"கெப்ளர் எனும் கெத்து பார்ட்டி"


 "கெப்ளர் எனும் கெத்து பார்ட்டி"

அறிவியல் காதலன்

(கருத்தும், எழுத்தும் : ரா.பிரபு)

நியுட்டன் கட்டுரை ஒன்றில் நான் அவர் நிலவின் இயக்கத்தை கவனித்து கணக்கு பன்னதை சொன்னது நினைவு இருக்கலாம்.
அவர் அதை கவனிக்கும் முன்பே கோள்களின் இயக்கத்தை பற்றிய விதிகளை எழுதியவர்தான் கெப்ளர்... நியூட்டன் சிந்தித்ததே இவர் சிந்தனையின் தொடர்ச்சி தான்.

ஒரு முறை நியூட்டன் பேசும் போது "நான் இந்த பிரபஞ்சத்தை பல வகைகளில் கவனித்து இருக்கிறேன் ஆனால் நான் பார்த்தது தனியான சிந்தனை அல்ல ஏற்கனவே சிந்தித்த பல மேதைகளின் தோளில் நின்று தான் நான் இந்த உலகத்தை பார்த்தேன்" என்றார். அப்படி அவர் நின்ற தோள்.. கெப்ளருடைய தோள்கள் தான்.

அப்படியே கொஞ்சம் கீழே இறங்கி கெப்ளர் யார் தோளில் நிற்கிறார் என கவனித்தால்... அவர் கோபர் நிக்கோலஸ் தோளில் நிற்பது தெரியும் .(சூரியனை மையமாக கொண்டு தான் மற்ற கோள்கள் சுற்றிவருகின்றன என முதன்முதலில் சென்னவர்தான் இந்த கோபர்..)

நியூட்டனின் மூன்று விதிகள் பற்றி நமக்கு தெரியும் அதே போல தான் கெப்ளரும் தனக்கென மூன்று விதிகளை வைத்துள்ளார்..நியூட்டனின் விதிகள் இயக்கத்தை விவரிப்பதை போல கெப்ளரின் விதிகள் மூன்றுமே வானத்தில் கோள்களின் நகர்வை பற்றி விவரிப்பவை.

அந்த மூன்று விதிகளை பற்றியும் பார்ப்போம்...

விதி ஒன்று :
கோள்கள் தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றிவருகின்றன..இந்த விதி எளிமையாக புரிகிறது (அது ஏன் அப்படி நீள் வட்ட பாதையில் அமைந்துள்ளது என அவரை கேட்டால்.. மன்னிக்கணும் தம்பி எனக்கே தெரில என்பார் காரணம் அதை ஈர்ப்பு விசை கொண்டு விளக்கம் அளித்தவர் அவருக்கு பின்னால் வந்த நியூட்டன்)

விதி இரண்டு :
 சூரியனிலிருந்து கோளுக்கு வரைய படும் நேரக்கோடானது ... சம நேரத்தில் சம தூரத்தை கடக்கும்..
இந்த விதி எளிமையாக புரியவில்லை..அப்படித்தானே..

என்ன சொல்ல வருகிறார் இந்த விதியில்?
அதை புரிந்து கொள்ள நீங்கள் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது கோள்களின் பாதை நீள்வட்டம் என நமக்கு தெரியும். அப்படி நீள்வட்டத்தில் கோள்கள் தூரமாக கடந்து செல்லும் போது போது அவை தொலைவில் உள்ள போது வேகம் குறைவாகவும் நெருங்கி வரும் போது வேகம் அதிகமாகவும் இருக்கும் .

கெப்ளர் 2 ஆம் விதிப்படி கோள்களில் இருந்து சூரியனுக்கு ஒரு நேர்கோடு வரைந்து கொள்ளுங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உதாரணமாக 5 நிமிடத்திற்கு என வைத்து கொள்ளுங்கள். அந்த 5 நிமிடத்தில் அந்த நேர்கோடு கடக்கும் தொலைவு இருக்கிறதே... அதை நீங்கள் அந்த கிரகம் பயணித்து சூரியனுக்கு மிக அருகாமையில் வரும் போது அளந்தாலும் அதே சமமான தூரத்தை தான் கடக்கும்.
அதெப்படி நீள்வட்டம் நெருங்கி வரும் போது குறுகளாக தானே இருக்கும் என நீங்கள் கேட்டால் நெருங்கி வரும் போது வேகம் அதிகம் என பார்த்தோம் அல்லவா எனவே அதிக பரப்பை இம்முறை கடக்க முடியும்..ஆக மொத்தம் அந்த 5 நிமிஷதை எங்கே அளந்து பார்தாலும் அது கடந்த தூரம் சமமாக தான் இருக்கும் (விதி புரிந்ததா?)

இவர் அடுத்ததா சொன்ன மூன்றாவது விதி கொஞ்சம் சுவாரஷ்யமானது..

அதாவது இருமடி தெரியும் அல்லவா.. ஒரு என்னை அதே எண்ணால் பெருக்குவது... உதாரணம் 2 இன் இருமடி என்றால் 2 X 2 =4 .
அதே போல cube தெரியும் அல்லவா அதாவது ஒரு எண்ணை அதே எண்ணால் இருமுறை பெருக்குவது .. உதாரணம் 2 இன் க்யூப் என்றால்  2X2X2 = 8

இப்போ மூன்றாவது விதியில் அவர் சொன்ன விஷயம் என்னவென்றால்... சூரியனில் இருந்து எந்த ஒரு கோளின் தூரத்தையாவது எடுத்து கொண்டு அதன் கியூபை கணக்கிட்டால்... அது அந்த கோள் சூரியனை மொத்தமாக சுற்றிவரும் சுற்றுவட்ட பாதையின் தொலைவின் இருமடிக்கு சமமாக உள்ளது.. எந்த கோளை எடுத்து கொண்டாலும் இது ஆச்சர்யமாக பொருந்துகிறது..

இது எப்படி நடக்கிறது என்றும் அவரை கேட்காதீர்கள்.. ஏன் என்றால் இதை கண்டு பிடித்தபோது அவரே நம்மை போல தான் "அட இது எப்படி கரெக்டா அப்படி வருது " என ஆச்சர்ய பட்டுகொண்டுதான் இருந்தார்..

கலிலியோ ஒரு தொலைநோக்கியை கண்டு பிடித்தார் என கேள்விபட்டிருப்பீர்கள்... அதற்கு முன்னாடியே தொலைநோக்கியில் எப்படி ஒளி பிரதி பலிக்கிறது என ஆராய ஒரு மாதிரி தொலைநோக்கியை கண்டுபிடித்தார் கெப்ளர் .இதை அடிப்படையாக கொண்டு தான் கலிலியோ அந்த தொ. நோ. வை கண்டு பிடித்தார்.

இவருக்கு மரியாதை சேய்யும் விதமாக நாசாவின் பின்னாளில் பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்கும் தொலை நோக்கு கருவிக்கு கெப்ளர்விமானம் என பெயரிட்டார்கள்கள்... மேலும் அது கண்டு பிடிக்கும் கிரகங்கள் எல்லாத்துக்கும் கெப்ளர் பெயரை கொண்டே பெயர் சூட்டினார்கள் (உதாரணமாக கெப்ளர் 186 ..கெப்ளர் 442 இப்படி)

இவ்வளவு தூரம் வானத்தை உற்று பார்த்த கெப்ளர் அவர்கள் கண்பார்வை பாதிக்க பட்டவர் என்பது தான் ஆச்சர்யம்..(தொலை நோக்கியில் பாத்து பாத்து தான் இப்படி ஆயிடுச்சி என்கிறார்கள்)..
ஆனால் வானவியளில் கெப்ளர் சாதனை மகத்தானது ..குறிப்பிடத்தக்கது .
கெப்ளர் ஒரு கெத்து பார்ட்டி என்பதில் சந்தேகம் இல்லை.

உங்கள் அன்பு நண்பன் அறிவியல் காதலன் #ரா_பிரபு

Comments

  1. Irandaam vithi enakku puriyavillai nanbarae....

    ReplyDelete
    Replies
    1. naan purinthu kondathu ennavendraal, antha ner koadu kadakkum paguthiyin area samamaaga irukkum?!!

      Delete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"