்லி இருக்கிறேன் படித்து பயன்பெருங்கள்.பல தகவல்கள் உங்களுக்கு முன்பே தெரிந்ததாக இருக்கலாம் ஆனால் நிச்சயம் அனைத்து தகவலும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை. (கட்டுரை 50 அத்தியாயம் என்றாலும் 70 தகவல்கள் கொண்டது. எப்படி என்பது இறுதி அத்தியாயத்தில் புரியும் படித்து பாருங்கள் ) வாருங்கள் தகவல் களஞ்சியத்தில் ஒரு துளி சுவைக்கலாம்.... ⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛⌛. 1.🔘 இரவில் விமானம் பறக்கும் போது கவனித்து இருக்கீங்களா சிகப்பு  பச்சை  மற்றும் வெள்ளை நிற ஒளி விளக்குகள் மின்னி கொண்டு போகும் எதற்கு அந்த பல வண்ண விளக்குகள் தெரியுமா ? கவனித்து பார்த்தால் எப்போதும் விமானத்தில

Igloo வின் அறிவியல்.

Image
  Igloo வின் அறிவியல். அறிவியல் காதலன்  ரா.பிரபு. பனி பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் தங்குவதற்கு குகை அமைப்பு கொண்ட வீடுகளை கட்டி கொள்வதை பார்த்து இருப்பீர்கள். அதன் பெயர் igloo. முழுக்க முழுக்க பனியால் செய்ய பட்ட ஒரு கட்டிடம் (?) எப்படி குளிரில் இருந்து மனிதர்களை காக்க முடியும் இதை பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா ? அதற்கு ஒரு அறிவியல் காரனம் உள்ளது அதை பற்றி இன்று பார்க்கலாம். நீங்கள் இப்போது இருக்கும் உங்கள் வீட்டை அப்படியே மைனஸ் 50 டிகிரி இருக்கும்  பனி பிரதேசத்தில் மாற்றி விட்டதாக நினைத்து கொள்ளுங்கள் என்ன ஆகும் ? குளிர் கான்க்ரீட்டை ஊடுருவி உங்கள் எலும்பை தொடும் அல்லவா அப்படி இருக்கும் போது பனியால் செய்த ஒரு வீடு குளிரில் மனிதர்களை பாதுகாப்பது ஆச்சர்யம் தான் அல்லவா. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால்..இந்த தொழில் நுட்பத்தை முதலில் கண்டு பிடித்தது மனிதர்கள் அல்ல பனி வாழ் மிருகங்கள். மனிதர்கள் அதை காபி செய்தார்கள் அவ்வளவு தான். போலார் கரடிகள் ஐஸ் குகைகளில் கதகதப்பாக உறங்குவதைப் பார்த்து இருக்கலாம் . சில பறவைகள் கூட இதைச் செய்கின்றன. இக்லுவில் வெப்பம் எப்படி வெளியேறாமல் தடு

"ஈயும் குட்டி சூறாவளியும்"

Image
  "ஈயும் குட்டி சூறாவளியும்" ரா.பிரபு "Bumblebee’s shouldn’t be able to fly." ஈக்களால் பறக்க முடியாது.. நூற்றாண்டுக்கு முன் இருந்து சொல்ல பட்டு வந்த ஒரு கூற்று இது. ஆம் 'ஏரோடைனமிக்ஸ் விதி அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒரு ஈயால் பறக்க முடியாது தான் .ஆனால் நல்ல வேலை ஈக்கு இந்த விதிகள் தெரியாது அதனால் அது தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறது..'(the bee movie இன் ஆரம்ப சீனில் இந்த வசனத்தை சொல்லி இருப்பார்கள் மற்றும் ஒரு பாக்சிங் படம் ஒன்றில் கூட ஒரு வீரனை ஊக்க படுத்த இதை  சொல்லி இருப்பார்கள் படம் பெயர் நினைவில் இல்லை. ) பல வருடங்களுக்கு முன் நடந்தது இது..  இரண்டு நண்பர்கள் ஒரு டின்னரில் சாப்பிட்டுக்கொண்டு 'லைட்டாக' மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் ஒருவர் உயிரியலாளர் மற்றொருவர் பொறியாளர். அந்த உயிரியலாளர் அந்த பொறியாளரை பார்த்து ஒரு ஈ பறப்பதற்கான அறிவியலை உங்களால் விளக்க முடியுமா என்று கேட்கிறார். ( அவர்கள் பேசி கொண்டது Bumblebee எனும் ஈ வகை பற்றி ) அந்தப் பொறியாளர் உடனே குனிந்து அருகில் இருந்த நேப்கின் பேப்பரை எடுத்து பேனாவை எடுத்து வைத

தங்கம் 2

Image
  "தங்கம் 2" (அறிவியல் சிறுகதை )  #ரா_பிரபு தங்கம் சிறுகதை ஒரு பாகம் தான். ஆனால் நண்பர்கள் சிலர் சொன்னதற்கு இணங்க யோசித்து ஓரு பார்ட் 2 எழுதி இருக்கிறேன். பார்ட் 2.. "கியாபுக் கியா.  கிர்.. " என்றார் உருமாறிய பெஞ்சமின்.. தன் புதிய பன்றி மூஞ்சி அழகை கண்ணாடியில் ரசித்தார். ச்சை மனிதர்கள் முகம் தான் எவ்ளோ கேவலமா இருக்கு.. இந்த கூம்பு வடிவ முகம் தான் என்ன அழகு.  இதை ஏதோ ஒரு பூமியின் அருவெறுப்பான பிராணியுடன் ஒப்பிட்டு பேசுகிறாராகள் அந்த பிராணியை ஒரு முறை பார்க்க வேண்டும். கதவை தடவி தடவி திறந்த உதவியாளர் பீட்டர்" கியாரிக்.. கியப்பிக்கி... " என்றான். (நமக்கு ஜிர்கோனி தெரியாததால் இனி மொழி பெயர்க்க வேண்டியது கடமை ) "மரண வெற்றி பாஸ்.ம் " "மனித உடல்ல பாக்க ரொம்ப அழகா இருக்க ஹி ஹி " "பூமி வெற்றிகரமா கைப்பற்ற பட்டது .வாழ்க ஜிர்கோனி.." " நான் யார் உடல்ல இருக்கேன் பாரு.  உலகத்துல இருக்கிற விஞ்ஞானிகள்ல இவர் தான் பெரிய உஸ்தாதாம்.. "  "உலக முதன்மை விஞ்ஞானியையே பிடிச்சிடீங்க தலைவரே.. நீங்க கீர்த்தி மிக்கவர்..." அந்த தலைவன் கொ