Posts

Showing posts from May, 2017

"ஆடை இல்லாமல் ஆகாயத்தில்."

Image
" ஆடை இல்லாமல் ஆகாயத்தில்." ரா.பிரபு விண்வெளி உடை இல்லாமல் விண்வெளி வீரர்கள் விண்வெளி சென்றால் என்ன நடக்கும் என்று தெரியுமா? அல்லது விண்வெளி சென்ற பின் அங்கே விண்வெளி உடை இல்லாமல் கழட்ட பட்டு ஒருவனை (ஒரு பேச்சுக்கு..) அந்தரத்தில் விட பட்டால்?? பாவம் ஆக்சிஜன் இல்லாமல் கஷ்ட பட்டு  துடி துடித்து இறந்து போவான். என்கிறீர்களா?  நீங்கள் சொல்வது உன்மை தான் என்ற போதிலும் ஏற்படும் விளைவு இன்னும் வேறு விதமாக மிக பயங்கரமானது. ஒரு "Space suit  " விண்வெளி உடை என்பது உலகின் மிக விலை  உயர்ந்த உடை ஆகும். அதன் விலை கிட்ட தட்ட 5 கோடி ரூபாய். அதன் எடை கிட்ட தட்ட 100 கிலோ அல்லது 200 கிலோ. அந்த எடையை ஒருவன் அணிந்து கொண்டு பூமியில் அசைய கூட முடியாது ஆனால் நிலா போன்ற நம்மை விட ஈர்ப்பு விசை மிக குறைவாக இருக்கும் இடத்திலோ அல்லது ஈர்ப்பு விசையை சுத்தமாக இல்லாத விண்வெளி போன்ற இடத்திலோ இந்த எடை அவனை எளிதாக இயங்க வைக்க இன்றி அமையாதது. மேலும் அவனுக்கு ஆக்சிஜன் வழங்கும் தொட்டியும் இணைக்க பட்டிருப்பது அந்த உடையுடன் தான் என்பதால் அந்த உடை இல்லாமல் அவனால் சுவாசிக்க முடியாது. சுவாசிக்

"பூமியின் (அ)பூர்வ கதை"

Image
" பூமியின் (அ)பூர்வ கதை" (பாகம் : 1 ) (பின்னோக்கி ஒரு பார்வை) அறிவியல் காதலன் ரா. பிரபு (பூமியின் மொத்த வரலாற்றை சுற்றி ஒரு வேக பயணம்) மனிதனுக்கு எப்போதுமே வரலாற்றின் மீது மோகம்உண்டு. முன்னாலுக்கு முன்னால் என்ன என்பதில் எப்போதும் ஒரு ஈர்ப்பு கலந்த ஆர்வம் உண்டு அவனுக்கு. யோசித்து பாருங்கள் நம் தாத்தாவுக்கு தாத்தா எப்படி இருந்திருப்பார் எப்படி வாழ்ந்து இருப்பார் ? அவருக்கு தாத்தா ? அவர் தாத்தாவுக்கு தாத்தா? நம்முடைய ஆரம்பம் என்னவாக எதுவாக இருந்து இருக்கும் ஆதி மனிதன் வாழ்ந்த வாழ்க்கை எப்படி பட்டது   .? என்ன தான் கழுத்து வலிக்க திரும்பி பார்த்தாலும் அவனது (அதாவது மொத்த மனித குலத்தின் ) பார்க்க முடிய கூடிய பெருமை மிகு வரலாறு சில லட்சம் ஆண்டுகள் தான். ஆனால் தன்னை சுற்றி உள்ள பாறைகளையும் படிவங்களையும் ஆராய்ந்த மனிதன் தனது இனம் தோன்றுவதற்கு முன்பே இந்த பூமி பந்து சந்தித்த வரலாறுகளையும்  நிகழ்வுகளையும் வாழ்ந்த விலங்குகளையும் அதன் வாழ்வையும் புரிந்து கொண்டான். அதை அறிந்து கொண்ட போது தான் பூமியின் வரலாறு எனும் கடற்கரை பக்கங்களில் தான் ஒரு நாலு அடி கால் தடம் மட்ட
Image
"கோக்கு மாக்கு கோட்பாடுகள்" (அறிவியல் காதலன்) (ரா.பிரபு) நண்பர்களே ஒரு கேள்வி உங்கள் கார் டயருக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பு என்ன வென்று சொல்ல முடியுமா? கட்டுரை இந்த பாகம் முடிவுக்குள் விடை செல்கிறேன் தொடர்ந்து படியுங்கள். அறிவியல் தனது வளர்ச்சி பாதையில் தான் கண்டு கொண்டதற்கு ஏற்றாற்போல் பல கோட்பாடுகளை தொடர்ந்து வழங்கி கொன்டே வருகிறது. பல கோட்பாட்டு விளக்கங்களை நாம் பார்த்து இருக்கின்றோம். ஆனால் இன்று நான் விளக்க போவது கொஞ்சம் வித்யாசமான கோட்பாடுகளை பற்றி. பிரபஞ்ச உற்பத்தியின் போது மேட்டர் உண்டாகியது கூடவே அதை போலவே அதற்கு எதிரான ஆண்ட்டி மேட்டர் உருவானது பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள் அல்லவா. அப்படி அறிவியல் கோட்பாடு ஒவொன்றும் உருவாகும் போது கூடவே சில அதற்க்கு நிகரான கோக்கு மாக்கு கோட்பாடுகள் உண்டாகி விடுகிறது. அவற்றில் பெரும்பான்மையான கோட்பாடுகள் முகம் தெரியாத பல பேரால் உண்டு பண்ண பட்டது. அப்படி இருக்கும் போது ஏன் அதற்க்கு முக்கிய துவம் கொடுக்க வேண்டும்? என்று நீங்கள் கேட்கலாம். காரணம் உண்டு. யோசித்து பாருங்கள் பூமியை தட்டை என்று நம்பிய கால கட்