Posts

Showing posts from 2016

கடைசி கடிதம்.

Image
கடைசி கடிதம்  (கதை, கற்பனை ,எழுத்து :ரா.பிரபு) வணக்கம் நண்பர்களே மீண்டும் ஒரு குட்டி தொடரில் உங்களை சந்திக்கிறேன். சங்கர் ராமன் என்கிற ஒரு நடுத்தர வயது மனிதனின் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட தினத்தில் நடந்த ஒரு நாள் சம்பவம் தான் இந்த "கடைசி கடிதம்" கதைக்கு செல்வோம் வாருங்கள்...... அது 1992 ஆம் வருடம். கோடை தினத்தில் ஒரு குறிப்பிட்ட நாள். சங்கர ராமன் ஒரு விளக்க முடியாத மனநிலையில் இருந்தார். சங்கர ராமன் ஒரு சாதுவான நல்ல மனிதர். அதிகம் அதிர்ந்து பேசாதவர். வேலையில் அதிக கடமை உணர்ச்சியும் கடின உழைப்பும் கொண்டவர். விளைவு, இத்தனை நல்ல உள்ளங்களை சம்பாதித்திருந்தார். நடுத்தர வர்க்கம் என்பதன் மிக சரியான அச்சு வார்ப்பு இந்த சங்கர ராமன். குடும்பம் கொஞ்சம் பெரிசு. அன்பான பண்பான மனைவி தவிர 4 பெண்கள். அப்புறம் ஆன் குழந்தையை பார்த்துவிட வேண்டும் என்ற ஏக்கத்தோடு விடா முயற்சியில் பிறந்த கடைசி கடைக்குட்டி பய்யன். தனது போஸ்ட் மேன் உத்யோகத்தில் இத்தனை பேரை வளர்த்து ஆளாக்கியதற்கு அவருக்கு ரெண்டு நோபல் பரிசு கூட கொடுக்கலாம். அவருக்கு இருக்கும் கவலை தனது கடைசி பெண் இன்னும் க

"கெப்ளர் எனும் கெத்து பார்ட்டி"

Image
  "கெப்ளர் எனும் கெத்து பார்ட்டி" அறிவியல் காதலன் ( கருத்தும், எழுத்தும் : ரா.பிரபு ) நியுட்டன் கட்டுரை ஒன்றில் நான் அவர் நிலவின் இயக்கத்தை கவனித்து கணக்கு பன்னதை சொன்னது நினைவு இருக்கலாம். அவர் அதை கவனிக்கும் முன்பே கோள்களின் இயக்கத்தை பற்றிய விதிகளை எழுதியவர்தான் கெப்ளர்... நியூட்டன் சிந்தித்ததே இவர் சிந்தனையின் தொடர்ச்சி தான். ஒரு முறை நியூட்டன் பேசும் போது "நான் இந்த பிரபஞ்சத்தை பல வகைகளில் கவனித்து இருக்கிறேன் ஆனால் நான் பார்த்தது தனியான சிந்தனை அல்ல ஏற்கனவே சிந்தித்த பல மேதைகளின் தோளில் நின்று தான் நான் இந்த உலகத்தை பார்த்தேன்" என்றார். அப்படி அவர் நின்ற தோள்.. கெப்ளருடைய தோள்கள் தான். அப்படியே கொஞ்சம் கீழே இறங்கி கெப்ளர் யார் தோளில் நிற்கிறார் என கவனித்தால்... அவர் கோபர் நிக்கோலஸ் தோளில் நிற்பது தெரியும் .(சூரியனை மையமாக கொண்டு தான் மற்ற கோள்கள் சுற்றிவருகின்றன என முதன்முதலில் சென்னவர்தான் இந்த கோபர்..) நியூட்டனின் மூன்று விதிகள் பற்றி நமக்கு தெரியும் அதே போல தான் கெப்ளரும் தனக்கென மூன்று விதிகளை வைத்துள்ளார்..நியூட்டனின் விதிகள் இயக்கத்தை வ

"ஏலியனை தேடும் துகள்...." அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு)

Image
"ஏலியனை தேடும் துகள்...." அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா .பிரபு) மனிதகுலம் விஞ்ஞான வளர்ச்சி அடைந்தது முதல் ஏலியன் எனும் பக்கத்துக்கு வீட்டு காரனை தேடும் படலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது... நம்மை அவ்வபோது வேவு பார்கிறானோ என்ற ஐயம் எப்போதும் நமக்கு இருந்து வந்துள்ள ஒன்று தான். ஆனால் அவன் இருப்பிடத்திற்கு சென்று அவனை வேவு பார்த்தால் என்ன என்ற எண்ணம் நமக்கு தோன்றும் பட்சத்தில் நமக்கு தலையாய தடையாய் இருக்கும் விஷயம் அந்த பக்கத்துக்கு வீட்டு காரன் இருக்கும் தூரம்.. பல்லாயிரம் கோடி நட்சத்திரத்தில் நமக்கு மிக பக்கத்தில் இருப்பது ஆல்பா செண்டாரி என்ற நட்சத்திரம்.. (உண்மையில் இது மூன்று நட்சத்திரங்கள் ஒன்றை ஒன்று சுற்றும் ஒரு தொகுதி) ஒளி வேகத்தில் சென்றால் ஒரு 4.3 வருடத்தில் அடையலாம். அதை நம்மிடையே உள்ள அதிவேக  விண்கலத்தை கொண்டு முயற்சித்தால்..என்ன ஒரு 30,000 ஆண்டுகள் பிடிக்கும் அவ்வளவு தான். இன்று நான் உங்களிடம் பகிர வந்தது இந்த நீண்ட நெடிய கால கெடுவை தகற்பதற்கான ஒரு வழிமுறையை இப்போது கண்டு பிடித்து இருக்கிறார்கள் என்பதை சொல்ல தான். இந்த ப்ராஜெக்டை

மயக்கும் இரவு (சஸ்பென்ஸ் தொடர்)

Image
#மயக்கும்_இரவு அத்தியாயம் 1 (மேலே பாய்ந்த கருப்பு உருவம்) (--கதை கற்பனை எழுத்து --#ரா_பிரபு ) மயக்கும் மாலை நேரம் அது.... அந்த கார் அந்த மலை பாதையில் ஊர்ந்து கொண்டிருந்தது. உச்சியில் இருந்து பார்க்க ஏதோ திருவிழாவில் வாங்கிய பொம்மை போல் அது மினியேச்சர் மயக்கம் தந்தது.. காரில் டிரைவிங் சீட்டில் இருந்தவன் இளைஞன்.. அழகன்... உடல் மொழியில் .. அணிந்திருந்த உடையில் 'சிட்டி' தெரிந்தது. சாலை இருபுரங்களில் இருந்த பள்ளத்தாக்கு எதிரே தெரிந்த மலை உச்சி... கார் ஜன்னல் வழியே கசிந்து வந்து அவனை அரவனித்த குளிர் .. இவைகளை அவன் மிகவும் ரசித்து கொண்டிருந்தான் என்பதை ஸ்டியரிங்கில் அவன் கைகள் போட்டு கொண்டிருந்த தாளம் காட்டி கொடுத்தது... பின் சீட்டில் அமர்ந்திருந்தவன் தலையில் முண்டாசு கட்டி இருந்தான். பாமர முகம் பெரிய மீசை.. ஆனால் அதை பார்த்து பயம் வர வில்லை... "மாரியப்பன் " என்று அழைத்தான் இளைஞன். "அய்யா" குரலில் பயமா பவ்யமா என அடையாளம் காண முடியவில்லை. "இன்னும் எவ்ளோ தூரம் போகணும் மாரியப்பன்" "அய்யா இதோ வந்தாச்சுங்க... இன்னும் மிஞ்சி ம

"நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா"

Image
"நீங்கள் சிந்திப்பது உங்கள் சிந்தனையா" அறிவியல் காதலன் (கருத்தும் எழுத்தும் : ரா.பிரபு) நீங்கள் இதை யோசித்து இருக்கிறீர்களா? அதாவது உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ரசனை உண்டு, ஒவ்வொரு விதமான கருத்து உண்டு உங்களுக்கு மிக பிடித்த ஒன்றுதான் யாரோ ஒருவருக்கு மிக பிடிக்காத ஒன்றாக இருக்கிறது. இனொருத்தர் ஒஸ்ட் உங்களது பெஸ்ட் ஆக இருக்கிறது. ஆனால் பொதுவாக நீங்கள் சில விஷயத்தை போற்றுகிறீர்கள், சில விஷயத்தை தூற்று கிறீர்கள். சிலதை கொண்டாடு கிறீர்கள் சிலதை வெறுகிறீர்கள். சில விஷயங்களை செய்வதில் பெருமை கொள்கிறீர்கள், சில விஷயங்களை செய்வதில் சிறுமை கொள்கிறீர்கள். உங்களுக்கென்று தனிப்பட்ட விருப்பம் தனிப்பட்ட ரசனை அல்லவா..... ஆனால், கொஞ்சம் யோசித்து பாருங்கள்.. நீங்கள்  எதை போற்ற வேண்டும் எதை கொண்டாட வேண்டும் எதை வெறுக்க வேண்டும் எதில் பெருமை கொள்ள வேண்டும் எதை சிந்திக்க வேண்டும் எதை அழகு என்று ரசிக்க வேண்டும் என்பதை எல்லாம் யாரோ நாலு பேரால் முடிவு செய்யப்பட்டதாய் இருந்தால்??? நாலு சுவற்றுக்குள் சில பெயரால் பக்கா ஸ்கெட்ச் போட்டு வரைபடம் வரைந்தமாதிரி உங்கள

முத்ரா ( இருள் உலகம் வருக)

Image
#முத்ரா(இருள் உலகம் வருக) நண்பர்களுக்கு வணக்கம் ! வழக்கமாக அறிவியல் கட்டுரைகளை தவிர்த்து, இம்முறை அமானுஷ்யத்தை....ஒரு கற்பனை குறுந்தொடரை ...முயற்சித்து உள்ளேன்...            #முத்ரா(இருள் உலகம் வருக)                                       (அத்தியாயம் 1) (கதை, கற்பனை , எழுத்து : ரா.பிரபு) "யுகம் யுகமாக அவர்கள் வருகிறார்கள்.... என்றும் உங்களோடு...... மக்களோடு மக்களாக..... அவர்கள் இருள் உலக மாந்தர்கள்.... காத்திருக்கிறார்கள் தங்கள் சக்தியூட்ட படுவதற்கு.... ஒவ்வொரு முறை அந்த சிகப்பு பவுர்ணமி வரும் போதும்... அவன் காத்திருக்கிறான்.... கருப்பு உலகின் தலைவன்... மரணத்தின் பிரதிநிதி.... அவன் பெயர் ................" ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அது ஒரு மாலை நேரம் அதீத மேதாவிகள் மெத்த படித்தவர்கள் கர்வம் இல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று சொல்ல படுகிறது... அதனால் தானோ என்னமோ உலக அறிவுகளை தன்னகத்தே கொண்டுள்ள அந்த நூலகம் அவ்வளவு அமைதியாக இருந்தது.... அந்த மூலை பெஞ்சில் இருவர்.. அவர்களை பார்த்தாலே சொல்லி விடலாம் காதலர்கள் என்று... அவர்கள் வெட்கமும் ..