சவுண்ட் பார்ட்டி க்ரகடோஆ "


 "சவுண்ட் பார்ட்டி க்ரகடோஆ "

(The World’s Loudest Sound)

ரா.பிரபு

நீங்கள் கன்னியாகுமரியில் இருக்கிறீர்கள் அந்த நேரத்தில் ஒரு மிக பெரிய சப்தம் கேட்கிறது உங்களிடம் யாராவது" இது சென்னையில் உண்டான சப்தம் "என்று சொன்னால் எப்படி இருக்கும் ?
ஆனால் 1883 "Krakatoa " சத்ததுக்கு முன் இந்த தூரம் ஒண்ணுமே இல்லை .
அது என்ன அது Krakatoa ?

இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமித்ரா தீவுக்கு நடுவில் உள்ள ஒரு தீவு தான் Krakatoa. அங்கே இருக்கும் ஒரு எரிமலை அரக்கன் கொடுத்த சப்தம் தான் நான் குறிப்பிட்டது.
அந்த சப்தம் இது வரை உலகில் பதிவான சப்தத்திலேயே மிக அதிகமான சப்தம் என்று பதிவு செய்து இருக்கிறார்கள்.
அப்படி அந்த சத்ததின் சக்தி எந்த அளவு இருந்தது ??

1883  ஆம் வருடம் அன்று காலை 10 மணிக்கு அந்த Krakatoa எரிமலை வெடித்தது. 
அந்த ஒலி 60 கிலோ மீட்டர் தள்ளி இருந்த மனிதர்களின் காது ஜவ்வை கிழித்து சேதமாக்கியது.
மகா சப்தத்துடன் அது துப்பிய sound wave ஐ முதலாவதாக 2000 கிலோ மீட்டர் தள்ளி இருந்த அந்தமான் நிக்கோபார் வாசிகள் கேட்டார்கள் (துப்பாக்கி சூடு சப்தம் போல சப்தமாக கேட்டதாக சொன்னார்கள் )
அதை தாண்டி 3000 கிலோமீட்டர் தள்ளி இருந்த New Guinea மற்றும் Western Australia வில் அது கேட்டது. பிறகு அந்த ஒலி அலைகள் இன்னும் நிற்காமல் 4800 கிலோ மீட்டர் தள்ளி இந்திய கடலில் மொரிஷியஷில் கேட்டது.
இப்படி சம்பந்தம் இல்லாத உலகின்  50 வெவேறு பகுதியை சார்ந்தவர்கள் இந்த ஒலி யை கேட்டார்கள்.

கிட்ட தட்ட 60 கி.மி தள்ளி இருந்த ஒரு பிரிட்டிஷ் கப்பலின் கேப்டன் தனது பயணிகளில் பாதிக்கு மேற் பட்டோர் காது ஜவ்வு கிழிந்து போனதாகவும்.. உலக அழிவு ஏதோ ஆரம்பம் ஆகி விட்டதாக தான் நம்பியதாகவும் எழுதி இருக்கிறார் .
மனித காதுகளின் தாங்கு திறன் 130 டெசிபல் ஒரு ஜெட் இன்ஜின் எழுப்பும் ஒலி 150 டெசிபெல் . ஆனால் க்ரகடோவா வின் ஒலியை 172 டெசிபெல் என பதிவு செய்து இருக்கிறார்கள் ...அதுவும் 200 கிலோ மீட்டர் தள்ளி பதிவு செய்தவர்கள்... என்றால் வெடித்த இடத்தில் சப்தம் எப்படி இருந்து இருக்கும் என கற்பனை செய்யலாம். 
உலகின் பல மூலைகளில் உள்ளவர்கள் க்ரகடாவோ அனுப்பிய ஷாக் வேவ் பாதிப்பை வெவேறு எதிர் திசையில் இருந்து வந்ததை உணர்ந்து இருக்கிறார்கள். காரணம் அதன் ஒலி 4 பக்கமும் உலகை சுற்றி கொண்டு பரவி இருந்தது.

உலகின் பல மூலைகளில் அவர்கள் கேட்டது சப்தத்தை அல்ல பெரும் சப்தம் உண்டாக்கிய அதிர்ச்சி அலையில் காற்றில் ஏற்பட்ட அழுத்த மாறுபாட்டை தான் என்கிறார்கள்.

Krakatoa வின் சக்தியை அங்கே யாரும் வீடியோ எடுத்திருக்க வில்லை ஆனால் அதன் விளைவுகளை வைத்து அது வெடித்த விதம் கற்பனை செய்ய முடிந்தது. (Battle ship  படத்தில் கடலில் இறங்கிய alien ship ஐ நெருங்க பார்க்கும் கப்பலுக்கு ஒரு ஷாக் வேவ் அனுப்பி வைபார்கள் ஏலியன்கள். அந்த வேவ் கடலில் கடந்து வந்து கப்பலில் மோதுவது எப்படி இருக்கும் என்று காட்டி இருப்பார்கள். ஓரளவு அது போல யூகிக்கலாம் க்ரகடோவா வை ) 

க்ரகடோவா அது வரை யாரும் கற்பனை செய்திராத அளவு வலிமையானது... காட்டுத்தனமானது.
இது தனது வாயில் இருந்து கக்கிய சூடான பொருட்கள் காற்றில் ஒலியின் வேகத்தை விட இரு மடங்கு வேகத்தில் பரவியது என்கிறார்கள். 
அது உண்டு பண்ணிய ஷாக் வேவ் ஒரு ஹைட்ரஜன் பாம் உண்டு பண்ணும் ஷாக் வேவ் போல 10000 மடங்கு அதிகம் என்கிறார்கள்.

அஃபிஷியல் ரெகார்ட் படி க்ரகடாவோ செய்த சேதங்கள் என்ன என்று பார்த்தால்....
க்ரகடோவா அருகில் இருந்த 165 கிராமங்கள் நகரங்கள் அழித்து... 36417 மனித உயிர்களை பலி கொண்டது கரகடோவா.  
மேலும் இது ஒரு 148 அடி உயர  சுனாமியை உண்டு பண்ணி பல செதத்தை உண்டு பண்ணி இருக்கிறது. மொத்த தீவில் மூன்றில் இரண்டு பங்கு அழிந்து போக இந்த எரிமலை காரணமாக இருந்ததது.

இயற்கையின் சக்தி என்றைக்குமே மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது மனிதனை பிரமிக்க வைக்க கூடியது . க்ரகடோவா நமக்கு பெரும் அரக்கனாக தெரிந்தாலும் பூமியை பொறுத்தவரை ஒரு சிறு இருமல் மட்டுமே.

New Guinea வில் papua வில் எரிமலை ஒன்று வெடித்ததை ஒரு தம்பதியினர் வீடியோ எடுத்தார்கள். இந்த வெடிப்பு krakatoa வை விட பல மடங்கு சிறியது வலிமை குறைந்தது. 
ஆனால் அந்த வீடியோவில் ஷாக் வேவ் கடந்து வந்து இவர்களிடம் ஒலி மிக சப்தமாக  எப்படி அடைகிறது என்பதை காணலாம்.. (அவர்கள் படகில் இருந்தது 4 கிலோ மீட்டர் தொலைவில் ) இதை பார்ப்பதன் மூலமாக இதை விட பல மடங்கு சக்தி கொண்ட krakatoa வை கற்பனை செய்ய முடியும். 
You tube இல் papua valcano ereption என்று தேடி பாருங்கள்..

Comments

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"