Posts

Showing posts from September, 2021

Igloo வின் அறிவியல்.

Image
  Igloo வின் அறிவியல். அறிவியல் காதலன்  ரா.பிரபு. பனி பிரதேசங்களில் வாழும் மனிதர்கள் தங்கள் தங்குவதற்கு குகை அமைப்பு கொண்ட வீடுகளை கட்டி கொள்வதை பார்த்து இருப்பீர்கள். அதன் பெயர் igloo. முழுக்க முழுக்க பனியால் செய்ய பட்ட ஒரு கட்டிடம் (?) எப்படி குளிரில் இருந்து மனிதர்களை காக்க முடியும் இதை பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா ? அதற்கு ஒரு அறிவியல் காரனம் உள்ளது அதை பற்றி இன்று பார்க்கலாம். நீங்கள் இப்போது இருக்கும் உங்கள் வீட்டை அப்படியே மைனஸ் 50 டிகிரி இருக்கும்  பனி பிரதேசத்தில் மாற்றி விட்டதாக நினைத்து கொள்ளுங்கள் என்ன ஆகும் ? குளிர் கான்க்ரீட்டை ஊடுருவி உங்கள் எலும்பை தொடும் அல்லவா அப்படி இருக்கும் போது பனியால் செய்த ஒரு வீடு குளிரில் மனிதர்களை பாதுகாப்பது ஆச்சர்யம் தான் அல்லவா. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால்..இந்த தொழில் நுட்பத்தை முதலில் கண்டு பிடித்தது மனிதர்கள் அல்ல பனி வாழ் மிருகங்கள். மனிதர்கள் அதை காபி செய்தார்கள் அவ்வளவு தான். போலார் கரடிகள் ஐஸ் குகைகளில் கதகதப்பாக உறங்குவதைப் பார்த்து இருக்கலாம் . சில பறவைகள் கூட இதைச் செய்கின்றன. இக்லுவில் வெப்பம் எப்படி வெளியேறாமல் தடு

"ஈயும் குட்டி சூறாவளியும்"

Image
  "ஈயும் குட்டி சூறாவளியும்" ரா.பிரபு "Bumblebee’s shouldn’t be able to fly." ஈக்களால் பறக்க முடியாது.. நூற்றாண்டுக்கு முன் இருந்து சொல்ல பட்டு வந்த ஒரு கூற்று இது. ஆம் 'ஏரோடைனமிக்ஸ் விதி அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால் ஒரு ஈயால் பறக்க முடியாது தான் .ஆனால் நல்ல வேலை ஈக்கு இந்த விதிகள் தெரியாது அதனால் அது தொடர்ந்து பறந்து கொண்டிருக்கிறது..'(the bee movie இன் ஆரம்ப சீனில் இந்த வசனத்தை சொல்லி இருப்பார்கள் மற்றும் ஒரு பாக்சிங் படம் ஒன்றில் கூட ஒரு வீரனை ஊக்க படுத்த இதை  சொல்லி இருப்பார்கள் படம் பெயர் நினைவில் இல்லை. ) பல வருடங்களுக்கு முன் நடந்தது இது..  இரண்டு நண்பர்கள் ஒரு டின்னரில் சாப்பிட்டுக்கொண்டு 'லைட்டாக' மது அருந்தி கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள் அதில் ஒருவர் உயிரியலாளர் மற்றொருவர் பொறியாளர். அந்த உயிரியலாளர் அந்த பொறியாளரை பார்த்து ஒரு ஈ பறப்பதற்கான அறிவியலை உங்களால் விளக்க முடியுமா என்று கேட்கிறார். ( அவர்கள் பேசி கொண்டது Bumblebee எனும் ஈ வகை பற்றி ) அந்தப் பொறியாளர் உடனே குனிந்து அருகில் இருந்த நேப்கின் பேப்பரை எடுத்து பேனாவை எடுத்து வைத