பில்கிஸ் பானு வின் பயங்கர வழக்கு (ரா.பிரபு)


பில்கிஸ் பானு வின் பயங்கர வழக்கு

(ரா.பிரபு)

தொடங்கும் முன்,
எச்சரிக்கை 1 :  இது ஒரு அரசியல் பதிவு அல்ல இது ஒரு சமூக பதிவு அவ்வளவே சம்பந்த பட்ட கட்சிகாரர்கள் யாரும் inbox இல் கம்பு சுற்றினால் கம்பெனி பொறுப்பல்ல.

எச்சரிக்கை 2 :  இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி பதிவு சிறுவர்கள் தவிர்ப்பது நலம்

நேற்றைக்கு அதாவது may 4 2017 அன்று செய்தி தாள் பார்த்தவர்கள் ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள்.

"குஜராத் கலவரதில் பல்கிஸ் பானு கற்பழிப்பு வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது பாம்பே ஹை கோர்ட் "

உண்மையில் இது படிக்க எவ்வளவு எளிமையாய் இருக்கோ இந்த செய்தி அவ்வளவு எளிமையானது அல்ல.
மிக மிக கொடூர ...மனித தன்மை அற்ற சைக்கோ தனமான ரத்தத்தை உறைய வைக்கும் நிகழ்வுகளில் ஒரு சிறு துளி மிச்சம் தான் இந்த பில்கிஸ் பானு.

நாம் மேம்போக்காக படித்து விட்டு போகும் பல செய்திகள் உண்மையில் ரத்தமும் சதையுமாக பார்க்கும் போது  மிகுந்த ஆழம் கொண்டவை.அதிர்ச்சி கொண்டவை.

2002 இல் குஜராத்தில் கோதரா ரயில் எரிப்பை தொடர்ந்து சிறுபான்மையினர் முஸ்லீம்கள் மீது கட்டுகடங்கா வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விட பட்டது.  அதை செய்தது விஷ்வ ஹிந்து பரிசித் என்ற அமைப்பு.

அந்த கலவரத்தில் மொத்தம் 790 முஸ்லிம்கள் இறந்ததாக கணக்கெடுப்பு சொல்கிறது.
அன்றைக்கு நடந்தவை எல்லாம் ஒரு கலவரத்துக்கு கொஞ்சம் அதிகமானவை.
சைக்கோ மன்னர்கள் வரலாற்றில் மட்டுமே படித்த கொடூர நிகழ்வுகள்.
இனி வரும் பாரா வில் நான் சொல்ல போவது உண்மையில் இந்தியாவில் தான் நடந்ததா என்று உங்களை சந்தேகத்தில் ஆழ்த்தலாம். அனால் நம்புங்கள் குஜராத்தில் தான் இந்த கொடூரம் நடந்தது

மொத்தம் 250 முஸ்லீம் பெண்கள் கற்பழிக்க பட்டார்கள் எல்லாமே கூட்டு வன்புணர்வு. அதன் பின் மறக்காமல் எரிக்க பட்டார்கள் உயிரோடு.
அவர்களிடம் சிக்கிய சிறுவர்களை வற்புறுத்தி பெட்ரோல் குடிக்க வைத்தார்கள் பிறகு அவர்களையும் உயிரோடு எரித்தார்கள்.
வீடுகள் தண்ணீரால் நிரப்ப பட்டு பிறகு அதில் மின்சாரத்தை பாய்ச்சி வீட்டில் உள்ளவர்கள் மொத்தமாக கொல்ல பட்டார்கள்.
பெண்கள் நிர்வாணமாக்க பட்டு கூரிய பொருட்கள் உடலில் சொருகி கொல்ல பட்டார்கள்.
குழந்தைகள் அவர்கள் பெற்றோர் முன்னிலையில் கொடூரமாக கொல்ல பட்டார்கள்.
பெண்கள் வயிற்றில் மேல் ஏறி அமர்ந்து உடலை சிறு கத்தியால் கிழித்து அதில் ஹிந்து களின் புனித சின்னதை பொறித்தார்கள்.
பெண்கள் மார்புகள் அறுத்து எரிய பட்டது.

இந்த எடுத்து காட்டை பாருங்கள்...
அவன் பெயர் இஷான் ஜெபிரி.. கூட்டத்தில் பெண்களை விட்டு விட சொல்லி மன்றாடி கேட்டு கொள்கிறான்  எனவே அவனை கலவரத்தின் நடு ரோட்டில் நிற்க வைத்து நிர்வாணமாக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல சொல்கிறார்கள் மறுத்த அவன் தலை உடனே துண்டிக்க படுகிறது. பிறகு சாவகாசமாக அவன் வீட்டுக்கு அந்த கும்பல் செல்கிறது அவனது இரண்டு மகன்கள் உட்பட மொத்த குடும்பத்தை தீ வைத்து கொளுத்து கிறது.

கலவரத்தில் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கூட்டு வன்புணர்வு செய்ய பட்டார்கள் அதன் பின் அந்த பெண்கள் வயிற்றை உயிரோடு கிழிக்க பட்டு அந்த சிசுவை எடுத்து அந்த தாய் கண்ணில் காட்டினார்கள். அதன் பின் அதை தீயில் போட்டு பொசுக்கினார்கள்.
கற்பழிக்க பட்ட பெண்கள் பிறப்புறுப்பில் கட்டையை சொருகி ஆப்பு அடித்தார்கள்.

சம்பவங்கள் எல்லாம் ஏதோ  ரோம் நீரோ மன்னன் களிகூலா.. அல்லது செங்கிஸ்கான் காலத்தில் நடந்தது போல இருக்கிறது அல்லவா.
இப்படி ஒரு கொடூர சம்பவத்தில் சிக்கி பிழைத்த ஒருவர் தான் அந்த பில்கிஸ் பானு.

சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் சேர்த்து மொத்தம் 17 பேர் ஒரு ட்ரக்கில் தப்பி செல்ல முயலும் போது வழியில் கலவர காரர்களால ட்ரக் நிறுத்த படுகிறது.
அப்போது பில்கிஸ் பானுவிற்கு 19 வயது. மேலும் 5 மாத கர்ப்பிணி அவர்.
அவருடன் இருந்த அவளது 2 வயது மகள் கலவர காரர்களால அவர் கண் முன்னே கல்லால் அடித்து கொடூரமாக கொலை செய்ய படுகிறாள் .
பிறகு அந்த கொலை வெறி கும்பலால் கூட்டு வன்புணர்வு செய்ய படுகிறாள் .அதன் பின் அவள் குடும்ப உறுப்பினர்கள் 14 பேரும் கண் முன்னே கொல்ல படுகிறார்கள்.

இந்த கொடூர கொலை வெறி செயலுக்கு நீதி கேட்டு தான் 15 ஆண்டுகளாக வழக்கு தொடுத்து போராடி வந்தாள் பானு. முதல் முதலில் அவள் கேஸ் கொடுத்த லோக்கல் போலிஸ் ஸ்டேஷனில் அவர்களாலேயே கேஸை வாபஸ் வாங்க சொல்லி மிரட்ட பட்டாள். பிறகு மனித உரிமை கழகத்தை நாடினாள். மேலும் சுப்ரீம் கோர்ட்டுக்கு பெட்டிஷன் கொடுத்தாள். அவர்கள் வழக்கை CBI எடுத்து விசாரிக்க சொல்லி பணித்தார்கள்.
அதே நேரம் பானுவிற்கு மிரட்டல் கள் வந்த வண்ணம் இருந்தது. எனவே வழக்கை குஜராத்திலிருந்து மஹாராஷ்டிரா நீதி மன்றத்திற்கு மாற்றினார்கள்.

வழக்கு விசாரணையின் போது பல சிக்கலுக்கு ஆளானார் அவர்.
உதாரணமாக கர்ப்பிணியாக இருந்த அவர் பின்னாளில் குழந்தை பெற்று கொண்டதை காரணம் காட்டி எனவே இவள் கற்பழிக்க பட வில்லை என்று வாதாட பட்டாள்.
குடும்ப உறுப்பினர்கள் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் இறக்க வில்லை தலை மறைவாக இருக்கிறார்கள் என்றும் இவருக்கு எதிராக வாதாடினார்கள்.

இதை எல்லாம் சமாளித்து 15 வருட போராட்டத்திற்கு பின் தான் நேற்று சொன்ன அந்த தீர்ப்பை கிடைக்க பெற்றாள். பானு வின் வழகரிஞ்சர்கள் அவர்களுக்கு தூக்கு தர சொல்லி வாதாடினார்கள்கள் ஆனால் ஆயுள் தான் கிடைத்தது.

அன்றாட செய்திகளை நாம் வாசிக்கும் போது. அதில் பின்னணியில் உள்ள ஆழம் என்ன செய்தியின் வீரியம் என்ன
போன்றவற்றை கவனித்து பார்க்க வேண்டும் அப்படி பார்த்தால் தான் நாம் எப்படி பட்ட ஒரு சமூகதிற்குள் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியும். சமூகம் எதை நோக்கி போகிறது என்பதை உற்று நோக்கும் கடமை நம் அனைவருக்கும் உண்டு.

#பின்குறிப்பு :  இந்த போஸ்ட் நான் யாருக்கும் ஆதரவாக அல்லது எதிர்ப்பாக போடவில்லை.நம் சமூகத்தில் இப்படி நடந்து இருக்கே என்று தான் சொல்ல வந்தேன்.
கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் கலவரத்தில் கொல்ல பட்ட இந்துக்கள் என பிரச்சனையின் அடுத்த பக்கமும் உண்டு.
என்னை பொருத்த வரை ஹிந்து முஸ்லீம் கிறிஸ்து இந்த பிரிவுகளை விட உயர்ந்தது மனிதம்.
மதங்கள் மக்களை நல்வழி படுத்த தான் நசுக்கி எடுக்க அல்ல.

நண்பன் __ரா.பிரபு_

Comments

  1. நண்பரே, வெகுநாட்களுக்கு முன்பு உங்கள் இந்த கட்டுரையை முகப்புத்தகத்தில் படித்தேன்.
    அதாவது வார்தைகாளால் விவரிக்க இயலாத கொடூரம். நம்மை பொறுத்தவரை அது ஒரு சேதி. ஆனால் அதில் சிதைக்கப்பட்டவர்களுக்கு அது நரகம். இந்தியாவில் அதுவும் உள்நாட்டில் தன் நாட்டு மக்களுக்கு நடந்த இந்த கொடூரத்தை தடுக்கவோ கண்டித்து அடக்கவோ இயலாத அரசுதான் இலங்கையில் தமிழர்களுக்கு நல்லது செய்துவிடப்போகிறது????
    பிச்சைக்காரன் முதல் பெரிய கார்ப்பரேட் வரை அரசியல் செய்தால் தான் பிழைக்க முடியும் என்று சாணக்யன் சொன்னதை இங்கே தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அவன் சொன்ன தந்திரங்கள் எல்லாமே இப்போது செயல்பாட்டில்.... உனக்கு ஒருத்தன் ஆவலையா அழி. நீ வாழவேண்டுமெனில் என்ன வேண்டுமானாலும் செய். இது தான் அவன் மொத்த வசனங்களின் வசனங்களின் சாராம்சம்.

    மனிதன் என்ற போர்வையில் திரியும் ஷைத்தான்கள். இவர்களிடம் மனிதத்தையும் மனிதாபிமானத்தை எவ்வாறு எதிர்பார்ப்பது!!!!

    ReplyDelete
  2. solla vaatthaigal illai.... miguntha varuttham...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

"மனம் எனும் மாய தேவதை "

"சின்ன சின்ன திகில் கதைகள்"

"மர்மங்கள் முடிவதில்லை"