"தலைமை பண்பு என்பது"


"தலைமை பண்பு என்பது"

(ரா.பிரபு)

ஒரு தலைவனின் நோக்கம் என்றும் தானே முன்நிலை படுத்த பட்டு கொண்டிருக்க வேண்டும் என்பதல்ல மாறாக தனது கூட்டத்திற்கு எது சிறந்தது என சிந்திப்பது.

ஒரு ஓநாய் கூட்டத்தின் படம் காண கிடைத்தது.
இந்த ஓநாய் கூட்டத்தை பாருங்கள் இதில் முன்னால் செல்லும் 3 ஓநாய்கள் அந்த கூட்டத்தின் மிக வயதான மற்றும் நோய் வாய் பட்டவை.கூட்டம் ஓட வேண்டிய சூழ்நிலை வந்தால் இவைகள் பின் தங்கி விட கூடாதே என்று தான் இந்த ஏற்பாடு.

அடுத்ததாக இருக்கும் 5 ஓநாய்களை கவனியுங்க அவைகள் கூட்டத்தின் மிக வலிமையான போராளிகள் .நன்கு அடி தடி பழகிய சண்டை வீரர்கள் . கூட்டத்திற்கு முன் பக்கமாக ஆபத்து வரும் பட்சத்தில் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவை.

அடுத்ததாக நடு பகுதியில் இருப்பது மொத்தம் கூட்டத்தின் சாதாரண ஓநாய்கள்
அதற்கு பின்னால் இருக்கும் 5 ஓநாய்கள் மீண்டும் வலிமையான போராளிகள். கூட்டத்திற்கு பின் பக்கமாக இருந்து ஆபத்து நெருங்காமல் உறுதி செய்வதற்காக.

தனது குழு முழுக்க முன்னாடி அனுப்பிவிட்டு எல்லாவற்றிக்கும் கடைசியாக ஒற்றை ஆளாக வருகிறது பாருங்கள்...அந்த ஒற்றை ஓநாய் தான் கூட்டத்தின் தலைவன்.
அது தனது மொத்த கூட்டத்தையும் கண்காணித்து கொண்டு அதற்க்கு பின்னால் வருகிறது.

தலைமை பண்பு.. நிர்வாகம் என்பது எல்லாம் மனிதனின் கண்டுபிடிப்புகள் அல்ல அவைகளை சிறப்பாக நாம் கற்று கொண்டது இயற்கையிடம் தான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"