"கீழடி"_கதை_கேளடி.

"கீழடி"_கதை_கேளடி.

ரா.பிரபு


(கீழடி பற்றிய கட்டுரை இம்முறை ஒரு மாறுதலுக்கு கவிதை நடையில்....)


இதோ மீண்டும் புதைக்க பட்டுக்கொண்டிருக்கிறது..
தமிழனின் பண்டைய நாகரிகம் ..
பண்டைய கலாச்சாரம்...
தமிழனின் வரலாறு..

ஏன் இந்த அவசரம்...?
கீழடி என்னும் வரலாற்று புத்தகம்...
அது பிரிக்கும் முன்பே மறைக்கும் அவசரம்.
'மத்தி 'க்கு மறைப்பது என்றால் அவ்வளவு பிடிக்கும் போல
பாவம் விவசாயி மானதை தவிர அனைத்தும் உடனே மறைக்கும்.

மும்பரமாய் மூடி மறைக்க முக்கிய காரணம் இல்லாமல் இல்லை.
அது கீழடி வடக்குக்கு  கொடுத்த பெரும் நெருடல் தொல்லை.

சிந்து என்பதே சிறந்த நாகரிகம்,
சிந்து என்பதே மூத்த நாகரிகம்,
சிந்து என்பதே நகர நாகரிகம்,
என்ற சிந்து பெருமையை முந்தி போய் விட்டான் தமிழன்.
அரையாடை நாகரிகம் என அழைக்க பட்டவன் தமிழன் .
இன்று அறைகூவல் விடுத்தது நிமிர்ந்து நின்று விட்டான்.

கார்பன் தொழில் நுட்பம் காலத்தை கணித்துள்ளது.
அதன் படி இந்த நாகரிகம் கிமு 2 இல் ஜனித்துள்ளது.

என்ன தான் இருந்தது?
கீழடியில் .... ? கீழே.... அடியில்....?

தோண்டி எடுத்து பொருட்கள் தொன்னூரோ தொலாயிரமோ அல்ல. அக பட்டவை மொத்த அசர வைக்கும்
ஐயாயிரம்.

சுட்ட மண்பாண்டங்கள் ..
சுட்ட கல் சுவர்கள் ..
வீதி தோறும் வாய்க்கால்கள்,..
நீர் வடிகால் எல்லாம் சிந்து விலேயே நாம் சிறிது கேள்வி பட்டவை.
ஆனால்
தமிழன் இன்னும் தாண்டி செல்கிறான்.

சாய பட்டறைகள்...
ஓவியங்கள்...
நீர் சேர்த்து வைக்கும் உரை கினறுகள்..
கூரை ஓடுகள்...
இரும்பு வேல்...
சங்கு வளையல்கள்...
பளிங்கு கற்கள்...
நாணயங்கள்...
அணிகலன்கள்....
 யானை தந்ததால் செய்த தாயகட்டை என்றால் தரம் எப்படி பட்டது.?

மண்பாண்டத்தில் கிடைத்தது மதிப்பு மிக்க தமிழ் பெயர்கள்
ஆதன்
கீசன்
உதிரன்.

அகழ்வாய்வதில் நாகரிக வகை கள் இரண்டாம் .
ஒன்று கிராம நாகரிகம் மற்றது நகர நாகரிகம்.
கீழடி இதில் நகர வகையாம்.

இத்தனைக்கும் தோண்ட பட்டது வெறும் ஒரு ஏக்கர் 48 குழிகள்..
இன்னும் தோண்ட படாதது  அங்கே மலை அளவு.

மத்திய அரசின் மட மட வென்ற மண் மூடும் படலத்தின் மர்மம் இப்போ மலை உச்சி விளக்கு போல "ஊருக்கே வெளிச்சம்"

48 குழி தோண்டி நாங்கள் அப்போவே நகரிகமானவர்கள் என்று நாம் நிரூபித்தோம்.
48 குழிகளை மூடி அவர்கள் இப்போதும் நாகரிகம் இல்லாதவர்கள் என்பதை நிரூபிதார்கள்.
தமிழன் நாகரிகத்தை பொறுத்து கொள்ள முடியாத நாகரிகம் அற்றவர்களின் நடத்தையை இனி நாடு புரிந்து கொள்ளட்டும்..

அவர்கள் புதைத்து கொண்டே செல்லட்டும் புதை குழியாய்.
நாம் முளைத்து கொண்டே வருவோம் விதை மரமாய்.


நம்பிக்கை யுடன் _நண்பன் ரா.பிரபு_

Comments

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"