Posts

Showing posts from November, 2018

"மனம் எனும் மாய பிசாசு"

Image
" மனம் எனும் மாய பிசாசு" (இந்திய சைக்கோகளின் உலா )  ரா.பிரபு (பாகம் 1 ) நீண்ட நாட்களுக்கு முன் மதன் அவர்களின் மனிதனுக்குள் ஒரு மிருகம் புத்தகம் படித்தேன். மனித வரலாற்றில் வெளிப்பட்டுள்ள பல மிருக முகத்தை தோல் உரித்து காட்டி இருப்பார். ஆனால் கலிகுலா, செங்கிஸ்கான்,நீரோ மன்னன், மற்றும் சிக்காடிலோ ,டெட்பாண்டி ,ஜாக் தி ரிப்பர் போன்ற சைக்கோ கொலையாளிகளை பற்றி ஒரு உலக சுற்றுலா சென்று விவரித்திருப்பார். ஆனால் அப்படி பட்ட பிசாசு மனம் உலகில் எங்கயோ ஏதோ ஒரு மூலையில் இருக்கிறது என நினைப்பது தான் முட்டாள் தனம். இங்கயே நம்ஊரிலேயே உள்ள மனம் எனும் மாய பிசாசு உங்களை திகைக்க செய்யும்.. இத்தொடரில் நாம் பாரக்க போவது நமது நாட்டில் இருந்த சில சைக்கோகள் ..தொடர் கொலையாளிகள் கொடுரர்கள் பற்றி தான்... சைக்கோக்களை தொடருவோம் வாருங்கள்........... ஒரு பகீர் க்ரைம் சம்பவத்தை யார் செய்தார்கள் என சொல்லாமல் சஸ்பென்ஸாக விளக்கி விட்டு கடைசியாக இவ்வளவையும் செய்தது வெறும் பள்ளி மாணவர்கள் என சொன்னால் நீங்கள் திகைப்படைவீர்கள் .ஆனால் இப்போது ஒரு சம்பவத்தை முன்கூட்டியே சொல்லிட்டே விவரிக்கிறேன் இவர்

தேடல் கேள்விகள் " 🎯கேள்வி 5

Image
" தேடல் கேள்விகள் " 🎯கேள்வி 5 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰  சைக்கோகளுக்கு கொலை செய்யும் போது என்ன விதமான உணர்வு இருக்கும் அது அவர்களை எப்படி கொலை செய்ய தூண்டும். -Ramamoorthy- 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் :ரோம் நகரில் நீரோ என்ற மன்னன் கேள்வி பட்டு இருப்போம் அதாங்க ரோம் பற்றி எரியும் போது பிடில் வாசித்தான் னு கேள்வி பட்டு இருப்போமே அவன் தான். அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுக்கு ஒரு பழக்கம் இருந்தது.. தினம் அரண்மனை சேவகர்கள் அவனுக்கு விளையாட முயல் குட்டி ...நாய் குட்டி அல்லது வேறு சில சிறு பிராணிகளை கொண்டு வந்து தருவார்கள். அவன் அவற்றைக் கொண்டு எப்படி விளையாடுவான் என்பது தான் கொடுமை. அவன் அந்த விலங்குகளின் கால்களை துண்டிப்பான் அல்லது கண்ணை குத்தி எடுப்பான் அணு அணுவாக அவைகளை கொலை செய்யும் போது அவனுக்கு அது திருப்தியை கொடுத்தது. உடனே அவசர பட்டு முகம் சுளித்து விடாதீர்கள் இந்த சைக்கோ தனம் நம் அணைவருக்குள்ளும் இருக்கிறது என்பது தான் உண்மை. சின்ன குழந்தைகள் தும்பிகள் மற்றும் பட்டாம் பூச்சிகளின் ரக்கையை பிய்த்து போட்டு வேடிக்கை பார்ப்பதை பார்த்து இருப்பீர்கள்.. அல்லது காரணமி

தேடல் கேள்விகள்" (கேள்வி 4 )

Image
" தேடல் கேள்விகள்" (கேள்வி 4 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 வணக்கம் நண்பரே எனக்கு ஒரு சந்தேகம் ph அளவுகளில் ஏன் எல்லா அமிலமும் காரமும் 14 என்கிற எல்லைக்குள் அமைந்துவிடுகிறது ? 14 குள் வரும்படியும் அதைத் தாண்டி செல்ல முடியாத பற்றியும் அதை கணக்கிட்டது எப்படி ? இனி அந்த அளவிற்கு எந்த அமிலமும் எப்போதும் தாண்டி இருக்க முடியாதா ? -Madhu suthan - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 #பதில் :  இதற்க்கு பதில் சொல்லும் முன் PH என்றால் என்ன என்பதை பற்றி கொஞ்சம் விளக்கமாக பார்ப்பது முக்கியம். நமக்கு தெரியும் PH  என்பது ஒரு கலவை அமில தன்மை கொண்டதா அல்லது கார தன்மை கொண்டதா என்பதை சொல்லும் ஒரு லாகரதமிக் அளவீடு என்று. அதாவது PH அளவு 7 என்றால் அது அமிலமும் அல்ல காரமும் அல்ல நடுநிலையானது. 7 க்கு எவ்வளவு எவ்வளவு குறைந்து கொண்டே வருகிறதோ அவ்ளோ அமில தன்மையும் , PH அளவு 7 ஐ தாண்டி 14 வரையில்  எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு கார தன்மை மிக்கது என்பது நமக்கு தெரியும். நமது நாக்கில் உள்ள எச்சில் .. வயிற்றில் உள்ள அமிலம்.. நமது ரத்தம்.. தோல்... இவற்றில் எல்லாம் கூட PH இன் அளவு முக்கிய துவம் வகிகிற

தேடல் கேள்விகள்" (கேள்வி : 3)

தேடல் கேள்விகள்" (கேள்வி  : 3)  〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 கேள்வி : நாம் இறந்த பிறகு நமது ஆத்மா என்ன செய்யும்  -Sajikumar cpv- 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் :  அறிவியல் ரீதியாக இதற்க்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் தெரியாது என்று தான் சொல்ல வேண்டும் . ஆம் அறிவியலில் இதற்க்கு சரியான விடை இன்று வரை கண்டு பிடிக்க பட வில்லை என்றாலும் முடிந்த அளவு அறிவியல் கொண்டு பதில் சொல்ல முயன்று பார்க்கிறேன். அறிவியலில் பல கோட்பாடுகள் உண்டு அதே போல பல விதிகள் உண்டு. இதில் இந்த கோட்பாடுகள் என்பது காலத்தால் மாற கூடியது ... ஏன் பல நேரம் இது வரை சொல்லி வந்த கோட்பாடுகள் முற்றிலும் பொய் என்றும் நிரூபிக்க கூடியது. (உதாரணமாக சூரியன் தான் பூமியை சுற்றுகிறது என்பது ஒரு காலத்தில் அறிவியல் கோட்பாடு ஆனால் அதன் பின் அது முற்றிலும் பொய் பூமி தான் சூரியனை சுற்றுகிறது என்று மாறியது ) ஆனால் விதிகள் அப்படி அல்ல நாம் அறிவியல் விதிகள் என்று சொல்வது எல்லாமே இயற்கையின் விதிகள் தான் அவைகள் ஒரு போதும் மாறாது. உதாரணமாக ஈர்ப்பு என்பது ஒரு விதி. Thermodynamic ஒரு விதி . Thermodynamic இல் entropy ப

தேடல் கேள்விகள்" (கேள்வி 2 )

Image
" தேடல் கேள்விகள்"  (கேள்வி 2 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰  கேள்வி : Bro van allen belts patri konjam post podunga regardings to nasa moon landing -Raj kumar ips - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 〰 📝 பதில் : ஒரு நாட்டிற்கும் அடுத்த நாட்டிற்கும் உள்ள எல்லை பகுதியை கடக்க முயன்றால் அங்கே எல்லையில் பாதுகாப்பும் கெடுபிடியும் ஆபத்தும் அதிகம் இருப்பதை போல... பூமியை கடந்து வெளியில் செல்ல வேண்டும் என்றால் பூமியின் எல்லையில் அதாவது பூமியில் இருந்து கிட்ட தட்ட ஒரு 1000 கிலோ மீட்டருக்கு மேல் ஒரு ஆபத்தான பகுதி ஒன்று உள்ளது. நமது பாட புத்தகத்தில் காந்தத்தின் படத்தை பார்த்து இருப்பீர்கள். காந்தத்தின் இரண்டு முனைகளிலும்  காந்த புலம் அரைவட்ட வடிவில் வரைந்து இருப்பார்கள். கண்ணால் பார்க்க முடியா விட்டாலும் உண்மையில் ஒரு காந்தத்தை சுற்றி அதன் புலம்  மாய உருவில் அந்த வடிவத்தில் தான் இருக்கும். நமது இந்த பூமி ஒரு மிக பெரிய காந்தம் என்று நமக்கு தெரியும் எனவே இதற்கும் அந்த புல வடிவம் இருக்கிறது. அந்த புலத்தில் கண்ணுக்கு தெரியாத இரண்டடுக்கு பாதுகாப்பு வளையம் ஒன்று உள்ளது . நமது எல்லையை பாதுகாக்கும் அந்த பாதுகாப்

"தேடல் கேள்விகள் " (கேள்வி : 1 )

Image
" தேடல் கேள்விகள்  " (கேள்வி : 1 ) 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 கேள்வி : உயிர்கள் வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் ?? -கார்த்திக் கோயமுத்தூர் - 〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰 📝 பதில் : வலியை உணராமல் இருந்தால் உலகம் எப்படி இருக்கும் என்ற கற்பனைக்கு போவதற்கு முன் வலியை உணரும் உலகத்தைப் பற்றி சில விஷயத்தைப் பார்ப்போம். உயிரினங்களுக்கு வலிகள் தொல்லையை கொடுப்பதற்கு படைக்கப்பட்டது அல்ல.  அவைகள் மிகச்சிறந்த உயிர்காக்கும் கட்டமைப்புகள் .அவைகள் நமது உடலில் கொடுக்க பட்டுள்ள Survival Mechanism . உலகில் மிக அபூர்வமாக சில குழந்தைகள் நீங்கள் கேட்டது போல வலியை உணராத உயிரிகளாக பிறப்பது உண்டு ஆனால் அந்த குழந்தைகள் அதிக நாள் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வது இல்லை.  வலி எனும் சர்வைவல் மெக்கானிஸம் உயிர் வாழ மிக முக்கியம் . "உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய அவசரம் " -என்று மூளை உடலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம்தான் வலி. உடலில் ஏதாவது ஒரு பகுதி காயமடைந்தால் அந்த பகுதியில் இருந்து சிக்னல் நமது மூளைக்கு செல்கிறது என்பதை நாம் அறிவோம். இதில் ஒரு சின்ன ஆச்சரியமான வி

விசித்திர ஓவியர் வான்கோக் " (The Redheaded Madman) "Vincent van Gogh "

Image
" விசித்திர ஓவியர் வான்கோக் " (The Redheaded Madman) "Vincent van Gogh " ரா.பிரபு பொதுவாக ஒரு ஞானியும் ஒரு பைத்தியமும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள். உலகம் பல முறை பைத்தியங்களை ஞானி என்றும்  ஞானியை பைத்தியம் என்றும் தவறாக புரிந்து கொண்டது உண்டு. "Vincent van Gogh " அந்த இரண்டாம் வகை பரிதாப ஜீவன். "வான் கோக் " போலந்தில் பிறந்த ஒரு மகா ஓவியன். அவனிடம் சில விசித்திரங்கள் இருந்தது. பொதுவாகவே விஞ்ஞானிகளைவிட கலைஞர்கள் குறிப்பாக ஓவியர்கள் இயற்கைக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள்.  இயற்கைக்கு நெருக்கம் என்று சொல்லும் போது உடல் சார்ந்த விஷயத்தை நான் சொல்ல வில்லை. அவர்கள் உடல் இயற்கை இடங்களுக்கு செல்லாமல் ஒரு பூட்ட பட்ட அறையில் இருக்கலாம். ஆனால் அவர்கள் இயற்கையுடன் ஆழ்ந்த தொடர்பில் இருப்பவர்கள். அப்படி பட்டவர்களிடம் மட்டுமே இயற்கை தனது ரகசியங்களை வாரி இறைத்து இருக்கிறது. ஐன்ஸ்டைன் தனது பூட்ட பட்ட அறையில் தான் பல உலக மகா... சாரி பிரபஞ்ச மகா ரகசியத்தை கண்டு பிடித்தார். மேரி கியூரி தீர்க்க முடியாத சமன் பாட்டை தூக்கத்தில் எழுந்து தீர்பார்.

சவுண்ட் பார்ட்டி க்ரகடோஆ "

Image
 " சவுண்ட் பார்ட்டி க்ரகடோஆ " (The World’s Loudest Sound) ரா.பிரபு நீங்கள் கன்னியாகுமரியில் இருக்கிறீர்கள் அந்த நேரத்தில் ஒரு மிக பெரிய சப்தம் கேட்கிறது உங்களிடம் யாராவது" இது சென்னையில் உண்டான சப்தம் "என்று சொன்னால் எப்படி இருக்கும் ? ஆனால் 1883 "Krakatoa " சத்ததுக்கு முன் இந்த தூரம் ஒண்ணுமே இல்லை . அது என்ன அது Krakatoa ? இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமித்ரா தீவுக்கு நடுவில் உள்ள ஒரு தீவு தான் Krakatoa. அங்கே இருக்கும் ஒரு எரிமலை அரக்கன் கொடுத்த சப்தம் தான் நான் குறிப்பிட்டது. அந்த சப்தம் இது வரை உலகில் பதிவான சப்தத்திலேயே மிக அதிகமான சப்தம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள். அப்படி அந்த சத்ததின் சக்தி எந்த அளவு இருந்தது ?? 1883  ஆம் வருடம் அன்று காலை 10 மணிக்கு அந்த Krakatoa எரிமலை வெடித்தது.  அந்த ஒலி 60 கிலோ மீட்டர் தள்ளி இருந்த மனிதர்களின் காது ஜவ்வை கிழித்து சேதமாக்கியது. மகா சப்தத்துடன் அது துப்பிய sound wave ஐ முதலாவதாக 2000 கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்தமான் நிக்கோபார் வாசிகள் கேட்டார்கள் (துப்பாக்கி சூடு சப