"சின்ன சின்ன திகில் கதைகள்"


"சின்ன சின்ன திகில் கதைகள்"

(கதை 1 : மாடி அறையின் மர்ம மனிதன்)

ரா.பிரபு.

கொஞ்ச நாளாய் தான் எனக்கு இது நடக்கிறது.
மிக சில தினங்களுக்கு முன்பு இருந்து தான் அந்த உணர்வு தோன்றுகிறது.
அது வரும் போது எல்லாம் என் நிம்மதி பறி போய் என்னை பரிதாப ஜீவனாக தவிக்க வைக்கிறது.
என்னால் இதை ....இந்த இதய பிசைவை தாங்க முடியும் என்று தோன்ற வில்லை. எந்த கனத்திலும் அளவுக்கு மீறி ஊத பட்ட பலூன் போல நான் வெடித்து சிதறி விடுவேன் போல இருக்கிறது.
அதன் ஆரம்ப அறிகுறியாக தானோ என்னவோ எனது உடல் எடையை இழக்க தொடங்கி உள்ளது . அதுவும் அசுர வேகத்தில் ...இன்னும் கொஞ்ச நாளில் இந்நிலை நீடித்தால் என் உடலை நானே உணர கூட முடியாமல் போகும் போல இருக்கிறது.

எல்லாத்துக்கும் காரணம் இந்த அரசாங்கம் தான் சார்.. தன் பிள்ளைகளுக்கு சோறு போட வக்கு இல்லாத பெற்றோர் க்கு எதுக்கு பிள்ளைகள்... தன் குடிமகனுக்கு வேலை கொடுக்க முடியாத அரசாங்கத்திற்கு எதற்கு இத்தனை மக்கள் ??
என் புலம்பல் பெரிது காரணம் நான் ஒரு வேலை இல்லா பட்ட தாரி .
ஆனால் உங்களிடம் நான் சொல்ல வந்தது எனது பர்சனல் பிரச்சனைகளை பற்றி அல்ல.
மாறாக எனக்கு சில தினங்களாக நடக்கும் அந்த விசித்திரங்களை பற்றி.
குறிப்பாக மாடி வீட்டில் அந்த அந்நியன் குடி வந்ததில் இருந்து.

என் பெயர் ரமேஷ் நான் தூத்துகுடி பக்கம் ஒரு பெயர் சொன்னால் உங்களால் அறிந்து கொள்ள முடியாத ஒரு கிராமத்தை சேர்ந்தவன். படித்து விட்டு வேலை தேடும் லட்சோப லட்சம் பாவிகளில் ஒருவன். எல்லோரையும் போல நானும் இறுதியில் படை எடுத்தது ஆபத்பாந்தவன் சென்னை நோக்கி தான்.
இன்னோரு முக்கிய காரணம் அங்கே தான் எனது நண்பன் சரவணன் இருக்கிறான் என்னை போல vip யாக சென்று அங்கே தட்டு தடுமாறி இப்போ ஏதோ ஒரு கம்பெனியில் அக்கவுண்ட்ஸில் நல்ல வேலையில் இருக்கிறான். அவன் தான் எனக்கு சொன்னான். தான் ஒரு மேன்ஷனில் இருப்பதாக...அவனுக்கு இப்போ கம்பெனி குவார்டர்ஸ கிடைத்து விடாதால் அவன் இருந்த அறையை பயன் படுத்தி கொள்ளலாம் என்றும் (லாபம் = அட்வான்ஸ் மிச்சம் ) அங்கே மாடி அறை ஒன்று காலி இருக்கிறது என்றும்.. வேற யாரை வேணும் என்றாலும் கூட அழைத்து வா என்றும்.

நண்பன் தகவலை பெற்று கொண்டதும் உடனே அந்த மேன்ஷனில் குடியேறினேன். ஒரு முறை வந்து பார்த்து விட்டு ஏற்பாடுகள் செய்து விட்டு சென்றான் சரவணன் .
அந்த மேன்சனை பற்றி நான் சொல்லி ஆக வேண்டும். என்னை பற்றியும் தான்.
சென்னையில் ஒரு ஒதுக்கு புறத்தில் இருந்த அந்த கட்டிடம் கட்ட பட்ட ஆண்டு நிச்சயம் ஆங்கிலேயன் நடை போட்ட ஏதோ ஒரு ஆண்டு.
உள்ளே பகலிலேயே இருட்டு எபெக்ட் நமக்கு பழைய சத்திய ஜித்ரே படங்களை நினைவு படுத்தும் . உள்ளே ஹாலில் தான் மாடிக்கு செல்லும் படிகள் அமைக்க பட்டு இருந்தன . அவைகள் அந்த கால ஸ்டைலில் அமைக்க பட்ட மர படிகள் .அவைகளை பார்க்கும் போது எல்லாம் இதில் மனிதன் ஏறினால் எப்படி சத்தம் வரும் என்ற ஒரு ஆவல் வருவதை என்னால் தடுக்க முடியாது.
மாடி அறையில் நான் வந்ததில் இருந்து நீண்ட நாளுக்கு யாருமே வந்தது கிடையாது.
ஒவொரு நாளும் நான் வேலை தேடி அலைந்து களைத்து வரும் போதும் என்னை வரவேற்பது அந்த ரிசப்ஷனில் இருக்கும் ஒரு வயதான கிழவன் தான் அவன் பேசி நான் கேட்டதாக நினைவு இல்லை பேசுவானா என்றே தெரிய வில்லை.

அப்புறம் ஒரு விஷயம் என்னை பற்றி ஒரு கேவலமான உண்மை உங்களிடம் சொல்லாமல் மறைக்கலாம் என்று தான் உள்ளம் சொல்கிறது இருந்தாலும் இப்போது இருக்கும் நிலையில் இவைகளை யாரிடமாவது பகிர்ந்தால் தான் எனக்கு கொஞ்சமேனும் ஆறுதல் கிடைக்கும் போல இருபதால் இதை மறைக்காமல் சொல்லுகிறேன். அதாவது பல மாதம் வேலையின் அலைச்சலும் ஆற்றாமையும் தோல்வியும் என்னை விரக்தியில் உச்சியில் விரட்டிய ஒரு கோடை காலத்தில் ஒரு நாளில் தான் ........
நான் தற்கொலைக்கு முயன்றேன் .எனது வாழ்வில் நான் எதையும் விறுவிறுப்பாக உணராத சோகை வாழ்க்கை எனக்கு போர் அடித்து விட்டது.

ஆனால் அன்றைய தினம் தான் எல்லாம் தொடங்கியது.
பூச்சி மருந்தை நான் பல கலவையான சிந்தனைகள் தாக்குதளுக்கு இடையில் உற்று பார்த்து கொண்டிருந்த ....வாழ்வில் இனி ஏதும் நான் அடைய வேண்டிய அறிய வேண்டியது இல்லை என்கிற நிலையில் இருந்த அந்த கணத்தில் தான் என் வாழ்வில் அந்த விறு விறுப்பு வினாடிகள் தோன்றின.
முதல் முறையாக எனது காதுகள் அந்த ஒலியை கேட்டது. நான் நீண்ட நாளாக கேட்க துடித்த அந்த ஒலி.... க்ரச்சக் க்ரச்சக்..... க்ரச்சக்......
மாடியின் அந்த படியில் யாரோ ஏறும் ஒலி . ஏனோ எனக்கு இந்த வினாடி வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக அந்த ஒலிக்கு சொந்த கார மனிதனை பார்க்கும் ஆவல் எழுந்தது.

பூச்சி மருந்து டப்பா வை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு முதலில் செய்ய வேண்டிய வேலையாக ஓடி சென்று கதவை திறந்து மாடி படிகளை நோக்கினேன்.
எப்போதும் அந்த கட்டிடத்திற்குள் இருக்கும் மெழுகுவர்திகள் ஏற்ற பட்ட ஒளி போல ஒளி தரும் பழைய கால சோகையான சாண்ட்லியர் வெளிச்சத்தில் அதை பார்த்தேன் .அந்த மனிதன் தனது கடைசி படிகளில் இருந்தான். ஏனோ அவனை பார்க்கும் போது ஒரு இனம் புரியாத மர்ம உணர்வு என்னை தாக்கியது. அந்த உணர்வு எனக்கு மிக புதிது. ஏன் அந்த மனிதனை பார்க்கும் போது மட்டும் இது தோன்றுகிறது புரியவில்லை.
அதற்கான விடை அறிய எனது மனம் ஆவல் கொண்டது .
நான் சில நாளாக வேலை தேடும் படலத்தை அறவே நிறுத்தி விட்டு பாதாள சாக்கடையில் ஒளிந்து இருக்கும் ஒளி ஒத்து கொள்ளாத ஒரு கரப்பான் போல அந்த அறைகளில் அடைந்து கிடந்தேன். எனவே அடுத்த நாள் காலை அவன் முகத்தை பார்க்க எழுந்து ஓடி வந்தேன்.
ஆனால் அப்போதைக்கு அவன் அந்த அறையில் இல்லை வேலை தேடியோ அல்லது வேலைக்கோ அல்லது வேறு எங்கோ ரூமை பூட்டி விட்டு சென்று விட்டு இருந்தான். அவனிடம் ஏதோ ஒன்று இருந்ததே அது என்ன...??

நான் அறையில் வந்து பூட்டி கொண்டேன் ஆனால் அன்று மாலை வரை இருப்பு கொள்ளாமல் அவ்வபோது வந்து மாடி அறையை வந்து உற்று பார்த்தேன். எனக்கு சிரிப்பாக இருந்தது காதலியை தேடும் காதலன் போல நான் ஏன் அந்த மாடி அறை மனிதனை தேடுகிறேன் என்று எனக்கே புரியவில்லை. தேவை இல்லாத ஒரு வேலையை இவ்ளோ ஆர்வமாக நான் ஏன் செயகிறேன் ?தெரியவில்லை.
அன்று மாலை ஒரு 6 அல்லது 7 இருக்கும் .
வெளியே அந்த ஒலி.... க்ரிசிக் ...க்ரிசிக்.....
க்ரிசிக் ...க்ரிசிக்....
நான் நொடி தாமதிக்காமல் ஓடி வந்து கதவை திறந்து பார்த்தேன்.
அங்கே ....
அவன் மாடியை ஏறி கொண்டிருந்தான் . மீண்டும் அதே உணர்வு. இது என்ன வகை உணர்வு என்று ஒன்றும் சரியாக சொல்ல முடிய வில்லை. ஆனால் அந்த தாடிகாரனிடம் ஏதோ ஒன்று இருந்தது அது என்னை கவர்ந்தது.....
ஒரு நிமிடம்......
என்னது தாடி காரனா.... ?
நான் எப்படி அவனை தாடி காரன் என்று முடிவிற்கு வந்தேன். அவன் முகத்தை இது வரை பார்த்ததாக நினைவு இல்லையே.. ஆனால் அவன் தாடி வைத்திருப்பான் என்று உள்ளுணர்வு சொன்னது. அவன் படிககில் தொடர்ந்து ஏறி கொண்டு இருந்தான். "க்ரிசிக்" "க்ரிசிக் "ஒலி என்னை ஏதோ செய்தது. அவனை அழைக்கும் படி எனது உள் உணர்வு உந்தியது. அழைக்கலாமா வேணாமா ? என்ன செய்யலாம் ?
அவன் மாடி படி முடிவுகளை நோக்கி போய் கொண்டிருந்தான்  நான் தயகத்தை ஒரு சின்ன தயகத்திற்கு பின் தள்ளி வைத்து விட்டு தயங்கி தயங்கி "ஹலோ" என்றேன். அது என் காதுகளுக்கே கேட்க வில்லை. பிறகு கொஞ்சம் சப்தம் கூட்டி "ஹலோ "என்றேன் சப்தமாக . எனது ஒலி அவனை அடைந்ததாக தெரியவில்லை . அவன் எந்த ரியாக்சனும் இல்லாமல் மாடிகளின் முடிவை அடைந்தான். எனது உள்ளுணர்வு ப்ளீஸ் திரும்பி பாரு ப்ளீஸ் திரும்பி பாரு என்றது. அவன் ரூமின் பூட்டை திறப்பது தெரிந்தது. கதவை திறந்து உள்ளே போக எத்தனித்தான் அப்போது திடீர் என்று ஏதோ எனது உள்ளுணர்வு அவனை தாக்கியது போல ஒரு வினாடி ஒரே வினாடி என்னை திரும்பி பார்த்தான். என்னை பார்த்து புன்னகைத்ததாக தான் தோன்றியது சரியாக சொல்ல முடியவில்லை. உடனே கதவை சாத்தி கொண்டான்.
நான் குழபத்திற்கும் சின்ன அதிர்ச்சிக்கும் ஆளானேன் காரணம் அவன் நான் நினைத்தது போலவே தாடி வைத்து இருந்தான்.

இவைகள் எல்லாம் தொடங்கியது சில தினங்களுக்கு முண்பு தான் என்றாலும் அந்த சில தினங்கள் எனக்கு பரிச்சயம் இல்லாத ஒரு நிலைக்கு என்னை கொண்டு சென்றது. ஏன் அவனை பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி உணர்வு வருகிறது? அது என்ன உணர்வு? அதை உற்று கவனித்த போது ஒன்றே ஒன்று புரிந்ததது ....மிக தாமதமாக தான் அது புரிந்தது  'அவன் என்னை போல  ஒருவன் இல்லை அவன் வேற ஏதோ ' ..
விரைவிலேயே அந்த விசித்திரத்தை நான் விடை கண்டு கொண்டேன் அவன் என்னை பார்க்காமலே தன்னை பற்றி எனக்கு உணர்த்தி கொண்டு தகவல் தந்து கொண்டே இருக்கிறான். உதாரணமாக அடுத்த தினம் நான் வழக்கம் போல பெட்டில் படுத்து இருந்தேன். இப்போது அவன் அறையை விட்டு வர போகிறான் என்று உள்ளுணர்வு சொன்னது . கொஞ்ச நாளாக எனது உள்ளுணர்வு மிக கூர்மையாக ஆகி போனதை என்னால் உணர முடிந்தது.
நான் உடனே வெளியே வந்து கதவு அருகே காத்திருந்தேன். மிக சரியாக 2 நிமிடம் கழித்து அவன் மாடி அறையை திறந்து கொண்டு வெளியே வந்தான் இம்முறை கையில் ஏதோ சூட்கேஸ் வைத்து இருந்தான். தான் வெளியே வர போவதை வந்து என்னை பார் என்று அவன் உள்ணர்வில் எனக்கு சொன்னது எப்படி என்று நான் குழம்பி நின்றேன். இம்முறை கண் எதிரே  அந்த தாடி காரன் நிதானமாக இறங்கி சென்றான் . அவன் முகம் தெளிவாக பார்க்க முடிந்தது. அந்த அடர்த்தியான புருவம் ... கூர்மையான கண்கள் அகல நெற்றி உயரமான ஒல்லியான உடல்...
நான் இருபதையே சட்டை பண்ணாதவன் போல அவன் கடந்து சென்றான். ஆனால் ரிசப்சனை நெருங்கும் போது என்னை திரும்பி பார்த்து என்ன அது புன்னகை தானே.... சிரித்தானா  இல்லையா....??

நான் எனது ரூமில் புகுந்து கொண்டேன். வெளியில் வேலை தேடுவது மட்டும் அல்ல.... சாப்பிட செல்வதும் முற்றிலும் தவிர்த்து விட்டிருந்தேன் எனக்கு என் உடல் மேல் துளியும் அக்கறை இல்லை. எனது அக்கறை எல்லாம் அந்த தாடி காரன் மாலை எப்போ வருவான் என்பதை பற்றி தான்.
அன்று மாலை அதே உள் உணர்வு .....
அவன் வருகிறான். வெளியே சென்று நாய் போல அவனுக்காக காத்து கிடந்தேன். சரியாக 5 நிமிடம் கழித்து அவன் வந்தான். அதே போல கண்டு கொள்ளாமல் ஏறி சென்றான்.
க்ரிசிக்.....
க்ரிசிக்......
க்ரிசிக்.......

அதன் பின் வந்த நாட்கள் விசித்திரங்கள் அதிகமாகியது.
நான் ஒரு கொக்கேய்ன்  க்கு அடிமையாகும் போதை காரனை போல அந்த பழக்கத்திற்கு அடிமை ஆனேன். அவன் தொடர்ந்து என்னுடன் உள் உணர்வு வாயிலாக பேசி கொண்டே இருந்தான் அந்த ராஜ சேகர்.
ஆம் அவன் தனது பெயரை எனக்கு மனதின் வாயிலாக சொல்லி விட்டான். இது அனைத்துமே எனது கற்பனை தான் என்று நீங்கள் நினைக்கலாம் .ஏன் நானும் தான் அதை நினைத்தேன்.  ரிசப்சனை நெருங்கி கிழவன் இல்லாத போது அந்த லெட்ஜரில் நான் அவன் பெயரை உறுதி செய்யும் வரை.

(இங்கே ஒன்றை நான் சொல்லி ஆக வேண்டும். நான் லெட்ஜரை நெருங்கும் போதே ஏதோ அந்த புத்தகம் எனது நோக்கம் அறிந்ததை போல காற்றில் பட படத்து  சரியான பேஜில் வந்து நின்றது நிச்சயம் தற்செயலானது அல்ல.)
அதன் பின் வந்த நாட்கள் எனக்கு அலைச்சலை அதிகம் ஆக்கியது. அறை எங்கும் ஒரு இடத்தில் என்னால் உட்கார முடியாமல் அவன் வரும் வரை அறை எங்கும் அலைந்து கொண்டே இருந்தேன் நான். மாடி அறை மர்ம மனிதன் யார் என்பதை அறியாமல் இனி என்னால இருக்க முடியாது என்று தோன்றியது.
இடையில் சில நாளாக உணவு தவிர்த்து இருந்ததால் சுத்தமாக உடல் இழப்பிற்கு ஆளானேன். நான் என்ன செய்வது பசித்தால் தானே சாப்பிடுவது.
எனக்கு மனது எங்கும் வியாபித்து இருந்தது அந்த மாடி அறை மனிதன் மட்டுமே.

அன்று ......

வழக்கம் போல அவனை வேடிக்கை பார்த்து விட்டு வந்த மாலை நேரம். அறையில் நான் முடங்கி இருந்த போது அவனை பற்றி நிறைய தகவல்களை எனது உள்ளுணர்வால் உணர முடிவதை உணர்ந்தேன்.
அன்று இரவு.....
சரியாக மணி 12 ...
அந்த மாடி காரன் என்னை வா வா என்று அழைப்பது போல இருந்தது. கண்ணை மூடி ஆழ்ந்து பார்த்த போது அவன் கவிழ்ந்த நிலையில் படுத்து இருப்பது தெரிந்தது. ஹாலில் உள்ள சோபாவில் படுத்து இருப்பது தெரிந்தது. இது நிச்சயம் சுத்த பேத்தல். இங்கே இருந்து கொண்டே அவனை இந்தளவு பார்ப்பது சாத்தியம் இல்லை என்று நீங்கள் சொல்லலாம் ஆனால் என் மாடி அறை நண்பனை பற்றி உங்களுக்கு தெரியாது எனக்கு தெரியும். ஆனாலும் அதை நான் உறுதி படுத்தி கொள்ள நினைத்தேன்.
மெல்ல எழுந்து மாடி படியில் கால் வைத்தேன்.

கொஞ்சமே கொஞ்சம் கூட சப்தம் வராத படி அந்த படிகளை எறினேன். எனது திறமையை நானே பாராட்டி கொண்டேன். ஏதோ ஒரு யுகம் போல கடந்த ஒரு நிலையில் கதவை அடைந்தேன்.
இது தேவையா மீண்டும் சென்று விடலாமா என்று தோன்றிய ஒரு எண்ணத்தை ரப்பர் வைத்து உடனே அழித்தேன்.  இதற்க்கு இன்று விடை கண்டே ஆக வேண்டும் எனக்கு.

அவன் அறைக்குள் சிரமம் இல்லாமல் நுழைந்தேன். ஹாலில் அந்த பழங்கால சோபாவில் அவன் கவிழ்ந்த நிலையில் அவன் கிடந்தான். எனக்கு ஆச்சர்யம் ஏதும் இல்லை. இதை தான் நான் எதிர் பார்த்து வந்தேன். எவ்வளவு நேரம் அவனை உற்று பார்த்து கொண்டே நின்று இருந்தேன் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.
நேரம் என்பதே நின்று போனது போல இருந்தது.
 நான் மெல்ல முன்னேறி.......
மெல்ல முன்னேறி.......
அவனை தொட்டேன்.
அவன் உடலில் ஒரு சில்லிப்பு இருந்ததது உணர முடிந்தது.  திடீர் என்று அவனுக்குள் அப்படியே கரைந்து விட வேண்டும் போல இருந்தது. அறையின் நிசப்தத்தில் பழைய மின் விசிரியின் டடக் டடக் ஒலி மட்டும் ஏதோ அமானுஷ்யத்தை கூட்டியது போல இருந்தது.
அப்போது.......
சறேலென அவன் திரும்பினான்.
திரும்பிய உடன் நான் முற்றிலும் எதிர் பாராத அந்த விச்சித்திர காரியம் செய்தான்.
வாயில் கையை வைத்து வீல் என்று அலறினான்.
"என்ன விட்டு்டு  ...என்னை விட்டுட்டு ...
நீ என்னை பின் தொடர்ந்து துரதிக்கிட்டே இருக்க எனக்கு தெரியும் என்னை விட்டுடு ஒன்னும் பண்ணாத " என்று லாரியில் அடி பட்ட நாய் போல ஊளை இட்டான். அலறினான்...
எண்னை குழப்பம் சூழ்ந்தது... ஒன்றும் புரியாத ஒரு நிலையில் உடனே அங்கே இருந்து ஓடி வந்து எனது அறையில் புகுந்து கொண்டு கதவை சாத்தி கொண்டேன்..
இனம் புரியாத உணர்வு என்னை தாக்க அங்கே அறையில் இருந்த பரணில் ஏறி ஒரு மூலையில் ஒரு பயந்த பூனை போல சுருண்டு படுத்து கொண்டேன்.

   ✴              ✴                 ✴                  ✴

எவ்வளவு நேரம் கடந்தது என்று தெரியவில்லை.  அறைக்கு வெளியே சில அவசர குரல்கள் கேட்டது.
" சார் உள் பக்கமா பூட்டி இருக்கு சார் " என்று குரல் அதை தொடர்ந்து "உடைத்து திற பா "
என்ற குரல் அதை தொடர்ந்து கதவை இடிக்கும் சப்தம் இடி போல கேட்டது. சிறிது நேரத்தில் தடால் என்று உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் போலீஸ் என்று அடையாளம் தெரிந்தது. கூட மாடி அறை ராஜ சேகர் இருந்தான்.
போலீஸ் அவன் பக்கம் திரும்பி ..
"யோவ் இங்க யாருயா உன்ன கொலை பண்ண பாத்தது ? "
என்று கேட்டார்
சார் அதோ அங்கே பாருங்கள் சார் என்றான்  ராஜசேகர் அவன் காட்டிய இடம் எனது படுக்கை. அங்கே அதிர்ச்சியோடு நெருங்கிய போலீஸ் அதை பார்த்தது.
படுக்கையில் ஒரு பிணம் கிடந்தது .வாயில் ரத்தம் ஒழுகி.... உடல் மெலிந்து கொஞ்சம் அழுகிய பிணம் .
கீழே கிடந்த அந்த டப்பாவை புரட்டிய போலீஸ் ..
"யோவ் பூச்சி மருந்தை குடித்து செத்து இருகான்யா.... செத்து 2 அல்லது 3 நாள் இருக்கும் யாருயா இவன்...?"
என்றார்.
அந்த ரிசப்சன் கிழவன்  போலீசை நெருங்கி
"அய்யா இவன் பேரு ரமேஷ்ங்க... இங்க தங்கி  வேலை தேடிட்டு இருந்தான் பாவம் தங்கமான பய்யன்ங்க என்றான்.''
பரணில் படுத்து இருந்த நான் அதிர்ந்தேன்.
கொஞ்சம் இருங்கள்....
படுக்கையில் இருப்பது ரமேஷின் பிணமா ....அப்போ உங்களிடம் இவ்வளவு நேரம் கதை சொல்லி கொண்டிருக்கும் நான் யார்.??
ஒன்னும் புரியாமல் பரணில் இருந்து நகர்ந்து சீலிங் இல் தலைகீழாக தொங்கி கொண்டு அவர்களை வேடிக்கை பார்த்தேன்.

அதே நேரம் போலீசிடம் ராஜ சேகர் தயங்கி தயங்கி கொஞ்சம் பயந்த குரலில் சொல்லி கொண்டு இருந்தான்.
"நான் சொன்னா நீங்க நம்ப மாட்டேன்ரிங்க சார்....இவன்  ஆவி இங்கயே தான் சார் சுத்திக்கிட்டு இருக்கு அது என்னை தினம் கண்காணிக்குது சார்.

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
                                                     
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

"சின்ன சின்ன திகில் கதைகள்"

(கதை 2 :  திகில் சிலைகள் )

நள்ளிரவு நேரம் அது..
அந்த காட்டு பகுதியில் உள்ள சாலையில் பகலிலேயே ஆட்கள் போக்கு வரத்து குறைவு.
இரு பக்கமும் மரங்கள் அடர்ந்த அந்த வானாந்திர பிரதேசம்  மனித நடமாட்டத்திற்கு மாலை 6 மணிக்கு மேல் முற்றிலும் தடை செய்ய பட்டிருந்தது.
காரணம் இரவு நேரம் விலங்குகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகம் .
அதை மீறி உள்ளே செல்பவர்கள் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும்.
சத்யா சிறப்பு அனுமதி பெற்றிருந்தான்.
அவனது நிருபர் உத்யோகம் அதை எளிதாக அவனுக்கு பெற்று கொடுத்து இருந்தது.

சத்ய மூர்த்தி பிரபல துப்பறியும் பத்திரிக்கையாகிய "மூன்றாவது கண் "
இன் ஆஸ்தான நிருபர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பத்ரிக்கை தலைமை அதிகாரி இவனை தனது கேபினில் அழைத்து பேசி இருந்தார்.
"தெற்கே இதோ இந்த பகுதியில் அந்த காட்டு பகுதியை பற்றி கேள்வி பட்டு இருக்கியா சத்யா"
அவர் கையில் கூகிள் மேப்.
"தெரியும் சார் நமது பத்திரிக்கை ஏற்கனவே அந்த காட்டு பகுதியில் உள்ள மர்மங்கள் பற்றிய மூட நம்பிக்கைகளை பற்றி ஒரு ஆர்டிகள் போட்டு இருக்கிறது சார் "

"கரெக்ட் ...அங்கே உலவும் பல புரளிகளில் ஒன்று அங்கே இருக்கும் சிலை மனிதர்கள் பற்றியது. அவர்கள் பகலில் சிலையாக இருக்கிறார்கள் என்றும் இரவில் உயிர் பெற்று நடமாடுகிறார்கள் என்றும் அந்த பகுதி கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். அந்த சிலைகளை நேரில் பார்த்து இருப்பதாக சில கிராம வாசிகள் சத்தியம் செயகிறார்கள்.
இரவில் சிலை மனிதர்கள் கதவை தட்டி தண்ணீர் கேட்பதாக சொல்கிறார்கள். அவர்கள் அனைவர் கண்ணுக்கும் தெரிவதில்லை என்றும் ,சிலைகள் எண்ணிக்கை அவ்வபோது கூடுகிறது குறைகிறது என்றும் அவர்களுக்கும் இறப்பு பிறப்பு உண்டு என்றும் அவர்கள் ஏதோ தீய சக்தியால் கட்டு படுத்த படுகிறார்கள் என்றும் பல கதைகள்....
அவர்கள் இரவில் மட்டுமே கண்ணுக்கு தெரிவார்களாம்..ஹா ஹா..
அந்த மூட நம்பிக்கைகளை புரளிகளை அழிக்கும் விதமாக ஒரு ஆதார பூர்வ ஆர்டிக்ள் உன்னிடம் எதிர் பார்க்கிறேன். நீ பேய் பிசாசில் நம்பிக்கை அற்றவன் என்று எனக்கு தெரியும்."

சத்யா தனது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைதான். சீரான 35 கி. மி வேகத்தில் அந்த சாலைகளில் சென்றான்.
இரு புறமும் இருந்த மரண நிசப்தம்.....
அந்த இடத்தின் குளிர்.. எங்கோ கேட்கும் சில இரவு பறவை சப்தம்...இதற்க்கு மத்தியில் இருட்டை கிழித்து கொண்டு இவன் பைக்கின் வெளிச்சம் இதை தவிர வேறு ஏதும் அங்கே தெரியவில்லை.

அப்போது திடீரென்று ...
"கரக் ...கரக் "என்றது இன்ஜின். அதை தொடர்ந்து மோட்டார் பைக் நின்று போனது.
சத்யா கொஞ்சம் அதிர்ச்சியாக பைக்கை விட்டு இறங்கினான்.
அத்துவான காட்டில் பைக் கோளாறு பெரிய பிரச்சனை ஆச்சே !
கீழே இறங்கி பைக்கை அப்படி இப்படி சாய்த்து பார்த்தவன்.
வண்டி ரிசர்வில் சென்று இருந்ததை கவனித்தான்.
'நல்ல வேலை என்னவோ ஏதோ னு பயந்துட்டேன் '
பெட்ரோல் குமிழை ரிசர்வில் திருகி விட்டு கிக்கரை உதைத்தான். வண்டி விரும்ம்மம் என்று கிளம்பியது.
வண்டியை திராட்டில் செய்து விட்டு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
எதிரே க்ளோசப் இல் வண்டி ஹெட் லைட் வெளிச்சத்தில் ஒரு கிழவி நின்றிருந்தாள்.

கூன் விழுந்து , தலை முழுக்க சுருட்டை முடியுடன், ஒரு கருப்பு போர்வையை போர்த்தி கொண்டு ,தொங்கும் காதுகளுடன் இப்படி சாலையில் திடீரென முளைத்த அந்த திகில் கிழவியை பார்த்து ஒரு கணம் ஆடி போனான் சத்யா. அவள் தலையில் ஆங்காங்கே மட்டும் சொட்டையாய் இருந்தது திகிலை இன்னும் கூட்டியது.
பிறகு கொஞ்சம் சுதாரித்து
" யாரு " ..என்றான் .
கொஞ்சம் கடினப்பட்டு குரலை வரவழித்தான்.
இந்த அர்த்த ராத்திரியில் காட்டு வழியில் ஒரு குடு குடு பாட்டியா ?

"51" என்று சம்பந்தம் இல்லாமல் எதையோ சொன்னாள் அந்த கிழவி

"என்ன சொல்ற ஒன்னும் புரில யார் நீ ..." என்றான். அவளை பார்த்ததில் ஆச்சர்யம் அடைந்து இருந்தான்.

"தம்பி ஒரு உதவி பா...பக்கத்துல தான் ஏன் ஊரு இருக்கு கொஞ்சம் விட்டுடுறியா பா "

குரலில் உப்பு காகிததின் கரகரப்பு இருந்தது. ஆன் குரலும் பெண் குரலும் கலந்தது போல ஒரு கலவை யான குரலாக அது இருந்தது.
மழையில் நனைந்த கோழியின் முனகல் போல அதில் ஒரு நடுக்கம் இருந்ததது.
' ச்ச ஏதோ கிராமத்து கிழவி '
" பாட்டி ஒழுங்கா புடிச்சி உட்காருவியா...வா " என்றான்.
மனதில் 'இந்த கிழவிக்கு அந்த சிலை மனிதர்களை பற்றி தெரிந்து இருக்கும் கொஞ்சம் கிளறி பார்த்தால் புது தகவல்கள் கிடைக்கலாம் ' என்ற எண்ணம் வந்தது.
"பக்கத்துல ஒரு ஓடை போகுது அதுல பாலம் பக்கத்துல போற ரோட்டு கிட்ட இறக்கி விட்டுடுப்பா போதும் "
என்றாள் அவள்.
அவளை ஏற்றி கொண்டு சற்று தூரம் சென்றவன்...
"பாட்டி இங்க நைட்ல தனியா வரியே உனக்கு பயமா இல்ல இங்க ஏதோ சிலை எல்லாம் நைட்ல உயிர் வந்து சுத்துதாமே " என்றான்.
பாட்டி ஒரு விசித்திர சிரிப்பு சிரித்தாள்
" அதுங்க பாட்டுக்கு வரும் போவும் பாவம் நல்ல மனுசாலுங்க. நாம அதுக்கு ஏன் பயப்படனும் . நான் நிறைய பார்த்து இருக்கேனே" என்றாள்.
"என்னது....நீ நிறைய பார்த்து இருக்கியா அப்போ அந்த கதை எல்லாம் உண்மைன்னு சொல்றியா "
" தம்பி இதுல என்ன பொய் இருக்கு அதுங்க இங்க  தான் நடமாடிட்டு இருக்கு... அதுங்க எதிர வந்தா ஒன்னு மட்டும் நீ கவனமா இருக்கணும்........."
என்று சொல்லி கொண்டு வந்த நேரத்தில் சத்யா எதிரே அந்த சின்ன ஓடையை கவனித்தான் அதன் மேல் இருந்த பாழடைந்த பாலம் ஒன்று நிலவொளியில் சோகையாக தெரிந்தது அதற்க்கு வலது பக்கம் ஒரு மண் ரோடு பிரிந்ததை கவனித்தான். அந்த இடம் வந்த உடன் பாட்டி தன் கதையை நிறுத்தி விட்டு
"இங்க தான் இங்க தான் "என்றாள்.
"இங்க உட்டுடு பா தம்பி இந்த பக்கம் ஒரு அரை மைல் ல தான் ஊர் இருக்கு
நான் போய்கிறேன் "
என்று இறங்கி நடக்க தொடங்கினாள்.
கையில் ஏதோ பை வைத்து இருந்ததை அப்போது தான் கவனித்தான் சத்யா.
அதை சுருட்டி பிடித்து கொண்டு அந்த கிழவி மண் ரோட்டை நோக்கி நகர தொடங்கினாள்.
ஏதோ அடிபட்ட தவளை ஒன்று தவழுவதை போல் இருந்தது அவள் நடை.

சத்யாவிற்கு அவள் சொல்லி கொண்டு வந்த விஷயத்தை முழுதாக கேட்க வேண்டும் போல இருந்தது.
"பாட்டி... அரை மைல் தானே உட்காருங்க நான் விட்டுடறேன் " என்றான்.
"உனக்கு எதுக்குப்பா சிரமம் " என்றவளை சமாதான படுத்தி
"அட சும்மா உட்காரு பாட்டி " என்றான்.
பிறகு 15 நிமிடம் அவர்கள் ஏதும் பேச வில்லை.. சத்யா மெல்ல கேட்டான் ..
எங்க பாட்டி இங்க ஊரு எங்க இருக்கு?
ஆமாம்...ஏதோ சொல்லிட்டு இருந்தியே
என்னது... அவங்க எதிரே வந்தா என்ன அது....."

பாட்டி கொஞ்சம் எக்கி கண்களை சுருக்கி எங்கோ பார்த்து "தம்பி அங்க தான் பா "என்றாள்.
தூரத்தில் அவள் காட்டிய இடத்தில ஊர் இருப்பதற்கான அறிகுறியாக ஆங்காங்கே தீ வட்டிகள் எரிந்து கொண்டிருந்தன.
"தம்பி ...அது வந்து அவங்கல நீ பார்த்தா அவங்க உன் தலைல கை வைக்க முயற்சி பண்ணுவாங்க அதுக்கு மட்டும் நீ விட்டுட கூடாது உன் உயிருக்கே ஆபத்து . அப்படி வச்சிடாங்கனா அதே நொடி உன் உயிர் காத்துல கறஞ்சிடும் "என்றாள்.

சத்யாவுக்குள் பயம் ஒரு மெல்லிய இழை போல எட்டி பார்க்க...
சொல்லி முடித்த அந்த கிழவி திடீர் என்று அந்த காரியத்தை செய்தாள்.
சத்யா தலையில் ஓங்கி கை வைத்தாள்.
சத்யா அதிர்ந்து போய் ..
"ஆ " என்று அலறினான்.
பைக்கை தடுமாறி நிறுத்தினான்.
அந்த கிழவியின் சிரிப்பு வவ்வாலின் கீச்சு குரல் போல கிக்கி கிக்கி என்று ஒலித்தது.
சத்யா தனது உடலை ஒரு முறை தடவி பார்த்து கொண்டான்.
"என்ன தம்பி பயந்துடியா " என்றாள் அவள் தனது சொர சொர குரலில்.
"நான் சொன்னது அந்த சிலை மனுஷாலுங்கள பத்தி என்ன பத்தி இல்ல நான் கை வச்சா எல்லாம் ஒன்னும் ஆகாது" என்றாள் .
சத்யா கொஞ்சம் கிலியுடன் பைக்கை கிளப்பினான். மனதின் ஒரு ஓரத்தில் இவ்ளோ நேரம் கூட வருவதே அந்த சிலை மனுஷி தானா என்கிற மெல்லிய சந்தேகம் வந்து தொலைத்து இருந்தது.
என்னதான் பேய் பிசாசில் நம்பிக்கை இல்லை என்றாலும் பயம் யாரை விட்டது.
"தம்பி அதோ ஊரு வந்துடிச்சி "என்றாள் பாட்டி. தீ வட்டிகள் நெருங்கி இருந்தன.

"பாட்டி.... வந்து...நான் அந்த உயிருள்ள சிலைகளை பார்க்கணும்னா எங்க பார்க்கலாம் " என்று தயங்கி தயங்கி கேட்டான்.
அதற்க்கு அந்த கிளவி "51 " என்றாள்.
"என்னது புரில ....அந்த மனிதர்கள் இருப்பது நிஜமா நான் அவங்களை பார்க்கலாமா என்று கேட்டேன் "
அதற்க்கு பாட்டி மறுமொழியாக மீண்டும் " 51 " என்றாள்.
பிறகு இடைவெளி விட்டு விட்டு அந்த 51 ஐ சொல்லி கொண்டே இருந்தாள்.
இவள் திடீரென எதை என்னுகிறாள் என்று குழம்பிய சத்யா. அங்கே தீ பந்தம் மிக நெருங்கி இருந்ததை பார்த்து பைக் வேகத்தை குறைத்தான்.

நிறைய ஜன நடமாட்டம் போல தெரிந்த அங்கே நெருங்க நெருங்க...பைக் வெளிச்சம் பட்டு தெரிந்த காட்சியில் அதிர்ந்தான்.
அங்கே ஊர் ஏதும் இல்லை..
நிறைய சிலைகள் ஆங்காங்கே நின்றிருந்தன. பெரும்பான்மை சிலைகள் கையில் தீ பந்தம் எரிந்து கொண்டிருந்தது.
சத்யா அடி வயிற்றில் கிளம்பிய பய உருண்டையை கஷ்ட பட்டு கட்டு படுத்தினான் உடல் தீடீரென உலையில் போட்டது போல காட்டு குளிரை மீறி வியர்க்க தொடங்கியது.
பைக்கை மெல்ல ஸ்டான்ட் போட்டு நிறுத்த.. இப்போது ஹெட் லைட் வெளிச்சத்தில் அவர்கள் மிக தெளிவாக தெரிந்தார்கள்.  விறகு பொருக்குபவள்... ஆடு மேய்ப்பவள்.
பாலூட்டும் தாய்.. சுமை தூக்கி செல்பவன் என்று அவர்களில் இயல்பாக பல சிலைகள் இருப்பதை பார்த்தான் மெல்ல தனது கேமராவை ஆன் செய்து அதை படம் பிடித்தான்.
அங்கே இருந்த மொத்தம் ஆட்களை என்னினான். மொத்தம் 50 இருந்தது.

பாட்டி சொன்ன 51 நினைவுக்கு வர திரும்பி பாட்டியை தேடினான் அங்கே அவள் இல்லை...
தனது டார்ச்சை உயிர்பித்து ஆங்கங்கே ஒளியை பீய்ச்சி பார்க்க...கிழவியை எங்கேயும் காண வில்லை.
அப்போது....
தனது தலையை ஏதோ தொடுவதை உணர்ந்தான்.
நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்.
அந்த கிழவி ஒரு வௌவால் போல மர விழுதுகளில் தொங்கி கொண்டு இருந்தாள் .இவன் தலையை ஏதோ ஒரு எலும்பை வைத்து தொட்டாள் எதையோ முனுமுனுதாள்.
சத்யா கண்கள் இருண்டு...ஏதோ மயக்க நிலையில் இழுத்து செல்ல பட்டான்

    ✴                ✴                 ✴                    ✴

எவ்வளவு நேரம் கழிந்தது என்று தெரியவில்லை.
அவன் கண் விழித்த போது கண்ட காட்சி அவனை திகிலின் உச்சத்தை அடைய செய்தது.
இப்போது அங்கே இருந்த சிலைகள் மிக இயல்பாக நடமாடி கொண்டிருப்பதை பார்த்தான். அரிசி புடைப்பதும் ...இடத்தை பெருக்குவதும் குழந்தைக்கு பால் கொடுப்பதும்....
குறிப்பாக ஒன்றை கவனித்தான். அவர்கள் அந்த சூனிய கார கிழவிக்கு பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள்.
இதற்க்கு மேல் இங்கே இருக்க முடியாது என்று முடிவு செய்தான் சத்யா..ஓட எத்தனித்த போது தான் கவனித்தான் தன்னால் கால்களை நகர்த்த கூட முடியவில்லை.
ஓடும் முயற்சியில் உருண்டு விழுந்து இருந்தான். அந்த சூனியகாரி திரும்பி பார்த்தாள் .இவனை நெருங்கி வந்து தூக்கி நிறுத்தி இவன் தலையில் எலும்பை வைத்தாள்.
"புதுசுல அப்படி தான் இருக்கும் ஹி ஹி 51....51...என்றாள் "
அப்போது தான் அந்த உண்மையை உணர்ந்தான் .
அவன் ஒரு சிலை ஆகி இருந்தான்.

     ✴             ✴              ✴               ✴

அந்த காரில் 4 பேர் இருந்தார்கள் .அப்பா அம்மா இரண்டு பசங்க ....ஒரு சிறிய குடும்பம் அது.

"நான் அப்பவே சொன்னேன் நைட்ல இந்த வழியா போக வேணாம்னு கேட்டிங்களா இப்ப பாருங்க கார் வழில நின்னு போச்சி "
என்றாள் அந்த பெண்மணி.
"ஏங்க.... இது யாருங்க ?இங்க பாருங்களேன். யாரோ ஒரு பாட்டி ,நம்ம காருக்கு பின்னாடி நிக்குது .... என்ன அது எதையோ என்னிக்கிட்டு இருக்கு.. இங்க பாருங்களேன்....."

அந்த கணவன் திரும்பி பார்தான்.

"52,... 53, ....54,... 55 ....ஹி ஹி ஹி ஹி என்றாள் அந்த கிழவி.

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
                                                     
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

"சின்ன சின்ன திகில் கதைகள் "

(கதை 3 : பிளாக் மாம்பா)

மணி இரவு 11 க்கு மேல் தாண்டி விட்டது  கடிகாரம் 11 காண மணி அடித்ததும் அதற்காகவே காத்திருந்தது போல ஹரிஸ் படித்து கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்தான். அடுத்த அறையில் பெற்றோர்கள் தூங்கி விட்டிருப்பார்கள்.
இனி "அதை " செய்ய தொடங்கலாம்.
ஹரிஷ் ஒரு திறமையான மாணவன் மிக சமீபத்தில் தான் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு எழுதி போட்டு இருந்தான்.

ஹரிஸ் கதவை உள்பக்கமாக தாளிட்டான் . விளக்குகளை அணைத்து கொண்டான். தனது கணினியை உயிர்பித்தான். அதில் கொஞ்சம் தேடலுக்கு பின் அதை பிடித்தான். கொஞ்ச நாளைக்கு முன்பு ஈ மெயில் மூலம் தான் "அது" வந்திருந்தது. அதை சொடுக்கி திறந்தான். கண் எதிரே ஒரு பாம்பு படம் எடுத்து ஆடுவது போன்ற கிராபிக்ஸ் இல் அதன் ஆரம்பம் இருந்தது. அதில் அந்த விளையாட்டின் பெயர் ஒளிர்ந்தது
" பிளாக் மாம்பா"
தென் அமெரிக்காவில் வாழும் உலகில் மிக வேகமாக நகர கூடிய பாம்பு வகை தான் 'பிளாக் மாம்பா'  ஆனால் ஹரிஸ்
இப்போது திறந்து இருந்த பிளாக் மாம்பா ஒரு ஆன்லைன் கேம்.
சில ஆண்டுகளுக்கு முன் தான் 'ப்ளூ வேல்' என்ற  தற்கொலை விளையாட்டு உலகில் பரவி பல பேரை காவு வாங்கி இருந்தது. அதனை தொடர்ந்து அதை விட கொடூரமாக உருவாக்க பட்டு இருந்த ஒரு ஆன்லைன் விளையாட்டு தான் இந்த பிளாக் மாம்பா.
போன விளையாட்டை ஒரு ரஷ்யன் சைக்கோ உண்டாக்கி உலவ விட்டு இருந்தான்.
ஆனால் இம்முறை இந்த விளையாட்டை சைனா உண்டாக்கி இருந்தது. அதுவும் ஒரு உள்நோக்கத்தோடு.

 அதன் முக்கிய டார்கெட் இந்திய இளைஞர்கள். எனவே மிக குறிப்பாக அந்த விளையாட்டு இந்தியாவில் மட்டும் பரவி இருந்தது.
சீனாவின் மிக கேவலமான ஒரு மறைமுக போர் தந்திரம் இது. அதை விட கொடுமையான உண்மை இதை உண்டாகியவன் ஒரு இந்தியன்.   இந்தியாவில் வசிக்கும் இந்தியாவை வெறுக்கும் பக்கா துரோகிகளை அணைத்து துறையிலும் அடையாளம் கண்டு இருந்தது சீனா.
அப்படி சில மென் பொறியாளர்களை தேடி பிடித்து கோடிகள் கொடுத்து இதை சாதித்து இருந்ததது. அந்த டீமின் தலைவன் தான் தருன் மிஸ்ரா என்ற ஹிந்திகார சாப்ட் வேர் இன்ஜினீர் .
அந்த விளையாட்டு இந்தியாவில் பரவ தொடங்கியதுமே அரசாங்கம் விழித்து கொண்டு தனி படை அமைத்து அவனை வேட்டையாடியது. விளைவு இன்றும் தலை மறைவாக தான் இருக்கிறான் மிஸ்ரா. மேலும் அந்த விளையாட்டை பல தளங்களில் தடை செய்ததது. ஆனால் பாவம் அதை மீறி இன்னும் எத்தனை பேரால் அது விளையாட பட்டு கொண்டிருகிறது என்ற உண்மை அரசுக்கு தெரியாது . இப்போதைக்கு அந்த பல பேரில் ஒருவன் தான் ஹரிஷ்

சில சம்பரதாய ஆரம்பதிற்கு பின் கணினி திரையில் அந்த வரிகள் ஒளிர்ந்தன.
" பிளாக் மாம்பா வின் இன்றைய சேலஞ்க்கு தயாரா "
எஸ் ...நோ .... என்ற இரு வாய்ப்புகள் வழங்க பட்டு இருந்தது.
ஹரிஷ் கொஞ்சம் நடுங்கும் கைகளால்
'எஸ் 'ஐ சொடுக்கினான் . கணினி திரை சில மாறுதலுக்கு பின் ''வாழ்த்துக்கள் " என்றது. ஹரிஷ் காத்திருந்தான்.  பிறகு திரை மாறி....
"இன்றைய பிளாக் மாம்பா டாஸ்க் ......" என்று தொடர்ந்தது. ஹரிஷ் அதை தொடர்ந்து படிதான்.
"இன்றைய உங்கள் டாஸ்க் உங்கள் நண்பன் அல்லது எதிரி ...யாரையேனும்
ஒரு தனி அறையில் கட்டி போட்டு அதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து நமது லிங்க் இல் ஆதாரத்துக்காக இணைக்க வேண்டும் அவ்வளவு தான்  இன்றைய டாஸ்க் .
அவனை நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு அடுத்த சேலஞ்சாக வழங்க படும்."

ஹரிஷ் அந்த சவாலை ஏற்றான்... அதற்கு பதில் அளித்து விட்டு அந்த லிங்க் ஐ விட்டு வெளியே வந்தான்.
அடுத்ததாக ஒரு லிங்க் ஐ சொடுக்கினான்.
இப்போது ஒரு கருப்பு பருந்து படம் போட்ட சைட் ஒன்று தனது கதவை திறந்தது. இந்த பருந்து  சைட் அந்த பிளாக் மாம்பாவை விட ரகசியமான சைட் என்பதை ஹரிஷ் நன்கு அறிவான். பிளாக் மாம்பா தெரிந்த பல பேருக்கு இன்னும் இந்த பிளாக் ஈகில் பற்றி தெரியாது.
மிக மிக அபாயமான ஒரு விளையாட்டை தான் விளையாடி கொண்டிருக்கின்றோம் என்பதை நினைக்கும் போது அவன் தண்டு வடம் பயத்தில் ஐஸ் வாரத்ததை போல ஜில்லிட்டது. ஆனால் அது கொடுத்த குறுகுறுப்பு ....வெறி அவனுக்கு மிக பிடித்து இருந்தது.
அதில் சில அப்டேட்களை செய்த பின் கணினியை அணைத்தான்.
பருந்து ...பாம்பு.....இரண்டையும் மறந்து தூங்கி போனான்.

     ✴              ✴                 ✴                 ✴

அந்த குடோன் ஒரு பாழடைந்த கைவிட பட்ட தொழிற்சாலை போல இருந்தது.
அதன் சோகையான விளக்கு வெளிச்சத்தில் அவன் தெரிந்தான். ராம் கோபால்.
அவன் ஒரு நாற்காலியில் உட்காரவைக்க பட்டு கை கால்கள் கட்ட பட்டு இருந்தான். தான் எங்கே கொண்டு வர பட்டிருக்கின்றோம் ? அவன் கண்களில் வீராணம் அளவு குழப்பம்.
அப்போது தான் தனக்கு எதிரே இருந்த அந்த முகமூடியை பார்த்தான். தனக்கெதிரே ஹாயாக ஒரு நாற்காலியை  போட்டு மடி கணினியில் ஏதோ தட்டி கொண்டிருந்தான் அந்த முகமூடி.
"ஹே ....." கத்துவதற்கு வாய் எடுத்த போது தான் வாயில் பிளாஸ்டர் ஓட்ட பட்டு இருந்ததை உணர்ந்தான்.

முகமூடிக்குள் இருந்த ஹரிஷ் இப்போது எதற்கோ...எஸ் என்ற பதிலை திரையில் தட்டி இருந்தான்.
உடனே மறுமொழியாக ஒரு புகழாரம் வந்து சேர்ந்தது..
வாழ்த்துக்கள் குட் ஜாப் என்றது. அதனை தொடர்ந்து உங்கள் அடுத்த டாஸ்க் ...."
அந்த மனிதனின் கை விரல்கள் பத்தையும் வெட்டி வீச வேண்டும் "என்றது .
சிறிது தயகத்திற்கு பின் ஹரிஷ் எழுந்தான். கையில் எப்போது அந்த டூல் பாக்ஸ் முளைத்தது என்று தெரிய வில்லை. அதை திறந்து உள்ளே இருந்து அதை எடுத்தான். அதை பார்த்ததும் கட்ட பட்டு இருந்த ராம் கோபாலின் விழிகள் பயத்தில் விரிந்தன அது ஒரு எலக்ட்ரிக்கல் கட்டிங் மெஷின். பேட்டரி பவர் இல் இயங்கும் வசதி கொண்டது.

ஹரிஷ் வெப் கேம் ஐ ஆன் செய்தான். ராம் கோபாலை நெருங்கி அவனது கை விரல்களில் அந்த மெஷினை வைத்தான்..
பிறகு....
ஒரு விரல் விடாமல் சுத்தமாக வெட்டி எடுத்தான்..
தரையில் திடீரென ரத்த மாடர்ன் ஆர்ட்
முளைத்தது.

    ✴             ✴                ✴                     ✴

அதே குடோன்....
வேறு நாள்...
வெளிறிய முகத்துடன் ராம் கோபால்.
கொடூர முகத்துடன் ஹரிஷ்...
கணினி திரை கொடுத்த பாராட்டை மனமுவந்து ஏற்றான் ஹரிஷ். அடுத்த டாஸ்க்கை படிதான்.
"இம்முறை அந்த மனிதனின் முழு கைகளும் வெட்டி எடுக்க வேண்டும். அவைகள் வீடியோ அப்டேட் ஆக இருக்க வேண்டும்."
ஹரிஷ் வீடியோவை ஓட விட்டு ராம் கோபாலை கையில் கட்டிங் மெஷின் உடன் நெருங்கினான்....

      ✴              ✴               ✴                   ✴

அதற்க்கு அடுத்த நாள்....
ஹரிஷ் தனது கணினி திரையை மீண்டும் ஒரு முறை பார்த்தான்
உங்கள் கடந்த சவால்கள் அனைத்தும் மிக திருப்தியாக இருந்தது.
உங்கள் அடுத்த சேலஞ்...
இம்முறை வேறு ஒரு ஆளை பிடித்து அவன் கால்களை வெட்டி எடுக்க வேண்டும்."

ஹரிஷ் அந்த குடோனை நிமிர்ந்து பார்த்தான். இடது பக்கம் ஒரு கை இல்லாத ராம் கோபாலுக்கு அருகில் வலது பக்கம் அவன் கட்ட பட்டு இருந்தான்...மனோஜ்.
அடுத்த 7 ஆவது நிமிடத்தில் மனோஜின் வலது கால் மனோஜை விட்டு 10 அடி தள்ளி வைக்க பட்டு இருந்ததது.
கட்ட பட்ட வாய்க்குள் தனது காலில் உண்டான திடீர் ரத்த அருவியை நம்ப முடியாமல் அலறி கொண்டிருந்தான் மனோஜ்.
ஹரிஸ் முகத்தில் குறு குறுப்பு கலந்த ஒரு கொடூர சிரிப்பு காட்டினான்.

உங்கள் அடுத்த டாஸ்க் என்றது கணினி...

நீங்கள் நாளை வேறு ஒரு பிளாக் மாம்பா வை சந்திக்க வேண்டும். அவரை பற்றிய தகவல்கள் உங்களுக்கு விரைவில் வழங்க படும் .
அந்த பிளாக் மாம்பா..உங்களுக்கு அடுத்த சவாலை உங்களுக்கு நேரில் விளக்குவார்.
அதாவது நீங்கள் யாரை கொலை செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்ற தகவலை."
ஆம் பிளாக் மாம்பாவின்  உச்ச பட்ச சவால்...யாரையாவது கொலை செய்வது.

     ✴               ✴                  ✴                 ✴

அந்த ட்ரைவ் இன் ஹோட்டலின் ஹரிஷ் ஒரு காரில் பிக்கப் செய்ய பட்டான்.
தனக்கு சொன்ன நேரத்தில் துல்லியமாக அவர்கள் சந்தித்து இருந்ததை வியந்தான்.
காரில் இருவர் இருந்தனர் இருவரும் கருப்பு உடை கருப்பு கண்ணாடி. தங்களை பிளாக் மாம்பா என அறிமுக படுத்தி கொண்டார்கள் மாம்பா கூட்டத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி என்றார்கள் . ஒரு பைலை கையில் கொடுத்தார்கள் .

"நீங்கள் கொல்ல வேண்டிய பிரமுகர் அவர் பற்றிய தகவல் இது தான் என்றார்கள்."
"வாழ்த்துக்கள் " என்றார்கள் .ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி விட்டு இறங்க சொன்னார்கள்.
ஹரிஷ் அவர்களை ஏறெடுத்து பார்த்தான்.
"கொஞ்சம் பேசணும் ..நம் தலைமை இடம் "
"வாட் ?"
"மிஸ்டர் தருன் மிஸ்ரா வை நான் சந்திக்க வேண்டும் நீங்கள் அனைவரும் அவரை சந்தித்தவர்கள் என்பதை நான் அறிவேன் . நமது கேமை வேற லெவலில் கொண்டு போக என்னால் முடியும். இப்போது இருப்பது போதாது இந்தியாவில் இதை இன்னும் வேகமாக பரப்ப என்னால் முடியும்.  இன்னும் சில மாதத்தில் இந்தியாவின் ஜன தொகையை கணிசமாக குறைக்கும் ஒரு மாஸ்டர் திட்டம் என்னிடம் உள்ளது அதை பற்றி அவரிடம் மட்டுமே பேச முடியும்." என்றான்.

"தலைமை யாரையும் சந்திக்காது. அது கேம் ரூல் அல்ல." என்றான் ஒரு மாம்பா

"ஆம் நான் அறிவேன் ஆனால் என்னை தலைமை நிச்சயம் சந்திப்பார் வேணும் என்றால் முயற்சி செய்து பாருங்கள் " என்றான் ஹரிஷ்
அவர்கள் அவனை குழப்ப பார்வை பார்த்த படி கதவை சாத்தினார்கள் ஒருவன் அவன் காதுகளில் dj கள் அணிவதை போல ஒரு பெரிய ஹெட் செட் ஒன்றை அணிவித்தான். அதில் ஏதோ சப்தமாக ஒலி யை வைத்தான்.
ஹரிஷ் அவர்கள் செய்வதை ஓர கண்ணால் கவனித்தான் அவர்கள் மடி கணினியில் எதையோ தட்டினார்கள் .
அவர்கள் கடைசியாக பார்த்த அடையாளமாக அந்த பிளாக் ஈகில் எனப்படும் பருந்து படம் போட்ட சைட் இருந்ததை கவனித்தான் .
அதை மூடி விட்டு மாம்பா சைட் போய் எதையோ தட்டினானர்கள்.  பிறகு ஏதோ ஒரு நம்பரை அழுத்தி பேசினார்கள்.
தாங்கள் உரையாடுவது அவனுக்கு கேட்க கூடாது என்று தான் அந்த dj செட்டப் என்று அவனுக்கு புரிந்தது.
2 நிமிடம் கழித்து அவர்கள் முகத்தில் கொஞ்சம் ஆச்சர்யம் இருந்தது. காதில் ஹெட் செட்டை கழட்டி விட்டு
"ஆச்சர்யம்....வாழ்த்துக்கள் உங்களை தருன் மிஸ்ரா சந்திக்கிறார் விரைவில் எந்த இடம் என்ற தகவல் அனுப்ப படும் "
என்றார்கள் ஒரு இடத்தில இறக்கி விட்டார்கள்.

      ✴             ✴              ✴               ✴

அது பாதி கட்ட பட்டு கட்டுமான பணி பல மாதங்களாக பாதியில் நிறுத்த பட்ட ஒரு அடுக்குமாடி கட்டிடம்.
அதில் 2 ஆவது  தளத்தில் அந்த ஒரு சின்ன கும்பல் வந்து சேர்ந்தது. அனைவரும் கருப்பு கோட் அணிந்து இருந்தார்கள் கருப்பு கூலிங் கிளாஸ். அனைவரிடமும் துப்பாக்கி இருந்தது.
நடுவில் போட பட்ட தற்காலிக நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தான் தருன் மிஸ்ரா. அழகாக கலராக இளமையாக கதாநாயகன் போல் இருந்தான். கண்களில் மட்டும் கொடூர நரி தனம்.
" அவனை நீங்கள் சந்திக்க ஆர்வம் காட்டுவது ஏன் பாஸ் அவன் ஒரு சாமண்யன் " என்றான் நேற்று ஹரிஸை காரில் சந்தித்த மாம்பா.

"யார் சொன்னார்கள் அவன் சாமண்யன் என்று அவன் அப்பா ஒரு சிபிஐ ஆபீசர். நம்மை ஓட ஓட விரட்டி துறை. அவன் பையனை கொலைகாரனாக மாற்றுவதில் தனி ஆர்வம் கொண்டு அவனை டார்கட் செயத்து இருக்கிறேன் அவனை மடக்கியத்தில் மகிழ்ச்சி எனக்கு " என்றான் மிஸ்ரா.
சரியாக 17 நிமிடம் கழித்து அவர்களை சந்தித்தான் ஹரிஷ்.
முன்னாள் நின்றிருந்த இரு மாம்பாகள் மட்டும் துப்பாக்கியை நீட்டி பிடித்து நின்றிருந்தார்கள்.
மிஸ்ரா அவனை கட்டி பிடித்து உன் சேவை எங்களுக்கு தேவை என்றான்.
"நீங்கள் எவ்வளவு நாள் இப்படி தலைமறைவாக இருக்க போறீங்க பாஸ் " என்றான் ஹரிஷ்.
மிக கொஞ்ச காலம் தான் விரைவில் வெளிநாட்டில் செட்டில் ஆக போகிறோம் உன்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். " என்றான். பிறகு நிறுத்தி நீ நம்ம இயக்கத்தில் மிக ஆர்வமாக இருப்பதை நான் அறிவேன் .நீ ஒரு உதவி செய்ய வேண்டும் உன் அப்பா  சந்திரதாஸ் ஒரு சிபிஐ ஆபீசர் என்று நான் அறிவேன் அவரது சில பைல் களை நீ திருடி தர வேண்டும் " என்றான்

ஹரிஷ் முன்னால் நகர்ந்து கை குளுக்கினான் .

" நீங்கள் தான் தருன் மிஸ்ரா என்று உறுதி செய்ததற்கு நன்றி " என்றான்.
பிறகு கொஞ்சம் பின்னால் நகர்ந்து ஏதோ சைகை செய்தான்.
காற்றில் திடீரென ஏதோ ஒரு ஒலி ஊடுருவியது.
காட்சிகள் சடுதியில் மாறியது.
விஸ்க்.....விஸ்க்.....
முன்னால் நின்றிருந்த ஆயுதம் தாங்கிய இருவர் மூளை சிதறி இறந்து விழுந்தார்கள்.
மிஸ்ரா மூளை ஸ்தம்பித்து நின்றான்.
திடீரென ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல் அவர்களை ஜன்னல் கண்ணாடி மற்றும் கதைவை உடைத்து கொண்டு சூழ்ந்தது.
" கையை உயர்த்தி நில்லுங்கள் நீங்கள் சிபிஐ யால் சூழ பட்டு இருக்கிறீர்கள்.

ஒருவர் முன்னேறி மிஸ்ராவின் தலையில் துப்பாக்கி வைத்து "ஐ எம் சிபிஐ ஆபீசர் சந்திர தாஸ்." என்றார்.

"ஆபீசர் நீங்க முதல்ல கைது பண்ண வேண்டியது உங்கள் பய்யன் ஹரிஸை அவன் இப்போ ஒரு அரை கொலைகாரன் " என்றான்.

"ஷட் அப்... 14 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற போலி சாமியார் ராம் கோபால் மற்றும் அவனுக்கு உதவிய அரசியல் வாதி மனோஜ் இருவரும் திடீரென காணாமல் போனார்கள். உண்மையில் அவர்கள் எங்கள் பிளாக் ஈகில் குழுவால் கடத்த பட்டார்கள். அவர்களுக்கான தண்டனையை தான் பிளாக் ஈகில் கொடுத்தது. கூடவே பிடிக்க முடியாத உனக்கு ஹரிஸை கொண்டு பொறி வைத்தது.
பிளாக் ஈகில் உனக்கு பரிச்சியமானது தான் என்பதை நான் நன்கு அறிவேன். உங்கள் பிளாக் மாம்பா கேமை வேட்டை ஆடி பல இடத்தில் அதை பிளாக் செய்த அனாணிமஸ் ஹேக்கர் பிளாக் ஈகில் ஐ முறியடிக்க இன்றும் நீங்கள் திணறி கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.
அரசாங்கத்தால் தண்டிக்க முடியாத பல குற்றவாளிகளை தண்டிக்க என் தலைமையில் இயங்கும் ரகசிய அமைப்பு தான் "இன்டியன் பிளாக் ஈகில்." அதில் உங்கள் சீனா பல துறையில் துரோகிகளை தேர்ந்தெடுத்ததை போல நாங்கள் பல தேச பக்தி கொண்ட அறிவாளிகளை பல துறைகளில் இருந்து தேர்ந்தெடுத்தோம். ஹரிஷ் அதன் உறுப்பினர் அவன் ஒரு வருங்கால சிபியை ஆபீசர்.
இந்தியன் பிளாக் ஈகில் அவனுக்கு கொடுத்த முதல் ஆபரேஷன் உன்னை பிடிப்பது அதை சிறப்பாக செய்து இருக்கிறான் ஹரிஷ்."
என்று சொல்லி முடித்தார் சந்திரதாஸ்.

ஹரிஷ் அவனை நெருங்கி.
"ஆக்சுவலி உணகோரு பிளான் வச்சி இருக்கோம் டா ...உன்ன என்ன பண்ணனும்னு...இனி பிளாக் மாம்பா கேமை பரப்ப நினைப்பவர்கள் அதை திறந்த உடன் உன்னை நாங்கள் என்ன செய்தோம் என்ற வீடியோ தான் ஓடும். அந்த வீடியோ அவர்கள் ரத்தத்தை உறைய வைக்கும். கொடூரமான ஒரு கோர மரணத்திற்கு தயாரா இருடா தேச துரோகி சொரி நாயே " என்றான். ஹரிஷ் கண்களில் பாம்பை கண்ட பருந்தின் கொலை வெறி இருந்தது.

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
                                                     
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

"சின்ன சின்ன திகில் கதைகள்"
(கதை 4 : அமுதாவின் ஆவி )

வயலுக்கு நடுவே இருந்த கீற்று கொட்டா அது.
நள்ளிரவில் சாராய நெடிகளுக்கும் சிகரெட் புகைகளுக்கும் இடையே அந்த நால்வர் அமர்ந்திருந்தார்கள். மணி, சேகர், மாறன், சிவா.
அவர்கள் அந்த கிராமத்தின் பிணந்தின்னி கழுகுகள். மக்களால் அடிக்கடி சபிக்க படும் அயோக்கியர்கள்.
போலீசுக்கு அடிக்கடி திடீர் விருந்தாளிகள்.

மணி அந்த கயவர் கூட்டத்தின் தலைவன்.
எனவே அவன் கொக்கறிப்பு கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.
"அமுதா போல அடுத்த பீஸு எப்போ கிடைக்கும் பாசு "
என்றான் பொதுவாக மூவரையும் பார்த்து.
"அடடா அமுதா போல வருமா " என்று அவர்கள் சிரித்து கொண்டார்கள்.
அக்கூட்டத்தில் இளையவனான சிவா மட்டும் அந்த சிரிப்பில் கலந்து கொள்ள வில்லை. அதை மற்றவர்கள் கவனிக்க தவறி இருக்கலாம் ஆனால் மணி தவற வில்லை. கொஞ்ச நாளாகவே அமுதா பெயரை சொன்னாலே சிவாவின் இந்த மாறுதலை மணி கவனித்து வந்தான்.

" என்னடா சிவா...! என்ன இப்ப எல்லாம் அமுதா பெயரை சொன்னாலே சைலண்ட் ஆயிடற ...எனக்கென்னவோ அந்த பக்கத்து ஊரு அமுதாவை நீ ஒன் சைட் ஆ லவ் பண்ணி இருந்தயோனு சந்தேகமா இருக்கு "
என்றான். கொஞ்சம் போதையில் தள்ளாடினான்.

"அட நீங்க வேற அண்ணே என்னை போய் தப்பா நினைச்சிட்டு.....
இது....வந்து..... வேற விவகாரம்னே "
என்று இழுத்தான்..

"டே...என்னடா வேற விவகாரம் ...ம்ம்ம் ?
என்ன வேற விவகாரம் ?? ஒண்ணா நாலு பேரு சேர்ந்து கொலையே பண்ணி பிணத்தை குவாரில புதச்சிட்டோம்  அதை விட வேற என்ன உனக்கு ரகசிய விவகாரம் இருக்க போகுது சொல்லு "
என்று கர்ஜித்தான் மணி.

" அதானே விவகாரமே... சில நாளுக்கு முன்னாடி நாம கற்பழித்து கொலை செய்து கல் குவாரில புதைத்த அமுதா இருக்காளே..... அவளை...வந்து நீங்க சொன்னா நம்ப மாடீங்க... அவ என் கண்ணுக்கு தெரியரா ...ரெண்டு மூனு வாட்டி ஏரி கரை பக்கம் அவ உருவதை நான் பார்த்தேன். என்னை முறைத்து பார்த்து நின்று இருந்தா...
அன்னைக்கு கல் குவாரி பக்கம் போறேன்... அவளை புதைத்த இடத்தில மேலேயே ஒரு கல் மேல உட்கார்ந்து என்னையே பாத்துட்டு இருக்கான்னே "

இன்ஜின் கோளாறு ஆன ஆட்டோ போல ஒரு விச்சித்திர குரலில் சிரித்தான் மணி...
" இங்க பார்ரா இந்த பச்சை மண்ணை... பாவம் அமுதாவை பார்தானாம்....
என்டாடேய்... அவ ஏண்டா எங்க கண்ணுக்கு எல்லாம் தெரில... எங்கடா தெரிஞ்சா ஆவினு கூட பாக்காம திரும்பவும் நாங்க கற்பழிச்சி கொலை பண்ணி புதைத்தாலும் புதைச்சிடிவோம்னு பயபடறா போல ஹா ஹா.... " சொல்லி விட்டு அட்டக்காகசமாக சிரித்தான்.

"அதான் சொன்னேனே சொன்னா நீங்க நம்ப மாட்டீங்கனு  எப்படியோ போங்க "
என்று சிவா முணு முனுதான்...

     ✴              ✴                ✴                ✴

இது நடந்து சில நாள் கழித்து அதே கொட்டாய் இல் கயிற்று கட்டிலில் கால் நீட்டி படுத்து இருந்தான் மணி.
குழப்பான சிந்தனை ஓட்டம் அவனை சூழ்ந்தது.
நேற்று சேகரும் "அதை "பார்த்ததா சொல்றானே. மாறன் கண்ணுக்கு கூட தெரிந்தது ஆனா அவன் சொன்னா நான் கிண்டல் அடிப்பேன் என்று பயந்து சொல்ல வில்லை என்றானே இதெல்லாம் உண்மையா ? இவர்கள் எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாற்ற பார்கிறார்களா அல்லது அமுதா நிஜமாக ஆவி ஆகி உலவுகிறாளா படத்தில் வருவது போல என்னை பழி வாங்க போராளா....?"
மணி தலையை சிலுப்பி கொண்டான் 'ச்ச உயிரோடு இருக்கும் போது என்ன எதிர்க்க முடில செத்து என்ன கிழிக்க போறா ' என்று தனக்கு தானே சொல்லி கொண்டான்.

சில தினங்களுக்கு முன்பு சந்தைக்கு சென்று இரவில் திரும்பி வந்து கொண்டிருந்த பக்கத்து ஊர் இளம் பெண் அமுதாவை கற்பழித்து கொன்று புதைத்து இருந்தார்கள் இவர்கள்.
பக்கத்து ஊரில் அந்த பெண் காணாமல் போனாள் என்று ஸ்டேஷனில் கம்ப்லைன்ட் கொடுக்க பட்டுள்ளதாக தகவல்.
சந்தைக்கு போனவள் யார் கூடவோ ஓடி போய் விட்டாள் என்று ஊரில் பேசி கொண்டார்கள். யாருக்கும் இவன் மேல் துளி சந்தேகம் கூட வர வில்லை.
மணி எழுந்தான் . மணியை பார்த்தான். இன்னோரு பிராந்தி பாட்டிலை வாயில் கவிழ்தான்.

"விடு அடுத்த இரையை பார்ப்போம்."

அந்த மிருகம் மீண்டும் பசி கொண்டது. ஆள் அரவம் அற்ற ஏறி கரை யில் காத்து கிடந்தது .. கடந்த இரை கூட இங்கே தானே சிக்கியது. போதை தலைக்கு ஏற கண்கள் பெண்ணை தேடியது. அப்போது தான் அதை கவனித்தான் தூரத்தில் ஒரு இளம் பெண்..
அதை பார்த்ததும் மிருகத்தின் காதுகள் சூடாகின.. எங்க போய் தொலைந்தானுங்க மத்தவங்க... இங்க அருமையான பீஸ் ஒன்னு மாட்டி இருக்கு என்று தனக்குள் பேசி கொண்டு அவளை இடைவெளி விட்டு பின் தொடர்ந்தான்.
நீண்ட தூரம் தொடர்ந்த பின் கொஞ்சம் நெருங்கி இருந்தான். வழக்கமான பெண்கள் நடையை விட இந்த பெண் ரொம்ப வேகமா நடக்கிறாளே என வியந்தான்.
சுற்றி ஒரு முறை பார்த்து கொண்டான். ஆள் அரவம் அற்ற இடம் என்பதை உறுதி செய்தான். அவள் மேல் பாய தயாரானான்.
சரியாக அந்த வினாடி அந்த பெண் திடீரென நின்றாள் சரேலென திரும்பினாள். அவள் முகத்தை பார்த்த மணி ஒரு கணம் திகைத்தான் பின் மயங்கி விழுந்தான்.
காரணம் அது அவன் கொன்று புதைத்த அமுதாவின் முகம்.

     ✴             ✴               ✴                  ✴

அந்த குவாரியில் கூட்டம் கூடி இருந்தது.
மக்கள் கூட்டத்தில் ஆங்காங்கே போலீஸ் தலை தெரிந்தது.
குவாரியில் ஒரு குழு தோண்டி கொண்டிருந்தது.
மணி ஒரு ஜீப்பில் அமர வைக்க பட்டு இருந்தான். கைகளில் போலீஸ் காப்பு.
"என்னயா உண்மைய ஒத்துகிட்டானா"
என்றார் இன்ஸ்பெக்டர்
" இன்னும் முழுசா இல்லைங்கய்யா தன்னை ஆவி துறத்துன்னு  மட்டும் பயந்து போய் இருக்கான். இவன் ஒத்துகாட்டி என்ன இவன் கூட்டாளி எல்லாதையும் ஒத்துகிடானுங்க "
என்றார் உதவியாளர்.
" குவாரியை இன்னும் ரெண்டு அடி தோண்டுனா... இவனும் ஒத்துக்குவான் பாரு " என்றார் இன்ஸ்பெக்டர்.
சில நிமிடங்கள் கழித்து ...அனைவரும் மூக்கை பொத்தினார்கள்.  அந்த குழியில் இருந்து அந்த பிணத்தை அழுகிய நிலையில் எடுத்தது அந்த குழு.

சிறிது நேரத்தில் மணியை அழைத்து கொண்டு போலீஸ் ஜீப் கிளம்பியது.

    ✴               ✴                ✴                  ✴

பாவம் மணிக்கு தெரியாது................
பக்கத்து ஊர்அமுதாவிற்கு ஒரு தங்கை உண்டு என்று....
அவள் வெளியே தங்கி படித்து கொண்டிருந்தாள் என்று........ அவர்கள் இரட்டையர்கள் என்று.....
இவர்கள் கண்ணில் அடிக்கடி சிக்கியது அமுதா அல்ல அது அவள் இரட்டை சகோதரி குமுதா என்று.............

〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰
                                                     
〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰〰

"சின்ன சின்ன திகில் கதைகள்"

(கதை 5 :  சாலை ஓரத்தில் ஒரு ஆவி )

"மாப்ள என்ன நீ கட்ட வண்டி ஒட்றாப்பல
ஓட்ற ... கொஞ்சம் வேகமா ஓட்டுயா ...
இந்த நைட் நேரத்துல இந்த ரோட்டை பாத்தாவே ஒரு மார்க்கமா இருக்கு...
வடிவேலு "கேட்டை பாத்தாலே பயமா இருக்கே "னு சொல்ற மாதிரி எனக்கு இந்த ரோட்டை பார்த்தாவே பயமா இருக்கு ."

"டேய் ரகு சத்தம் போடாம வா... இதுக்கு மேல வேகமா போனா நைட் ல ஸேப்டி இல்ல... "

"அப்ப நீ கார் வாங்கியே இருக்க கூடாது மாப்ள ...
டேய் கொஞ்சம் சுத்தி பாரேன் ... இந்த உலகத்திலேயே இப்ப நாம ரெண்டு பேர் தான் தனியா இருக்கோங்கர மாதிரி இல்ல....."

" ரகு ...கொஞ்சம் பேசாம வா ...சும்மா எதுக்கு தொன தொனங்கற....."

"அதுகில்ல மாப்ள இந்த இடம் ஓவர் குளிரா இருக்கு கொஞ்சம் ஓரமா நிப்பாடனினா ஒரு தம்மை போட்டுட்டு போலாம் "

சூர்யா காரை நிறுத்தினான் . அத்துவானத்தில் ஒரு அமானுஷ்யம் இருந்தது .நண்பன் ரகு சொன்னது போல கொஞ்சம் குளிர் ... அப்புறம்
சுற்றி இருள் இருள்  இருள் மட்டுமே...

ரகு கார் கதவை திறந்தவன் அதை பார்த்தான்.. கண்ணுக்கு எதிரே ஒரு கல்லறை ..அந்த கல்லறையின் மேலே ஒரு பெரிய சைஸ் ஆந்தை அமர்ந்து இருந்தது . இவனை முறைத்து பார்த்தது ...

" மாப்ள..... கல்லறை எரியாவா இது..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..... சீக்கிரம் வண்டிய எடுயா யோவ் "

"நீ ரகுவா இல்ல ஜோஸ்யத்துல வர ராகுவாடா... என்ன இந்த பாடு படுத்தர..  நைட்ல உயிரை எடுத்துக்கிட்டு ச்சை... "

"மாப்ள நீ கெட்ட வார்தைல கூட திட்டிக்க நோ அப்ஜக்சன் ... எதையும் கண்டுக்க மாட்டான் இந்த ரகு.... இனி மூச்சாவே முட்டிட்டு வந்தாலும் நிறுத்த சொல்ல மாட்டான் இந்த ரகு.... எம்மாடி எம்மாம் பெரிய கண்ணு...."

"யாருக்கு டா ....."

"அந்த ஆந்தைக்கு தான் ....என்னையே குறுகுறுகுறு னு வேற பாத்திச்சி மாப்ள.... ஏன் மாப்ள தெரியாம தான் கேக்கறேன் உனக்கே பயமாவே இல்லையா...."

சூர்யா சிரித்தான்...
"பயமா எனக்கா ....ஹா ஹா ஹா.... "

"பெரிய கபாலி.... கேட்டா ஒழுங்கா பதிலை சொல்லுயா... "

"ஆக்சுவலி.... என்னனா அது வந்து ...இயற்கையாவே கொஞ்சம் எனக்கு தைரியம் அதிகம்.... நாங்க பேமிலியே அப்படி ..."

"மாப்ள சிரிப்பே வரல....தைரியம்னா என்ன தெரியுமா பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது "

"அப்படினு யார் சொன்னது "

"ரொம்ப நாளுக்கு முன்னாடி குருதி புனல் ல கமல் சொன்னாரு இப்ப நான் சொல்றேன்..."

கார் அந்த ஆள் அரவமற்ற வழியை கடந்து கொண்டிருந்தது...ரகு மீண்டும் வாயை திறந்தான்.

"மச்சி ஒன்னு சொல்லட்டா இந்த மாதிரி ஆள் இல்லாத இடத்துல கார் ஓட்டி போகும் போது எல்லாம் எனக்கு ஒரு கற்பனை வரும்.... ஒரு அழகான பொண்ணு வழி மறித்து லிப்ட் கேக்கற மாதிரி...."

"அப்புறம் என்ன ஆகும் " என்றான் சூர்யா சுவாரஷ்யமாக...

"நாம அதை ஒரு பொன்னுனு நினைச்சி லிப்ட் கொடுக்குறோம் ..வழி முழுக்க நல்லா தான் பேசிக்கிட்டே வர்றா... ஆனா இறங்க போற நேரத்துல தான் தெரியுது அது ஒரு ஆவி... நாம் சுதாரிக்கறதுக்குள்ள அப்படியே பாய்ஞ்சி உன் குரல் வளையை கடிக்கிறா... தட்டு தடுமாறி நான் மட்டும் கார் எடுத்து தப்பிச்சி போறேன் ......"

" இப்போ உன் குரல்வளையை நானே கடிக்க போறேன் பாரு....இனிமே நீ வாய திறந்த உன்ன இங்கயே இறக்கி விட்டுட்டு போயிடுவேன்.... டேய் பேசிக்கலி நாம ரெண்டு பேருமே பேய் நம்பிக்கையும் பேய் பயமும் அதிகம் கொண்டவர்கள் னு நாம ரெண்டு பேருக்குமே தெரியும் இல்ல. கொஞ்சம் சும்மா வாடா.... ஒழுங்கா கார் ஓட்ட முடில என்னால...."
ரகு வாயில் விரலை வைத்து கொண்டான்... சூர்யா சிரித்து விட்டு காரை கொஞ்சம் வேகம் எடுத்தான்...

      ✴            ✴            ✴             ✴

சில நிமிடங்கள் கழித்து .......
சூர்யா முகத்தில் தெரிந்த திடீர் திடுகிடலை கவனித்தான் ரகு...

"என்னாச்சு மாப்ள "

"அங்க பாருடா..."

முன்னால் ரோட்டில் ஒரு பெண் நின்று இருந்தாள் லிப்ட் கேட்ட படி...

"ஐயோ ...மாப்ள உனக்கு புண்ணியமா போகும் காரை கீர நிறுத்திடாத.... இது "அது "வே தான்...  ஐயோ ஒரு பேச்சுக்கு சொன்னேன் நிஜமாவே வந்துடிச்சா... "

"ச்ச அப்படி பயபட வேண்டிய தேவை இல்லை பாவம் அவளுக்கு என்ன பிரச்னையோ... நாம பேய் கதை பேசிட்டு வந்ததால் இவளை பேய் னு நினைக்க தோணுது அவ்ளோ தான் இதுக்கு பேரு தான் ஹாலுஸ்னேஷன்...
இல்லாததை கற்பனை செய்றது....."

"ஹாலுசினேஷன்...". இதை பத்தி கூட கமல் சொல்லி இருக்காரு மாப்ள பிக் பாஸ்ல.... ஜூலி கிட்ட...."

சூர்யா மெதுவாக காரை நிறுத்தினான்.
அந்த இளம் பெண் கண்ணுக்கு தெரிந்தாள்... புடவை கட்டி இருந்தாள். தீர்க்கமான பார்வை.

"ரொம்ப தேங்க்ஸ்.... என்னோடய ஸ்கூட்டி வழிலேயே ரிப்பேர் ஆயிடுச்சி...அதான் விட்டுட்டு நடந்து வந்துட்டு இருந்தேன்...
கொஞ்சம் இந்த ஏரியா தாண்டி டிராப் பண்ணிங்கனா நல்லா இருக்கும் "
மிக மென்மையாக பேசினாள்.
சூர்யா கொஞ்சம் யோசித்து விட்டு "சரி ஏறுங்க" என்றான்.

அவள் பின் சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
ரகு கிசு கிசுதான்...
"அந்த மாதிரி ஸ்கூட்டி ஏதும் கண்ணுக்கு தெரிலேயே....மாப்ள நீ பண்றது கொஞ்சம் கூட சரி இல்ல "

" டேய் ஒன்னும் ஆகாது கம்முன்னு வாடா "

பிறகு கொஞ்ச நேரம் இருவரும் ஏதும் பேச வில்லை...

5 நிமிடம் கழித்து...
ரகு அவள் என்ன செயகிறாள் என்பதை அறிய ரியர்வியூ மிர்ரர்  இல் பார்த்தான் ...அதிர்ந்தான்.
அந்த பெண்ணின் உருவம் கண்ணாடியில் தெரிய வில்லை.
கண்ணாடி கோணம் சரி இல்ல என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு கொஞ்சம் கண்ணாடியை திருப்பி பார்த்தான் அதிர்ச்சி அதிகம் ஆகியது... அவள் சுத்தமாக தெரியவில்லை காலி சீட் தான் தெரிந்தது.

அவனுக்கு இதய துடிப்பு திடீர் ரேஸ் கூடியது....
மெல்ல சூர்யாவிடம் விஷயத்தை சொன்னான்.
சூர்யா .."டேய் ரகு லூசு மாதிரி உளராத " என்று சொல்லி கொண்டு கண்ணாடி பார்த்தவன் அதிர்ச்சியை அடைந்தான் உண்மையில் அவள் உருவம் கண்ணாடியில் துளி கூட தெரிய வில்லை.. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டார்கள் ...
சூர்யாவால் கவனம் செலுத்தி கார் ஓட்ட முடியவில்லை...உடல் வியர்த்தது .
மெல்ல திரும்பி அவளை பார்த்தான். ஜன்னல் வழியே ஒரு வெறித்த பார்வை பார்த்து கொண்டு வந்தாள் அவள்.

மஹ்ஹ்ஹம்.... என்று கனைத்து கொண்டான் சூர்யா ..
"நீங்க.....நீங்க.....எ ...எங்க போகணும் "

"எல்லோரும் எங்க இருந்து வந்தோமோ அங்க தான் ஒரு நாள் எல்லோரும் போகணும் " என்றாள் மெதுவான குரலில்..

"வாட்... என்ன சொல்றிங்க புரில..."

"சாரி ஒன்னும்...இல்ல... இந்த இடத்தை தாண்டி எங்க ஊர் இருக்கு இன்னும் சில கிலோ மீட்டர் தாண்டி விட்டுடுங்க போதும் "
சூரியா மறு பேச்சு ஏதும் பேசாமல் வண்டியை வேகம் எடுத்தான்..
இம்முறை ரியர்வியு மிர்ரர் இல் பார்த்தவன் மீண்டும் அதிர்ந்தான் இப்போது அவள் உருவம் நன்றாக தெரிந்தது. " இது என்ன விசித்திரம்...ஹாலுஸ்னேஷன் இரண்டு நபருக்கு ஒரே நேரத்தில் வர வாய்ப்பு உண்டா ??
பக்கத்தில் ரகுவை பார்த்தான் அவன் எச்சிலை விழுங்கி கொண்டு அமர்ந்திருந்ததை பார்த்ததும் இந்த திகில் சூழலிலும் சிரிப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை...
அவள் தொடர்ந்து ஜன்னலில் வேடிக்கை பார்த்து வந்தவள் ...
"எத்தனை பேரு தூங்காரங்க இல்ல... " என்றாள் அவள் காட்டிய இடத்தில வரிசையாக கல்லறைகள் கடந்து சென்றன.
யார் இந்த பெண்... இருவருக்கும் என்ன சொல்வது என்று புரியவில்லை....
" அவங்களுக்கு எல்லாம் இனி நம்ம மாதிரி எந்த கவலையும் மன அழுத்தமும் ...இல்ல இல்லையா ரகு " என்றாள்..

"ஹலோ என் பேரு எப்படிங்க தெரியும் உங்களுக்கு..."

"நான் மனதை படிக்கும் ஆற்றல் கொண்டவள் ...."
ரகு அதிர்ந்து "என்னது " என்றான்

"அது வந்து ...உங்க நண்பர் சொல்லும் போது உங்க பேரை கேட்டேன் .... "

"மாப்ள தயவு செய்து உன் ஆக்சிளேட்டரை கொஞ்சம் வேகமா அமுக்கு மாப்ள ...." கிசுசுதான்...

"நைட்ல ரொம்ப வேகம் போனா ஸேப்டி இல்ல மச்சி...."

"அடேய்..... சேப்டிக்கு  பொறந்தவனே.... இப்போ நீ ஸ்லோவா போனா தாண்டா நமக்கு சேப்டி இல்ல.... "

சிறிது நேரம் கழித்து பின்னாடி இருந்து ஏதோ சப்தம் வந்தது.... பச்சக் பச்சக் என்று....

திரும்பி பார்த்த ரகு பயத்தில் உரைந்தான் அவள் தனது கையை வாயில் கொண்டு போய் எதையோ சப்பி கொண்டிருந்தாள் உற்று பார்த்த போது கையில் ரத்தம் இருந்தது தெரிந்தது...

"எனக்கு ரொம்ப பிடிக்கும்..." என்று சொன்னவள்  "அதனால் தான் பாக்கெட்டை எப்போவும் கூடவே வைத்து இருப்பேன்..."
என்று சொல்லி விட்டு வாட்டர் பாக்கெட் போல ஒன்றை எடுத்து கடித்து உறிஞ்சி குடிக்க தொடங்கினாள்......ஆனால் பாக்கெட்டில் வாட்டருக்கு பதில் கரும்சிவப்பில்.......... "

"ரத்தம் ... மாப்ள ரத்தம். ... என்றான் ரகு...  "

சூர்யா பயத்தில் காரை அதன் உச்ச பட்ச வேகத்தில் செலுத்தினான்...

"ரகு உங்க நண்பரை கொஞ்சம் மெதுவா போக சொல்லுங்க.... இல்லனா எங்கயாவது ஆக்சிடெண்ட் ஆகி  இங்கேயே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு இடம் ஒதுக்க வேண்டி வரும் " குரலில் ஒரு கடுமை இருந்தது.

"அது என்ன எங்க ரெண்டு பேருக்கு... அப்போ உங்களுக்கு ... ??"

"நான் ஏற்கனவே இந்த எரியால தானே இருக்கேன்.. ..."

பேய் கிட்ட பேச்சு கொடுத்தால் நமக்கு தான் ஆபத்து என்று உணர்நதது போல இருவரும் அடுத்த 10நிமிடம் பேசவே இல்லை எந்த நிமிடம் தனது குரல் வளை கடிக்க படுமோ என்ற பயத்தில் மிர்ரரை பார்த்து கொண்டே வண்டி ஓட்டினான் சூர்யா..  அந்த ஏரியாவை கடந்த நிலையில்...

" நீ....நீங்க எ...எங்க இறங்கனும் " என்றான்

"அதோ அங்க புளிய மரம் ஓரமா நிறுத்திகொங்க  அது பஸ் ஸ்டாப் தான்..  அங்க இருந்து நான் போய்க்குவேன்" என்றாள்...

இருவருக்கும் ஹப்படா என்று இருந்தது... ஒரு வழியாக இறக்கி விட்டுடலாம் இந்த சந்தேக கேசை...
அவள் சொன்ன இடத்தில காரை நிறுத்தினான்...
ரகு அவன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி கிசு கிசுதான்...

" நம்மள இந்த காரை விட்டு உயிரோடு இறங்க விடாது னு நினைச்சன் மாப்ள நல்ல வேலை அப்படி ஏதும் நடகல "

அவள் மெதுவாக இறங்கி...தேங்க்ஸ் என்றாள்...

"ஹி ஹி இருக்கட்டுங்க இருக்கட்டுங்க.... என்றான் ரகு.... "

அவள் மெதுவாக நடந்து செல்ல சூர்யா குழ்பத்துடன் காரை எடுத்தான்.
"இவள் நம்ம கிட்ட எதையோ மறைக்கிறாள் ரகு..... அது என்ன அது... "

அப்போது அந்த பெண் வேகமாக திரும்பு வருவது தெரிந்தது.
இருவரும் அதிர்ச்சியும் குழப்பமும் சூழ அவளை பார்த்தார்கள்
அவள் அருகே வந்து இருவரையும் பார்த்து சிரித்தாள்...

" ரொம்ப தேங்க்ஸ் உங்க ரெண்டு பேருக்கும்.... பயபடாதீங்க  நான் பேய் இல்ல பொண்ணு தான்... என் ஸ்கூட்டி நிஜமாவே ஒரு சின்ன ஆக்சிடெண்ட் ஆகி பள்ளதுல விழுந்துடிச்சி.... இந்த நேரத்துல யார் கிட்ட லிப்ட் கேட்கறதுன்னு புரியாம இருந்த அப்போ தான் நீங்க வந்தீங்க... இரண்டு ஆண்கள் என்பதால் எனக்கு கொஞ்சம் பயம்.... அதான் கொஞ்சம் பேய் போல நடிச்சேன்... பேய் கிட்ட யாரும் தப்பா நடந்துக்க மாட்டாங்க பாருங்க.  ஹா ஹா...
ஏனோடய கையில் வந்தது நிஜ ரத்தம் தான் அந்த சின்ன ஆக்சிடெண்ட்ல வந்தது. உங்களை பார்த்தால் பேசிக்கா நீங்க பேய் பயம் கொண்டவங்க மாதிரி தெரிஞ்சிது அதான் அடுத்ததா நான் வச்சிருந்த க்ரேப் ஜூஸ் பாக்கெட்டை வைத்து ஒரு சீன் போட்டேன்...
ஆனா அதுல பெரிய காமெடியே என்ன தெரியுமா.... நான் என்னோடய செருப்பை அட்ஜஸ்ட் பண்றதுக்காக கீழ குனிஞ்சப்ப  நீங்க ரியர்வியு மிர்ரர் ல பார்த்துட்டு கண்ணாடில நான் தெரில னு சொன்னிங்க பாருங்க அதான்.
அதுக்கு அப்புறம் தான்  பேய் டிராமா ஐடியாவே வந்தது.
ஆனா நீங்க ரொம்ப நல்லவங்களா இருக்கீங்க... அதான் உங்களை குழப்பத்தில் விட்டு போக மனசு வரல . அதான் கிரும்பி  வந்து உண்மையை சொல்லிட்டேன். இப்படி தெரிந்து இருந்தா நான் ஒழுங்கா பேசிகிட்டே உங்க கூட வந்து இருப்பேன்...
அதிலும் ரகு இருக்காரே.... பின்னாடி இருக்கிறவங்களுக்கு கேக்காத மாதிரி கூட பேச தெரியாத ஒரு அப்பாவி....
ஆமாம்...உங்க பேர் என்ன பிரண்ட்....
கேட்கவே இல்லை நான். வாட்ஸ் அப் நம்பர் கொடுங்க ரெண்டு பேரும் நான் வீட்டுக்கு சேப்பா போய்ட்டு மெசேஜ் பண்றேன்...

"அடி பாவி....  அப்போ எங்களை வச்சி காமெடி பண்ணிட்டியா.... " இருவரும் சத்தம் போட்டு சிரித்தார்கள்...

"எங்க ரத்தத்தை குடிக்காம விட மாடீங்க னு இல்ல நினைச்சுட்டேன். " என்றான் சூர்யா .

"ஹலோ... நீங்க நல்லவங்ன்றதால் தான் நான் சும்மா விட்டேன். தப்பா நடக்க பார்த்து இருந்தா உங்க ரத்தத்தை நிஜமா உரிஞ்சிட்டு இருப்பேன்.." என்று சொல்லி சிரித்தாள்

"அட போங்கங்க.  எங்களை காமெடியன் ஆகிட்டீங்க. " என்றான் ரகு

சூர்யா சொல்ல தொடங்கினான்.

"பேரு சூர்யா... நம்பர் 9841............."

        ✴           ✴            ✴             ✴

அந்த கார் கிளம்பி சென்ற பின் ...அந்த பெண் உருவம் அமானுஷ்யமாக பறந்து சென்று புளிய மரத்தில் தொங்கியது அவர்கள் இருவருக்கும் தெரியாது.

முற்றும்.

Comments

  1. என்னுடைய பெயர் ஜுனியா டானாஜே. என்னுடைய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் கணவர் பல ஆண்டுகளாக மணமகன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். நாங்கள் இருவருமே ஒரு சிறிய வாதத்தைத் தொடர்ந்து வந்தோம். என் இரண்டு குழந்தைகளையும் எனது பொறுப்பிலிருந்து விடுவித்தேன்.என் சூழ்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்தது அதே நேரத்தில் நான் என் வேலையை இழந்தேன். அவரை காதலித்து எப்போதும் அவரை எங்கள் அபிமான குழந்தைகள் இணைந்து இருக்க விரும்பும் நான் டாக்டர் தொடர்பு கொண்டார். Chamberc இது நான் கருத்துக்களம் காணப்படும் தொடர்புகள். நான் pleasantly என் கணவர் மீண்டும் ஆச்சரியமாக இருந்தது 3 கிரேட் கிரேட் எனக்கு சடங்குகள் பிறகு நாட்கள் Dr.Chamberc, இப்போது என் நிதி நிலைமை சாதகமாக மாறிவிட்டது, நான் மற்றொரு வேலை கிடைத்தது மற்றும் நான் நன்றாக ஊதியம் பெறுகிறேன்.அவர்கள் பிரச்சனை செண்டிமெண்ட், நிதி, சுகாதாரம், உளவியல் போன்றவற்றுக்கு .... Dr.Chamberc ஐ திருப்தி செய்யுங்கள். இங்கே அவரது தொடர்புகள்:
    மின்னஞ்சல்: chamberc564@yahoo.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"மர்மங்கள் முடிவதில்லை"