Posts

Showing posts from February, 2020

Antimatter ஒரு பார்வை

#Antimatter_ஒரு_பார்வை இந்த ஆன்டிமேடர் என்பது தான் என்ன இது எங்கே இருக்கிறது?? இதன் குணங்கள் என்ன?? இவைகள் பெயரில் உள்ளது போலவே இவைகள் சாதா matter க்கு அதாவது நாம் காணும் சாதாரண பொருளுக்கு நேர் எதிரானது . எந்த வகையில்?? சாதாரண பொருட்கள் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த எதிர் பொருட்களும் கூட தான்.... ஆனால் சார்ஜில் நேர் எதிரானது... நமது உலகில் நாம் காணும் பொருட்கள் அனைத்துமே.. நடுவில் புரோட்டன ஐ சுற்றி எலக்ட்ரான்கள் சுற்றி வருவது காண்கிறோம் ஆனால் அந்த எதிர் பொருளில் நடுவில் இருப்பது எதிர் புரோட்டான் ...அதை சுற்றிவருவது பாசிட்ரான்... அதாவது எலக்ட்ரான் ஐ ஒத்த நேர் மின் சுமை கொண்ட ஒன்று. இவைகள் எங்கே உள்ளன ??? பிக் பாங்கின் போது சரியாக பாதி மேட்டர் பாதி ஆன்டி மேட்டர் என்று இருந்ததாக சொல்கிறார்கள் அவைகள் எல்லாம் எங்கே போய் ஒளிந்தன என்பது தான் தெரிய வில்லை. இதில் இந்த இருவரும் ஜென்ம விரோதிகள் ஒன்றை ஒன்று சந்தித்து கொண்டால் மகா சக்தியோடு வெடித்து சிதற கூடியவவைகள்்.. அதிலும் இவைகளிடம் மோதினால் 100 matter க்குக் ஒன்னு தான் தப்பும் . அப்படி தப்பி பிழைத்த மீதி தான் இந்த மொத்த பிரபஞ்சம். ப